Tuesday, June 14, 2011

3

இந்திய கிரிக்கெட் அணி அன்றும் இன்றும் அழகிய கிராமத்து நினைவுகள்

  • Tuesday, June 14, 2011
  • Share
  • இந்திய கிரிக்கெட் அணி அன்றும் இன்றும் .....

    எனக்கு பிடித்த கிரிக்கெட் பற்றி நிறைய எழுத ஆசை .  அவ்வப்போது இனி எழுதுகிறேன் . கிரிக்கெட் டை தோனிக்கு  முன் டோனி வந்த பிறகு என அன்றும் இன்றும் என பிரிக்கலாம் .

    அன்று:
     அன்று என்றால் கபில் தேவ் ,கவாஸ்கர் விளையாடியது அவர்கள் உலக கோப்பை வாங்கியது பற்றியெல்லாம் ராஜ் டிவி இல் ஸ்ரீகாந்த் வாரம்தோறும் ஞாயிறு  காலை 8:30 மணிக்கு winnig movements of indian cricket என்று வழங்குவார் அப்போது பார்த்தது . 1998 முதல் ஆர்வமாக பார்க்க தொடங்கியதாக நினைவு .

          தேசிய   கொடிக்கு மூவர்ணம் போல இந்திய கிரிக்கெட் அணிக்கு   சச்சின் ,கங்குலி ,டிராவிட்.இவர்களை அடுத்து சில நேரங்களில் ஜடேஜா அவ்வப்போது அசார் என அடித்து பாதி ஆட்டத்தில் வெற்றி பாதி ஆட்டத்தில் தோல்வி என போய்க்கொண்டிருக்கும் பெரும்பாலும் மேலே சொன்ன மூவர் நன்கு அடித்தால் நிச்சயம் வெற்றி ஆஸ்திரேலியா அணியுடன் மட்டும் விளையாடும் போது இன்னும் விறுவிறுப்பு . bowling இல் கும்ப்ளே , ஸ்ரீநாத் , பிரசாத் என்று ஓரளவிற்கு பந்து வீச்சு இருக்கும் .

          எது எப்படி என்றாலும் பார்க்கும் போது விறு விறுப்புக்கு பஞ்சம் இருக்காது  . போட்டிகள் அனைத்தும் தூர்தர்சனில் பெரும்பாலும் கரண்ட் போனால்தான் பார்க்க முடியாது .இப்போது போல் கரண்ட் நிற்காது எனவே கண்டிப்பாக அனைத்து போட்டியையும் பார்க்கலாம் .போட்டி தொடங்கினால் அன்று நண்பர்களுடன் டிவி இருப்பவர்கள் வீட்டில் 
    ஒன்றாக பார்க்க வந்து விடுவோம் .பெரிய துணியை கட்டி சூரிய ஒழி பிரதிபலிக்காத அளவுக்கு கட்டிவிடுவோம் ..இன்று வரை கிரிக்கெட் மட்டும் தனியாக பார்த்தல் அவ்வளவு சுவாரஸ்யமாக இருப்பதில்லை என்ன காரணமோ .?

    சச்சின் ,கங்குலி பெரும்பாலும் அதிரடி துவக்கம் தான் , இப்போது கூட இவர்களுக்கு இணையாக ரசிக்க எந்த அணியிலும் இல்லை ..அடுத்து வரும் டிராவிட் மெதுவாக தொடங்கி பிறகு strike rate 80 க்கு வந்து விடுவார் ..
    சச்சின் அவுட் என்றால் ஏறக்குறைய தோல்வி உறுதி அப்போதெல்லாம் ..
    சச்சின் சச்சின் சச்சின் மட்டும் தான் ..அப்போது கூட கங்குலி , டிராவிட் தங்களுக்கென பெரும்பாலான  ரசிகர்களை கொண்டிருந்தது ஆச்சர்யம் தான் ..

