Sunday, June 12, 2011

1

கணினி புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு;;கணிணி பாதுகாப்பு வழிகள்

  • Sunday, June 12, 2011
  • Share

  • 1. automatic update:
                        பெரும்பாலானோர் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இதில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து, அதற்கான தீர்வுகளை Batch File என்ற வகையில் தருகிறது. மாதம் ஒருமுறை தரப்படும் இந்த பேட்ச் பைல்களை நம் கம்ப்யூட்டர்கள் இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில் தாமாகப் பெற்று அப்டேட் செய்திடும் வகையில் நம் சிஸ்டத்தில் செட் அப் செய்து கொள்ளுங்கள் .ஒரிஜினல் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் இது பொருந்தும்,.
    2.Best Anti-virus:
                            இன்டர்நெட் மூலம் தான் பல வைரஸ்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஏறத்தாழ ஒருநாளைக்கு 500 புதிய வைரஸ்கள் ,விபரங்களுக்கு இங்கே சென்று பாருங்கள் மாதந்தோறும் உருவாகும் புதிய வைரஸ் விபரங்களை எந்த நாடு என கொடுத்துள்ளனர் New viral list monthly எனவே இதனைக் கண்டறிந்து தடுக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லை எனில் புதிதாய் வரும் வைரஸ்கள் பாதித்துவிடும் .
    3.Anti-Spiware:
                     ஏதேனும் ஒரு வழியில், இமெயில் அல்லது டவுண்லோட் ஆகும் புரோகிராம் போன்றவற்றின் மூலம், பல ஸ்பைவேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரில் வந்தமர்ந்து, நம் சிஸ்டத்தில் உள்ள நம்முடைய பெர்சனல் தகவல்களைத் திருடி அடுத்தவருக்கு அனுப்புகின்றன. எனவே ஒன்று அல்லது இரண்டு ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்களைப் பதிந்து வைத்து இயக்க வேண்டும். பொதுவாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன் இணைந்து இவை கிடைக்கும். மைக்ரோசாப்ட், விஸ்டாவுடன் விண்டோஸ் டிபன்டர் மற்றும் ஸ்பை ஸ்வீப்பர் புரோகிராம்களைத் தருகிறது.
    4.Firewall:
                       நம் கம்ப்யூட்டருக்குள் வரும் spyware புரோகிராம்களைத் தடுக்கும் ஒரு வழி பயர்வால் ஆகும். நம் கம்ப்யூட்டர் பாதிக்கப்பட்டால் அதிலிருந்தும் இது போன்ற புரோகிராம்களைச் செல்ல விடாமல் firewall தடுக்கிறது. எனவே இருவழி பயர்வால் தொகுப்பு ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். விஸ்டாவுடன் இதுவும் தரப்படுகிறது. Zone Alarm போன்ற இலவசமாகக் கிடைக்கும் பயர்வால்களையும் பயன்படுத்தலாம்.

                   5. பயர்வால் புரோகிராம் ஒன்று போதும். இரண்டு இன்ஸ்டால் செய்தால் கஷ்டம்தான் . அதே போல்தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும். இவை இரண்டு வைத்துக் கொண்டாலும் ஒரு முறை ஒன்றைப் வைத்துக்கொள்ளுங்கள்.
    6. Password :
                         நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் அடுத்தவர்கள் எளிதில் கண்டுபிடித்திடும் வகையில் இருக்கக் கூடாது. எண்களும் எழுத்துக்களும் (Alphanumeric )கலந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும். நீளமாக இருந்தால் நல்லதுதான். அத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்க http://passwordbird.com என்ற தளத்தை பயன்படுத்தலாம் .
                     7. எந்த பாஸ்வேர்டையும் எந்த நேரமும் மாற்றக் கூடிய வசதியினை இன்டர்நெட்டில் உள்ள தளங்கள் தருகின்றன. எனவே பாஸ்வேர்டை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

                        8. ஒரே பாஸ்வேர்டினையே அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொன்றுக்கும் மாறான பாஸ்வேர்ட் பயன்படுத்தவும்.

                    9. ஒரு new பைல் உங்களுக்கு வந்துள்ளதா? அதில் வைரஸ் எதுவும் உள்ளதா என்று சந்தேகம் வருகிறதா? உங்கள் ஆண்ட்டி வைரஸ் கொண்டு சோதிக்க பயமா? உடனே அதனை Virustotal.com என்ற தளத்திற்கு அனுப்பவும். அல்லது அட்டாச்மென்ட் ஆக scan@virustotal.com என்ற இமெயில் முகவரிக்கு ஸ்கேன் என்ற ஒரு வரிச் சொல்லை சப்ஜெக்டில் அமைத்து அனுப்பவும். உடனே 32 வகையான வைரஸ் சோதனை செய்து உங்களுக்கு ரிபோர்ட் கிடைக்கும்.  
                            10. பொதுவான வாழ்த்துக்கள் குவியும் நாட்களில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்களின் பெயரிலேயே வைரஸ் இணைந்த வாழ்த்துகள் வரும் வாய்ப்பு அதிகம்.
                         11. உங்கள் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் உள்ளது. இலவசமாக இங்கு கிளிக் செய்தால் அதனைக் கண்டுபிடித்து வெளியேற்றலாம் என்ற செய்தியுடன் ஏதாவது லிங்க் வருகிறதா? உடனே அதனை நீக்கி விடுங்கள். கிளிக் செய்தால் எப்பவும் தொல்லை தான்.

                          12. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களையோ போட்டோக்களையோ இணையத்தில் இட வேண்டாம். அவை நிரந்தரமாக அங்கு இருப்பதால் பிறர் பயன்படுத்த வாய்ப்பு உண்டு.
                     13. பொதுவான public கம்ப்யூட்டர்  மூலம் நீங்கள் browsing செய்திடும் நிலை ஏற்பட்டால் உங்கள் பிரவுசிங் பற்றிய தகவல்களை அழித்து விட்டு வெளியேறுங்கள். அதே போல அத்தகைய கம்ப்யூட்டர்களில் பாஸ்வேர்டுகளை save  செய்து வைக்காதீர்கள்.
    suggession  corner :
              நம்மில் பலர் கணிணி வாங்கும்போது இலவசமாக கொடுக்கும் &சிலர் நண்பர்கள் கொடுத்த anti-virus வாங்கி நிறுவியதோடு அதன் validity முடிந்தும் இன்னும் பயன்படுத்திக்கொண்டிருப்போம் update செய்யமுடியாத நிலையிலும் 
              எனவே   நீங்கள் பயன்படுத்தும் update ஆகும் anti-virus சிறப்பாக செயல்படுகிறதா ,என்ன விலை அல்லது இலவசமாக கிடைக்கிறது என்றால் அதன் விபரம் பற்றி சொல்லுங்கள்  நண்பர்களே மற்றவர்களுக்கு  மிக உதவியாக இருக்கும்  ...

    1 Responses to “கணினி புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு;;கணிணி பாதுகாப்பு வழிகள்”

    Mahan.Thamesh said...
    June 12, 2011 at 4:18 AM

    நல்ல தகவல்கள்


    Subscribe