Monday, August 15, 2011

1

எட்டயபுரத்து பாரதி & ஆங்கிலேயரை வெறுத்த இந்திய அதிசயம்: சுதந்திர தின பதிவு

 • Monday, August 15, 2011
 • எட்டயபுரத்து பாரதி:

  ஊழல் கருப்புப்பணம் என பல தடைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் தகர்த்து வலிமையான இந்தியா உண்டாகும் விரைவில் என்பதில் ஆச்சர்யம் இல்லை ...
  மகாகவி சுப்பிரமணிய பாரதி இந்த பெயரையோ அவரது பாடல்களையோ  படிக்கும் போது விடுதலை உணர்வு தானாக வந்துவிடும் அவ்வளவு வலிமையான எழுத்துக்கள் , பெயர் கொண்டவர்  . 
     
  எத்தனை பேர் சுதந்திர திற்காக  பாடுபட்டிருந்தாலும் கவிதைகள் , பாடல்களின் மூலம் சுதந்திர உணர்வை வளர்த்த பாரதி பள்ளி நாட்களில் இருந்து மிகவும் பிடித்த தலைவர். 

  பத்தாம் வகுப்பில் படித்த அவரது பாஞ்சாலி சபதம் வரிகளில் 


  தேவி திரௌபதி சொல்வாள்-‘ஓம்,
  தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;
  பாவி துச்சாதனன் செந்நீர்,-அந்தப்
  பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம்,
  மேவி இரண்டுங் கலந்து-குழல்
  மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
  சீவிக் குழல்முடிப் பேன் யான்;-இது
  செய்யு முன்னே முடியே’னென் றுரைத்தாள்.
  மனப்பாட பகுதிக்காக படித்தாலும் மறக்கமுடியாத வரிகள்.


  முன்பு இருந்த அரசு வேலையில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர,குடியரசு தின நண்பர்களுடன் அணிவகுப்பில் கலந்துகொண்டு அதற்காக இரண்டு வாரங்களுக்கு முன் பிருந்தே பயிற்சி என விறுவிறுப்பாக மகிழ்ச்சியாகவும் இருக்கும் .
  தப்பாக செய்பவருக்கு  parade griound இல் திட்டு,punishment வாங்கி அன்று முழுவதும் நண்பர்கள்  அதை சொல்லி கிண்டல் செய்துகொண்டு  எனசெல்லும் .இப்போது ஸ்வீட்டோடு முடிந்துவிடுகிறது சுதந்திரதினம்.


  ஆங்கிலேயரை வெறுத்த இந்திய அதிசயம்: காந்தி, நேரு,கட்டபொம்மன் ,பாரதி போன்றவர்கள் போராட்டம் பற்றி நமக்கு தெரியும் . இந்திய அதிசயம் ஆங்கிலேயரை எதிர்த்த சுவாரஸ்ய கதை இது.
              குதுப்மினார் குத்புதின்ஐபெக்கால் முதல் மாடி வரை தான் கட்டப்பட்டது . அதை வானுயர வெற்றிகரமாக கட்டி முடித்தவர் சுல்தான் இல்தூமிஷ் .உயரம் -(242) அடி மொத்தம் உச்சிக்கு செல்ல (319) படிகள் . முஸ்லீம் மக்கள்தொழுகைக்கும் பயன்பட்டது .பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சற்று மோசமான நிலையில் இருந்த குதுப்மினாரைசீரமைக்க முடிவு செய்யப்பட்டது அதற்க்காக ராபர்ட் ஸ்மித் என்ற கட்டட கலைவல்லுனரை அரசு அழைத்து வந்தது , வந்தவர் ரிப்பேர் மட்டுமல்லாதுஅதிகபிரசங்கி தனமாக குதுப்மினருக்கு ஒரு ஆங்கில மேற்கூரை வைத்தால்மேலும் நன்றாக இருக்கும் என்று மரத்தால் ஒரு சிறு கோபுரம் அமைத்து உச்சியில் பொருத்தினார் .