          பெரும்பாலானோருக்கு மூவரையும் பிடிக்கும் ஏறக்குறைய பத்து ஆண்டுகள் இவர்களின் ராஜ்ஜியம் தான் . எத்தனையோ பேர் வந்து போய்கொண்டிருந்தாலும் .மூவரும் சளைக்காமல் தங்கள் அதிரடியை ஆளுக்கொரு போட்டியில் காட்டிவிடுவார்கள். யாரவது இருவர் ஒரே நேரத்தில் அதிரடி காட்டினால் அது ஆஸ்திரேலியா அணியாக இருந்தாலும் அன்று அவர்களுக்கு தோல்விதான் ..

    சச்சின்-டிராவிட், டிராவிட் - கங்குலி, சச்சின்-கங்குலி கூட்டணியில் பல சதங்களும் அரை சதங்களும் மற்றும் இணைத்து அதிக ரன்கள் என இன்றுவரை யாரும் நெருங்கவில்லை ..

    பெரும்பாலும் இறுதி போட்டி, உலக கோப்பை என தோல்வியை கொடுத்தாலும் ரசிகர்கள் ஆர்வம் குறைய வில்லை .  இன்று உள்ள டோனி அல்லது கில்கிறிஸ்ட்  போல அதிரடி கீப்பர் கிடைக்காதது பெரிய குறை .அப்போது புதிதாக வருபவர்கள் மிக குறைவு பெரும்பாலும் அதே அணிதான் .உலக கோப்பைக்கு விளையாட செல்லும் போது  இதற்கென பாடல்கள் தயார் செய்து டிவி இல் அடிக்கடி போடுவார்கள் .

    brittania world cup:
             1999 இங்கிலாந்தில் உலக கோப்பை போட்டி பிரிட்டானியா நிறுவனத்தினர் தங்களது பிஸ்கட் கவர்களில் ரன்கள் போட்டு நூறு ரன்கள் சேர்த்து கொடுத்தால் ஒரு சிறிய பாக்கெட் நோட் அளவிற்கு புத்தகம் அதில்  சுரண்டல் லட்டோரி போல ஒரு கார்டு இணைத்திருப்பார்கள் அதில் முதல் பரிசு விழுந்தால் இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிக்கு அழைத்து செல்வதாக விளம்பரம் போடுவார்கள் .. பெரும்பாலும் அதில் ஒன்றும் விழாது அவ்வப்போது எதாவது brittania பிஸ்கட் விழும் அவ்வளவுதான் .அப்போதெல்லாம்  favourite பிஸ்கட் brittaania தான் .பக்கத்துக்குவீட்ல இருக்கிற பசங்களிடம் சாப்பிட  சொல்லி அவங்க வீட்ட்ல cover எடுத்து  வைக்க  சொல்லி முழுமையாக brittania salesman போல மாறிபோயிருந்தேன் . பெரிய குரூப் சேர்த்து அந்த 45 நாட்களுக்குள்ள இதுதான் பெரிய வேலை .என்கிட்ட இவ்வளவு ஸ்கோர் இருக்கு ன்னு சொல்றதுதான் பெரிய விஷயம் .
    (மேலே உள்ள படத்தில் இங்கிலாந்து செல்ல விளம்பரம் )

    ஆனால் அந்த புத்தகத்தில் போட்டி நடைபெறும் இடம் , இதற்க்கு முன் நடந்த உலக கோப்பை முக்கிய தகவல்கள் ,வீரர்களின் ரன் கள் விக்கெட் விவரங்கள் என இருக்கும்.நானும் எனது தம்பி  வினோத்தும் கிட்ட தட்ட 20 ,25 புத்தகங்கள் வாங்கி இருந்தோம் அதில் சில பிஸ்கட் அவ்வப்போது பரிசாக கிடைக்கும் ....

