Showing posts with label Tips and Tricks. Show all posts
Showing posts with label Tips and Tricks. Show all posts

Tuesday, May 24, 2016

0

R packages installation error solved

  • Tuesday, May 24, 2016
  • Most of the common error we are getting below  in R at the time of installing in R packages like(rJava,ggplot2...)




    Warning message:
    package ‘rJava’ is not available (for R version 3.0.2)


    In this post we ll see how to resolve this error.

    First login as root user 
    and type R and you ll get r prompt
    >

    then type 
     install.packages("rJava")
    it ll ask package mirror location give any one it ll installed without any issue.


    To confirm the package installation 
    try below line
    library(rJava)
    It won't throw any message so its installed .

    Read more...

    Thursday, April 28, 2016

    0

    Install R in Redhat 7.2

  • Thursday, April 28, 2016
  • Installation of R in redhat is simple.
    First download the below file

    wget http://public-yum.oracle.com/public-yum-ol7.repo

    open the downloaded file and change enabled property into 1
    vi public-yum-ol7.repo

    [ol7_latest]
    enabled=1
    
    [ol7_addons]
    enabled=1
    [ol7_optional_latest]
    enabled = 1

    then
     sudo yum install R.x86_64

    Now R is installed.. 
    typr R you ll get 

    R>
    error:

    If you are getting below error 
     
    Retrieving key from file:///etc/pki/rpm-gpg/RPM-GPG-KEY-oracle
     
    GPG key retrieval failed: [Errno 14] curl#37 - "Couldn't open file /etc/pki/rpm-gpg/RPM-GPG-KEY-oracle"

     
    Try the below command to download oracle gpg file
    
    
     
    wget http://public-yum.oracle.com/RPM-GPG-KEY-oracle-ol7 -O /etc/pki/rpm-gpg/RPM-GPG-KEY-oracle
    then
    sudo yum install R.x86_64
     
    issue has resolved..

    
    
    Read more...

    Tuesday, June 14, 2011

    1

    WAMP Server மென்பொருளை server setup செய்வது எப்படி

  • Tuesday, June 14, 2011
  • WAMP Server மென்பொருளை server setup செய்வது எப்படி என்பதை பார்போம்.
    WAMP என்றால் என்ன? What is WAMP?

    W
     - Windows / L - Linux Operating System - கணினியின் Hardware மற்றும் கணினியை பயன்படுத்தும் நபரின் (User) இடைநிலையாய் செயல்படும் மென்பொருள் . Windows, Microsoft நிறுவனத்தின் தயாரிப்பு. Linux, Open Source 

    Operating systems act as an Interface between Computers hardware and the user.

    A - Apache Web Server - இணையத்தளத்தில் காணப்படும் வலை தளம் (website) மற்றும்அதனுள் இருக்கும் வலை மடல்கலை (web pages) சேமித்து வைக்கவும், வலைதளத்திற்கு அனுப்ப படும் தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படும் மென்பொருள். இது Windows இன் உதவியுடன் இயங்கும் . இம்மென்பொருளை Web Server என்று கூறுவார்கள்.
    Apache, a famous open source web server from the Apache foundation. a web server is used to host web pages/web applications. It delivers content such as web pages. it runs on an operating system (Windows/Linux).

    M
     - MySQL Database Software - வலைதளத்திற்கு பதிவேடாக பயன் படும் மென் பொருள். Dynamic website with persistent data என்று கூறப்படும் நிலையான தோற்றம் மற்றும் தகவல் இல்லாத, தளத்தை பயன் படுத்தும் நபரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தன் நிலையை மாற்றி கொள்ளும் தன்மை உடைய இணையதளத்தை உருவாக்க பயன்படும். இம்மென்பொருளை Back End software என்று கூறுவார்கள் . தளத்தின் அனைத்து தகவல்கள் இம்மென்பொருளில் சேமித்து வைக்கப்படும்.


    P - PHP Server Side Scripting Language - வலை தளத்தை பயன்படுத்தும் நபரால் அனுப்படும் தகவல்களை உள் வாங்கி, நபரின் தேவையை அறிந்து, தேவைக்கேற்ற தகவல்களை அளிக்கும் வல்லமையை நம் தளத்திற்கு அளிக்க பயன் படும் மென்பொருள். கட்டமைப்பு வரிகள் மூலம் விதிமுறைகளை உருவாக்கி தளம் எப்படி செயல் படவேண்டும் என்ற விதி முறைகளையும், பதிவேட்டை எப்படி பயன் படுத்துவது என்ற விதிமுறைகளையும் , தகவல்களை எப்படி சேமிப்பது என்ற விதிமுறைகளையும் உருவாக்க பயன் படும் மென்பொருள். இதை Front End என்று கூறுவார்கள்.


