Tuesday, May 31, 2011

3

வெள்ளைக்காரர்களை எதிர்த்த குதுப்மினார் அதிசய தகவல்

  • Tuesday, May 31, 2011








  •   காந்தி, நேரு,கட்டபொம்மன் ,பாரதி போன்றவர்கள் போராட்டம் பற்றி நமக்கு தெரியும் . இந்திய அதிசயம் ஆங்கிலேயரை எதிர்த்த சுவாரஸ்ய கதை இது.

    குதுப்மினார் குத்புதின்ஐபெக்கால் முதல் மாடி வரை தான் கட்டப்பதூமிஷ் .உயரம் -(242) அடி மொத்தம் உச்சிக்கு செல்ல (319) படிகள்

           முஸ்லீம் மக்கள் தொழுகைக்கும் பயன்பட்டது .பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சற்று மோசமான நிலையில் இருந்த குதுப்மினாரைசீரமைக்க முடிவு செய்யப்பட்டது .ட்டது . அதை வானுயர வெற்றிகரமாக கட்டி முடித்தவர் சுல்தான் இல்
        
         அதற்க்காக ராபர்ட் ஸ்மித் என்ற கட்டட கலைவல்லுனரை அரசு அழைத்து வந்தது , வந்தவர் ரிப்பேர் மட்டுமல்லாதுஅதிகபிரசங்கி தனமாக குதுப்மினருக்கு ஒரு ஆங்கில மேற்கூரை வைத்தால்மேலும் நன்றாக இருக்கும் என்று மரத்தால் ஒரு சிறு கோபுரம் அமைத்து உச்சியில் பொருத்தினார் .

               இயற்கை அதை அனுமதிக்கவில்லை ! பெரும் இடி விழுந்துகோணலாகிபோனது கலை உணர்வு மிகுந்த பிரிடிஷ் அதிகாரிகள் தலையில்அடித்துக்கொண்டு (1948) ல் இறக்கிவைத்தனர் .இன்றளவும் பரிதாபமாக சுணங்கி நிற்கும் அதை காணலாம் ..

              இது என்ன அபத்தம் என்று குதுப்மினார் அந்த வெள்ளைக்கார குல்லாயை ஒதுக்கி தள்ளிவிட்டதாம்.வெள்ளைக்காரர்கள் தன் மீது சுமத்திய பாரத்தை விரட்டிய முதல் இந்தியன்குதுப்மினார் என்பதில் நமக்கும் பெருமைதான்.குதுப்மினார்

    Read more...
    3

    என் ரஜினியும் நானும்


  • தூர்தர்சன் மட்டும் அதுவும் ஊர் பஞ்சாயத்து டிவி இல்  வெள்ளிகிழமைகளில் மட்டும் வரும் ஒலியும் ஒளியும் அப்போது அவர்கள் ஒளிபரப்பும் பாடல்களின் படங்களின் பெயரை தினமலரில் போட்டிருப்பார்கள் அதில் கண்டிப்பாக இரண்டு ரஜினி படங்கள் இருக்கும் .அப்போது போடும் பாட்டுக்கெல்லாம் படங்களின் பெயரை போட்டிருப்பார்கள் அதனை படித்து தெரிந்து விட்டுதான்  டிவி பார்க்கவே செல்வேன் . விசில் சத்தம் டான்ஸ் என களைகட்டும் .இவ்வாறாக ரஜினி அறிமுகம் .

     வீட்டில் வருடத்திற்கு மூன்று நான்கு படங்கள் கூட்டி செல்வார்கள் . ஆனால் முதலில் முதல் நாள் அன்று ரஜினி படம் பார்த்தது அதுவும் வேலைக்கு சென்று பார்த்த முதல் படம் சிவாஜி .முதல் நாள் இரவுக்காட்சி பார்த்த வாய்ப்பு சிவாஜி படம் வெளியானபோது . பழனியில் பணிபுரிந்தபோது சிவாஜி ரிலீஸ் இதற்க்கு முன் ரஜினி படங்கள் முதல் நாள் பார்க்கும் ஆர்வம் இருந்தாலும் அதற்க்கான சூழல் இல்லை .

    கிராமங்களில் ரஜினியை அடுத்து விஜயகாந்திற்கு தான் இரண்டாம் இடம் கமல் எல்லாம் அப்புறம்தான் 90 களில் ..
            பள்ளியில் படிக்கும்போது வீட்டு கதவில்  ரஜினி போட்டோக்கள்  சினிமா எக்ஸ்பிரஸ் அல்லது  தினசரிகளில் வரும் இவற்றை வெட்டி ஓட்டுவேன்  பாண்டியன் எஜமான் என முத்து வரை தொடர்ந்தது இப்போதுதான் கதவு ரஜினி போட்டோ இல்லாமல் இருக்கிறது .

    எங்கள் பள்ளி ஆசிரியை எனது அம்மாவின் தோழி அடிக்கடி வீடிற்கு வருவார் அப்போதெல்லாம் பயம் இருக்கும் இந்த படங்களை எல்லாம் பார்த்துவிட்டு திட்டுவார்களோ என்று ,ஆனால்  நான் பள்ளியில் முதல் மார்க் வாங்கியதால் எதுவும் சொன்னதில்லை ..
    முதல் நாள் பார்த்த அனுபவம்:
    வேலைக்கு வந்து அதுவும் அரசாங்க வேலை கிடைத்து பார்க்கபோகும் முதல் படம் எங்கள் அலுவலகத்தில் அன்று வேலை அதிகம் மற்றவர்கள் வர தயக்கம் சண்முகம் மட்டும் போகணும் என்று சொல்ல . மற்றவர்களிடம் அவசர வேலை இருந்தால் call பண்ணுங்கள் வந்துவிடுகிறோம் என்று சொல்ல , அவர்கள் வந்து கதை சொல்லணும்  என்று டீலிங் போட சரி என்று சொல்லி சென்றோம் அங்கு reservation  ஏதும் இல்லை . இரவு மணி 8 pm காட்சிக்கு செல்ல முடிவெடுத்து6.30 pm மணிக்கே சென்று பார்த்தல் கவுன்ட்டர் முழுவதும் கூட்டம்  போலீஸ் வேறு லத்தியுடன்,..