     இயற்கை அதை அனுமதிக்கவில்லை ! பெரும் இடி விழுந்துகோணலாகிபோனது கலை உணர்வு மிகுந்த பிரிடிஷ் அதிகாரிகள் தலையில்அடித்துக்கொண்டு (1948) ல் இறக்கிவைத்தனர் .இன்றளவும் பரிதாபமாக சுணங்கி நிற்கும் அதை காணலாம் ..இது என்ன அபத்தம் என்று குதுப்மினார் அந்த வெள்ளைக்கார குல்லாயை ஒதுக்கி தள்ளிவிட்டதாம்.வெள்ளைக்காரர்கள் தன் மீது சுமத்திய பாரத்தை விரட்டிய முதல் இந்தியன்குதுப்மினார் என்பதில் நமக்கும் பெருமைதான்.குதுப்மினார்


  இந்தியன் என்பதில் பெருமைகொள்வோம் ...........அனைவருக்கும் சுதந்திர தின  வாழ்த்துக்கள்...
  Read more...

  Sunday, August 7, 2011

  1


  நண்பர்கள் தினம் - கவியரசு கண்ணதாசன்  
   

    நட்பே நலமா?
         (friend ship day special)
           நட்பு என்பது என்ன?:
  திருவள்ளுவர் நட்பு பற்றிய சொல்லியதைவிட நாம் எதுவும் பெரிதாக சொல்லிவிட முடியாது .    நட்பு பற்றி மட்டும்தான் நான்கு அதிகாரங்களில் சொல்லியிருக்கிறார் .

  நட்பு - Friendship

  நட்பாராய்தல் - Testing Friendship

  தீ நட்பு - Bad Friendship

  கூடாநட்பு - False Friendship
  உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

  இடுக்கண் களைவதாம் நட்பு.
  ஆடை அவிழும்போது கை தானே சென்று கீழே விழாமல்  காப்பது போல நண்பன் துன்பப்படும் போது ஓடி சென்று உதவுவது நட்பு என வள்ளுவர் விளக்கம் தருகிறார்.
  நாம் சந்தோசமாக இருக்கும் நேரம் நண்பர்கள் உடன் இருக்கும்போது மட்டும் தான்.எவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உலகில் இருக்கும் ஒரே உறவு நட்பு மட்டுமே .

  நட்பின் முக்கியத்துவம்:
  உன் நண்பன் பற்றிசொல் உன்னை பற்றி சொல்கிறேன். நம்முடைய குணநலன்கள், நடத்தை போன்ற அம்சங்களை நிர்ணயிக்க முக்கிய காரணம் .
  நல்ல மனைவியை போல நல்ல நண்பன் கிடைப்பதும் இறைவன் கொடுத்த வரம்தான்.
  தாய்,தந்தையை விட நன் வாழ்வில் அதிக நேரம் நம்முடன் இருப்பவர்கள் நண்பர்களே!.
  இந்த நவீன யுகத்தில் எல்லாமே விரைவாக நடக்கின்றன ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்க்கையை ஐம்பத்து ஆண்டுகள் கழித்து பார்த்தால் இதுவரை என்ன பெற்றிருக்கிறோம் என ஆராய்ந்தால் நண்பர்கள் தான் நினைவுக்கு வருவர் .
  உலகில் பெற்றோர், காதலி, உறவினர் ஏன் கல்வி அறிவு கூட இல்லாமல் வாழமுடியும் அனால் நண்பர்கள் இல்லாதவர் யாருமே இருக்கமுடியாது.
  தினமும் நாளிதழ்களில் பார்க்கும் பொது பிரபலங்கள் இந்த நிலைக்கு வர  காரணமாக நண்பர்களை குறிப்பிடுபவர்கள் .அதேபோல திருட்டு , கொலை போன்ற பாதக செயல்களில் தனது நண்பர்களுடன் ஈடுபடுவதை பார்க்கின்றோம்.ஆகவே நட்பு தான் நம்மை நிர்ணயிக்கின்றது பெரும்பாலான நேரங்களில். நண்பனை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே போகலாம் .
  நண்பர்களை பற்றி கண்ணதாசன்

  அர்த்தமுள்ள இந்து மதத்தில் கண்ணதாசன் இன்றைய நண்பர்கள் பற்றி எளிமையாக சொல்லியிருப்பார்.
  பனைமரம், தென்னைமரம், வாழைமரம் .  பனைமரம்                     தானாக முளைத்து தனக்கு கிடைத்த நீரை குடித்து தன்உடம்பையும்ஓலையையும் மற்றும் நுங்கையும் உலகத்திற்குதருகிறது

