Tuesday, August 31, 2010

2

வெள்ளைக்காரர்கள் vs குதுப்மினார் & இயக்குனர் செல்வராகவன்

 • Tuesday, August 31, 2010
 • இந்திய சுதந்திர தின பதிவு : கொஞ்சம் லேட் தான் ....இருந்தாலும் தெரிந்துகொள்ளவேண்டியதகவல்..  காந்தி, நேரு,கட்டபொம்மன் ,பாரதி போன்றவர்கள் போராட்டம் பற்றி நமக்கு தெரியும் . இந்திய அதிசயம் ஆங்கிலேயரை எதிர்த்த சுவாரஸ்ய கதை இது.

  குதுப்மினார் குத்புதின்ஐபெக்கால் முதல் மாடி வரை தான் கட்டப்பதூமிஷ் .உயரம் -(242) அடி மொத்தம் உச்சிக்கு செல்ல (319) படிகள்

         முஸ்லீம் மக்கள் தொழுகைக்கும் பயன்பட்டது .பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சற்று மோசமான நிலையில் இருந்த குதுப்மினாரைசீரமைக்க முடிவு செய்யப்பட்டது .ட்டது . அதை வானுயர வெற்றிகரமாக கட்டி முடித்தவர் சுல்தான் இல்
      
       அதற்க்காக ராபர்ட் ஸ்மித் என்ற கட்டட கலைவல்லுனரை அரசு அழைத்து வந்தது , வந்தவர் ரிப்பேர் மட்டுமல்லாதுஅதிகபிரசங்கி தனமாக குதுப்மினருக்கு ஒரு ஆங்கில மேற்கூரை வைத்தால்மேலும் நன்றாக இருக்கும் என்று மரத்தால் ஒரு சிறு கோபுரம் அமைத்து உச்சியில் பொருத்தினார் .

             இயற்கை அதை அனுமதிக்கவில்லை ! பெரும் இடி விழுந்துகோணலாகிபோனது கலை உணர்வு மிகுந்த பிரிடிஷ் அதிகாரிகள் தலையில்அடித்துக்கொண்டு (1948) ல் இறக்கிவைத்தனர் .இன்றளவும் பரிதாபமாக சுணங்கி நிற்கும் அதை காணலாம் ..

            இது என்ன அபத்தம் என்று குதுப்மினார் அந்த வெள்ளைக்கார குல்லாயை ஒதுக்கி தள்ளிவிட்டதாம்.வெள்ளைக்காரர்கள் தன் மீது சுமத்திய பாரத்தை விரட்டிய முதல் இந்தியன்குதுப்மினார் என்பதில் நமக்கும் பெருமைதான்.குதுப்மினார்


  twitter இல் படித்தவை :


  ட்விட்டரில் அன்றாட நிகழ்வுகள் கருத்துக்களை எளிமையாக பகிர்ந்து கொள்ளும் ஒரே real hero , living legent இயக்குனர் செல்வராகவன் அவர்கள் மட்டுமே என்பது ட்விட்டர் பயன்படுத்துபவர்களுக்கு தெரியும் , நேற்று நம் living legent க்கு அப்படி என்ன மன வருத்தமோ ..மிக வருத்தமுடன் ட்விட்டி இருந்தார் .


              வாழ்க்கையை ஆர்வமிகுந்ததாக மற்ற யோசனை கூறுங்கள்,நான் என்னுள் வெறுமையாக எண்ணுகிறேன் என்று ...
   Can some one please teach me how to find interest in life?? These days I feel so empty inside ..


  செல்வா சார் அடுத்த படம் சீக்கிரம் கொடுங்க எல்லாம் சரியாகிவிடும் ...
  அவரின் மனவருத்தம் விரைவில் நீங்க பிரார்த்திப்போம் ...

  Read more...

  Monday, August 30, 2010

  2

  மறந்து போன மைக்கேல் ஜாக்சன் பிறந்தநாள் & நோபல் பரிசு

 • Monday, August 30, 2010
 • நமது தமிழக நடிகர்களில், மறைந்த சிரிப்பு நடிகர் சந்திரபாபு, அன்றே மைக் கேல் ஜாக்சன் போன்று சிறப்பாக நடனமாடியவர். தற்போதுள்ள சூழ்நிலை அந்த காலத்தில் இல்லாததால், அவர் மைக்கேல் ஜாக்சனைப் போன்று, உலகம் முழுவதும் புகழ்பெற முடியவில்லை. இருந்த போதிலும், கடைசி காலத் தில், மைக்கேல் ஜாக் சனைப் போலவே, கடன் தொல்லை சந்திரபாபுவுக்கும் இருந்துள்ளது.

  மைக்கேல் ஜாக்சன் இறக்கும்போது, அவருக்கு 500 கோடி டாலர் கடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. எந்தளவுக்கு அவர் மன உளைச்சலுடன் இருந்திருப்பார் என நினைக்கும் போதே, அவர் ரசிகர்களுக்கு, தானாக கண்களில் கண்ணீர் வந்திருக்கும். அவரது இறப்பில், பல சந்தேகங்கள் எழுப்பப் பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. ஜாக்சன் இறக்கும் போது, வெறும் 50 கிலோ எடை மட்டுமே இருந்துள் ளதும், அவர் உடம்பில், ஊசி போடாத இடங்களே இல்லாத வகையில், ஊசியால் துளைக்கப்பட்டிருப்பதும், தனது உடலை அழகு செய்து கொள்ள, பலமுறை அறுவை சிகிச்சை செய்துள்ளதால், தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தன் உயிரிழப்புக்கு, தானே காரணமாகி உள்ளார்.

  எந்தவொரு நாட்டிய கலைஞனும், இந்த மண்ணில் பெறாத பெருமையை, மைக்கேல் ஜாக்சன் பெற்றிருந்தாலும், அவரின் சில தீய பழக்கத்தால், அவருக்கு அவப்பெயர் வந்தாலும், அவரின் நடனத்தை பார்த்து ரசித்தவர்கள், அவரை ஒரு அதிசய பிறவியாகத்தான் பார்த்து வந்தனர். ஆனால், ஜாக்சனின் திரைமறைவு வாழ்க்கையில் நடந்த அசம்பாவிதங்களே, இன்று அவரின் மரணத்துக்கு காரணமாக மாறிவிட்டது.ஜாக்சனின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு பாடமாக நிச்சயம் அமைய வேண்டும்.

  மைக்கேல் ஜாக்சன் 29 auguest பிறந்தநாள் ...அவர் மறைந்தாலும் அவரது நடனம் என்றும் மறையாது ..அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு கிடைக்க  பிரார்த்திப்போம் .
  twitter இல் ரசித்த வரிகள் :
  நம்மை விட்டு சென்ற மைக்கேல் ஜாக்சன் னால் சொர்கம் சிறப்புடன் இருக்கிறது ... 
  ஒரு வருடம் ஆகியும் அவரைப்போல ஒருவரும் இன்னும் வரவில்லை இனி வருவதும் ?
  Read more...

