Tuesday, June 14, 2011

1

WAMP Server மென்பொருளை server setup செய்வது எப்படி

 • Tuesday, June 14, 2011
 • WAMP Server மென்பொருளை server setup செய்வது எப்படி என்பதை பார்போம்.
  WAMP என்றால் என்ன? What is WAMP?

  W
   - Windows / L - Linux Operating System - கணினியின் Hardware மற்றும் கணினியை பயன்படுத்தும் நபரின் (User) இடைநிலையாய் செயல்படும் மென்பொருள் . Windows, Microsoft நிறுவனத்தின் தயாரிப்பு. Linux, Open Source 

  Operating systems act as an Interface between Computers hardware and the user.

  A - Apache Web Server - இணையத்தளத்தில் காணப்படும் வலை தளம் (website) மற்றும்அதனுள் இருக்கும் வலை மடல்கலை (web pages) சேமித்து வைக்கவும், வலைதளத்திற்கு அனுப்ப படும் தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படும் மென்பொருள். இது Windows இன் உதவியுடன் இயங்கும் . இம்மென்பொருளை Web Server என்று கூறுவார்கள்.
  Apache, a famous open source web server from the Apache foundation. a web server is used to host web pages/web applications. It delivers content such as web pages. it runs on an operating system (Windows/Linux).

  M
   - MySQL Database Software - வலைதளத்திற்கு பதிவேடாக பயன் படும் மென் பொருள். Dynamic website with persistent data என்று கூறப்படும் நிலையான தோற்றம் மற்றும் தகவல் இல்லாத, தளத்தை பயன் படுத்தும் நபரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தன் நிலையை மாற்றி கொள்ளும் தன்மை உடைய இணையதளத்தை உருவாக்க பயன்படும். இம்மென்பொருளை Back End software என்று கூறுவார்கள் . தளத்தின் அனைத்து தகவல்கள் இம்மென்பொருளில் சேமித்து வைக்கப்படும்.


  P - PHP Server Side Scripting Language - வலை தளத்தை பயன்படுத்தும் நபரால் அனுப்படும் தகவல்களை உள் வாங்கி, நபரின் தேவையை அறிந்து, தேவைக்கேற்ற தகவல்களை அளிக்கும் வல்லமையை நம் தளத்திற்கு அளிக்க பயன் படும் மென்பொருள். கட்டமைப்பு வரிகள் மூலம் விதிமுறைகளை உருவாக்கி தளம் எப்படி செயல் படவேண்டும் என்ற விதி முறைகளையும், பதிவேட்டை எப்படி பயன் படுத்துவது என்ற விதிமுறைகளையும் , தகவல்களை எப்படி சேமிப்பது என்ற விதிமுறைகளையும் உருவாக்க பயன் படும் மென்பொருள். இதை Front End என்று கூறுவார்கள்.


  WAMP
   Server Setup
  இவ்வனைத்து மென்பொருளையும் தனி தனியே install மற்றும் Assemble செய்வது சற்று கடினமான வேலை.


  சுலபமாக WAMP Server download செய்து install செய்தால் போதுமானது. இதை செய்ய

  முதலில் : மென்பொருளை Download செய்யவும்  http://www.wampserver.com/en/download.php


  Download செய்த wampserver2.0i.exe double click செய்து கணினிஇல் install செய்யவும்.  (install செய்ய தெரியவில்லை என்றல் Next, Yes, Unblock ஆகிய button click செய்தால் போதுமானது)

  install முடிந்தவுடன் தங்களது desktop இல் WampServer Icon இருக்கும். அதை double click செய்யவும்.

  After Installation double click the Wamp Server icon on your desktop.
  double click செய்ததும், System Tray இல் WAMP Server இயங்குவதை காணலாம்.


  you can see the WAMP server running in your system tray.

  இப்போது Server இயங்கிகொண்டு இருக்கிறது. இதை உறுதி படுத்த Internet Explorer அல்லது Firefox அல்லது தங்களுக்கு பிடித்தமான Web Browser Open செய்து, Address Bar இல் http://localhost என்று டைப் செய்து [Enter] அழுத்தவும். கீழ்கண்டவாறு தங்களது Screen இருந்தால் WAMP Server வெற்றிகரமாக install செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யலாம்.

  To confirm the WAMP server installation, open you faviourit browser and type "http://localhost" is the address bar. If you see the following web page, your brand new shiny WAMP server is up and Running.  இப்போது PHP இல் Web Programming செய்வதற்கான களம் தயார் .
  thanks
  tamilprofessional.
  rajesh.
  Read more...
  3

  இந்திய கிரிக்கெட் அணி அன்றும் இன்றும் அழகிய கிராமத்து நினைவுகள்

 • இந்திய கிரிக்கெட் அணி அன்றும் இன்றும் .....