  நம்மிடம் எந்த உதவியும் கேட்காமல் உதவுபவன் பனைமரம் போன்றநண்பன் .      தென்னைமரம்:
  தென்னை நம்மால் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தால் பலன் தருகிறது அதுபோல நிமிடம் உதவி பெற்று  நண்பனாக இருப்பவன் தென்னை மரத்துக்கு இணையானவன்
  வாழைமரம்தினமும் தண்ணீர் ஊற்றினால் தான் பலன்தரும்அதுபோல நம்மிடம் தினமும் உதவி பெற்று வாழ்பவன் வாழைமரம் போன்றவன்
  இந்த மூவரில் பனைமரம் போன்றவனை தேர்ந்தெடுக்க வேண்டும் இது ஒரு பாடலின் வரிகள் என்கிறார் கண்ணதாசன் 

  நட்பு என்ற பெயரில் ஏமாற்றுபவர்கள் எனக்கு கிடைத்த நண்பர்களில் நூற்றுக்கு ஒருவர் இருவர் தான் அப்படி கிடைத்தனர் .மற்றவர்கள் பணம் பறிக்க என்னிடம் இருந்தனர் இப்போது அவர்கள் கோழி மேய்க்கின்றனர் என கண்ணதாசன் குறிப்பிடுகிறார். 
   நமது வாழ்விலும் இம்மூன்றுவகையானவர்களை பார்க்கின்றோம்


   முன்னோர் காலத்தில் நட்பு:
  பாரத கதையில் தான் செஞ்சோற்று கடனை அடைக்க  சகோதரர்களுக்கெதிராக நண்பன் தீய செயல் புரிபவனாக இருந்தாலும் இறுதிவரை அவனுடனிருந்து உயிர் விட்ட கர்ணன் 
  பார்க்காமல் நட்பு:  சங்க காலத்தில்  கோப்பெருஞ்சோழன் -பிசிராந்தையார் நட்பு இதைவிட வேறு சரியான உதாரணம் இல்லை 

   


  கோப்பெருஞ்சோழன் பற்றி கேள்விப்பட்டு பிசிராந்தையர் என்ற புலவர் அவன்மீது நட்பு கொண்டார் சோழ மன்னனும் புலவர் பற்றி அறிந்து இருவரும் பார்க்காமலே நட்பு கொண்டனர் சில ஆண்டுகள் கழித்து  சோழன் வடக்கிருக்க சாப்பிடாமல் இறைவனை நினைத்து உயிர் துறப்பது முடிவு செய்தான்

  இதனை அறிந்து அவனுடன் மேலும் சிலர் வடகிருக்க முடிவு செய்தனர் சோழன் புலவருக்காக இடம் அங்கு ஒதுக்கினான்  அது போல புலவரும் அங்கு வந்து சேர்ந்தார் தமிழர்களின் வாழ்வில் நட்பு என்பது வாழ்வில் கலந்துவிட்ட ஒன்று இப்போதுபோல நண்பர்கள் தினம் என்று தனியாக இல்லை
  இன்று செய்ய வேண்டியது நமக்கு நல்ல நண்பர்களை கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லி நம் நண்பர்களுடன் நேரிலோ தொலைபேசியிலோ நம் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளவேண்டும்.

      


  சில கருத்து வேறுபாடுகளால் நம்மை விட்டு பிரிந்து போன நண்பர்களுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு, அவற்றை மறந்துவிட்டு சிறிய நினைவு பரிசு கொடுத்து அவர்களுடன் மீண்டும் நட்பை புதுப்பிக்கும் நாளாக கொண்டாடலாம்
  எல்லாம் சரி ஆண் பெண் நட்பு பற்றி சொல்லவே இல்லையே
  நட்பிற்கு ஆண் பெண் வேறுபாடு கிடையாது ,இதற்க்கு கர்ணன் துரியோதனன் மனைவி நட்பை உதரணமாக சொல்லலாம் இருவரும் விளையாடும் போது கழுத்தில் உள்ள ஆபரண முத்துக்கள் சிதறிவிட்டது அப்போது வந்த துரியோதனனிடன் எடுக்கவோ கோர்க்கவோ என கூறினான் பதற்றம் இல்லாமல்சூழ்நிலை சமூகம் போன்றவற்றால் ஆண் பெண் நட்பு சற்று கடினம்தான்  Read more...

  Subscribe