  Sunday, August 29, 2010

  2

  நீங்கள் ஜப்பான் நாட்டில் பிறந்திருந்தால் உங்கள் பெயர் என்னவாக இருக்கும் தெரியுமா?

 • Sunday, August 29, 2010
 • நீங்கள் ஜப்பான் நாட்டில் பிறந்திருந்தால் உங்கள் பெயர் என்னவாக இருக்கும் தெரியுமா?

  உங்கள் பெயரின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஜப்பான் மொழி எழுத்துக்கள் உள்ளன அவற்றை சேர்த்து படித்துபாருங்கள்  உங்கள் பெயர் ஜபனீஸ்  மொழியில் ரெடி .
  உதாரணமாக   Krishna-Meshikiaritoka  உங்களுக்கு என்ன .....

  - ka
  B -  tu
  C - mi
  D - te
  - ku
  F - lu
  - ji
  - ri
  - ki
  - zu
  - me
  - ta
  - rin
  - to
  -mo
  - no
  - ke
  - shi
  - ari
  -chi
  - do
  V - ru
  -mei
  - na
  - fu
  - zi 


  kutozumofu  என்ன புரியலையா enjoy பண்ணுங்கன்னு japanese ல சொல்லிட்டேன் ..   


  Twitter ல் ரசித்த வரிகள் ;

  பெங்குவின்    உப்பு நீரை fresh water ஆக மற்றும் திறன் உடையது ...
     ஆச்சர்யம் ஆன உண்மையானு தெரியல ..
  அப்ப கடல் நீரை குடிநீராக மாற்ற பெங்குவின் இருந்தா  போதும் ...

  Read more...
  1

  ரசிகர்கள் ரசிக்கும் சிறந்த இளைய தலைமுறை நடிகர்

 •  ரசிகர்கள் ரசிக்கும் பிடித்த அந்த நடிகர் யாருன்னுநீங்களே சொல்லுங்க

  தருதல, இளைய தலைவலின்னு ஓவரா ஸீன் போடாம சூர்யா ன்னு மட்டு பெயர் போடுறது புடிக்கும் .
  காசுகுடுத்து கட் அவுட் , பாலபிசேகம் பண்ணாம இருக்குறது புடிக்கும்

  நாலு படத்துல ஒன்னு ஓடினதும் அடுத்த முதல்வர் , ரசிகர்மன்ற சீரமைப்பு, அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என ஸீன் போட்டு வது என இல்லாமல் இருப்பது .


  (I am back) , நா ஒருதடவ முடிவு பண்ணா எ பேச்ச நானே கேக்கமாட்டே (அப்ப என்ன ------ நீ முடிவு பண்ற ) இப்படி அர்த்தமே இல்லாத (பஞ்ச்) வசனம் பேசாதது (இது ரெண்டுக்கும் என்ன அர்த்தம்ன்னு யாராச்சு தெரிஞ்ச சொல்லுங்கப்பா.)

  கலர் கலரா டிரஸ் போட்டு ராமராஜன் ரீ-என்ட்ரி ய தடுத்தது . சிம்புவ விட்டு பில்ட் அப் பன்னசொல்றது (இன்னுமாய ஒங்கள நம்புறாங்க ) இந்தமாதிரி வேலைய பண்ணாம இருப்பது .

  பிறந்தநாள் அன்று மட்டும் கம்ப்யூட்டர் தருவது , மரகன்று நட சொல்வது என இல்லாமல் அகரம் (Foundation) ஆரம்பித்து உதவிசெய்வது .

  ஐம்பது படம் நெருங்கியும் கண்துடைப்புக்காக ஒரு லட்சம் மட்டும் நன்கொடை தராமல் , வருமானத்தில் பத்து சதவீதம் சமுதாய நலனுக்கு ஒதுக்கியது .


  எல்லா படங்களிலும் டிரஸ் மட்டும் மாறிக்கொண்டு , தொப்பையை தூக்கி கொண்டும் ஆடாமல் எல்லோரும் ரசிக்கும்படி நடனம் ஆடுவது.


  சினிமாவில் அமைதியான நாடு கேட்டேன் என்று திரையில் பாடிவிட்டு வெளியே சைலன்ஸ் என சவுண்ட் விடுவது , அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறிவிட்டு அப்பொழுது எதோ பேசிவிட்டேன் இப்போது பக்குவம் வந்துவிட்டது என்று கூறாமல் அமைதிகாப்பது .


  டிவி பெட்டியில் இயக்குனருடன் குழந்தைபோல பேட்டி கொடுத்து பிறகு அவரை சைலன்ஸ் என்று மிரட்டாமலும் , இயக்குனர் ஹோட்டலில் மிரட்டினார் என்று சொல்லாமல் இருப்பது .

  எல்லோர் மனதிலும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக 
  இடம்பிடிதுக்கொண்டிருப்பது.


  Twitter ல் ரசித்த வரிகள் :
                                                     தமிழர்களை மட்டும் ஏமாற்றிவரும் இலங்கை , இப்போது இந்தியாவையும் கிரிக்கெட் மூலம் ஏமாற்ற ஆரம்பித்துவிட்டது அம்பயர் உதவியுடன்  ...

  எப்படியோ பைனல்ல அப்டி எது நடக்கல ... இருந்தாலும் இலங்கை அணி இந்த தொடர் மூலம் கோப்பையை வென்றாலும் பெயரை கெடுத்துக்கொண்டதுதான் நிஜம்...
  Read more...

  Saturday, August 28, 2010

  3

  PDF File ஐ பேசவைக்கலாம் வாங்க.

 • Saturday, August 28, 2010 • PDF   File Tricks இது ரொம்ப சின்ன விஷயம்   எப்படி என்று பார்க்கலாம்

  உங்களிடம்  இருக்கும் Adobe reader 6.0   version + அதற்கு மேற்பட்ட  Version இருக்கவேண்டும்  இதுதான் முக்கியம்.  தற்போது Adobe reader 9.0  பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்துகிறோம் .
  ஏதேனும் ஒரு PDF File லை    Adobe reader இல் Open செய்து பிறகு

  View  சென்று Read out Loud தேர்வுசெய்து Active Read Out Loud Click   செய்தால் போதும் PDF File பேச ஆரம்பித்துவிடும் .

  சரியாக இயங்காவிட்டால்  கீழ்க்கண்ட Short cut பயன்படுத்தி பாருங்கள் கண்டிப்பாக பேசவைக்கலாம் .


  Keyboard Shortcuts  (விண்டோஸ் , MAC OS இரண்டுக்கும் )
  1.Ctrl+Shift+V     -- Read this Page only

  2.Ctrl+Shift+B   -- Read till End of Document

  3.Ctrl+Shift+C  -- Pause Reading

  4.Ctrl+Shift+E   -- Stop Reading

  எப்படி PDF File வார்த்தைகள் படிக்கப்படுகின்றன ?