    WAMP
     Server Setup
    இவ்வனைத்து மென்பொருளையும் தனி தனியே install மற்றும் Assemble செய்வது சற்று கடினமான வேலை.


    சுலபமாக WAMP Server download செய்து install செய்தால் போதுமானது. இதை செய்ய

    முதலில் : மென்பொருளை Download செய்யவும்



    http://www.wampserver.com/en/download.php


    Download செய்த wampserver2.0i.exe double click செய்து கணினிஇல் install செய்யவும்.



    (install செய்ய தெரியவில்லை என்றல் Next, Yes, Unblock ஆகிய button click செய்தால் போதுமானது)

    install முடிந்தவுடன் தங்களது desktop இல் WampServer Icon இருக்கும். அதை double click செய்யவும்.

    After Installation double click the Wamp Server icon on your desktop.




    double click செய்ததும், System Tray இல் WAMP Server இயங்குவதை காணலாம்.


    you can see the WAMP server running in your system tray.

    இப்போது Server இயங்கிகொண்டு இருக்கிறது. இதை உறுதி படுத்த Internet Explorer அல்லது Firefox அல்லது தங்களுக்கு பிடித்தமான Web Browser Open செய்து, Address Bar இல் http://localhost என்று டைப் செய்து [Enter] அழுத்தவும். கீழ்கண்டவாறு தங்களது Screen இருந்தால் WAMP Server வெற்றிகரமாக install செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யலாம்.

    To confirm the WAMP server installation, open you faviourit browser and type "http://localhost" is the address bar. If you see the following web page, your brand new shiny WAMP server is up and Running.



    இப்போது PHP இல் Web Programming செய்வதற்கான களம் தயார் .
    thanks
    tamilprofessional.
    rajesh.
    Read more...

    Sunday, June 12, 2011

    0

    கணிணி பாதுகாப்பு வழிகள் -2

  • Sunday, June 12, 2011
  • முதல் பகுதியை படிக்க ..
     கணிணி பாதுகாப்பு வழிகள் -part I
                 இவை அனைத்தையும் முழுமையாக பின்பற்றுவது இயலாது என்றாலும் நமக்கு இதுபோன்ற பிரச்சினைகள் எழும் போது தீர்வு காண இது உதவும் பெரும்பாலானவை அன்றாடம் நம் சந்திக்கும் நிகழ்வுகள்தான் ஒரு சில மட்டும் அரிதாக நிகழ்பவை சில நமக்கு தெரியாமலேயே நடப்பவை ..
     கம்ப்யூட்டரைப் பாதுகாக்க சிறந்த வழிகள் -part II
    14. சிடியைப் போட்டால் ஆட்டோ ரன் மற்றும் ஆட்டோ பிளே ஆகிறதா ? அவற்றை நிரந்தரமாக நிறுத்திவிடுங்கள் . ஆட்டோ ரன் எளிதாக நிறுத்திவிடலாம். ஆட்டோ பிளே நிறுத்த ட்வீக் யு.ஐ. (Tweak UI) பயன்படுத்தலாம்.

    15. விண்டோஸ், தான் இயங்கும் போது பல புரோகிராம்களை பின்புலத்தில் இயக்கிக் கொண்டு இருக்கும். விண்டோஸ் டாஸ்க் மேனேஜரைப் பயன்படுத்தி என்ன என்ன புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதன் பாருங்கள் . தேவையற்றது அல்லது நீங்கள் அறியாதது என்று இருப்பின் அதனை நிறுத்தலாம். அதனால் கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு பிரச்சினை இல்லை என்றால் நீக்கி வைக்கலாம்.
                    16. உங்களுக்கு வந்துள்ள இமெயில் செய்திகளில் ஏதேனும் லிங்க் கொடுத்து அவற்றைக் கிளிக் செய்திட உங்களைக் கேட்டுக் கொள்ளப்படுகிறதா? அவசரப்பட்டு உடனே கிளிக் செய்திட வேண்டாம். அனுப்பியவர் நம்பிக்கைக்குரியவர் என்றாலே கிளிக் செய்திடவும்.

    17. பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய இரண்டுமே பிஷ்ஷிங் பில்டர்களைப் பயன்படுத்துகின்றன. இவற்றை இயக்க நிலையில் வைக்கவும்.