  எனக்கு பிடித்த கிரிக்கெட் பற்றி நிறைய எழுத ஆசை .  அவ்வப்போது இனி எழுதுகிறேன் . கிரிக்கெட் டை தோனிக்கு  முன் டோனி வந்த பிறகு என அன்றும் இன்றும் என பிரிக்கலாம் .

  அன்று:
   அன்று என்றால் கபில் தேவ் ,கவாஸ்கர் விளையாடியது அவர்கள் உலக கோப்பை வாங்கியது பற்றியெல்லாம் ராஜ் டிவி இல் ஸ்ரீகாந்த் வாரம்தோறும் ஞாயிறு  காலை 8:30 மணிக்கு winnig movements of indian cricket என்று வழங்குவார் அப்போது பார்த்தது . 1998 முதல் ஆர்வமாக பார்க்க தொடங்கியதாக நினைவு .

        தேசிய   கொடிக்கு மூவர்ணம் போல இந்திய கிரிக்கெட் அணிக்கு   சச்சின் ,கங்குலி ,டிராவிட்.இவர்களை அடுத்து சில நேரங்களில் ஜடேஜா அவ்வப்போது அசார் என அடித்து பாதி ஆட்டத்தில் வெற்றி பாதி ஆட்டத்தில் தோல்வி என போய்க்கொண்டிருக்கும் பெரும்பாலும் மேலே சொன்ன மூவர் நன்கு அடித்தால் நிச்சயம் வெற்றி ஆஸ்திரேலியா அணியுடன் மட்டும் விளையாடும் போது இன்னும் விறுவிறுப்பு . bowling இல் கும்ப்ளே , ஸ்ரீநாத் , பிரசாத் என்று ஓரளவிற்கு பந்து வீச்சு இருக்கும் .

        எது எப்படி என்றாலும் பார்க்கும் போது விறு விறுப்புக்கு பஞ்சம் இருக்காது  . போட்டிகள் அனைத்தும் தூர்தர்சனில் பெரும்பாலும் கரண்ட் போனால்தான் பார்க்க முடியாது .இப்போது போல் கரண்ட் நிற்காது எனவே கண்டிப்பாக அனைத்து போட்டியையும் பார்க்கலாம் .போட்டி தொடங்கினால் அன்று நண்பர்களுடன் டிவி இருப்பவர்கள் வீட்டில் 
  ஒன்றாக பார்க்க வந்து விடுவோம் .பெரிய துணியை கட்டி சூரிய ஒழி பிரதிபலிக்காத அளவுக்கு கட்டிவிடுவோம் ..இன்று வரை கிரிக்கெட் மட்டும் தனியாக பார்த்தல் அவ்வளவு சுவாரஸ்யமாக இருப்பதில்லை என்ன காரணமோ .?

  சச்சின் ,கங்குலி பெரும்பாலும் அதிரடி துவக்கம் தான் , இப்போது கூட இவர்களுக்கு இணையாக ரசிக்க எந்த அணியிலும் இல்லை ..அடுத்து வரும் டிராவிட் மெதுவாக தொடங்கி பிறகு strike rate 80 க்கு வந்து விடுவார் ..
  சச்சின் அவுட் என்றால் ஏறக்குறைய தோல்வி உறுதி அப்போதெல்லாம் ..
  சச்சின் சச்சின் சச்சின் மட்டும் தான் ..அப்போது கூட கங்குலி , டிராவிட் தங்களுக்கென பெரும்பாலான  ரசிகர்களை கொண்டிருந்தது ஆச்சர்யம் தான் ..

        பெரும்பாலானோருக்கு மூவரையும் பிடிக்கும் ஏறக்குறைய பத்து ஆண்டுகள் இவர்களின் ராஜ்ஜியம் தான் . எத்தனையோ பேர் வந்து போய்கொண்டிருந்தாலும் .மூவரும் சளைக்காமல் தங்கள் அதிரடியை ஆளுக்கொரு போட்டியில் காட்டிவிடுவார்கள். யாரவது இருவர் ஒரே நேரத்தில் அதிரடி காட்டினால் அது ஆஸ்திரேலியா அணியாக இருந்தாலும் அன்று அவர்களுக்கு தோல்விதான் ..

  சச்சின்-டிராவிட், டிராவிட் - கங்குலி, சச்சின்-கங்குலி கூட்டணியில் பல சதங்களும் அரை சதங்களும் மற்றும் இணைத்து அதிக ரன்கள் என இன்றுவரை யாரும் நெருங்கவில்லை ..