  Read Out Loud என்ற தொழில்நுட்பம் மூலம் இது நடைபெறுகிறது . "screen reader"தொழில்நுட்பம் போன்றது .   நமது கணினியில் உள்ள (ஆண் )Voice மூலம் படிக்கிறது .  நாம்  வேறு அழகிய voice  Download செய்து மாற்றிக்கொள்ளலாம் .  Adobe Reader தமிழ் மொழி PDF படிக்காது என்பது  நமக்கு வருத்தாமான விஷயம் ,..
  Read more...
  0

  சிறந்த Browser எது?


 •  சிறந்த Browser  எது?


  Mozilla Firefox 3.5,         Google Chrome 3.0,         Microsoft Internet Explorer 8.0,           Opera 10.௦,       Apple Safari 4.0 

   ஆகியவற்றில் ஏதேனும் ஒரு Browser பயன்படுத்துவோம் பெரும்பாலும் ,  இவற்றில் எது சிறந்தது என்பதை பல்வேறு பயன்பாட்டில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது .

  இணையதளத்தை பற்றி மிக குறைந்த அளவு அனுபவம் கொண்டவர்களின் பெரும்பான்மையான விருப்பம் IE தான், IE ல் User  compatibility என்றால் என்ன என்று கேட்கும் .  பெரும்பாலும் IE என்றாலே அனைவருக்கும் அலர்ஜி ,  என்று  குறைகளை சொல்லிக்கொண்டே போகலாம் .

              குறிப்பாக Virus  தாக்கும் அபாயம் இதில்  அதிகம் , பலவருடங்கள் ஆகியும் இன்னும் குறைபாடுகள் அதிகம் .நாளுக்கு நாள் இதன் பயன்பாடு குறைந்து வருவதான் உண்மை.. Microsoft Browser  என்பது  மட்டுமே  இன்று  வரை நிலைத்திருக்க ஒரே காரணம்.            Mozilla  Firefox    அனைவருக்கும் ஏற்றது ,  குறிப்பாக Developer களின் Choice இது மட்டும் தான். பல்வேறு வசதிகள் இதில் உள்ளது குறிப்பாக Firefox Tools பயன்பாடு சிறப்பானது.
  Page Loading ஆக எடுத்துக்கொள்ளும் நேரம் மற்றவற்றை விட மிக குறைவு.
  Google Crome புதிதாக பல்வேறு வசதிகளுடன் வந்து பல்வேறு வசதிகளை கொண்டு அனைவரையும் மிக குறுகிய காலத்தில் கவர்ந்த ஒரே Browser .

  safari,opera -இவை தனிப்பட்ட முறையில் சிறப்பு என்று ஒன்றும் இல்லை .மற்றபடி  IE விட சிறந்த Browser கள் என்பதில் சந்தேகமே இல்லை .

  CPU பயன்பாடு,வேகம் , இணையப்பக்கம் எவ்வளவு சீக்கிரம் வருகிறது போன்றவற்றின் 

  (JavaScript speed, average CPU usage under stress, DOM selection, CSS rendering speed, page load time, and browser cache performance)  அடிப்படையில் சிறந்தது எது என்பதை பாருங்கள் .


  பெரும்பாலும் கூகிள் Crome, Firefox இடையே பலத்த போட்டி , இறுதியில் மேற்கண்ட ஆறு செயல்பாடுகளின் அடிப்படையில் Google Crome சிறந்தது இதையடுத்து  வருகிறது  Firefox , IE க்கு கடைசி இடம்தான்.


  ஆனால் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் இன்று வரை IE தான் முதலிடம்...   நன்றி : Mr.Jacob Gube ---- sixvision.com


  சிறந்த வலைபூக்கள் விருது வழங்கிய வலைபூங்கா தளத்திற்கும் ,இதற்க்கு காரணமான உங்கள் அனைவருக்கும் நன்றி .
  Read more...
  0

  தடை செய்யப்பட்ட இணையதளங்களை Firefox Browser ல் பார்ப்பது எப்படி?

 • தடை செய்யப்பட்ட இணையதளங்களை Firefox Browser ல் பார்ப்பது எப்படி?

  பல அலுவலகங்களில் ,கல்லூரிகளில் சில web Sites தடை செய்யப்பட்டிருக்கும் அவற்றை பார்க்க சில Proxy Websites இருப்பது நமக்கு தெரியும் , ஆனால் அவற்றையும் சில இடங்களில் தடை செய்து இருப்பார்கள் . அத்தகைய தளங்களுக்கு செல்லும் போது கீழ்க்கண்டவாறு தகவல் வரும்.


    இவற்றை Firefox Browser மூலம் எளிதில்  பார்க்கலாம் அதற்கு         Firefox Go2 Proxy Add-on download செய்து Install செய்துகொள்ளவேண்டும்,அவ்வளவுதான் இனி அலுவலகங்களில் தடை செய்யப்பட்ட இணையதளத்தை எளிதில்  பார்க்கலாம் .
  Read more...
  0

  ஈரம் : விமர்சனம் - நந்தாவின் அமைதியான அட்டகாசம்


 • தமிழில் வந்திருக்கும் திரில்லர் என்று சொல்லக்கூடிய அளவிற்குகொடுக்க முயற்சி செய்துள்ளனர் .   முதலில் சிந்து மேணன்  தண்ணீரில் மிதந்தபடி இறக்கும் காட்சி , அதற்கு முன்  அவர் அறையிலிருந்து தணீர் வெளியேறுவதை கூட திகிலுடன் காட்டி  தண்ணீரை  காட்டி கூட பயத்தை உண்டாக்க முடியும் என்று காட்டி இருக்கின்றனர் .
  அந்த இறப்பின் பின்னணி என்ன அவரின் கடந்த கால வாழ்க்கை இவைதான் மீதி கதை .இதை விசாரிக்கவரும் ஆதி சிந்து வின்  காதலன் , காவல்துறையில் பணிபுரிபவருக்கு தான் மகளை தர மறுப்பதால்  ஆதி சிந்து இடையே காதல் முறிந்து நந்தாவை மணக்கிறார் .
  மனைவிமேல்  நண்பனின் பேச்சை கேட்டு  சந்தேகப்பட்டு அவரை மன ரீதியாக துன்புறுத்துகிறார் அந்த பிளாட் தான் மகளுக்கு கிடைக்கததால் சிந்துவை  விரட்ட  தினமும் ஒருவன்  வந்து போகிறான் என நந்தாவிடம் சொல்லிவிடுகிறார் ,இது போல இன்னொரு வீட்டுகாரர் , வாட்ச்மேன் போன்றோரும் சொல்ல சந்தேகத்தால் மனைவிக்கு தூக்கமாத்திரை கொடுத்து தண்ணீரில்  போட்டு கொலை செய்து விடுகிறார் .

  நீர் உருவில் வந்து அந்த மூன்று பேரையும்  சிந்து கொல்கிறார், இதை அறிந்த ஆதி எப்படி உண்மையை எல்லோருக்கும் தெரிவிக்கிறார்  என்பது விறுவிறுப்பான கதை.