    18. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மிகவும் பிரபலமான பிரவுசர் தான். அதனால்தான் ஹேக்கர்களும் அந்த வழியிலேயே உள்ளே புக எண்ணுகின்றனர். எனவே மாறுதலுக்காக ஆப்பரா அல்லது பயர்பாக்ஸ் பயன் படுத்துங்கள். வேகமாகவும் இயங்குபவை இவைதான்.


    19 ..ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்களை நிரந்தரமாக அணைத்து விடுங்கள். பிரவுசர்கள் உங்களைக் கேட்காமல் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இயக்க இது உதவுகிறது.
    20. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களை வெப்சைட்டில் தரப்போகிறீர் களா? அந்த தளம் பாதுகாப்பானது தானா என்று பார்க்கவும். அதன் முகவரியில் ‘https’என S சேர்த்து இருக்க வேண்டும். அல்லது அட்ரஸ் பாரில் அல்லது வேறு இடங்களில் பூட்டு அடையாளம் இருக்க வேண்டும்.

                  21. உங்களுக்கு ஒரு சேவையை வழங்குகையில் இணைய தளங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உறுதி செய்திட உங்கள் இமெயில் முகவரிகளைக் கேட்கும். 10 நிமிடத்திற்குள் செய்தி அனுப்பப்படும் என்று செய்தி வரும். அப்போது தற்காலிக இமெயில் முகவரி தரும் 10minutemail.com போன்ற தளங்களை  பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தளம் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் முகவரிகளை உங்களுக்கு வழங்கும்.

    22. உங்களுடைய வழக்கமான இமெயில் முகவரியை உங்கள் உற்றவர்களுக்கும் நண்பர்களுக்கு மட்டுமே தரவும். இலவச இமெயில் முகவரிகளைத் தருவதற்கு கூகுள், மைக்ரோசாப்ட் லைவ் மெயில், யாஹூ இருக்கும்போது ஸ்டெப்னி இமெயில் முகவரிகளை நிறைய வைத்துக் கொள்ளலாம்.
    23. மொத்தமாக வரும் ஸ்பேம் மெயில்கள் உங்களுக்குத் தேவையான செய்தியைக் கொண்டு வந்திருந்ததாக அறிந்தாலும் அவற்றைப் படிக்க வேண்டாம். ஏனென்றால் திறந்து படித்தால் உங்களுடைய முகவரி அவர்களிடம் சிக்கி விடும்.
                      24. இமெயில்களை ஸ்பேம் பில்டர் கொண்டு பயன்படுத்தவும். தண்டர்பேர்ட் தன்னிடத்தே ஒரு நல்ல ஸ்பேம் பில்டரைக் கொண்டுள்ளது. அவுட்லுக் 2003 மற்றும் அவுட்லுக் 2007 ஆகியவை மைக்ரோசாப்டின் ஸ்மார்ட் ஸ்கிரீன் என்னும் பில்டரைப் பயன்படுத்துகின்றன. இது உங்கள் மெயிலைப் படித்து அதன் தகவல்களிலிருந்து அது ஸ்பேம் மெயிலா என அறிந்து அழிக்கிறது. இவ்வகையில் ஜிமெயில் கிட்டத்தட்ட எந்த குறைபாடும் இன்றி உள்ளது.

    25 .முடிந்தவரை unix OS  பயன்படுத்தினால் மேற்கூறிய பெரும்பாலான பிரச்சினைகளை மறந்துவிடலாம் . Windows பயன்படுத்துபவர்கள் Antivirus நிறுவியிருந்தாலும் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.
    .
      தண்டர்பேர்ட்,ட்வீக் யு.ஐ. (Tweak UI) பற்றி அடுத்தபதிவில் காணலாம் .
    இலவசமாக கிடைக்கும் உபுண்டு பயன்படுத்தினால் 90 இதுபோன்ற பிரச்சினைகள் வராது .இவையெல்லாம் விண்டோஸ் பயனாளர்களுக்கு ஏற்படுபவை.புதிதாக வந்துள்ள உபுண்டு 10.10  பல  புதிய  வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள்ளது ..
    Read more...
    1

    கணினி புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு;;கணிணி பாதுகாப்பு வழிகள்