  பெரும்பாலும் இறுதி போட்டி, உலக கோப்பை என தோல்வியை கொடுத்தாலும் ரசிகர்கள் ஆர்வம் குறைய வில்லை .  இன்று உள்ள டோனி அல்லது கில்கிறிஸ்ட்  போல அதிரடி கீப்பர் கிடைக்காதது பெரிய குறை .அப்போது புதிதாக வருபவர்கள் மிக குறைவு பெரும்பாலும் அதே அணிதான் .உலக கோப்பைக்கு விளையாட செல்லும் போது  இதற்கென பாடல்கள் தயார் செய்து டிவி இல் அடிக்கடி போடுவார்கள் .

  brittania world cup:
           1999 இங்கிலாந்தில் உலக கோப்பை போட்டி பிரிட்டானியா நிறுவனத்தினர் தங்களது பிஸ்கட் கவர்களில் ரன்கள் போட்டு நூறு ரன்கள் சேர்த்து கொடுத்தால் ஒரு சிறிய பாக்கெட் நோட் அளவிற்கு புத்தகம் அதில்  சுரண்டல் லட்டோரி போல ஒரு கார்டு இணைத்திருப்பார்கள் அதில் முதல் பரிசு விழுந்தால் இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிக்கு அழைத்து செல்வதாக விளம்பரம் போடுவார்கள் .. பெரும்பாலும் அதில் ஒன்றும் விழாது அவ்வப்போது எதாவது brittania பிஸ்கட் விழும் அவ்வளவுதான் .அப்போதெல்லாம்  favourite பிஸ்கட் brittaania தான் .பக்கத்துக்குவீட்ல இருக்கிற பசங்களிடம் சாப்பிட  சொல்லி அவங்க வீட்ட்ல cover எடுத்து  வைக்க  சொல்லி முழுமையாக brittania salesman போல மாறிபோயிருந்தேன் . பெரிய குரூப் சேர்த்து அந்த 45 நாட்களுக்குள்ள இதுதான் பெரிய வேலை .என்கிட்ட இவ்வளவு ஸ்கோர் இருக்கு ன்னு சொல்றதுதான் பெரிய விஷயம் .
  (மேலே உள்ள படத்தில் இங்கிலாந்து செல்ல விளம்பரம் )

  ஆனால் அந்த புத்தகத்தில் போட்டி நடைபெறும் இடம் , இதற்க்கு முன் நடந்த உலக கோப்பை முக்கிய தகவல்கள் ,வீரர்களின் ரன் கள் விக்கெட் விவரங்கள் என இருக்கும்.நானும் எனது தம்பி  வினோத்தும் கிட்ட தட்ட 20 ,25 புத்தகங்கள் வாங்கி இருந்தோம் அதில் சில பிஸ்கட் அவ்வப்போது பரிசாக கிடைக்கும் ....

  .கடைசிவரைக்கும் இங்கிலாந்து வேண்டா.. பக்கத்துக்கு வீட்ல பார்த்துக்கொண்டிருக்கும் கருப்பு  வெள்ளை டிவி க்கு பதிலா ஒரு கலர் டிவி கிடைக்கும் என்று பார்த்தா இப்படி பிஸ்கட் மட்டும் கொடுத்துட்டாங்க ..அதுக்கப்புறம் நடந்த வேர்ல்ட் கப் ளையும் இதையே விளம்பரப்படுத்தினாங்க அப்போது கொஞ்சம் பெரிய பையனா வளர்துட்டதால பெருசா ஆர்வம் இல்ல ஏதோ 4,5 புக் வாங்கினதா ஞாபகம் அதுவும் அந்த புக் புடிச்சி இருந்ததால . ஏன் தம்பி வினோத் ஆர்வமா ரன் சேர்ப்பான்னு பார்த்தா அவனும் கண்டுக்கல அவனும் வளந்துடானோ ?

  ஆனா அந்த வருஷம் எங்க பக்கத்து வீட்டு பையன் நிறைய  வாங்கி அவனுக்கும் பிஸ்கட் தான்  கிடைத்தது  ...சரி மறுபடியும் கிரிக்கெட் டுக்கு வருவோம் . 

         2000 வரைக்கும் பெருசா டீம் ல அதே ஆளுங்கதான் புதுசா யாராச்சும் வந்த௫ஹாலும் கொஞ்ச நாள்ல முகத்துல கிரீம் ல பூசி மோசமா ஆடி காண போடுவாங்க அபை குருவில்லா , சோதி, நிகில் சோப்ர ,சபா கரீம்,நம்ம ஊர் பதானி இப்டி பல பேர் பதானி , தினேஷ் மோங்கியா அப்பப்ப வந்து போவாங்க ....