    சண்முகத்தை லைன் ல் நிற்கவைத்து நான் சற்று தள்ளி வேறு எங்காவது முயற்சிக்க அவனோ கிட்டத்தட்ட 1 .30 மணிநேரம் நெரிசலில் நான் சற்று நேரம் நிற்கவா என்று கேட்டும் பரவா  இல்லை என்று நின்று டிக்கெட் வாங்கினான் .டிக்கெட் விலை 50  ருபாய் தான் . அப்போது ஒரே பெட்டி யை வைத்து சினி வள்ளுவர் , ரமேஷ் என ஓடி ஓடி ஒட்டிகொண்டிருந்தார்கள் , 
     உள்ளே சென்றால் வழக்கம் போல் விசில்  டான்ஸ் என விண்ணை பிளந்தது . 

              படத்தை விட ரசிகர்கள்  ஆரவாரம் இன்னும் அருமை .பல வசனங்கள் புரியவில்லை இருந்தாலும் அதிசயித்து பார்த்தோம்.நண்பர்கள் அவசர வேலை இருந்தால் கால் பண்ணுங்கள் என்று சொல்லி இருந்ததால் அடிக்கடி மொபைல் பார்த்து கொஞ்சம் டென்சன் ஆனால் கடைசிவரை எந்த அழைப்பும் வரவில்லை . பத்து நாட்கள் கழித்து அதே சினி வள்ளுவரில் நானும் சண்முகமும் இரண்டாவது முறை பார்த்தோம்..  இது ரஜினி படங்களுக்கு மட்டுமே வரும் ஆர்வம் ..

    தற்போது எந்திரன் ரோகினி யில் பார்த்தாலும் முதல் வேலைக்கு சென்று முதலில் பார்த்த சிவாஜி இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது ..நானும் அடிக்கடி நினைப்பதற்கு ரஜினியை பற்றி யாரும் என்னிடம் இவர் அப்படி இப்படி இவர் படம்தான் பார்க்கவேண்டும் என்றதில்லை , திரையில் மட்டுமே பார்த்து பிடித்தது மட்டுமே ஒரே காரணம் .
    சில விஷயங்கள் நம்மையும் மீறி நம்மை ஆக்கிரமிப்பது உண்டு அதுபோலதான் எனது ரஜினி.

    இந்த உலகில் யாரவது ஒருவரை கேளுங்கள் எனது ரஜினியைபோல்  காசு வாங்குறேன் நடிக்கிறேன் ஏன்?  இவ்வளவு பாசம் .. என்று சொல்லும் தைரியம் இருக்கிறதா. ஏன் நான் கூட  என்னை கேட்டால் ஏன் அலுவலகத்தில் காசு கொடுக்கிறார்கள் அதனால் வேலை செய்கிறேன் என்று சொல்லும் பக்குவம் கிடையாது.திறமை அறிவு என்று சொல்லத்தோன்றும் ..
    (எனக்கு பிடித்த ரஜினி புகைப்படங்கள் மேலே உள்ள 3 ம் )
    என் ரஜினி நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுக்கவில்லை என்பது எனக்கும் ஏன் ரஜினிக்கும் தெரியும் , காந்தியை மட்டும் தான் நேசிக்க வேண்டுமா ஒரு சாதாரண மனிதனை கூட நேசிக்கலாம் இது எனது விருப்பம் .அதனால் எனக்கு பிடித்த ரஜினியை நேசிக்கிறேன் ...

    எனது ரஜினி விரைவில் நலம் பெற்று வந்து கண்டிப்பாக ராணா ,கானா ரெண்டிலும் நடிப்பார் ....டயாலிசிஸ் மற்றும் எந்தொரு  நோயும் அவரிடம் தோற்று ஓடிவிடும் .

    இறுதியாக ..இன்னும் காத்திருப்பவர் எத்தனை பேரோ உன்னிடம் தோற்ப்பதற்கு ...  
    Read more...

    Monday, May 30, 2011

    0

    சோசியல் மீடியா தமிழில் பகுதி-2 :நம்பகத்தன்மையை அறிந்து புதிய பொருள் வாங்க உதவும் ட்விட்டர்

  • Monday, May 30, 2011
  • தமிழில் Social  Media எனப்படும் சமூக வலைத்தளம் பற்றிய முதல் பாகத்திற்கு ஆதரவளித்த நண்பர்களுக்கும் திரட்டிகளுக்கும் நன்றி ... இந்த  வார பதிவில்  

    நம்பகத்தன்மையை அறிந்து  புதிய பொருள் வாங்க உதவும் ட்விட்டர்.

    ஆமாம் நாம் புதிதாக camera,ipod,mobile போன்றவற்றை வாங்கும் முன் நம்பகத்தன்மையை ஏற்கனவே பயன்படுத்திவரும் பயனாளர்களின் கருத்துக்களை வைத்து அதன் நிறை குறைகளை அலசி உங்களுக்கு தெளிவான முடிவெடுத்து முடிவுகளை அளிக்கும் தளத்தை பற்றி காணலாம் .. இது ஆச்சர்யம் தான் ஆனால் உண்மை ...இதோ 


    உதாரணமாக நாம் புதிதாக iphone வாங்குவதாக வைத்துக்கொள்வோம் அதைப்பற்றி நாம் ட்விட்டரில் ஏதாவது கூறுவோம்    உதாரணமாக
    my new iphone is very nice i love so much...அல்லது
     i bought new iphone  அல்லது 
     bought one bad iphone having worst audio quality என மூன்றுவிதமாக பகிர்ந்துகொள்வோம்
     முதலில் கூறியது மிகவும் நன்றாக உள்ளது  positive opinion .....
    அடுத்து வாங்கினேன் என்று சொல்வது நடுநிலையான கருத்து ..
    இதனை அடுத்து இறுதியாக sound quality மிக மோசமாக உள்ளது
     போன்று  எதிர்மறையான கருத்தாக சொல்லக்கூடும் 
    இதனைவைத்து அதன் தரத்தை கண்டறியலாம் .
    இவ்வாறு மூன்று விதாமாக பிரித்து கணக்கிட பல சோசியல் மீடியா search engine கள் உள்ளன இதில் 
            http://feeltiptop.com தளத்திற்கு சென்று நீங்கள் புதிதாக வாங்க விரும்பும் பொருளை type செய்து மேற்கூறியவாறு தேடி அதன் முழு விவரத்தை பயன்படுத்தியவர்களின் கருத்துக்களை வைத்து நிர்ணயித்து தெளிவாக அதுவே sollividum .புள்ளிவிவரமாக.தெளிவாக கீழ்க்கண்டவாறு படங்களுடன் ...