  • 1. automatic update:
                        பெரும்பாலானோர் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இதில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து, அதற்கான தீர்வுகளை Batch File என்ற வகையில் தருகிறது. மாதம் ஒருமுறை தரப்படும் இந்த பேட்ச் பைல்களை நம் கம்ப்யூட்டர்கள் இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில் தாமாகப் பெற்று அப்டேட் செய்திடும் வகையில் நம் சிஸ்டத்தில் செட் அப் செய்து கொள்ளுங்கள் .ஒரிஜினல் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் இது பொருந்தும்,.
    2.Best Anti-virus:
                            இன்டர்நெட் மூலம் தான் பல வைரஸ்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஏறத்தாழ ஒருநாளைக்கு 500 புதிய வைரஸ்கள் ,விபரங்களுக்கு இங்கே சென்று பாருங்கள் மாதந்தோறும் உருவாகும் புதிய வைரஸ் விபரங்களை எந்த நாடு என கொடுத்துள்ளனர் New viral list monthly எனவே இதனைக் கண்டறிந்து தடுக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லை எனில் புதிதாய் வரும் வைரஸ்கள் பாதித்துவிடும் .
    3.Anti-Spiware:
                     ஏதேனும் ஒரு வழியில், இமெயில் அல்லது டவுண்லோட் ஆகும் புரோகிராம் போன்றவற்றின் மூலம், பல ஸ்பைவேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரில் வந்தமர்ந்து, நம் சிஸ்டத்தில் உள்ள நம்முடைய பெர்சனல் தகவல்களைத் திருடி அடுத்தவருக்கு அனுப்புகின்றன. எனவே ஒன்று அல்லது இரண்டு ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்களைப் பதிந்து வைத்து இயக்க வேண்டும். பொதுவாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன் இணைந்து இவை கிடைக்கும். மைக்ரோசாப்ட், விஸ்டாவுடன் விண்டோஸ் டிபன்டர் மற்றும் ஸ்பை ஸ்வீப்பர் புரோகிராம்களைத் தருகிறது.
    4.Firewall:
                       நம் கம்ப்யூட்டருக்குள் வரும் spyware புரோகிராம்களைத் தடுக்கும் ஒரு வழி பயர்வால் ஆகும். நம் கம்ப்யூட்டர் பாதிக்கப்பட்டால் அதிலிருந்தும் இது போன்ற புரோகிராம்களைச் செல்ல விடாமல் firewall தடுக்கிறது. எனவே இருவழி பயர்வால் தொகுப்பு ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். விஸ்டாவுடன் இதுவும் தரப்படுகிறது. Zone Alarm போன்ற இலவசமாகக் கிடைக்கும் பயர்வால்களையும் பயன்படுத்தலாம்.

                   5. பயர்வால் புரோகிராம் ஒன்று போதும். இரண்டு இன்ஸ்டால் செய்தால் கஷ்டம்தான் . அதே போல்தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும். இவை இரண்டு வைத்துக் கொண்டாலும் ஒரு முறை ஒன்றைப் வைத்துக்கொள்ளுங்கள்.
    6. Password :
                         நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் அடுத்தவர்கள் எளிதில் கண்டுபிடித்திடும் வகையில் இருக்கக் கூடாது. எண்களும் எழுத்துக்களும் (Alphanumeric )கலந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும். நீளமாக இருந்தால் நல்லதுதான். அத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்க http://passwordbird.com என்ற தளத்தை பயன்படுத்தலாம் .
                     7. எந்த பாஸ்வேர்டையும் எந்த நேரமும் மாற்றக் கூடிய வசதியினை இன்டர்நெட்டில் உள்ள தளங்கள் தருகின்றன. எனவே பாஸ்வேர்டை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

                        8. ஒரே பாஸ்வேர்டினையே அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொன்றுக்கும் மாறான பாஸ்வேர்ட் பயன்படுத்தவும்.

                    9. ஒரு new பைல் உங்களுக்கு வந்துள்ளதா? அதில் வைரஸ் எதுவும் உள்ளதா என்று சந்தேகம் வருகிறதா? உங்கள் ஆண்ட்டி வைரஸ் கொண்டு சோதிக்க பயமா? உடனே அதனை Virustotal.com என்ற தளத்திற்கு அனுப்பவும். அல்லது அட்டாச்மென்ட் ஆக scan@virustotal.com என்ற இமெயில் முகவரிக்கு ஸ்கேன் என்ற ஒரு வரிச் சொல்லை சப்ஜெக்டில் அமைத்து அனுப்பவும். உடனே 32 வகையான வைரஸ் சோதனை செய்து உங்களுக்கு ரிபோர்ட் கிடைக்கும்.  
                            10. பொதுவான வாழ்த்துக்கள் குவியும் நாட்களில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்களின் பெயரிலேயே வைரஸ் இணைந்த வாழ்த்துகள் வரும் வாய்ப்பு அதிகம்.
                         11. உங்கள் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் உள்ளது. இலவசமாக இங்கு கிளிக் செய்தால் அதனைக் கண்டுபிடித்து வெளியேற்றலாம் என்ற செய்தியுடன் ஏதாவது லிங்க் வருகிறதா? உடனே அதனை நீக்கி விடுங்கள். கிளிக் செய்தால் எப்பவும் தொல்லை தான்.