  ஆதி  அனைத்து   காட்சிகளிலும்  கலக்குகிறார் , அனால்  எதோ ஒன்று மிஸ்ஸிங் இன்ஸ்பெக்டர்  வேடம் நன்றாக பொருந்துகிறது .

  நந்தா   பேசும் வார்த்தைகள் மிக குறைவு  ,  எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி வில்லத்தனம் காட்டுகிறார் ,  ஓவர் ஆக்டிங்  இல்லாமல்   இயல்பாக அதுவும் அந்த" எனை காணவில்லையே  நேற்றோடு  படலை சிந்து பாடிக்கொண்டு டிவி இல் பார்க்கும்போது அதை மாற்றி திரும்ப அந்த பாடலை நந்தாவிடம்  வைக்க சொல்லும் சிந்து  அப்போது இவர் நடிப்பு  அட்டகாசம் .  எல்லோரையும் தூக்கி சாப்பிட்டுவிடுகிறார் .
   பின்னணி இசை ,ஒளிப்பதிவு   மிரட்டலாக இருக்கிறது .  கொலை பின்னணி , சிந்து -ஆதி காதல் இரண்டையும் சேர்ந்தே சொல்லி இருப்பது வித்தியாசமாக விறுவிறுப்பாக செல்ல உதவுகிறது.
  கண்டிப்பாக  இரண்டு முறையாவது பார்த்தால் தான்  அணைத்து கட்சிகளிலும் உள்ள கருத்துக்கள் புரியும் .   ஒவ்வொரு  காட்சியையும்  ஹாலிவுட்  படங்கள் போல எதோ ஒன்றை வைத்து கதையை நகர்த்தி இருக்கிறார்  இயக்குனர்.

  திரில்லேர் படங்களின் முழு  கதையுயும்  விமர்சித்தால்  படிப்பவர்களுக்கு  இவ்வளவு தானா  இன்று நினைக்கதோன்றும் , அப்படி விமர்சிப்பதும் கடினம் ,  ஓரிரு  இடங்கள் மட்டும்   இழுப்பது போல தோன்றுவது  தவிர  படம் முழுவதும் பரபர , விறுவிறு கண்டிப்பாக போய் பார்க்கலாம் ஈரத்தை ...
  Read more...
  0

  மிக சிறந்த Anti-virus எது? அவை வைரஸ்களை முழுமையாக அழிக்கின்றனவா ? ஒரு அதிர்ச்சி சர்வேமுடிவுகள் .. • மிக சிறந்த Anti-virus எது? அவை வைரஸ்களை முழுமையாக அழிக்கின்றனவா ? ஒரு அதிர்ச்சி  சர்வேமுடிவுகள் ..

  என்ற பிரபல ஐரோப்பிய நிறுவனம் சிறந்த Anti-virus எது என்று Home user களுக்காக  16 Anti-virus களை

  • Avast Professional Edition 4.8
  • AVG Anti-Virus 8.5
  • AVIRA AntiVir Premium 9.0
  • BitDefender Anti-Virus 2010
  • eScan Anti-Virus 10.0
  • ESET NOD32 Antivirus 4.0
  • F-Secure AntiVirus 2010
  • G DATA AntiVirus 2010
  • Kaspersky Anti-Virus 2010
  • Kingsoft AntiVirus 9
  • McAfee VirusScan Plus 2009
  • Microsoft Security Essentials 1.0
  • Norman Antivirus & Anti-Spyware 7.10
  • Sophos Anti-Virus 7.6
  • Symantec Norton Anti-Virus 2010
  • Trustport Antivirus 2009.
   சோதனை செய்து முடிவுகளை புள்ளி விபரங்களுடன் வெளியிட்டுள்ளது . பல்வேறு வகையான வைரஸ் களை கண்டுபிடித்து அழிப்பது , எவ்வளவு வேகமாக scan செய்கிறது போன்றவற்றை  வைத்து ஆய்வுகளை மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது .
             
             eScan, Symantec and Microsoft (MSE) ஆகியவை மற்றுமே சிறப்பாக செயபடுவதாகவும் , மிக சிறப்பாக செயல்படும் Anti-virus என எதுவும் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரிவிக்கிறது .விபரங்கள் அடுத்து பட்டியலிடப்பட்டுள்ளன ..

  முழுவிபரங்களையும் தனித்தனியாக காண
  Report 1 
  Report 2

   
  முழுமையான பாதுகாப்பிற்கு என்ன வழி? 

                பெரும்பாலான வைரஸ்களை பரப்புவதில் இணையதளம் முதலிடத்தையும் , USB drive இரண்டாம் இடத்தையும் பெறுகிறது , எனவே offline பயன்பாட்டிற்கு மட்டும் Windows பயன்படுத்துங்கள் இணையதள பயன்பாட்டிற்கு Ubuntu , Redhat ,suse போன்ற open source பயன்படுத்தி வைரஸ் பரவாமல் பாதுகாக்கலாம் .

           Sun Virtual Box பயன்படுத்தி ஒரே OS ல் இருந்து சில நொடிகளில் செல்லலாம் என்பதால் பயன்படுத்துவதும் எளிது .Virtual box பற்றி தெரிந்துகொள்ள   Click here 
  Read more...
  3

  தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ?

 • தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ?

  நமது அன்றாட வாழ்வில் Mobile என்பது அனைவருக்கும் ஆறாவது விரல் போல எப்போது கைகளிலே இருக்கும்  , பெரும்பாலானோர் Mobile லை தண்ணீரில் போட்டிருக்கும் அனுபவம் உண்டு .  அப்போது என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய பதிவு ...

  moblie போன் சில  நேரங்களில் தவறி தண்ணீரில் விழுந்தும் ,அதனை எடுத்து கழற்றி வெயிலிலோ அல்லது லைட் வெளிச்சத்திலோ வைத்து Mobile லில்  இருக்கும் தண்ணீரை அகற்றுவோம் .


  தண்ணீரில் விழுந்த Mobile லை  என்ன செய்து  சரியாக மீண்டும் இயங்கும்படி செய்யலாம் ?

  முதலில் தண்ணீரில் விழுந்த Mobile லை அதனது battery யை கழற்றி வைக்கவேண்டும் பிறகுதான் துணியால் நான்கு  துடைத்து பிறகு அதனை  வெயிலிலோ அல்லது சூடான லைட் ஒளியிலோ வைப்பதைவிட  அதனை அரிசியில் போட்டு மூடி வைக்கவேண்டும்  அரிசி ஈரத்தை சிறப்பாக உறிஞ்சும் தன்மை கொண்டது நான்கைந்து மணி நேரம் கழித்து எடுத்து  பிறகு உபயோகப்படுதிப்பார்க்கலாம்  .