     இதில் நம்மை போன்றவர்களின் கருத்துக்கள் மூலம் கணக்கிடுவதனால் நம்பகத்தன்மை நிச்சயம் .

    அடுத்த வார சோசியல் மீடியா பதிவில்:

    மனநல மருத்துவத்தில் சோசியல் மீடியா .....
    Read more...

    Sunday, May 29, 2011

    1

    Timmer வைத்து கணினியை shutdown செய்வது எப்படி ?software download

  • Sunday, May 29, 2011
  •       ShutDown our computer Automatically...
           இரவிலோ அல்லது தூங்கும்போதோ பாடல்களை கேட்டுக்கொண்டோ அல்லது சினிமா போன்றவற்றை பார்ப்பது பெரும்பாலானவர்களது வழக்கம் டிவி யில் sleeper Time செட் செய்து தூங்கிவிடுவோம் ஆனால் கம்ப்யூட்டர் இல் இந்தவசதி இல்லை எனவே நாம் பாடல்களோ படங்களோ தூங்கும் நேரங்களில் பார்த்தல் அவை இரவு முழுவதும் off ஆகாமல் இயங்கிக்கொண்டே இருக்கும் .

    இந்த குறையை தீர்க்கும் software தான் Goodnight Timer .

                      இந்த software ஐ instaal செய்ததும் படத்தில்  காட்டியவாறு உங்கள் கம்ப்யூட்டர் shutdown செய்யும் நேரத்தை இதில் தேர்வுசெய்துவிடுங்கள் அவ்வளவுதான். உதாரனத்திற்க்கு 20 நிமிடங்கள் என்றால் 20 நிமிடம் கழித்து உங்கள் கம்ப்யூட்டர் shutdown ஆகிவிடும் .

                      இதில் இன்னும் கூடுதல் வசதியாக  நேரம் ஆக ஆக sound அளவை குறைக்கும் வசதியும் உள்ளது படத்தில் காட்டியவாறு sound சிறிது சிறிதாக குறைந்துகொண்டேவரும் உங்களுக்கேற்றவகையில் குறைத்து வைக்கும் வசதி உள்ளது.

    அடுத்தமுறை உங்கள் கம்ப்யூட்டர் on ஆகும்போது sound பழைய நிலைக்கேவந்துவிடும். 
               முக்கிய software ,அல்லது வீடியோ ,சினிமா படங்களை download போட்டுவிட்டு  தூங்குபவர்களுக்கு இது முக்கியமாக பயன்படும் download ஆக எடுத்துகொள்ளும் நேரத்தை கண்டறிந்து அதற்கேற்ப இந்த software  இல்  நேரத்தை set செய்துவிட்டு நிம்மதியாக தூங்கலாம் .... மிகவும் தேவையான software .
    Read more...

    Saturday, May 28, 2011

    0

    ரஜினி செந்தில் காலில் விழும் ரகசியம்& நண்பர்களுடன் ஜாலி நண்பேண்டாவும்

  • Saturday, May 28, 2011
  • முதலில் நண்பேண்டா:இந்த பதிவு யாரையும் புண்படுத்த அல்ல ...

    அப்பாடா ஒரு வழியா வெள்ளிகிழமை வந்துடுச்சி சந்தோசமா இன்னிக்கு ஜீன்ஸ் T.shirt தேடி புடிச்சி train ல ஏறினா office frnd பக்கா formal டிரஸ் ல என்னடா இன்னிக்கு வெள்ளி கிழமை இல்லையா? மாதி போட்டு வந்துடமொன்னு யோசிச்சா. அவனோட ஆளு birthday கு எடுத்து குடுத்த dress அத போற்றுக்கேன்னு சொல்லிட்டான் .உன் ஆளு birthday கு நீ ஏன்டா டிரஸ் புதுசா போடனுனு கேட்டா உனக்கு அதெல்ல புரிய வெக்க முடியாதுன்னு சொல்லிட்டு படிக்கட்டு ஓரமா போய் நின்னுகிட்டான் . Egmore வந்து எறங்கும்போது  பாத்தா  புது டிரஸ்ல யாரோ மண்ணை  அள்ளி போட்டு கசக்குன மாதிரி இருந்துச்சி ..இவ்ளோ கும்பல்ல புது டிரஸ் போட்ட என்ன ஆகுன்னு லேட் டாதான் அவனுக்கு புரிஞ்சது .சரி இதுவரைக்கும் சொன்னதுல ஒரு போய் இருக்கு ய்ந்னணு கண்டுபுடிங்க முடியாதவங்க கடைசில இருக்கு படிங்க .

    office போகல கூட sms பண்ணிட்டு வந்தான் சரி இன்னிக்கி சரவணபவன் treat குடுக்கபோரான்னு விட்டுட்டேன் . கொஞ்ச நேரத்துல permission போட்டு  கெளம்பறேன்னு சொன்னான் gtalk ல குரூப் chat இன்னொரு  நண்பன் மதியம் treat வேணுன்னு கேட்டா இவன் பாக்கலாம்ன்னு சொல்லிட்டு escape . lunch முடிஞ்சி வந்தது டேய் cake எங்கடான்னு நான்  கேட்டதுக்கு பாசக்கார நண்பன் அந்த பொண்ணுக்கு உன்ன யாருன்னே தெரியாது எப்டிட cake குடுக்கும் ன்னு பஞ்ச் பேசுனான் , பக்கத்துக்கு அய்யங்கார் bakkery  ல இருக்குறவர் நம்மள தெரிஞ்சிகிட கேக் குடுக்குரார்னு சொல்லி பல்பு குடுத்துத்ததும் party escape.  நானும் எனது நண்பர்கள் அருண் புனே யில் software engineer    ..SRM இல் MTech இல் தொடங்கிய நட்பு இன்னும் அதிகமாக நண்பேண்டா போட்டு சென்றுகொண்டிருக்கிறது.நரேஷ் blackberry நிறுவனத்தில் HR நான் எங்களின் நண்பேண்டா உரையாடல் நீங்கள் படித்தது.