     நயன் மோங்கியா இவர்தான் பெரும்பாலான போட்டிகளில் விக்கெட் கீப்பர் இவர் batting ஹர்பஜன் கூட நன்றாக விளையாடுவார் என சொல்லலாம் எப்போதாவது அரை சதம் அடிப்பார் ..அசார் ஜடேஜா style players இவர்களின் அனைத்து shot களும் பார்க்க அருமையாக இருக்கும் ...இன்னும் கொஞ்சம் நன்றாக ஆடி இருக்கலாம் என்று இப்போதும் கூட தோன்றும் ..இவர்களின் பில்டிங் அருமை யாக இருக்கும் ...

  சேவாக் ,யுவராஜ்,கைப்:
  2000 ல இருந்து  சேவாக் வந்த புதுசுல அதிரடிய ஆடி 50 மேல அடிச்சார் உடனே காயத்துல வீட்டுக்கு போயிடு அப்புறம் கொஞ்சநாள் கழிச்சி டீம் ல செட் ஆகிட்டார். யுவராஜ் , கைப் ன்னு இன்னும் ரெண்டு பேர் கைப் கைல எச்சி துப்பி என்னென்னமோ பண்ணுவாரு இவங்க ரெண்டு பெரும் பீல்டிங் நல்லா பண்ணிட்டு முக்கியமான மேட்ச் ல வின் பண்ணி குடுத்தாங்க .. அசார் ,ஜடேஜா இடாத புடிசிகிடாங்க இவங்க ரெண்டு பேறும்..ஜடேஜா இடாத யுவராஜ் சிங்கும் அசர் இடத்தை கைப் புடிச்சாலும் அசார் அளவுக்கு கைப்  புடிக்கல ...

      அஜாருக்கு பிறகு சச்சின் கேப்டன் ஆனால் பல போட்டிகளில் தோல்வி தல batting சரியாய் பண்ண முடியல.எனவே கங்குலி அடுத்து கேப்டன் ஆனார் .. மீண்டும் வெற்றி கிடைக்க தொடங்கினாலும் உலக கோப்பை கனவு நனவாக வில்லை அடுத்து டிராவிட் கேப்டன் இவராலும் பெரிதாக சாதிக்க முடிய வில்லை ...
    
  இப்போது இன்னும் கொஞ்சம் இந்திய அணியின் வெற்றி அளவு அதிகமானது பந்து வீச்சில் பெரிய அளவிற்கு புதிய வீரர்கள் சாதிக்க வில்லை அகார்கர் ஆரம்பம் நன்றாக இருந்தது விரைவாக 50 wicket எடுத்தார் அதற்கப்புறம் பெரிதாக சாதிக்கவில்லை அடுத்து nehra வந்தார் அவரும் அகார்கர் போல தான் ...
  இப்படியே 1996,1999,2003 ,ஏன் 2007 வரை இந்தியாவின்  உலக கோப்பை கனவு வந்து வந்து போய்க்கொண்டிருந்தது ...
     
  live stream india vs west indies ....good quality video
  2004 இறுதி அப்போதுதான் இந்தியாவிற்கு சரியான விக்கெட் keeper batsman கிடைத்தார் அவரது தோற்றத்தை அப்போது பார்த்தல் எல்லோரும் கேலி செய்வார்கள் அப்போது யாருக்கும் தெரியாது அவர்தான் வருங்கால இந்திய அணியின் கேப்டன் என்று பல உலக கோப்பைகளை வெல்ல  வந்தவர் என்று ..அவர் தான் நம்ம தல டோனி ...
  அடுத்த பதிவில் இந்திய கிரிக்கெட் அணி இன்று பற்றி காணலாம் ....
  Read more...

  Sunday, June 12, 2011

  0

  கணிணி பாதுகாப்பு வழிகள் -2

 • Sunday, June 12, 2011
 • முதல் பகுதியை படிக்க ..
   கணிணி பாதுகாப்பு வழிகள் -part I
               இவை அனைத்தையும் முழுமையாக பின்பற்றுவது இயலாது என்றாலும் நமக்கு இதுபோன்ற பிரச்சினைகள் எழும் போது தீர்வு காண இது உதவும் பெரும்பாலானவை அன்றாடம் நம் சந்திக்கும் நிகழ்வுகள்தான் ஒரு சில மட்டும் அரிதாக நிகழ்பவை சில நமக்கு தெரியாமலேயே நடப்பவை ..
   கம்ப்யூட்டரைப் பாதுகாக்க சிறந்த வழிகள் -part II
  14. சிடியைப் போட்டால் ஆட்டோ ரன் மற்றும் ஆட்டோ பிளே ஆகிறதா ? அவற்றை நிரந்தரமாக நிறுத்திவிடுங்கள் . ஆட்டோ ரன் எளிதாக நிறுத்திவிடலாம். ஆட்டோ பிளே நிறுத்த ட்வீக் யு.ஐ. (Tweak UI) பயன்படுத்தலாம்.