  வெயிலிலோ அல்லது லைட் ஒளியிலோ வைக்கும்போது சில நேரங்களில் சூடாகி Mobie circuit இணைப்புகள் வெடித்தோ ,அல்லது துண்டித்துவிடவும்  வைப்பு உண்டு . இதனால் உங்கள் பாக்கெட் கூடுதலாக காலியாகும் வாய்ப்பு உண்டு ,,எனவே அரிசியில் போட்டு வைப்பது சிறந்தது ..  எலாவற்றிர்க்கும் மேலாக Mobile battery எவ்வளவு சீக்கிரம் கழற்றி வைக்கிறோமோ அவ்வளவு  நல்லது ...
  Read more...
  0

  Firefox ன் - ஐந்தாவது பிறந்தநாள் அதன் வளர்ச்சி

 •  firefox இன்றுவரை கட்டந்துவந்த பாதை அதன் சிறப்பம்சங்கள் பற்றி அழகாக anmation வீடியோ வடிவில் .. தொழில்நுட்ப வல்லுனர்களின் ஒரே விருப்பமான Firefox  ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடுகிறது நாமும் வாழ்த்துக்களை தெரிவிப்போம் ...

  Read more...
  0

  வலைபக்க வாசகர்களை அதிகரிக்கும் Strar Ratting ,Post Read Suggession நிறுவுவது எப்படி ?


 •                நாம் இடும் ஒவ்வொரு பதிவும் எப்படி இருக்கிறது என்பதை படிக்கும் அனைவரும் மதிப்பீடு செய்து Star Ratting  வழங்கும் Star ratings widget                       இந்த Star Ratings Widget ல் Bad, Boring, OK , Good ,Excellent என அனைத்து கருத்துக்களையும் தெரிவிக்கும் வசதி உள்ளது . இதனால்  பிறர் நமது பதிவை  போலியாக மதிப்பிட்டு Top 10 போன்றவற்றை வெளியிட்டு   அவர்களின் வலைபக்கத்தை பிரபலபடுத்துவதை தடுக்கலாம் . படிக்கும் வாசகர்களின் உண்மையான மதிப்பீடை பெற்று இன்னும் மேருகேற்றிகொள்ளலாம் .

                   இதன் சிறப்பம்சமாக நமது பிற பதிவுகளை படிக்க Sugession Option கொடுக்கும் வசதியும் கொண்டது . இதன் மூலம்இதனால்  புதிதாக வருபவர்கள்,நீண்ட நாள் கழித்து வருபவர்கள்  அவற்றை   படிக்க அருமையான வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கலாம்  .

                Techsathish.net போன்ற தளங்கள் இதை  பயன்படுத்துகின்றன . நானும் இதனை இணைத்துள்ளேன் .

  இந்தStar Widget உங்கள் பக்கத்தில் நிறுவ Click Here  Read more...
  1

  சிறந்த பதிவராகவும் தனது வலைப்பக்கம் தான் சிறந்தது என்று காட்டிக்கொள்ள என்ன செய்யலாம் ?

 • சிறந்த பதிவராகவும்  தனது வலைப்பக்கம் தான் சிறந்தது என்று காட்டிக்கொள்ள என்ன செய்யலாம் ?


  சன் செய்திகள் சிறப்பு பார்வை யில் சண்முகம் அவர்கள் போல் படிக்கவும்
                       நாம் எவ்வளவுதான் எழுதினாலும் பிரபலமாக வில்லை என்று நமக்கு தோன்றும் . சில  நேரங்களில் நமக்கு Hits கிடைக்காமல் போவிடும் இதற்க்கு என்னவழி , நாம் எப்படி எழுதினாலும் நம்மை பலரும் வந்து பாராட்டவேண்டும் என்ற மன வியாதி வந்துவிடும் . இதற்க்குஎன்ன வழி நாம் என்ன செய்ய வேண்டும் இப்போது பார்க்கலாம் .

                முதலில் காசு கொடுத்து Cable அண்ணா போன்ற பிரபல தளத்தில் முன்பக்கத்தில் கொடுக்கலாம் இதற்க்கு நல்ல பலன் உண்டு . மறுபடியும் திரும்பி வருவார்களா என்பது உறுதியாக கூறமுடியாது .

  எவ்வளவு நாள் தான் காசு கொடுத்து தளத்திற்கு விளம்பரம் தரமுடியும் அடுத்து Top  10 , Super 10 போன்று மாதம் தோறும் வெளியிட்டு கொஞ்சம் Hits வாங்கலாம் முடிந்தால் தினந்தோறும் அதையே செய்யலாம் . சிறந்தவழி.

                  சிறப்பாக எழுதி தமிலிஷ் , தமிழ்மணம் போன்றவற்றில் இணைப்பு கொடுத்தவர்களுக்கு நிகராக விளம்பர படுத்திய தனது தளத்தை Alexa Rank படி வெளியிட்டிருக்கிறேன் விடுபட்டிருந்தால் சொல்லுங்கள் என்று காட்டிக்கொள்ளலாம்.

           போட்டி போன்றவற்றில் நடத்துபவர் அவரது குடும்பத்தினர் கூட கலந்துகொள்ள கூடாது என்பது போன்றவற்றை மீறி விளம்பரத்தில் கிடைத்த Hits மூலமும் , Top 10 போன்ற முடிவுகள் வெளியிடும் அன்று கிடைக்கும்  Hits   மூலம் கிடைக்கும் Hits ஸை தனது தொழில் நுட்ப பதிவுக்கு கிடைத்ததுபோல் காட்டிக்கொள்ளலாம் . Alexa Rank எப்படியெல்லாம் அதிகரிக்கலாம் என்று அவர்களுக்கு தெரியுமா என்ன?

       யாராவது புதியவர்கள் விருது வாங்கியிருந்தால் அதிகம் பேர் படிக்க செல்கிறார் என்று தெரிந்தால் அவரது கடந்த மாத பதிவுக்கு Comment ல் போய்   " இப்படி ஒரு மோசமான பதிவு   இதுவரை பார்த்ததில்லை என்று முடிந்தால் உலக பதிவுகளில் முதல் முறையாக என்று சேர்த்துக்கொள்ளலாம் .

           தனது   Top 10 வரிசைக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தால் நீங்கள் உங்கள் வலைபக்கத்தில் பிறவற்றையும் எழுதுகிறீர்கள்  ,  என்றோ HAcking தளம் என்றோ சொல்லிவிடலாம் .  இதற்க்கு Hacking க்கு என்ன Spelling என்று கூட தெரிந்திருக்க வேண்டியது இல்லை .

                    அடுத்து பெண்களை கேவலபடுத்தும் வகையில் எழுதலாம் உதாரணமாக நண்பனின் மனைவியைஎப்படி  ... என்று எழுதுங்கள் என்று  ஆலோசனை கொடுக்கலாம் .  நம் நண்பர் படித்தால் என்ன நினைப்பார் என்பது பற்றி கூட என்ன தேவை இல்லை .