    குசும்பன் kusumbu.கொஞ்சநாள் முன்பு குசும்பன் விட்ட buzz
    இத படிங்க  அப்புறம்   என்னனு  சொல்றேன் ...


    ங்கொயால எங்க ஊர்ல PRCன்னு ஒரு காலேஜ் இருக்கு...அதுல ஊர்ல இருக்கும் எல்லா லட்டு பிகருக்கும் அங்க அட்மிசன் போட்டுவிடுவானுங்க....அட்டுபிகரு, ஓட்ட ஒடச கேஸ்க்கு எல்லாம் குந்தவை நாச்சியார் காலேஜ். எப்பயாச்சும் மழைக்கு கூட அந்த காலேஜ் பஸ்டாப் பக்கம் ஒதுங்குவது இல்ல. ஆனா இந்த PRC காலேஜ் இருக்கே அது ஒரு மிலிட்டரி கேம்ப் மாதிரி...படிக்கிற பசங்க எல்லாத்தையும் அப்படியே சொம்பு கணக்கா மாத்தி வெச்சிருப்பானுங்க...பொண்ணுங்க யாருன்னா கிராஸ் செஞ்சா அப்படியே தலைய குனிஞ்சிக்கனும்...பொண்ணுங்க வெளியில் வரும் நேரத்தில் எவனும் வெளியில் வரக்கூடாது. பொண்ணுங்களை பார்க்கவே கூடாதுங்கிறப்ப...பேசினா என்ன நடக்கும் என்று சொல்லவே வேண்டியது இல்ல... அந்த காலேஜில் படிக்கிற பசங்க பொண்ணுங்களை ஈசியா கண்டுபிடிச்சிடலாம்...பஸ் ஸ்டாப்பில் காலேஜ் பஸ்ஸுக்கு நிக்கிறப்ப கூட வீக்லி டெஸ்டுக்கு புக்கை வெச்சி படிச்சிக்கிட்டு இருந்தா அது PRC காலேஜ் சொம்புன்னு அர்த்தம். 


    ஒரு முறை பிரண்ட் ஒருத்தன் போன பஸ்ஸும் லேடிஸ் பஸ்ஸும் ஒரே நேரத்தில் காலேஜ் உள்ளே போய் நின்னு இருக்கு..அடுத்த பஸ்ஸில் இருந்த பொண்ணுங்க இறங்கி உள்ளே போறதுக்கு முன்னாடி இவனுங்க இறங்கிட்டானுங்கன்னு ஒரு 10 பேரை ஒன் வீக் சஸ்பெண்ட் செஞ்ச காலேஜ் அது. அதுமாதிரி பங்சன்னு ஒரு கொடுமை நடக்கும்....பொண்ணுங்க எல்லாம் வரிசையா வந்து உட்காந்து செட் ஆனபிறகுதான் பசங்க வந்து உட்காரனும். 

    கட் அடிப்பதுன்னா என்னான்னே தெரியாது பயபுள்ளைங்களுக்கு, அதுமாதிரி வீக்லி டெஸ்டில் பெயில் ஆனாலே அப்பா அம்மாவை காலேஜ் அழைச்சிக்கிட்டு வரனும்..............


    இந்த காலேஜ் ல படிச்சா பையன் என்னோட நண்பன் இத படிசிதான் ஏன் இப்படி இருக்கன்னு புரிஞ்சிகிட்டேன் .. இதை எல்லாம் அவன் சொல்லி இருக்கிறான் அவனது மொபைல் கூட வாங்கி எமதி இருக்கிறார்கள் கடைசி வற்றை போராடி 9500 ருபாய் ஏப்பம் விட்டு விட்டார்கள் .
    college ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்ற பெயரில் இப்படி நடத்துகின்றனர் ..  இங்கு போய்தான் படிக்கவைக்கவேண்டும் என முடிவு செய்துவிடாதீர்கள் பெற்றோர்களே..

    இதுல கூட தலைவர் கஷ்டப்பட்டு நின்னாலும் அது கூட தனி ஸ்டைல் தான் .தலைவர் விரைவில் நலம் பெற்று வர பிரார்த்திப்போம் ...
       கமல் தான் காதல் காட்சிகளில் அருமையாக நடிப்பார் என்று பார்த்திருக்கிறோம் ஆனால் இந்த காட்சியை பாருங்கள் தலைவர் அசத்தி இருப்பார் ..

    டவுட்:
             நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் என்னோட சந்தேகத்தை நீங்க கண்டிப்பாக தீர்த்து வைபீங்கன்னு கேட்கிறேன்  தலைவர் ரஜினியும், செந்திலும், கவுண்டமணி இல்லாமல்  நடித்த படங்களை பாருங்கள் பெரும்பாலும்  ஏதாவது ஒரு காட்சியில் செந்திலின் காலில் ரஜினி விழுவது போல் இருக்கும் வேலைக்காரன் , வீரா ,படையப்பா என்று 
    இது என்ன logic ன்னு தெரிஞ்சா யாராச்சும் சொல்லுங்க.......
    Read more...

    Friday, May 27, 2011

    1

    PDF File கணிணி நமக்குபிடித்த குரல்களில் படிக்க ..