  15. விண்டோஸ், தான் இயங்கும் போது பல புரோகிராம்களை பின்புலத்தில் இயக்கிக் கொண்டு இருக்கும். விண்டோஸ் டாஸ்க் மேனேஜரைப் பயன்படுத்தி என்ன என்ன புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதன் பாருங்கள் . தேவையற்றது அல்லது நீங்கள் அறியாதது என்று இருப்பின் அதனை நிறுத்தலாம். அதனால் கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு பிரச்சினை இல்லை என்றால் நீக்கி வைக்கலாம்.
                  16. உங்களுக்கு வந்துள்ள இமெயில் செய்திகளில் ஏதேனும் லிங்க் கொடுத்து அவற்றைக் கிளிக் செய்திட உங்களைக் கேட்டுக் கொள்ளப்படுகிறதா? அவசரப்பட்டு உடனே கிளிக் செய்திட வேண்டாம். அனுப்பியவர் நம்பிக்கைக்குரியவர் என்றாலே கிளிக் செய்திடவும்.

  17. பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய இரண்டுமே பிஷ்ஷிங் பில்டர்களைப் பயன்படுத்துகின்றன. இவற்றை இயக்க நிலையில் வைக்கவும்.

  18. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மிகவும் பிரபலமான பிரவுசர் தான். அதனால்தான் ஹேக்கர்களும் அந்த வழியிலேயே உள்ளே புக எண்ணுகின்றனர். எனவே மாறுதலுக்காக ஆப்பரா அல்லது பயர்பாக்ஸ் பயன் படுத்துங்கள். வேகமாகவும் இயங்குபவை இவைதான்.


  19 ..ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்களை நிரந்தரமாக அணைத்து விடுங்கள். பிரவுசர்கள் உங்களைக் கேட்காமல் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இயக்க இது உதவுகிறது.
  20. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களை வெப்சைட்டில் தரப்போகிறீர் களா? அந்த தளம் பாதுகாப்பானது தானா என்று பார்க்கவும். அதன் முகவரியில் ‘https’என S சேர்த்து இருக்க வேண்டும். அல்லது அட்ரஸ் பாரில் அல்லது வேறு இடங்களில் பூட்டு அடையாளம் இருக்க வேண்டும்.

                21. உங்களுக்கு ஒரு சேவையை வழங்குகையில் இணைய தளங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உறுதி செய்திட உங்கள் இமெயில் முகவரிகளைக் கேட்கும். 10 நிமிடத்திற்குள் செய்தி அனுப்பப்படும் என்று செய்தி வரும். அப்போது தற்காலிக இமெயில் முகவரி தரும் 10minutemail.com போன்ற தளங்களை  பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தளம் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் முகவரிகளை உங்களுக்கு வழங்கும்.

  22. உங்களுடைய வழக்கமான இமெயில் முகவரியை உங்கள் உற்றவர்களுக்கும் நண்பர்களுக்கு மட்டுமே தரவும். இலவச இமெயில் முகவரிகளைத் தருவதற்கு கூகுள், மைக்ரோசாப்ட் லைவ் மெயில், யாஹூ இருக்கும்போது ஸ்டெப்னி இமெயில் முகவரிகளை நிறைய வைத்துக் கொள்ளலாம்.
  23. மொத்தமாக வரும் ஸ்பேம் மெயில்கள் உங்களுக்குத் தேவையான செய்தியைக் கொண்டு வந்திருந்ததாக அறிந்தாலும் அவற்றைப் படிக்க வேண்டாம். ஏனென்றால் திறந்து படித்தால் உங்களுடைய முகவரி அவர்களிடம் சிக்கி விடும்.
                    24. இமெயில்களை ஸ்பேம் பில்டர் கொண்டு பயன்படுத்தவும். தண்டர்பேர்ட் தன்னிடத்தே ஒரு நல்ல ஸ்பேம் பில்டரைக் கொண்டுள்ளது. அவுட்லுக் 2003 மற்றும் அவுட்லுக் 2007 ஆகியவை மைக்ரோசாப்டின் ஸ்மார்ட் ஸ்கிரீன் என்னும் பில்டரைப் பயன்படுத்துகின்றன. இது உங்கள் மெயிலைப் படித்து அதன் தகவல்களிலிருந்து அது ஸ்பேம் மெயிலா என அறிந்து அழிக்கிறது. இவ்வகையில் ஜிமெயில் கிட்டத்தட்ட எந்த குறைபாடும் இன்றி உள்ளது.