                         பிரபல பதிவர் அவரின் பதிவை பாராட்டி இருந்தால் அவரை கூட உங்களுக்கு என்ன ஆயிற்றுஇதைபோய் பாராட்டி இருக்கிறீர்களே  என்று கேட்கலாம்  .அவர் முப்பது நாட்களுக்கு முன் போட்ட Comment அதுவும் பிறரது பதிவில் வந்து கேட்கவாபோகிறார்.

             அடுத்தவர் தளத்தில் எழுதினால் போதுமா நமது தளத்தில் எழுத வேண்டாமா  சரி நம் வீட்டுக்காரியை நினைத்து வேலைக்காரியை கேவலமாக போடலாம் அப்போதுதான் சோறு கிடைக்கும் , வேலைக்காரி என்றாலே பிடிக்காதவர் போல் மனைவியிடம் காட்டிக்கொள்ளலாம் .  உதாரணமாக அவள் அடுத்த வீட்டு சங்கதியை சொல்லுவாள் என்று போட்டாலே போதும் .

     அப்படி சொல்பவரை ஏன் வேலைக்கு வைக்கிறாய் என்று யார் நம்மை கேட்ப்பார்கள்  என்று நினைக்க  வேண்டியதில்லை .  நமக்கு தான் நாம் உண்டு நம் வேலை உண்டு இருக்கிறோம் அவர்கள்தான் இதக்காகவே சம்பளம் வாங்குகிறார் வேலையே செய்வதில்லையே .


               உங்களுக்கு கொடுத்த Link ஐ  நீக்கி விட்டேன் என்று நாமே போய் பினூட்டம் இடலாம் காரணம்  கூட ஒன்றும்பெரிதாக  தேவை இல்லை .அப்போதுதான்  ஐயோ இனி நம் பதிவை யார் படிப்பார்கள் என்று அவரை  கெஞ்சும் நிலை க்கு கொண்டுவரலாம் .அப்போது ராஜபக்சே போல மனதில் சிரிதுக்கொள்ளலாம் .

                  முடிந்தால் World Tamil techblog organization என்று ஆரம்பித்து Copy rights உரிமை வாங்கி  தன்னிடம் அனுமதிபெற்றுத்தான் வலைப்பூ தொடங்க வேண்டும் என்று சொல்லலாம் .

  ஏனென்றால் நம்மை விட யார் புத்திசாலி நமக்கு தான்குறை சொல்லும் விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாதே .தான் இல்லாவிட்டால் பதிவுலகமே மொடங்கிடும் என்று நினைத்துக்கொள்ளலாம் .

  எனக்கு இதனை Followers , Subscribbers ,Hits எட்டே வருடங்களில் என்று வலைபக்கத்தின் ஆரம்பத்திலேயே போட்டுக்கொள்ளலாம் , பார்ப்பவர்கள் அடுத்து  உள்ள  Visit Counter , Follower ல் இந்த விபரம் இருக்கிறதே இங்கு எதற்கு என்று கேட்கபோகிரார்களா என்ன?

  முக்கியமாக இலவசம் ,சுதந்திரம் மென்பொருள் என்று ஒரே அர்த்தத்தில் பெயர் வைத்து மக்களை குழப்பலாம் .
   ஏன் இப்படி செய்தாய் என்று நண்பர்கள் கேட்டால் நான் தான் அவனுக்கு ப்லோக் என்றால் என்ன ? எப்படி பதிவிடுவது சாப்பாடு கூட போட்டேன் நான் விமர்சிப்பதில் என்ன தவறுஅப்போதுதான் மேலும் நன்றாக எழுதுவான்  என்று  சொல்லி சமாளிக்கலாம்.

  ஐடி கொடுத்து பின்னூட்ட்டம் இட்டாலும் நாம் பார்த்து படித்துவிட்டுதான் அதனை வலைப்பூவில் காட்டவேண்டும், யாராவது நம்மைபோல இருப்பார்களோ என்ற நல்ல எண்ணம் தான் வேறு என்ன? .

  இதில்  உங்களுக்கு பிடித்த கருத்து எது என்று இடது பக்கத்தில் இருக்கும் Opinion Poll option ல் பதிவுசெய்து பிரபல பதிவராக துடிக்கும் நண்பருக்கு உதவுங்களேன். இனி அவர் வாழ்க்கை உங்கள் கையில் .......
   குறிப்பு : நானும் எனது நண்பன் எழுமலையும்  ப்லோக் தொடங்கியபோது  அவர் போட்டிருந்த புதிய முன்னணி  ப்லோக் என்பதை சண்டைபோட்டு சில நாட்களில் நீக்கினேன் என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் . என்னை பொறுத்தவரை இந்த ப்லோக்   இன்னும் சில வருடங்கள் கழித்து பார்த்தாலும் ஏன்டா இப்படி எழுதினோம் என்று தோன கூடாது என்பதுதான் . கடந்த வாரம் கூட சக புதிய பதிவர் வருத்தத்துடன் அவருக்கு யாரோ இட்ட Comment ல் சொந்தமாக எழுதுங்கள் என்று அவரது பதிவை பற்றி  சொல்லியிருந்தாதாக வருத்தப்பட்டார் .

            இப்படி ஒரு சிலரது    செயலால் புதியவர்கள் வளர்வது எவ்வளவு கஷ்டம் பாருங்கள் .  நங்கள் உங்களுக்கு போட்டி அல்ல , நாங்கள் உங்களை வழிகாட்டியாகத்தான்  நினைக்கிறோம் என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள்.
  Read more...
  1

  Hacking,நண்பனின் மனைவி , வேலைக்காரி , சக பதிவர் பற்றி பிரபல பதிவர் என்ன நினைக்கிறார் ?

 •                  Hacking என்பது எதோ பிறரின் தகவல்களை திருடுவதோ அல்லது மற்றிவிடுவதோ மட்டும் அல்ல . மிகபெரிய நிறுவனங்களின் உள்ள மதிப்பிட முடியாத தகவல்கள் திருடு போகாமல் தடுப்பதற்கு அவர்களால் மட்டுமே முடியும் .
                எனவே Hacking என்பது எதோ திருடுவது Hackers என்பவர்கள் திருடுபவர்கள் என்று நினைப்பது மிகுந்த தவறாகும் .  Security என்பது இணையதளத்தை முழுமையாக்கும் ஒன்று  Security என்பது இல்லாவிட்டால் இணையதள பயன்பாடு என்றோ அழிந்து போயிருக்கும் . 

             தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கண்டிப்பாக இத்தகைய பாடங்கள் தற்போது பாடத்திட்டத்தில் சேர்த்து 5 வருடங்கள் ஆகிவிட்டது ,Cryptography , Internet Security & Virus Programming போன்ற பாடங்கள் படிக்காமல் தகவல் தொழில் நுட்ப பட்டபடிப்பு இப்போது இல்லை . இங்கு சென்று SRM University பாடத்திட்டத்தை பாருங்கள் .