                          12. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களையோ போட்டோக்களையோ இணையத்தில் இட வேண்டாம். அவை நிரந்தரமாக அங்கு இருப்பதால் பிறர் பயன்படுத்த வாய்ப்பு உண்டு.
                     13. பொதுவான public கம்ப்யூட்டர்  மூலம் நீங்கள் browsing செய்திடும் நிலை ஏற்பட்டால் உங்கள் பிரவுசிங் பற்றிய தகவல்களை அழித்து விட்டு வெளியேறுங்கள். அதே போல அத்தகைய கம்ப்யூட்டர்களில் பாஸ்வேர்டுகளை save  செய்து வைக்காதீர்கள்.
    suggession  corner :
              நம்மில் பலர் கணிணி வாங்கும்போது இலவசமாக கொடுக்கும் &சிலர் நண்பர்கள் கொடுத்த anti-virus வாங்கி நிறுவியதோடு அதன் validity முடிந்தும் இன்னும் பயன்படுத்திக்கொண்டிருப்போம் update செய்யமுடியாத நிலையிலும் 
              எனவே   நீங்கள் பயன்படுத்தும் update ஆகும் anti-virus சிறப்பாக செயல்படுகிறதா ,என்ன விலை அல்லது இலவசமாக கிடைக்கிறது என்றால் அதன் விபரம் பற்றி சொல்லுங்கள்  நண்பர்களே மற்றவர்களுக்கு  மிக உதவியாக இருக்கும்  ...
    Read more...

    Sunday, May 29, 2011

    1

    Timmer வைத்து கணினியை shutdown செய்வது எப்படி ?software download

  • Sunday, May 29, 2011
  •       ShutDown our computer Automatically...
           இரவிலோ அல்லது தூங்கும்போதோ பாடல்களை கேட்டுக்கொண்டோ அல்லது சினிமா போன்றவற்றை பார்ப்பது பெரும்பாலானவர்களது வழக்கம் டிவி யில் sleeper Time செட் செய்து தூங்கிவிடுவோம் ஆனால் கம்ப்யூட்டர் இல் இந்தவசதி இல்லை எனவே நாம் பாடல்களோ படங்களோ தூங்கும் நேரங்களில் பார்த்தல் அவை இரவு முழுவதும் off ஆகாமல் இயங்கிக்கொண்டே இருக்கும் .

    இந்த குறையை தீர்க்கும் software தான் Goodnight Timer .

                      இந்த software ஐ instaal செய்ததும் படத்தில்  காட்டியவாறு உங்கள் கம்ப்யூட்டர் shutdown செய்யும் நேரத்தை இதில் தேர்வுசெய்துவிடுங்கள் அவ்வளவுதான். உதாரனத்திற்க்கு 20 நிமிடங்கள் என்றால் 20 நிமிடம் கழித்து உங்கள் கம்ப்யூட்டர் shutdown ஆகிவிடும் .

                      இதில் இன்னும் கூடுதல் வசதியாக  நேரம் ஆக ஆக sound அளவை குறைக்கும் வசதியும் உள்ளது படத்தில் காட்டியவாறு sound சிறிது சிறிதாக குறைந்துகொண்டேவரும் உங்களுக்கேற்றவகையில் குறைத்து வைக்கும் வசதி உள்ளது.

    அடுத்தமுறை உங்கள் கம்ப்யூட்டர் on ஆகும்போது sound பழைய நிலைக்கேவந்துவிடும். 
               முக்கிய software ,அல்லது வீடியோ ,சினிமா படங்களை download போட்டுவிட்டு  தூங்குபவர்களுக்கு இது முக்கியமாக பயன்படும் download ஆக எடுத்துகொள்ளும் நேரத்தை கண்டறிந்து அதற்கேற்ப இந்த software  இல்  நேரத்தை set செய்துவிட்டு நிம்மதியாக தூங்கலாம் .... மிகவும் தேவையான software .
    Read more...