  • Friday, May 27, 2011

  • தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேறி  வருகிறது என்பதற்கு இந்த பதிவு சிறந்த உதாரணம் . நாம் வைத்திருக்கும் pdf file ஐ நாம் படிப்பதற்கு பதில் கணிணியை படிக்கவைத்து அதை நாம் கேட்டால் இன்னும் எளிது . இது எப்படி என்று பார்க்கலாம் .PDF   File Tricks இது ரொம்ப ஈஸி எப்படி என்று பார்க்கலாம்

    உங்களிடம்  இருக்கும் Adobe reader     6.0   version + அதற்கு மேற்பட்ட  Version இருக்கவேண்டும்  இதுதான் முக்கியம்.  தற்போது Adobe reader 9.0  பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்துகிறோம் .
    ஏதேனும் ஒரு PDF File லை    Adobe reader இல் Open செய்து பிறகு

    View  சென்று Read out Loud தேர்வுசெய்து Active Read Out Loud Click   செய்தால் போதும் PDF File பேச ஆரம்பித்துவிடும் .

    சரியாக இயங்காவிட்டால்  கீழ்க்கண்ட Short cut பயன்படுத்தி பாருங்கள் கண்டிப்பாக பேசவைக்கலாம் .

    Keyboard Shortcuts  (விண்டோஸ் , MAC OS இரண்டுக்கும் )



    1.Ctrl+Shift+V     -- Read this Page only
    2.Ctrl+Shift+B   -- Read till End of Document
    3.Ctrl+Shift+C  -- Pause Reading
    4.Ctrl+Shift+E   -- Stop Reading

    எப்படி PDF File வார்த்தைகள் படிக்கப்படுகின்றன ?
    Read Out Loud என்ற தொழில்நுட்பம் மூலம் இது நடைபெறுகிறது ..   நமது கணினியில் உள்ள (ஆண் )Voice மூலம் படிக்கிறது . இதெற்கென பல்வேறு வாய்ஸ் கள் கிடைக்கின்றன நமக்கு விருப்பம் போல் பல்வேறு  அழகிய voice  Download செய்து மாற்றிக்கொள்ளலாம் .  Adobe Reader தமிழ் மொழி PDF படிக்காது என்பது  நமக்கு வருத்தாமான விஷயம் ,..


    சிந்தனை corner:

    IPL னா என்ன தெரியுமா ?

    இறுதிபோட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியுடன் விளையாட மற்ற  9 அணிகள்  போராடும் cricket போட்டி .

    சென்னை அணி தல டோனி மற்றும் ரைனா அதிரடியில் கோப்பையை கண்டிப்பாக வெல்லும் மீண்டும் ஒரு jaiho..



    அடுத்த பதிவில்:
    Read Out Loud என்ற தொழில்நுட்பம் என்றால் என்ன பல குரல்களை இதில் பயன்படுத்துகிறார்களே எப்படி எண்டு அடுத்த பதிவி காணலாம் ...
    Read more...

    Wednesday, May 25, 2011

    2

    கணிணி வேகம் அதிகரிக்க Free Registry Cleaner- download

  • Wednesday, May 25, 2011
  •        நாம் கணினி வாங்கிய புதிதில் இருக்கும் வேகம் சில மாதங்களில் கொஞ்ச கொஞ்சமாக குறைந்துவிடும் , பொதுவாக இதற்க்கு நாம் நிறுவும் கூடுதலான சாப்ட்வேர் கள் என்று முடிவு செய்து கண்டுகொள்ளாமல் விட்டு விடுவோம் இது ஓரளவிற்கு மட்டுமே உண்மை .

              முக்கிய காரணம் என்ன அதனை எப்படி தீர்ப்பது எனபது பற்றிய பதிவு . உதாரணமாக ,நமது கணிணியில் நாமோ அல்லது நம் வீட்டு குட்டீசோ விளையாட Game சாப்ட்வேர் மற்றும் நமக்கு தேவையான பிற சாப்ட்வேர்  இன்ஸ்டால் செய்திருப்போம்.

           இவை ஒவ்வொன்றையும் கணிணி software Registry ல் அப்டேட் செய்து விடும்  நாம் இந்த game விளையாட தொடங்கும்போது அதனை  இயக்க  புதிய சில Instructions எனப்படும் தகவல்களை வைத்து இயங்க வைக்கும்   சிலநாட்களில் அதனை Delete செய்து அடுத்த Game விளையாடுவோம் . நாம் அதனை remove செய்தாலும் அந்த instructions நமது கணினியிலேயே தங்கிவிடும்.

            ஒவ்வொரு முறை கணிணியை இயக்கும்போதும் கணிணி இந்த instructions ஐ செயல்படுத்த முயற்சிக்கும் நாம் அந்த Software  ஐ  ஏற்கனவே delete செய்துவிட்டோம் எனவே அதனை கண்டுபிடிக்க முடியாது இதற்க்கு registry error என்று பெயர் . 
           
         இவ்வாறு பல software நாம் பயன்படுத்தி நீக்கியிருந்தால் நமது கணிணி மேற்கூறிய செயல்களால் மெதுவாக செயல்பட தொடங்கும்.இதுதான் முக்கிய காரணம் .இதனை கண்டறிந்து நீக்கினாலே மீண்டும் அந்த வேகத்தை பெற்றுவிடமுடியும் . இதனை எவ்வாறு கண்டறிவது , இதனை கண்டறிந்து நீக்க

    Free Registry Cleaner 4.20.9 freeware download

             எனப்படும் software உள்ளது. இதனை நிறுவி run செய்து clean என்பதை தேர்வு செய்தால் போதும் அவற்றை முழுமையாக நீக்கலாம் அல்லது registry booster எனப்படும் மற்றொரு software ம் உள்ளது இதனையும் பயன்படுத்தி கணினியின் வேகத்தை அதிகரிக்கலாம் 
     FREE RegistryBooster scan (trail version )
           
        ARQ வகை பைல்களை சில நேரங்களில் நமது கணினியில் திறக்க முடியாது இத்தகைய பிரச்சனைகளையும் இதனை பயன்படுத்தி சரிசெய்துகொள்ளலாம் .

