Sunday, June 24, 2012
5
எனக்கு பிடித்த கவியரசு கண்ணதாசன் அவரது செப்பு மொழிகள்
தமிழுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனக்கு பிடித்த தமிழ் கவிஞர்கள் இருவர். முதலாமவர் பாரதி அடுத்து கவியரசு கண்ணதாசன் . பாரதியார் பாடல்கள் பள்ளியில் முதல் வகுப்பில் ஓடி விளையாடு பாப்பாவிலிருந்து அறிமுகம் ஆனால் கண்ணதாசன் ஆறாம் வகுப்பு அல்லது ஏழாம் வகுப்பிலோ இயேசு காவியம் படித்தாதாக நினைவு. பாடப்புத்தகம் தவிர வேறு புத்தகங்கள்வாங்கி படிக்கும் பழக்கம் இல்லை பதினொன்றாம் வகுப்பில் தமிழ் கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு வாங்கியதற்கு ஒரு புத்தகம் கொடுத்தார்கள் அதை படித்தபின் கண்ணதாசன் எழுத்துக்கள் ஒரு நல்ல நண்பன் என்று சொல்லலாம் அந்த புத்தகம் "கண்ணதாசனின் செப்பு மொழிகள் ". ஒவ்வொருமுறை வீட்டிற்கு செல்லும்போதும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் .
இந்த புத்தகத்தை படிக்காதவர்களுக்கு அப்படியென்ன புதிதாக சொல்லி இருக்கப்போகிறார் இதில் என நினைக்கலாம் கதையாகவோ , பாடல் வரிகளாகவோ இருக்கும் என எண்ணி நானும் திறந்தேன் .ஏனெனில் பேச்சுபோட்டி ஆங்கிலகட்டுரை என மேலும் சில போட்டியில் வென்றதற்கு பாரதிதாசனின் அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு என கொடுத்திருந்தனர் அவற்றை எல்லாம் அந்த வயதில் படிக்கும் பொறுமை கொஞ்சம் கூட இல்லை இருந்தாலும் பரிசாக வாங்கியது என திறந்து பார்த்து எல்லாமே பாடல் வரிகள் இதற்க்கு அர்த்தம் தெரிந்து புரிந்து கொள்ளவேண்டும் நமக்கு சாத்தியம் இல்லை என சலித்து இறுதியாக தான் திறந்தேன் இப்புத்தகத்தை கண்ணதாசன் என்ன எழுதியிருக்கப்போகிறார் ?
முதலில் விளக்கவுரை அப்போதெல்லாம் இதையெல்லாம் எதற்கு எழுதுகிறார்கள் அவர் எழுதிய புத்தகம் எப்படியும் நன்றாக தான் இருக்கும் இதனை யாருக்காவது சமர்ப்பிக்கிறேன் என சொல்லபோகிறார்கள் என எண்ணம்தான்தோன்றியது . சரி இதாவது உரை நடையில் இருக்கிறதே என படித்தேன். அதில் நான் ஏன் பொன் மொழிகள் என இப்புத்தகத்திற்கு பெயர் வைக்காமல் செப்பு மொழிகள் என வைத்தேன் பொன்னில் கலப்படம் உண்டு அதனை உறுதியாக்க உலோகங்களை கலப்பார்கள். ஆனால் செப்போ எவ்வித கலப்போ இல்லாமல் தூயது . இதில் என்னுடைய அனுபவங்களை பகிர்ந்துள்ளேன் என எழுதியிருந்தார் . என்ன எழுதி இருந்தாலும் சரி படித்தே தீரவேண்டும் எனும் ஆர்வம் வந்தது முதல் பக்கம் சென்று படிக்கத்தொடங்கும் பொது இன்னும் ஆச்சர்யம் பாடல் வரிகள் இல்லாமல் எளிமையாக எல்லோருக்கும் புரியும் வகையில் உரைநடையில் அதுவும் ஓரிரு வரிகளில் திருக்குறள் போல எழுதப்பட்டிருந்தது.
அரசியல் , சமுதாயம், நட்பு , சினிமா , பொருளாதாரம் , சொந்த வாழ்க்கை இல் நடந்த,இழப்பு ,குடிப்பழக்கம் , பெண்கள் என எதையும் மறைக்காமல் அவரது அனுபவ மொழிகளை மிக நகைச்சுவையாக நமக்கு உணர்த்தியிருப்பார் இருப்பார் . படிக்க படிக்க ஆச்சர்யமும் ஆர்வமும் கண்டிப்பாக தோன்றும் நினைத்தது போலவே அன்று முழுமையாக படித்து விட்டுதான் மூடிவைத்தேன் ..நடிகைகள் மீது அவருக்கு என்ன கோபமோ ? அதிகமாக அவர்களைப்பற்றி அவர்களைப்பற்றி எழுதியிருப்பார் .
