Sunday, June 17, 2012

1

நான் -விஷால்- நித்யானந்தா & பேப்பர் பாய்

  • Sunday, June 17, 2012
  • Share


  •   காலை 11 மணிக்கு சார் என்று சத்தம் சண்டே கூட தூங்க விடமாற்றானேன்னு நினைத்துக்கொண்டு  போய் கதவை திறந்தால் பேப்பர் போடும் பையன்.........


    பேப்பர் போடும் பையன் : சார் பேப்பர் பணம்,சார் இந்த மாசம் எல்லா நாளும் சரியா வந்திருக்குமே! சார் நான்தான் போட்டேன்.


    (பேப்பர் மாதத்தில் 2-3 நாட்கள் ஒழுங்காக வரவில்லை என்று இதற்க்கு முன் சொல்லி இருந்தேன்)
    இந்த மாசம் எதுவும் சொல்லமுடியாதே   என்பது போல பார்த்தான்..
    வழக்கம் போல் எவ்வளவு என்று கேட்டு பணத்தை எடுத்து வந்து கொடுக்கும் போது..

    (இந்த மாசம் எதுவும் சொல்லமுடியாதே     என்பது   போல பார்த்தான் )
    நான் : என்னப்பா இந்த மாசம் பேப்பர்ல நியூஸ் ஒன்னும் சரி இல்ல ஒரே போர் ன்னு 

    சொன்னவுடன்...,அந்த பையன்     கடுப்பாகி பார்த்தான்
    நான் :இந்தாப்பா பணம் என்று சொல்லி (ஜெய் எஸ்கேப்).



    ஆபீஸ் முடிந்து எக்மோர் ஸ்டேசனில் ட்ரெயினுக்காக வெயிட் செய்துகொண்டிருந்தபோது உடன் 
    பணிபுரியும் நண்பன் பிஸ்கட் வாங்கி வந்தான் அப்போது ட்ரெயின் வர ஏறிய பின் வந்து எடுத்துக்கோ என்று சொன்னான் . 
    நான் வேறு யோசனையில் இருந்ததால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அடுத்த நாள் ஆபீஸ் 
        வந்து நான் அவனிடம் லஞ்ச் போகலாம் வா என கூப்பிட்டேன் . , நான் பிஸ்கட் குடுத்தா 
    சாப்பிட மாட்ட இப்போ  மட்டும் எதுக்கு கூப்பிடற என்று கோவப்பட்டுக்கொண்டிருந்தான் , .
    .இல்ல மச்சி ட்ரெயின் ல பிஸ்கட் யார் குடுத்தாலும் சாப்பிட கூடாதுன்னு டிவி விளம்பரத்துல 
    போடுறத நீ பாக்கலியா என கேட்க்க  ,அவன் கடுப்பாக... #ஜெய் எஸ்கேப்


    ===============================================
    நித்யானந்தாவை கர்நாடக போலீஸ் கைது செய்ய போகும்போது நித்யானந்தாவின் பதிலைக்கேட்டு 


    கர்நாடக போலீஸ் பயந்து திரும்பி வந்து விடுகின்றனர் அவர் என்ன அப்படி சொல்லி இருப்பார்                      ?...
    ?
    ?
    ஏய் நானும் மதுரைக்காரன்(மதுரை ஆதீனம் ) தாண்டான்னு சொல்லிட்டாரு அதனால கர்நாடக 


    போலீஸ் பயந்து ஓடிட்டாங்க #விஷால் ராக்ஸ்




    லவ் பண்ணுரவனுக்கு போன் பண்ணி பிறந்த நாள் வாழ்த்து சொல்லுறத விட கஷ்டமான காரியம் உலகத்துல ஏதும் இல்ல ஒரே வெயிட்டிங் கால் 

    ===================================================================
    எவன் D உன்ன பெத்தான் பெத்தான் .. #தந்தையர் தின வாழ்த்துக்கள் #இப்படிக்கு இன்று ஒருநாள் மட்டும் சிம்புவின் விழுது

    1 Responses to “நான் -விஷால்- நித்யானந்தா & பேப்பர் பாய்”

    aalunga said...
    June 17, 2012 at 1:49 PM

    ஹா.. ஹா.. அருமை!


    Subscribe