           SRM University Mtech Syllabus Details View to Click Here . அல்லது உங்கள் நண்பர்களிடம் இவற்றை பற்றி கேளுங்கள் . மேற்கண்ட பாடங்கள் எல்லாம் எவ்வாறு தகவல்கள் திருடப்படுகின்றன என்று சொல்லி அவற்றில் இருந்து எப்படி பாதுகாக்கலாம் என்று தான் சொல்லபட்டிருக்கும் . தகவல்கள் திருடுபவர்கள் இதற்க்கு Brute force attack , Hybrid attack,Dictionary attack,  மற்றும் Virus creation போன்ற techniques பயன்படுத்துகின்றனர் .
  அதிர்ச்சி தரும் Hacking எப்படியெல்லாம் நடந்திருக்கிறது என்பதை இங்கு படித்து பாருங்கள் .

                 இதில் இந்தியர்கள் யாரும் இல்லை என்று சந்தோசம்தான் நமக்கு ,  ஆனால் உண்மையில் அந்த அளவிற்கு யாரும் இன்னும் வளரவில்லை என்பதுதான் உண்மை .
               தற்போது  Hackers Council அறிவித்துள்ள சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்ப்பட்ட பரிசுதொகை கொண்ட போட்டியை அறிவித்துள்ளது . விபரங்களுக்கு http://www.hackerscouncil.org
  என்ற  இணையதள முகவரியை பாருங்கள் .


       உலகிலேயே அதிக சம்பளம் பெறுவோரின் பட்டியலில் இந்த HACKING Technonogy பிரிவினர் என்பது கூடுதல் தகவல் .இதற்காக பல்வேறு நகரங்களில் தனி Course கள் நடைபெறுகின்றன . 
         இப்போது எதோ எனக்கு தெரிந்த ,புரிந்த சிறிய ஒரு சில Hacking Techniques பற்றி எழுத தொடங்கியிருக்கிறேன் .அதற்கு நீங்கள் தரும் பேராதரவால் இன்னும் கூடுத நேரம் ஒதுக்கி மிக பயனுள்ள வகையில் எழுத முயற்சிக்கிறேன் .

  இன்று எனது வலை பக்கத்தில் நான் கடந்த மாடம் எழுதிய

  நண்பர்களது username ,password போன்றவற்றை ஹாக்கிங் செய்யலாம் வாங்க

   நமது Computer தவிர நமது நண்பர்களின் Computer அடுத்து அதிகமாக பயன்படுத்துவோம் அதனால் அப்போது அவர்களின் password கண்டுபிடிக்கலாம் என்று அப்படி தலைப்பு போட்டிருந்தேன் . இந்த பதிவின் முடிவில் இதனை தடுக்கும் முறை பற்றி சொல்லியிருந்தேன் .

            இதில் நான் கண்ட பின்னூட்டத்தில்நண்பர் ஒருவர் " இதைவிட கேவலமான பதிவை பார்த்ததில்லை". என்று போட்டிருந்தார்  .
                 சரி இது அவரது விருப்பம் Comment Box இருப்பது படிக்கும் நண்பர்களின் விமர்சனத்திற்கு , பாராட்டை மட்டுமல்ல குறைகளையும் சமமாக கருதுபவன் நான். ஆணாதிக்கம் என்று சகோதரிகள் நினைக்கவேண்டாம் அப்படி ஏற்றுக்கொள்பவன் தான் உண்மையான ஆண் . இதுவல்ல விஷயம் அடுத்து என்ன எழுதவேண்டும் என்று   அவர் எழுதியிருந்தார் 
  //அடுத்து என்ன நண்பர்களின் மனைவியை ....ape செய்வது எப்படியா?
   நண்பனின் மனைவியை பற்றி அவரின் அழகான கருத்து பாருங்கள்


  பின் உங்களுக்கு என்னால் லின்க் தர முடியாது. கொடுத்ததை அழித்துவிட்டேன்.இத்தோடு முடிக்கவில்லை .
  இவருக்கு முன்பே  சகோதரி ஒருவர் Comment ல் சொல்லியிருந்தார் .
  தெரியாத தகவல் தம்பி! ஆனால், தெளிவான தகவல்! IE ல் எப்படி?//   என்று கேட்டிருந்தார் .

  அதற்கும் சேர்த்து அடுத்த Comment ல்  இவர்
  சுமஜ்லா இதைப்போய் பாராட்டி இருக்கீங்களே. என்ன ஆச்சு உங்களுக்கு.  சகோதரி கதை, கவிதை  என பல துறைகளில் கலக்குபவர்  என்பது நான் சொல்லி தெரிவது  இல்லை .

          சரி நான் எழுதியது தான் அவருக்கு பிடிக்கவில்லை சகோதரியை என்ன ஆச்சு உங்களுக்கு என்று கேட்ட போதுதான் அவரது மன நிலையை தெளிவாக அறிந்து கொண்டேன் . அந்த பதிவிற்கு 22 vote தமிலிஷ் , 11 vote Tamil 10 ம் ஐந்து பின்னூட்டமும் 30 நாட்களுக்கு முன்பே வாங்கிவிட்டது என்பது கூடுதல் தகவல் . இதன்மூலம் வாக்களித்த வர்களின் உணர்வுகளையும் மதிக்க தவறிவிட்டார்  .

            இதுவரை எனக்கு அவருக்கும் எவ்வித பிரச்சினைகளும் இல்லை . ஒருமுறை தகவல் தொழில் நுட்ப வலைபூ இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் என்ற அவரது பதிவிற்கு Comment மூலம் தெரியபடுத்தினேன் அதற்கு அவர் நீங்கள் பிற செய்திகளை எழுதுகிறீர்கள் அதனால் உங்களது தளத்தை சேர்க்க முடியாது என்று சொல்லிவிட்டார் . இன்றுவரை நான் எனக்கு தெரிந்த எல்லாவற்றையும் கலந்துதான் எழுதுகிறேன் அவரது

  உலக டாப் டென் தமிழ் InfoTech பிளாக்ஸ் - நவம்பர் 2009

                  லிஸ்டில் வரும் எண்ணம் எனக்கு என்றைக்கும் இல்லை .     சக பதிவர்களை மதிக்க தெரியாத , அவர்களின் குறைகளை கூட நாசூக்காக சொல்லத்தெரியாத இவர் கொடுக்கும் லிங்க் தேவை இல்லை .அப்படி நீங்கள் லிங்க் கொடுத்தாலும் விஷயம் இருந்தால் தான் மீண்டும் படிக்க நண்பர்கள் வருவார்கள் என்பதை நன்கு தெரிந்த தமிழில் தகவல்தொழில்நுட்பம்  வளர உங்களை விட அதிக ஆவல் கொண்டவன்.

  இன்று அவரது வலைபக்கத்தில் எனக்காக சில மாறுதல்கள் செய்திருக்கிறார். இதோ 

  ஹேக்கிங் சைட்டுகளுக்கு எப்போதுமே என்னால் லின்க் கொடுக்க முடியாது. என்னை அறியாமல் ஹேக்கிங் சைட்டுகளுக்கு லின்க் கொடுத்து இருந்தால் தெரியப்படுத்தவும்.

