Monday, August 30, 2010

2

மறந்து போன மைக்கேல் ஜாக்சன் பிறந்தநாள் & நோபல் பரிசு

  • Monday, August 30, 2010
  • Share
  • நமது தமிழக நடிகர்களில், மறைந்த சிரிப்பு நடிகர் சந்திரபாபு, அன்றே மைக் கேல் ஜாக்சன் போன்று சிறப்பாக நடனமாடியவர். தற்போதுள்ள சூழ்நிலை அந்த காலத்தில் இல்லாததால், அவர் மைக்கேல் ஜாக்சனைப் போன்று, உலகம் முழுவதும் புகழ்பெற முடியவில்லை. இருந்த போதிலும், கடைசி காலத் தில், மைக்கேல் ஜாக் சனைப் போலவே, கடன் தொல்லை சந்திரபாபுவுக்கும் இருந்துள்ளது.

    மைக்கேல் ஜாக்சன் இறக்கும்போது, அவருக்கு 500 கோடி டாலர் கடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. எந்தளவுக்கு அவர் மன உளைச்சலுடன் இருந்திருப்பார் என நினைக்கும் போதே, அவர் ரசிகர்களுக்கு, தானாக கண்களில் கண்ணீர் வந்திருக்கும். அவரது இறப்பில், பல சந்தேகங்கள் எழுப்பப் பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. ஜாக்சன் இறக்கும் போது, வெறும் 50 கிலோ எடை மட்டுமே இருந்துள் ளதும், அவர் உடம்பில், ஊசி போடாத இடங்களே இல்லாத வகையில், ஊசியால் துளைக்கப்பட்டிருப்பதும், தனது உடலை அழகு செய்து கொள்ள, பலமுறை அறுவை சிகிச்சை செய்துள்ளதால், தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தன் உயிரிழப்புக்கு, தானே காரணமாகி உள்ளார்.

    எந்தவொரு நாட்டிய கலைஞனும், இந்த மண்ணில் பெறாத பெருமையை, மைக்கேல் ஜாக்சன் பெற்றிருந்தாலும், அவரின் சில தீய பழக்கத்தால், அவருக்கு அவப்பெயர் வந்தாலும், அவரின் நடனத்தை பார்த்து ரசித்தவர்கள், அவரை ஒரு அதிசய பிறவியாகத்தான் பார்த்து வந்தனர். ஆனால், ஜாக்சனின் திரைமறைவு வாழ்க்கையில் நடந்த அசம்பாவிதங்களே, இன்று அவரின் மரணத்துக்கு காரணமாக மாறிவிட்டது.ஜாக்சனின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு பாடமாக நிச்சயம் அமைய வேண்டும்.

    மைக்கேல் ஜாக்சன் 29 auguest பிறந்தநாள் ...அவர் மறைந்தாலும் அவரது நடனம் என்றும் மறையாது ..அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு கிடைக்க  பிரார்த்திப்போம் .
    twitter இல் ரசித்த வரிகள் :
    நம்மை விட்டு சென்ற மைக்கேல் ஜாக்சன் னால் சொர்கம் சிறப்புடன் இருக்கிறது ... 
    ஒரு வருடம் ஆகியும் அவரைப்போல ஒருவரும் இன்னும் வரவில்லை இனி வருவதும் ?

    2 Responses to “மறந்து போன மைக்கேல் ஜாக்சன் பிறந்தநாள் & நோபல் பரிசு”

    புதிய மனிதா.. said...
    August 30, 2010 at 3:36 PM

    thanks 4 ur comment...


    Mrs.Menagasathia said...
    August 30, 2010 at 7:35 PM

    // ஒரு வருடம் ஆகியும் அவரைப்போல ஒருவரும் இன்னும் வரவில்லை இனி வருவதும் ??//உண்மைதான்...நல்ல பதிவு!!


    Subscribe