    Friday, May 27, 2011

    1

    PDF File கணிணி நமக்குபிடித்த குரல்களில் படிக்க ..

  • Friday, May 27, 2011

  • தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேறி  வருகிறது என்பதற்கு இந்த பதிவு சிறந்த உதாரணம் . நாம் வைத்திருக்கும் pdf file ஐ நாம் படிப்பதற்கு பதில் கணிணியை படிக்கவைத்து அதை நாம் கேட்டால் இன்னும் எளிது . இது எப்படி என்று பார்க்கலாம் .PDF   File Tricks இது ரொம்ப ஈஸி எப்படி என்று பார்க்கலாம்

    உங்களிடம்  இருக்கும் Adobe reader     6.0   version + அதற்கு மேற்பட்ட  Version இருக்கவேண்டும்  இதுதான் முக்கியம்.  தற்போது Adobe reader 9.0  பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்துகிறோம் .
    ஏதேனும் ஒரு PDF File லை    Adobe reader இல் Open செய்து பிறகு

    View  சென்று Read out Loud தேர்வுசெய்து Active Read Out Loud Click   செய்தால் போதும் PDF File பேச ஆரம்பித்துவிடும் .

    சரியாக இயங்காவிட்டால்  கீழ்க்கண்ட Short cut பயன்படுத்தி பாருங்கள் கண்டிப்பாக பேசவைக்கலாம் .

    Keyboard Shortcuts  (விண்டோஸ் , MAC OS இரண்டுக்கும் )



    1.Ctrl+Shift+V     -- Read this Page only
    2.Ctrl+Shift+B   -- Read till End of Document
    3.Ctrl+Shift+C  -- Pause Reading
    4.Ctrl+Shift+E   -- Stop Reading

    எப்படி PDF File வார்த்தைகள் படிக்கப்படுகின்றன ?
    Read Out Loud என்ற தொழில்நுட்பம் மூலம் இது நடைபெறுகிறது ..   நமது கணினியில் உள்ள (ஆண் )Voice மூலம் படிக்கிறது . இதெற்கென பல்வேறு வாய்ஸ் கள் கிடைக்கின்றன நமக்கு விருப்பம் போல் பல்வேறு  அழகிய voice  Download செய்து மாற்றிக்கொள்ளலாம் .  Adobe Reader தமிழ் மொழி PDF படிக்காது என்பது  நமக்கு வருத்தாமான விஷயம் ,..


    சிந்தனை corner:

    IPL னா என்ன தெரியுமா ?

    இறுதிபோட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியுடன் விளையாட மற்ற  9 அணிகள்  போராடும் cricket போட்டி .

    சென்னை அணி தல டோனி மற்றும் ரைனா அதிரடியில் கோப்பையை கண்டிப்பாக வெல்லும் மீண்டும் ஒரு jaiho..



    அடுத்த பதிவில்:
    Read Out Loud என்ற தொழில்நுட்பம் என்றால் என்ன பல குரல்களை இதில் பயன்படுத்துகிறார்களே எப்படி எண்டு அடுத்த பதிவி காணலாம் ...
    Read more...

    Wednesday, May 25, 2011

    2

    கணிணி வேகம் அதிகரிக்க Free Registry Cleaner- download

  • Wednesday, May 25, 2011
  •        நாம் கணினி வாங்கிய புதிதில் இருக்கும் வேகம் சில மாதங்களில் கொஞ்ச கொஞ்சமாக குறைந்துவிடும் , பொதுவாக இதற்க்கு நாம் நிறுவும் கூடுதலான சாப்ட்வேர் கள் என்று முடிவு செய்து கண்டுகொள்ளாமல் விட்டு விடுவோம் இது ஓரளவிற்கு மட்டுமே உண்மை .

              முக்கிய காரணம் என்ன அதனை எப்படி தீர்ப்பது எனபது பற்றிய பதிவு . உதாரணமாக ,நமது கணிணியில் நாமோ அல்லது நம் வீட்டு குட்டீசோ விளையாட Game சாப்ட்வேர் மற்றும் நமக்கு தேவையான பிற சாப்ட்வேர்  இன்ஸ்டால் செய்திருப்போம்.