சில வரிகள் உங்களுக்காக
காந்தியைப் போல் எல்லோரும் வாழ்ந்தால் எப்படி இருக்கும்? கடலை வியாபாரம் நன்றாக நடக்கும்.
நன்கொடை என்பது என்ன?வாங்குகிறவனை நன்றாக ஆக்குவது. கொடுப்பவனை None ஆக ஆக்குவது.
ஒரு பிரபல நடிகையின் தாய் பொதுத் தேர்தலில் ஓட்டுப் போட முடிவதில்லை ஏன்?
ஓட்டுப் போடும் வயது இன்னும் வரவில்லை.
கலியுகத்தில் கண்ணன் என்னென்ன நட்க்குமென்று சொன்னபோது மற்றுமொரு கருத்தையும் சொல்லியிருக்கிறான் அதுவென்ன மற்றுமொரு கருத்து?
நடிகையின் பாட்டி அந்த நடிகைக்கே மகளாக நடிப்பாள்.
பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலுள்ள பலரை விசாரித்ததில். எப்படி பைத்தியமானார்கள்?சினிமா நடிகைகளை மேக்கப்பில்லாமல் பார்த்ததினால்.
சிறந்த மேடைப்பேச்சு என்பது என்ன? பேசுபவருக்கே புரியாமல்பேசுவது .
இப்படி நகைச்சுவையாக அவரின் அனுபவங்களை நாம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளை சொல்லி இருப்பார் .
கல்லூரி முடித்து வேலைக்கு சென்றபின் எங்கள் அலுவலகத்தில் தினமும் ஏதாவது கருத்தை அலுவலக வாயிலில் உள்ள போர்டில் எழுதவேண்டும். பெரும்பாலும் தினசரி காலண்டரில் இருக்கும் கருத்துக்கள் எழுதுவார்கள். நான் எழுதியது பெரும்பாலும் கண்ணதாசனின் இப்புத்தக வரிகள்தான் , கருத்தை எழுதிவிட்டு கீழே கண்ணதாசன் என எழுதும்போது ஏதோ என் பெயரை எழுதுவது போலத் தோன்றும். உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது இதனை பார்த்து நல்லா இருக்கே யார் இங்க எழுதியது ?என இரண்டு மூன்று முறை கேட்டது உண்டு .
இப்போதும் எனக்கு வாரம் தோறும் சனிக்கிழமை தினத்தந்தி நாளிதளில் வரும் அர்த்தமுள்ள இந்து மதம் என கண்ணதாசன் இன்னும் பல வாழ்வியல் அர்த்தங்களை சொல்லிக் கொண்டுதானிருக்கிறார் என் கண்ணதாசன் .
அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய அதே கண்ணதாசன் இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் "ஏசுகாவியம் " இயற்றியவர் .
அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய அதே கண்ணதாசன் இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் "ஏசுகாவியம் " இயற்றியவர் .
தம்முடைய நல்ல பக்கங்களை மட்டுமே இவ்வுலகிற்கு காட்டும் மனிதர்கள் மத்தியில் அவரது அனைத்து குணங்களையும் இவ்வுலகிற்கு அனுபவமாக எடுத்து சொல்லிய கவியரசு உண்மையான வழிகாட்டி .
Subscribe to:
Post Comments (Atom)
5 Responses to “எனக்கு பிடித்த கவியரசு கண்ணதாசன் அவரது செப்பு மொழிகள்”
June 24, 2012 at 6:28 PM
காதிைய ேபா எேலா வாதா எபஇ? கடைல வயாபார நறாக நட. .// இவரைத் தவிர வேரு யாராலும் இவ்வாரு எழுத முடியாது..
June 24, 2012 at 8:17 PM
//Venkadesh Rathinam said...
காதிைய ேபா எேலா வாதா எபஇ? கடைல வயாபார நறாக நட. .// இவரைத் தவிர வேரு யாராலும் இவ்வாரு எழுத முடியாது..
சரியாக சொன்னீர்கள் Venkadesh Rathinam நன்றி He is Legend
June 25, 2012 at 8:24 AM
காலத்தை வென்ற மனிதர் ! அவருடைய பேச்சும் பாட்டும் சிந்திக்க வைக்கும். அவரைப் பற்றி எழுதிக் கொண்டே போகலாம்... பகிர்வுக்கு நன்றி நண்பரே !
September 5, 2012 at 7:57 PM
வணக்கம் நண்பரே...
இந்த வார என் விகடனில் கண்டேன் உங்கள் தளத்தை...
வாழ்த்துக்கள் ...
நான் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஒரு சின்ன கிராமம்
நன்றிங்க நண்பரே மீண்டும் சந்திப்போம்
April 1, 2013 at 12:30 PM
இதை படித்து முடித்தபின் எனக்கும் "செப்பு மொழிகள்" புத்தக்கத்தை படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது..
நன்றி நாண்பா..♥
Post a Comment