  முதலில் ஹாக்கிங் என்றால் என்ன ? ஏன் அதை பற்றி தெரிந்துகொண்டு  மேலே நீங்கள் படித்தவற்றை நினைவு படுத்தி அடுத்த பதிவை தொடங்குங்கள் .அப்படி என்ன எனது வலைபக்கத்தில் நாட்டுக்கு கேடு விளைவிக்கும் தகவல்களை கண்டுவிட்டீர்கள் என்று  தெரியப்படுத்துங்கள் பார்ப்போம் .
            உங்களை போல் ஆணவத்தில் வலைப்பூவை விமர்சித்து நானும் சாக்கடையில் புரள விரும்பவில்லை .  சக பதிவர் (நண்பர்)களை தான் மதிப்பதில்லை நாங்கள் நண்பன் தவறு செய்தால் மன்னித்துவிடுவோம் ஆனால் நண்பனின் மனைவியை சகோதரியாக மதித்திருந்தால் இப்படி ஒரு கேள்வி  கேட்டிருக்க மாட்டீர்கள் , எனக்கு தெரிந்ததை தான் நான் எழுதுவேன். நண்பனின் மனைவிபற்றி நீங்களே எழுதுங்கள் நிறைய உங்களைபோன்ற எண்ணம் கொண்ட வாசகர்களும்  கிடைப்பார்கள் .   நானே படித்து முதல் Comment போடுகிறேன் முடிந்தால்.

                    இப்படி எல்லாம் எழுதி மலிவான விளம்பரம் தேடாதீர்கள் . பதிவுலகில் நீங்கள் பெரிய ஆள் , நான் புதியவன் என்னால் முடிந்த வரை தான் எழுதமுடியும் கல்லூரி படிப்பிற்கு நடுவே , உங்களை போல் அதிக Hits வரும் வலைபக்கத்தில் என்னால் விளம்பரம் கொடுத்து வலைபக்கத்தை பிரபலமாக்க முடியாது என்பதை மட்டும் ஒப்புக்கொள்கிறேன்

  உங்களிடம் சில கேள்வி:
  • நண்பனின் மனைவி  என்றால் உங்களுக்கு அவ்வளவு கேவலமா ?

  • நண்பனின் என்று போடாமல் உங்களின் பெயரை போட்டு தலைப்பு போட்டிருந்தால் நீங்கள் இப்படி பின்னூட்டம் இட்டிருக்கமட்டீர்கள் .
  •  
  • அதெப்படி நீங்கள் பட்டியல் இடும் Top 10 பட்டியலில்  உங்களின் வலைபூவையும் சேர்த்துக்கொள்ள முடிகிறது .  உஜாலா நடத்தும் போட்டியில் அதன் பணியாளர்கள் குடும்பத்தினர் கலந்துகொள்ள முடியாது ,அதனால் அவர்கள் திறமை இல்லாதவர்களா?
  •  
  • Hacking பதிவு  எனது வலைபக்கத்தில் இருந்ப்பதால் Hacking என்பது தொழில்நுட்பம் பிரிவில் இருந்து நீங்கிவிடுமா?
  •  
  • வேலைக்காரியை கேவலமாக உங்கள் வலைபக்கத்தில் விமர்சித்திருப்பது நீங்கள் பெண்களின் மீது எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.?
  •  
  • அவர்கள் உங்கள் வீட்டில்  சும்மா வேலை செய்யவில்லையே . நீங்கள் அடுத்த வீட்டை பற்றி தெரிந்து கொள்ளும்போது தானே அன்பாக பேசுகிறீர்கள்  ,  அவ்வாறு பிடிக்கவில்லை என்றால் ஏன் வைத்துக்கொள்கிறீர்கள் ?

  • அதுஎன்ன சுதந்திர இலவச மென்பொருள் .  சுதந்திரம் , இலவசம் இரண்டும் வெவ்வேறா ?  Click here to View

  • உங்களுக்கு யார் Top 10 பட்டியல் இடும் உரிமையை தந்தது ,நீங்கள் யார் அதை நிர்ணயிக்க எங்களுக்கு தெரியும் நாங்கள் யார் என்று ?
  •  
  • இதெல்லாம் Hits கிடைக்க வழி என்று எங்களுக்கு தெரியாதா? எங்களுக்கும் நடத்த தெரியாதா ?                   
  •  
  • நான் நீங்கள் போட்ட பின்னூட்டத்திற்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு போட்ட பின்னோட்டம் ஏன் இன்னும் நீங்கள் பிரசுரிக்கவில்லை . அப்புறம் எதுக்கு உங்களுக்கு Comment Box.?
  •  
  • நீங்கள் கேபிள் அண்ணா வலைத்தளத்தில் விளம்பரம் கொடுக்கா விட்டால்  Alexa Rank  உங்களுக்கு எவ்வளவு தற்ப்போது இருக்கும் என்று தெரியாதா.? List ல் இருக்கும் மற்றவர்கள் இப்படிதான் உங்களைபோல் விளம்பரம் கொடுக்கிறார்களா?  
  •  
  • தினமும் நாம் 500 Hits கொடுத்தால் அவர்களும் Hits சில தளங்கள் கொடுப்பார்கள் இப்படி Exchange Hits வாங்க மற்றவர்களால் முடியாதா.?    இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ...
      நண்பரே முதலில் வலைபூங்கா   இணையதளம் சென்று Top 10 நடுநிலையாக நடத்த கற்றுக்கொள்ளுங்கள் ,எனக்கு கிடைத்ததால்  இதனை சொல்லவில்லை . நானே மறந்துவிட்டேன் இப்படி ஒரு போட்டியை ,அவரே Comment ல்  வந்து விருது கிடைத்தது பற்றி தெரிவித்தார் .

            இப்படி தமிழில் தொழில்நுட்பம் வளர்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டு சக பதிவரை ஒடுக்கும் எண்ணம் கொண்ட உங்களால் இதனை வளர்க்க முடியாது என்பது நிச்சயம்.
          இப்படி கமெண்ட் போட என்ன காரணம் என்று எனக்கு தெரியும் ,புரியாதவர்கள்   எனது  மற்றும் அவரது கடந்த இரண்டு மாத பதிவுகளை பாருங்கள் புரியும். நான்  பிறரை மதிக்கும் உண்மையான தமிழன் என்னிடம் வேண்டாம் இந்த வேலை .


  தேடிச்சோறு தினந்தின்று – பல
  சினஞ்சிறு கதைகள் பேசி – மனம்
  வாடி துன்பம் மிக உழன்று
  பிறர் வாட பல செயல்கள் செய்து
  நரை கூடி கிழ பருவம் எய்தி- கொடுங்
  கூற்றுக்கிரையென பின் மாயும் – பல
  வேடிக்கை மனிதரை போலே
  நானும் வீழ்வேன் என நினைத்தாயோ!
                              - சுப்பிரமணிய  பாரதி 
  Read more...

  Subscribe