           இவை ஒவ்வொன்றையும் கணிணி software Registry ல் அப்டேட் செய்து விடும்  நாம் இந்த game விளையாட தொடங்கும்போது அதனை  இயக்க  புதிய சில Instructions எனப்படும் தகவல்களை வைத்து இயங்க வைக்கும்   சிலநாட்களில் அதனை Delete செய்து அடுத்த Game விளையாடுவோம் . நாம் அதனை remove செய்தாலும் அந்த instructions நமது கணினியிலேயே தங்கிவிடும்.

            ஒவ்வொரு முறை கணிணியை இயக்கும்போதும் கணிணி இந்த instructions ஐ செயல்படுத்த முயற்சிக்கும் நாம் அந்த Software  ஐ  ஏற்கனவே delete செய்துவிட்டோம் எனவே அதனை கண்டுபிடிக்க முடியாது இதற்க்கு registry error என்று பெயர் . 
           
         இவ்வாறு பல software நாம் பயன்படுத்தி நீக்கியிருந்தால் நமது கணிணி மேற்கூறிய செயல்களால் மெதுவாக செயல்பட தொடங்கும்.இதுதான் முக்கிய காரணம் .இதனை கண்டறிந்து நீக்கினாலே மீண்டும் அந்த வேகத்தை பெற்றுவிடமுடியும் . இதனை எவ்வாறு கண்டறிவது , இதனை கண்டறிந்து நீக்க

    Free Registry Cleaner 4.20.9 freeware download

             எனப்படும் software உள்ளது. இதனை நிறுவி run செய்து clean என்பதை தேர்வு செய்தால் போதும் அவற்றை முழுமையாக நீக்கலாம் அல்லது registry booster எனப்படும் மற்றொரு software ம் உள்ளது இதனையும் பயன்படுத்தி கணினியின் வேகத்தை அதிகரிக்கலாம் 
     FREE RegistryBooster scan (trail version )
           
        ARQ வகை பைல்களை சில நேரங்களில் நமது கணினியில் திறக்க முடியாது இத்தகைய பிரச்சனைகளையும் இதனை பயன்படுத்தி சரிசெய்துகொள்ளலாம் .

        மேலும் நாம் ஏதாவது சாப்ட்வேர் uninstall செய்ய cantrol panel சென்று பின் uninstall program sendru பிறகுதான் அந்த சாப்ட்வேர் ஐ நீக்க முடியும் ஆனால் இதனை பயன்படுத்தி uninstall என்னும் option மூலம் எளிதில் நீக்கலாம் .



           மேற்கூறியவற்றில் முதலில் உள்ளதை நிறுவிக்கொள்ளுங்கள் அதனை முழுமையாக பயன்படுத்தலாம் இரண்டாவது சோதனை முயற்சிக்கு மட்டும் .

             ஒரு முறை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவி பாருங்கள் அதில் எவ்வளவு error காட்டுகிறது என்பதை தெரிந்து சற்று அதிர்ச்சி அடைவீர்கள் . பிறகென்ன அதனை run செய்து உடனே நீக்கிவிடலாம் . இனி உங்கள் கணினியின் வேகத்தை பாருங்கள் வித்தியாசம் புரியும் .


    இதில் உள்ள கூடுதல் சிறப்பு பயன்பாடுகள்:

    Disk cleaner.
    registry search
    uninstall manager
    video converter
    backup 

    என இன்னும் பல வசதிகள் உள்ளன.
    உங்கள் நண்பர்களின் கணினியிலும்  நிறுவி உதவுங்கள் ...jaiho

    கணினியில் கட்டாயம் இருக்கவேண்டிய முக்கிய software .

    சிந்தனை corner:

    IPL னா என்ன தெரியுமா ?

    இறுதிபோட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியுடன் விளையாட மற்ற  9 அணிகள்  போராடும் cricket போட்டி .

    சென்னை அணி தல டோனி மற்றும் ரைனா அதிரடியில் கோப்பையை கண்டிப்பாக வெல்லும் மீண்டும் ஒரு jaiho..


    .
    Read more...

    Friday, May 20, 2011

    0

    நாம் கேட்டுக்கொண்டிருக்கும் பாடலை gtalk status message இல் காட்டுவது எப்படி

  • Friday, May 20, 2011
  • நாம் கேட்டுக்கொண்டிருக்கும் பாடலை gtalk  status message  இல் காட்டுவது  எப்படி என்று பார்க்கலாம் .