        மேலும் நாம் ஏதாவது சாப்ட்வேர் uninstall செய்ய cantrol panel சென்று பின் uninstall program sendru பிறகுதான் அந்த சாப்ட்வேர் ஐ நீக்க முடியும் ஆனால் இதனை பயன்படுத்தி uninstall என்னும் option மூலம் எளிதில் நீக்கலாம் .



           மேற்கூறியவற்றில் முதலில் உள்ளதை நிறுவிக்கொள்ளுங்கள் அதனை முழுமையாக பயன்படுத்தலாம் இரண்டாவது சோதனை முயற்சிக்கு மட்டும் .

             ஒரு முறை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவி பாருங்கள் அதில் எவ்வளவு error காட்டுகிறது என்பதை தெரிந்து சற்று அதிர்ச்சி அடைவீர்கள் . பிறகென்ன அதனை run செய்து உடனே நீக்கிவிடலாம் . இனி உங்கள் கணினியின் வேகத்தை பாருங்கள் வித்தியாசம் புரியும் .


    இதில் உள்ள கூடுதல் சிறப்பு பயன்பாடுகள்:

    Disk cleaner.
    registry search
    uninstall manager
    video converter
    backup 

    என இன்னும் பல வசதிகள் உள்ளன.
    உங்கள் நண்பர்களின் கணினியிலும்  நிறுவி உதவுங்கள் ...jaiho

    கணினியில் கட்டாயம் இருக்கவேண்டிய முக்கிய software .

    சிந்தனை corner:

    IPL னா என்ன தெரியுமா ?

    இறுதிபோட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியுடன் விளையாட மற்ற  9 அணிகள்  போராடும் cricket போட்டி .

    சென்னை அணி தல டோனி மற்றும் ரைனா அதிரடியில் கோப்பையை கண்டிப்பாக வெல்லும் மீண்டும் ஒரு jaiho..


    .
    Read more...
    0

    எவ்வித software பயன்படுத்தாமல் இலவசமாக நமக்கு பிடித்த ரிங்க்டோன் நாமே உருவாக்கலாம்..

  • \\\
    இசை கடவுள் இளையராஜா இசையை கேட்க்கும்  போதெல்லாம்   நம்மல்முடியுமா இப்படி என்று எல்லோருக்கும் தோன்றும் பொதுவான ஆசை . இந்த ஆசை இன்னும் அதிகமானால் இசைக்கருவிகள் keyboard,gitar, flute போன்றவற்றை விடுமுறை வகுப்பில் கற்று இளையராஜா , ரஹ்மான்  இசையை  நண்பர்களிடம் வாசித்து அதில் சிலர்  youtube தளத்தில்    இணைப்போம் .
       அதுபோல எவ்வித இசைக்கருவி பற்றி தெரிந்துகொள்ளாமல் இருப்பவர்களுக்கு சிறிய அளவில் ரிங் டோன் அமைத்து  மேற்கூறிய ஆசையை இன்னும்  சிறிய அளவில்  நிறைவேற்றிகொள்ளலாம், இதில் நமக்கு தேவையான இடங்களை தேர்வு செய்து உருவாக்கி கொள்ளலாம் .online      இல்  தேடி  அலைய  வேண்டியது  இல்லை..
      . .                                                                                              அதை பற்றிய பதிவு உங்கள் நண்பர்களிடம் நானே உருவாகியது என்று சொல்லலாம் .ரிங்க்டோன் மொபைல் உள்ளவர்களிடம் புதுமையாக பயன்படுத்தும் ஆர்வம் உண்டு .நமக்கு பிடித்தவகையில் உருவாக்க சாப்ட்வேர் தேவை ,இப்படி ஒவ்வொரு பயன்பாட்டிற்கும்  ஒவ்வொரு சாப்ட்வேர் ,இப்படியே ஒவ்வொன்றாக நிறுவி கணிணி வேகத்தை குறைக்காமல் , நமக்கு பிடித்த ரிங்க்டோன் நாமே உருவாக்கலாம்.எவ்வித software பயன்படுத்தாமல் .. இந்த எளிய வழிகளை பின்பற்றி online இல் இலவசமாக http://www.makeownringtone.com/ தளம் வழங்குகிறது .
    * Upload, பட்டன் அழுத்தி edit செய்யவேண்டிய Mp3 file தேர்வு செய்துகொள்ளுங்கள் mp3, wma or ogg audio file.
    * முதலில் இவற்றை ஓடவிட்டு உங்களுக்கு தேவையானபகுதியை  குறிப்பிடுங்கள்  .

    * make a ringtone பட்டன் தேர்வு செய்து ok கொடுத்தால் உங்களுக்கு தேவையான ரிங் டோன் தயார் ..
    * இதனை   save செய்துகொள்ளுங்கள்  .

    இனி ஒவ்வொரு தளமாக சென்று நமக்கு பிடித்த பாடலை தேட தேவை இல்லை .இலவசமாக இந்த தளம் சென்று நமக்கு வேண்டிய வடிவில் நாமே பெற்றுக்கொள்ளலாம் .இதற்கென இலவச சாப்ட்வேர் தேடி அலைந்து கணிணினியில் நிறுவாமல் எளிதாக நாமே உருவாக்கலாம் ...
    அடுத்த பதிவில்:
        கணினி துறையின் தற்போதைய hot trend எனப்படும் முக்கிய பிரிவுகளான  சோசியல் மீடியா பற்றி நம் தமிழில் தகவல்கள் இல்லை  வாரம் ஒருமுறை பதிவிடுகிறேன் அது போல ontology,semantic web பற்றி யும் அவற்றை வைத்து நமக்கு தேவையான application உருவாக்குவது பற்றி தமிழில் பதிவு விரைவில் தொடங்குகிறேன் ஆதரவிற்கு நன்றி நண்பர்களே .
     jaiho......
    இதையும் படிங்க;

    Read more...