  25 .முடிந்தவரை unix OS  பயன்படுத்தினால் மேற்கூறிய பெரும்பாலான பிரச்சினைகளை மறந்துவிடலாம் . Windows பயன்படுத்துபவர்கள் Antivirus நிறுவியிருந்தாலும் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.
  .
    தண்டர்பேர்ட்,ட்வீக் யு.ஐ. (Tweak UI) பற்றி அடுத்தபதிவில் காணலாம் .
  இலவசமாக கிடைக்கும் உபுண்டு பயன்படுத்தினால் 90 இதுபோன்ற பிரச்சினைகள் வராது .இவையெல்லாம் விண்டோஸ் பயனாளர்களுக்கு ஏற்படுபவை.புதிதாக வந்துள்ள உபுண்டு 10.10  பல  புதிய  வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள்ளது ..
  Read more...
  1

  கணினி புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு;;கணிணி பாதுகாப்பு வழிகள்


 • 1. automatic update:
                      பெரும்பாலானோர் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இதில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து, அதற்கான தீர்வுகளை Batch File என்ற வகையில் தருகிறது. மாதம் ஒருமுறை தரப்படும் இந்த பேட்ச் பைல்களை நம் கம்ப்யூட்டர்கள் இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில் தாமாகப் பெற்று அப்டேட் செய்திடும் வகையில் நம் சிஸ்டத்தில் செட் அப் செய்து கொள்ளுங்கள் .ஒரிஜினல் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் இது பொருந்தும்,.
  2.Best Anti-virus:
                          இன்டர்நெட் மூலம் தான் பல வைரஸ்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஏறத்தாழ ஒருநாளைக்கு 500 புதிய வைரஸ்கள் ,விபரங்களுக்கு இங்கே சென்று பாருங்கள் மாதந்தோறும் உருவாகும் புதிய வைரஸ் விபரங்களை எந்த நாடு என கொடுத்துள்ளனர் New viral list monthly எனவே இதனைக் கண்டறிந்து தடுக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லை எனில் புதிதாய் வரும் வைரஸ்கள் பாதித்துவிடும் .
  3.Anti-Spiware:
                   ஏதேனும் ஒரு வழியில், இமெயில் அல்லது டவுண்லோட் ஆகும் புரோகிராம் போன்றவற்றின் மூலம், பல ஸ்பைவேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரில் வந்தமர்ந்து, நம் சிஸ்டத்தில் உள்ள நம்முடைய பெர்சனல் தகவல்களைத் திருடி அடுத்தவருக்கு அனுப்புகின்றன. எனவே ஒன்று அல்லது இரண்டு ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்களைப் பதிந்து வைத்து இயக்க வேண்டும். பொதுவாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன் இணைந்து இவை கிடைக்கும். மைக்ரோசாப்ட், விஸ்டாவுடன் விண்டோஸ் டிபன்டர் மற்றும் ஸ்பை ஸ்வீப்பர் புரோகிராம்களைத் தருகிறது.
  4.Firewall:
                     நம் கம்ப்யூட்டருக்குள் வரும் spyware புரோகிராம்களைத் தடுக்கும் ஒரு வழி பயர்வால் ஆகும். நம் கம்ப்யூட்டர் பாதிக்கப்பட்டால் அதிலிருந்தும் இது போன்ற புரோகிராம்களைச் செல்ல விடாமல் firewall தடுக்கிறது. எனவே இருவழி பயர்வால் தொகுப்பு ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். விஸ்டாவுடன் இதுவும் தரப்படுகிறது. Zone Alarm போன்ற இலவசமாகக் கிடைக்கும் பயர்வால்களையும் பயன்படுத்தலாம்.

                 5. பயர்வால் புரோகிராம் ஒன்று போதும். இரண்டு இன்ஸ்டால் செய்தால் கஷ்டம்தான் . அதே போல்தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும். இவை இரண்டு வைத்துக் கொண்டாலும் ஒரு முறை ஒன்றைப் வைத்துக்கொள்ளுங்கள்.
  6. Password :
                       நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் அடுத்தவர்கள் எளிதில் கண்டுபிடித்திடும் வகையில் இருக்கக் கூடாது. எண்களும் எழுத்துக்களும் (Alphanumeric )கலந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும். நீளமாக இருந்தால் நல்லதுதான். அத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்க http://passwordbird.com என்ற தளத்தை பயன்படுத்தலாம் .
                   7. எந்த பாஸ்வேர்டையும் எந்த நேரமும் மாற்றக் கூடிய வசதியினை இன்டர்நெட்டில் உள்ள தளங்கள் தருகின்றன. எனவே பாஸ்வேர்டை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

                      8. ஒரே பாஸ்வேர்டினையே அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொன்றுக்கும் மாறான பாஸ்வேர்ட் பயன்படுத்தவும்.