    Show Current Music Track’ in Google Talk 

    .
    நண்பர்களுடன் gtalk இல் chat செய்துகொண்டிருக்கும் போது சிலர் அவர்கள் கேட்கும் படலை status message  இல் பார்க்கிறோம் , இது மிக எளிது எப்படி என்று பார்க்கலாம் .gtalk கேள்க்கண்ட player களுக்கு மட்டும் support செய்கிறது அவை ,


    இவற்றில் பாடல் கேட்கும்போது மட்டும் இந்தமுறை பயன்படும் .
    1 . முதலில் உங்கள்  Windows Media Player இல் Navigate சென்று  Tools >> Option தேர்வு செய்யுங்கள் .
    2. Option window சென்று  Plug-ins tab >> Background option பின் Google Talk Music plugin சென்று click Ok

    3.இறுதியாக gtalk சென்று Show Current Music Track” தேர்வு செய்துவிடுங்கள் அவ்வளவுதான் நீங்கள் ஒவ்வொரு பாடல் கேட்கும் போதும் அதன் வரிகள் காண்பிக்கும் ...
    கீழே உள்ள படத்தில் கிளிமான்ஜாரோ வரிகள் இருப்பதை பார்க்கலாம் ...

    Read more...

    Monday, May 16, 2011

    3

    RAM கூடுதலாகஇணைக்காமல் Hard Disk இல் உள்ள space கொண்டு RAM போல் மாற்றி கணினியின் வேகத்தை அதிகரிக்கலாம்

  • Monday, May 16, 2011

  • RAM என்பது கணிணியின் முதன்மை நினைவகம் அதாவது Virtual memory நமது  கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி , பொதுவாக 512 mb ,1GB என இப்போதுள்ள கணினிகளில்  பெரும்பாலும் உள்ளன அரிதாக 2GB மற்றும் அதற்கு மேல் . 
             RAM என்பது ஒவ்வொரு முறையும் தகவலை பெற கணிணி HardDisk சென்றால் நேரம் ஆகும் RAM மூலம் குறிப்பிட்ட அளவு தகவல்களை Hard disk செல்லாமல் RAM இல் இருந்து எடுத்துக்கொள்கிறது எனவேதான் நம் நண்பர்கள் RAM கூடுதலாக ஒன்று வாங்கி கணிணியில் இணைத்திருப்பார்கள் ..வேகத்தை அதிகரிக்க .விண்டோஸ் xp  ,vista,7 இல் எப்படி என்று பார்ப்போம் 

    XP இல் முதலில் mycomputer சென்று ==>properties==> system  properties தேர்வு செய்யுங்கள் விஸ்டா இல் Control panel ==> Properties

     பின்  Performance Option கிளிக் செய்து 
    Advance system setting சென்று setting தேர்வுசெய்து Performance Option சென்று Advanced தேர்வுசெய்யுங்கள் .
    Virtual memory Settings Window.


                  Virtual memory சென்று change கிளிக் செய்யுங்கள் பிறகு Automatically manage paging file size for all drives எனும் checkbox தேர்வுசெய்து பிறகு படத்தில் உள்ளவாறு உங்களுக்கு தேவையான space எந்த disk இல் உள்ளதோ உதாரணமாக c அல்லது D என தேர்வுசெய்யுங்கள் .
               படத்தில் உள்ளதுபோல் c drive தேர்வு செய்திருந்தால் System managed Size தேர்வு செய்யுங்கள் recommended size , currently allocated size போன்றவற்றை காட்டும் . .






    Virtual Memory change :





               custom managed size  என்பதை தேர்வு செய்து Initial Size" மற்றும்  "Maximum Size" ஆகியவற்றை  MB அளவுகளில் கொடுத்து  click on "Set" அவ்வளவுதான் .. உங்கள் virtual memory அதிகரித்துவிட்டது இனி உங்கள் கணிணி வேகம் பயன்படுத்தி பாருங்கள் புரியும்.





          கணிணியின் virtual memory எனப்படும் RAM வேகத்தை புதிதாக  RAM வாங்கி இணைக்காமல் நமது Hard Disk இல் உள்ள space கொண்டு அதிகரிக்கலாம் ...தெளிவாக படத்தில் வட்டமிட்டு அடுத்தடுத்த நிலைகள் கட்டப்பட்டுள்ளன . 

                              படங்களை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும் .
        இது மிக எளிமையான வழிமுறைதான் .உங்கள் கணினிக்கு தேவையான ஒன்று நண்பர்களின் கணினியிலும் நிறுவி அவர்களுக்கும் பயன்படுத்த உதவுங்கள் .....நண்பர்களே...
    Read more...

    Subscribe