    Monday, May 23, 2011

    0

    உங்களுக்கு மிக பிடித்த சோசியல் மீடியா எது ? உங்கள் கருத்து & உங்கள் ஓட்டு

  • Monday, May 23, 2011
  • சோசியல் மீடியா பற்றி நேற்று முதல் பகுதி எழுதி உங்களின் ஆதரவுடன் அடுத்த பதிவு எழுத தொடங்கி விட்டேன் ... 

    சோசியல் மீடியா என்ற பொதுவான பெயர் இருந்தாலும் அதன் பயன்பாடு ஒரே மாதிரியானது அல்ல .

            linked in - வேலைவாய்ப்பில் முக்கிய பங்கும் 

        Facebook ,Orkut- கருத்துக்கள் ,புகைப்படம் வீடியோ என பகிந்துகொள்ளும்       வசதி

          Picaso - புகைப்படங்களுக்காக 

        Twitter-140 எழுத்துக்களில்  magic.short and sweet. 

            Youtube-  பொழுதுபோக்கு கல்வி ,நமது வீட்டு  விழாக்கள்  என இலவசமாக பிடித்தமான அனைத்து video க்களையும் பகிரும்  வசதி.

        Buzz- தற்போது பதிவுகளை விட சுவாரஸ்யமான விவாதங்களை கொடுக்கும் google இன் சமீபத்திய அவதாரம் .video, photo,text என வரையறை இல்லாமல் பகிரும் இடம்.

           Blog: எல்லோரும் செலவின்றி இணையதளம் தொடங்கி பிடித்த பெயரை வைத்து நம் கருத்துக்களை உலகெங்கும் நண்பர்களுடன் பகிந்து கொள்ளும் google இன் மூலம்  கிடைத்த பொக்கிஷம் .

    இன்னும் பல்லாயிரக்கனக்கான தளங்களும் அடங்கும்.

           இதில் உங்களுக்கு மிக பிடித்த பிடித்த என்று சொல்வது தவறு மிக பிடித்த என்றதான் சொல்லவேண்டும் ,எனவே உங்களுக்கு மிக பிடித்தமான  சோசியல் மீடியா தளம் எது ? என்பதை இடதுபுறம் உள்ள ஓட்டளிப்பு பட்டையில் வாக்களித்து விட்டு முடிந்தால் அதற்க்கான காரணம்  என்ன என்பதை சொல்லிவிடுங்கள் . 

    எனக்கு மேற்கூறிய அனைத்தும் பிடித்திருந்தாலும் அனைவருக்கும் இணையதளம் என்பதை சாத்தியமாக்கிய blog கிற்கு எனது ஓட்டு.

    சோசியல் மீடியா பற்றிய தொடரை மேலும் விறுவிறுப்பாக்க இது உதவும் .இறுதியில் உலக அளவில் அனைவரையும் கவந்த சோசியல் மீடியா எது ? ஏன் ? வியப்பான தகவல்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

    அடுத்த பதிவில்:

        கடந்த  பதிவில் நமது வலைபக்கத்திற்க்கு google அல்லாத நிறுவனங்கள் வழங்கும் விளம்பரங்களை பெறுவது பற்றி அடுத்த சோசியல் மீடியா பதிவில் காணலாம் .

    Read more...

    Sunday, May 22, 2011

    0

    தமிழில் சோசியல் மீடியா - முதல் பாகம் part 1

  • Sunday, May 22, 2011
  •                  social media இது பற்றி படிக்கும் போதெல்லாம் தமிழி இதுபற்றி பெரிதாக தகவல்கள் இல்லை  எனவே , தமிழில் இது பற்றி எழுதவேண்டும் எனபது எனது கனவு அதனை நனவாக்க தற்போது எழுத தொடங்குகிறேன் .

    சமூக வலைதளங்கள் :
                  twitter , facebook, orkut, google buzz, picasa,blog,linkedin,youtube ,blog போன்ற நம் கருத்துக்களை எழுத்துக்கள் , புகைப்படங்கள் , video க்கள் வடிவில் பிறருடனோ நண்பர்களுடனோ பகிர்ந்து கொள்ள மேற்கூறிய தளங்கள் உதவுகின்றன .

         தற்போது சுமார் 4500 சோசியல் மீடியா  வலைத்தளங்கள் உள்ளன இவற்றில் ஆபாச தகவல்கள்,செக்ஸ் சம்மந்தமாக சுமார்  3000 தளங்கள் உள்ளதென கண்டறிந்துள்ளனர் என்பது வருத்தமான விஷயம் .
    முக்கியத்துவம் :
                கடந்த ஐந்து ஆண்டுகளில் சோசியல் மீடியா வின் ஆக்கிரமிப்பு இணைய உலகில் முக்கிய இடம் பிடித்துவிட்டது . சோசியல் மீடியா இல்லாத இணையதளத்தை நினைத்து பார்க்ககூட முடியாது .

            ஒரு முக்கிய ஆய்வின் படி facebook பயன்படுத்தமுடியாமல் இருக்கமுடியாது என இணையதளத்தை பயன்படுத்துபவர்கள்  38% பேர் கூறி உள்ளனர் மேலும் 26%  எப்போதும் facebook, gtalk போன்றவற்றில் 24 மணி நேரமும் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

    சோசியல் மீடியா தற்போது பலருக்கும் எளிதில் சாத்தியம் ஆகிவிட்டது தற்போது linkedin போன்ற தளங்கள் வேலைவாய்ப்பில் அதிகம் உதவுகின்றன . 
    picaasa போன்ற தளங்கள் படங்களை பகிர youtube நம்மிடம் உள்ள video க்களை இலவசமாக பகிர உதவுகின்றன facebook,twitter,orkut போன்றவற்றைப்பற்றி சொல்லத்தேவை  இல்லை .

    வியாபார உலகில் சோசியல் மீடியா வின் பங்களிப்பு:
    மேற்கூறியவை எவ்வித வியாபாரம் இன்றி நம்மை போன்றவர்கள் பயன்படுத்துவது, ஆனால் இன்றைய தொழில் நுட்ப உலகில் இவற்றை வைத்து பெரிய வியாபார உலகமே  இயங்கி வருகிறது .