                  9. ஒரு new பைல் உங்களுக்கு வந்துள்ளதா? அதில் வைரஸ் எதுவும் உள்ளதா என்று சந்தேகம் வருகிறதா? உங்கள் ஆண்ட்டி வைரஸ் கொண்டு சோதிக்க பயமா? உடனே அதனை Virustotal.com என்ற தளத்திற்கு அனுப்பவும். அல்லது அட்டாச்மென்ட் ஆக scan@virustotal.com என்ற இமெயில் முகவரிக்கு ஸ்கேன் என்ற ஒரு வரிச் சொல்லை சப்ஜெக்டில் அமைத்து அனுப்பவும். உடனே 32 வகையான வைரஸ் சோதனை செய்து உங்களுக்கு ரிபோர்ட் கிடைக்கும்.  
                          10. பொதுவான வாழ்த்துக்கள் குவியும் நாட்களில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்களின் பெயரிலேயே வைரஸ் இணைந்த வாழ்த்துகள் வரும் வாய்ப்பு அதிகம்.
                       11. உங்கள் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் உள்ளது. இலவசமாக இங்கு கிளிக் செய்தால் அதனைக் கண்டுபிடித்து வெளியேற்றலாம் என்ற செய்தியுடன் ஏதாவது லிங்க் வருகிறதா? உடனே அதனை நீக்கி விடுங்கள். கிளிக் செய்தால் எப்பவும் தொல்லை தான்.

                        12. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களையோ போட்டோக்களையோ இணையத்தில் இட வேண்டாம். அவை நிரந்தரமாக அங்கு இருப்பதால் பிறர் பயன்படுத்த வாய்ப்பு உண்டு.
                   13. பொதுவான public கம்ப்யூட்டர்  மூலம் நீங்கள் browsing செய்திடும் நிலை ஏற்பட்டால் உங்கள் பிரவுசிங் பற்றிய தகவல்களை அழித்து விட்டு வெளியேறுங்கள். அதே போல அத்தகைய கம்ப்யூட்டர்களில் பாஸ்வேர்டுகளை save  செய்து வைக்காதீர்கள்.
  suggession  corner :
            நம்மில் பலர் கணிணி வாங்கும்போது இலவசமாக கொடுக்கும் &சிலர் நண்பர்கள் கொடுத்த anti-virus வாங்கி நிறுவியதோடு அதன் validity முடிந்தும் இன்னும் பயன்படுத்திக்கொண்டிருப்போம் update செய்யமுடியாத நிலையிலும் 
            எனவே   நீங்கள் பயன்படுத்தும் update ஆகும் anti-virus சிறப்பாக செயல்படுகிறதா ,என்ன விலை அல்லது இலவசமாக கிடைக்கிறது என்றால் அதன் விபரம் பற்றி சொல்லுங்கள்  நண்பர்களே மற்றவர்களுக்கு  மிக உதவியாக இருக்கும்  ...
  Read more...

  Saturday, June 11, 2011

  0

  myComputer போலியாக காட்டும் இல்லாத Removable Disk Icon ஐ நீக்குவது எப்படி ?

 • Saturday, June 11, 2011
 • pendrive போன்ற Removable Disk போன்றவற்றை நாம் கணிணியில் பயன்படுத்தாதபோதும் mycomputer இருப்பதாக காட்டும்  . இதனை சரிசெய்வதுபற்றி பார்ப்போம் .


  முதலில் Mycomputer Right-click செய்து  பிறகு
  Device Manager .ஐ தேர்வு செய்துகொள்ளுங்கள்   அதில்
  'Disk drives' ஐ டபுள் கிளிக் செய்தால் 


  Generic Usb Flash Disk Usb Device   

  என்று  தோன்றும் அதன் மீது  right  click  செய்தால்  invisible , uninstaal , update என காட்டும் .

  அதில் சென்று uninstall  செய்துவிடுங்கள்   Removable Disk Icon Mycomputer ல் இருந்து நீங்கிவிடும் .

  சில நேரங்களில் கணினியை reboot செய்தபின் மீண்டும் தோன்றினால்  invisible  தேர்வு செய்துவிடுங்கள் . இதனால் நீங்கள் pendrive பயன்படுத்தும்போது  Mycomputer கட்டாது என நினைக்கவேண்டாம் கண்டிப்பாக காட்டும் .

  vista ,XP இரண்டிற்கும் இது  பொருந்தும்.

   
  Read more...

  Wednesday, June 8, 2011

  3

  magic:உங்கள் ஜிமெயில் தானாகவே username password கொடுத்து திறக்கவைப்பது எப்படி .

 • Wednesday, June 8, 2011
 • உங்கள் ஜிமெயில் தானாகவே username password கொடுத்து திறக்கவைப்பது எப்படி .

  இது மந்திரம் போன்ற வேலைதான் பார்ப்பதற்கு ஆனால் தொழில்நுட்பத்தால் சாத்தியம் எப்படி என்று பார்ப்போம் .உங்கள் நண்பர்களிடம்   செய்து காட்டி அசத்தலாம் .....
  முதலில் i macros எனப்படும் addon உங்கள் firefox browser அல்லது கூகுளே cromeஇல் நிறுவிக்கொள்ளுங்கள் அவ்வளவுதான் .
  firefox browser :


  இதனை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்கள் browser ரை restart செய்து விடுங்கள் பிறகு addon மேலே உள்ள படத்தில் உள்ளவாறு ப்ரௌசெர் இல் தொடரும் இதனால் கிளிக் செய்ததும் கேளே உள்ள படத்தில்   உள்ளவாறு start,record,play பட்டன் கள் இருக்கும் முதலில் Rec பட்டன் அழுத்தி கீழ்க்கண்டவற்றை செய்யுங்கள்  .. 


  முதலில் நீங்கள் உங்கள் ஜிமெயில் தளத்திற்கு செல்லுங்கள் பிறகு வழக்கம் pol உங்கள் username மற்றும் password கொடுத்து உள்ளே நுழைந்து உங்கள் மெயில் படிக்கவோ அல்லது chat இல் உள்ள நண்பர்களுக்கு பதிலளிக்கவோ செய்யுங்கள் .

  பிறகு உங்கள் ஜிமெயில் லை signout செய்து  வெளியேறுங்கள் முடிந்தால் www .saidapet2009.blogspot.com என டைப் செய்து   இந்த தளத்தை open செய்துவிட்டு stop பட்டன் அழுத்துங்கள் அவ்வளவுதான்.

  இனி  மேலே உள்ள படத்தில் உள்ள play button அழுத்துங்கள் அவ்வளவுதான்

  முதலில் www.gamil.com திறந்து அதில் உங்களுடைய username மற்றும் password டைப் செய்து உங்கள் மெயில் திறக்கப்படும் . பிறகு நீங்கள் chat செய்த nanbarukku  hai   good morning என்று டைப் செய்து அனுப்பிவிடும் . பிறகு அதுவாகவே மெயில் கணக்கிலிருந்து வெளியேறிவிடும்.

  இதனை பார்ப்பதற்கு   ஒரு  magic போல இருக்கும் உங்கள் நண்பரிடம்  செய்து காண்பித்து ஆச்சர்யம் கொடுக்கலாம்  


  கணினி நிறுவனங்களில் தினமும் செய்யக்கூடிய வேலைகளை இதனை வைத்து automatic செய்து விடுவதால் மனிதர்களின் உதவியின்றி தானாகவே தினமும் செய்து விடும் .இதனை இன்னும் முழுமையாக  பயன்படுத்த  script எழுதி  இணைத்துவிட்டால்  அனைத்து  வேலைகளையும்  செய்துவிடும் நம் உதவியின்றி .

  நமக்கு twitter ,facebook ,gmail போன்ற தளங்களை தானாக திறப்பதற்கு பயன்படுத்தலாம் . மிகவும் பயனுள்ள அட்டன்
  மேலும் நமக்கு பிடித்த  தளங்களை bookmark செய்வதற்கு மேலும்   facebook,twitter போன்றவற்றில்  உள்ள post கலை நீக்குவதற்கு என நமக்கு வேண்டிய வகையில் பயன்படுத்தலாம்.

  மேலும்  விபரங்களுக்கு  கீழே  இணைக்கப்பட்டுள்ள  வீடியோ  வை  பாருங்கள்  .
    
  Read more...

  Friday, June 3, 2011

  0

  பெண்கள் மனதில் இடம் பிடிக்க எவ்வளவு செலவாகும்

 • Friday, June 3, 2011
 • சிரிப்பதற்கு மட்டும் பெண்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டுமா ?

  முதலில்
  ஆண்களை மகிழ்விக்க இது போதும் 25 ரூபாய் செலவில்

  ஆனால் பெண்களை மகிழ்விக்க


  =============


  ================


  ====================
  =====================================
  2500000000 ரூபாய் செலவு செய்யவேண்டும் ..


  நகை - சுவைக்காக மட்டும்
  Read more...

  Subscribe