    சோசியல் மீடியா வின் அபார வளர்சியைகண்டு வியாபார உலகில் தொழில் நுட்ப வல்லுனர்கள் தங்களின் வியாபார உத்தியை இவற்றில் எப்படி பயன்படுத்தலாம் என யோசித்து தற்போது அதில் பெரிய வெற்றி  பெற்று இன்னும் பல வழிகளில் மேம்படுத்திவருகின்றனர் .

    சோசியல் மீடியா marketting அபார வளர்ச்சி பெற முக்கிய காரணம்:

    தற்போது இணையதள பயன்பாடு  எல்லோருக்கும் எளிது.மொபைல் வழியே குறைந்த செலவில் கிடைகிறது கூடுதல் சிறப்பு.

    கருத்துக்களை பிறருடன் எளிதில் பகிரும் வசதி.

    சிறந்த பொழுதுபோக்கு போன்ற பல சிறப்புகள் 

    முக்கியமாக நம் கருத்துக்கள் எவ்வித மிகைப்படுத்துதலும்  இல்லாமல் இருப்பது .
             உதாரணமாக நாம் புதிதாக ஒரு camera வாங்கினால் அதனை படத்துடன் அதன் தரத்தை , சிறப்புகளை twitter அல்லது facebook போன்றவற்றில் பகிர்ந்துகொள்வோம் இதனால் நம் நண்பர்கள் ஈர்க்கப்பட்டு அடுத்து அவர்கள் வாங்கும் போது இதனை மனதில் வைத்து வாங்குவர் . 

         வழக்கம் போல கடைக்கு சென்று விற்பனையாளரின் கருத்துக்களை வைத்து வாங்காமல்    நம் நண்பரின் கருத்துக்கள் வைத்து  அவர் கிட்டத்தட்ட எவ்வளவு ஆண்டுகாலம் பயன்படுத்தினார் தற்போதைய அதன் நிலவரம் போன்றவற்றை மனதில் வைத்து வாங்குவதால் முழுமையான வியாபார வெற்றி .

    உதாரணம்:
            தற்போது online marketting இல் பெரிய நிறுவனமான www.amazon.com தளத்திற்கு சென்று பாருங்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்துகொள்ளும் வசதி , அந்த பொருளை பற்றிய உங்களின் கருத்துக்கள், அதற்க்கு நீங்கள் ratting போன்ற வசதிகள் உண்டு , இதனை வைத்து வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மையை உருவாக்குகின்றனர்.

                amazon தள marketting manager சோசியல் மீடியா மொத்த வியாபாரத்தில் 70% பங்கு வகிக்கிறது என்று குறிப்பிட்டுளார் .
               
    எதிர்கால உலகில் சோசியல் மீடியா:
           மேற்கூறியதுபோல பொருட்களின் நம்பகத்தன்மை உருவாக்கம் போல தற்போதைய நிகழ்வுகள் பற்றி மக்களின் மன நிலை அறியும் வாய்ப்பு, 
    தனி மனிதனின் மன நிலையை அவன் பகிர்ந்துகொள்ளும் செய்திகளை வைத்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு போன்றவை , 

         நம்மை போன்ற பதிவர்கள் மற்றும் தளத்தை படிக்கும் நண்பர்கள் நல கருத்துக்களை அவர்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு போன்றவற்றில் பயன்பாடு கின்றன.

             SEO எனப்படும் search engine optimaization மூலம் தங்களின் வலைதளத்தை கூகிள்,bing போன்ற தேடு  பொறிகளி l தேடலின் முடிவுகளில் முதன்மை பெற என முக்கியத்துவம் பெறுகின்றன .

           உதாரணமாக நம் பதிவுகளை திரட்டிகளில் மட்டும் இணைக்கிறோம் இதனை மேலும் twitter, facebook,buzz போன்றவற்றில் இணைத்து  அதிக ranking பெற வைத்து நம் தளங்களில் உள்ள விளம்பர வருவாயை பெருக்கலாம்.
    bolgger கள் பெறப்போகும் பயன்கள் ;

            மிக அதிக அளவிலான பார்வையாளர்களை கொண்ட தளம் இனி வரும் காலங்களில் google அல்லாத சில தனியார் நிறுவன விளம்பர வசதிகளை பெற்று வருவாய் பெரும் வசதி உண்டு . தற்போதே சில நிறுவனங்கள் கொடுத்தாலும் அவர்கள் கூறும் விதிகளின்படி மிக மிக அதிக பார்வையாளர் வந்தால் மட்டுமே குறைந்த வருவாய் கிடைக்கும் எனபது குறிப்பிடத்தகது .

    2016 தமிழக   சட்ட மன்ற தேர்தல்:
                    தற்போதைய தேர்தலில் பெரிதாக கட்சிகள் இணையதளத்தை பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை ஆன்னல் வரும் நாட்களில் முக்கியமாக இளைஞர்களின் வாக்குகளை பெற அவசியம் .எதிர்கால சோசியல் மீடியா ஆளுமைக்கு நல்ல உதாரணமாக 2016 சட்டமன்ற தேர்தல் அமையும் முக்கிய கட்சிகள் அனைத்தும் சோசியல் மீடியா மூலம் மக்களிடம் வாக்குகளை பெற நல்ல ஊடகமாக இணையதளம் அமையும் பொது சோசியல் மீடியா அதற்கு பேருதவி புரியும் .
     
             இனி வாரம் தோறும் சோசியல் மீடியா வின் பயன்பாடு வளர்ச்சி பற்றி பகிந்துகொள்வோம்.எனக்கு தெரிந்தவற்றை பகிர்கிறேன் உங்களது கருத்துக்களையும் பகிர்ந்து பதிவு சிறக்க உதவுங்கள் . .பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி தமிழில் சோசியல் மீடியா பதிவுக்கு உதவுங்கள் .  

            இன்னும் நீங்கள் வியக்கும் பயன்கள் சோசியல் மீடியா மூலம் பெறமுடியும் அவற்றை அடுத்த பதிவில் காணலாம் .
    Read more...

    Subscribe