    .கடைசிவரைக்கும் இங்கிலாந்து வேண்டா.. பக்கத்துக்கு வீட்ல பார்த்துக்கொண்டிருக்கும் கருப்பு  வெள்ளை டிவி க்கு பதிலா ஒரு கலர் டிவி கிடைக்கும் என்று பார்த்தா இப்படி பிஸ்கட் மட்டும் கொடுத்துட்டாங்க ..அதுக்கப்புறம் நடந்த வேர்ல்ட் கப் ளையும் இதையே விளம்பரப்படுத்தினாங்க அப்போது கொஞ்சம் பெரிய பையனா வளர்துட்டதால பெருசா ஆர்வம் இல்ல ஏதோ 4,5 புக் வாங்கினதா ஞாபகம் அதுவும் அந்த புக் புடிச்சி இருந்ததால . ஏன் தம்பி வினோத் ஆர்வமா ரன் சேர்ப்பான்னு பார்த்தா அவனும் கண்டுக்கல அவனும் வளந்துடானோ ?

    ஆனா அந்த வருஷம் எங்க பக்கத்து வீட்டு பையன் நிறைய  வாங்கி அவனுக்கும் பிஸ்கட் தான்  கிடைத்தது  ...சரி மறுபடியும் கிரிக்கெட் டுக்கு வருவோம் . 

           2000 வரைக்கும் பெருசா டீம் ல அதே ஆளுங்கதான் புதுசா யாராச்சும் வந்த௫ஹாலும் கொஞ்ச நாள்ல முகத்துல கிரீம் ல பூசி மோசமா ஆடி காண போடுவாங்க அபை குருவில்லா , சோதி, நிகில் சோப்ர ,சபா கரீம்,நம்ம ஊர் பதானி இப்டி பல பேர் பதானி , தினேஷ் மோங்கியா அப்பப்ப வந்து போவாங்க ....

       நயன் மோங்கியா இவர்தான் பெரும்பாலான போட்டிகளில் விக்கெட் கீப்பர் இவர் batting ஹர்பஜன் கூட நன்றாக விளையாடுவார் என சொல்லலாம் எப்போதாவது அரை சதம் அடிப்பார் ..அசார் ஜடேஜா style players இவர்களின் அனைத்து shot களும் பார்க்க அருமையாக இருக்கும் ...இன்னும் கொஞ்சம் நன்றாக ஆடி இருக்கலாம் என்று இப்போதும் கூட தோன்றும் ..இவர்களின் பில்டிங் அருமை யாக இருக்கும் ...

    சேவாக் ,யுவராஜ்,கைப்:
    2000 ல இருந்து  சேவாக் வந்த புதுசுல அதிரடிய ஆடி 50 மேல அடிச்சார் உடனே காயத்துல வீட்டுக்கு போயிடு அப்புறம் கொஞ்சநாள் கழிச்சி டீம் ல செட் ஆகிட்டார். யுவராஜ் , கைப் ன்னு இன்னும் ரெண்டு பேர் கைப் கைல எச்சி துப்பி என்னென்னமோ பண்ணுவாரு இவங்க ரெண்டு பெரும் பீல்டிங் நல்லா பண்ணிட்டு முக்கியமான மேட்ச் ல வின் பண்ணி குடுத்தாங்க .. அசார் ,ஜடேஜா இடாத புடிசிகிடாங்க இவங்க ரெண்டு பேறும்..ஜடேஜா இடாத யுவராஜ் சிங்கும் அசர் இடத்தை கைப் புடிச்சாலும் அசார் அளவுக்கு கைப்  புடிக்கல ...

        அஜாருக்கு பிறகு சச்சின் கேப்டன் ஆனால் பல போட்டிகளில் தோல்வி தல batting சரியாய் பண்ண முடியல.எனவே கங்குலி அடுத்து கேப்டன் ஆனார் .. மீண்டும் வெற்றி கிடைக்க தொடங்கினாலும் உலக கோப்பை கனவு நனவாக வில்லை அடுத்து டிராவிட் கேப்டன் இவராலும் பெரிதாக சாதிக்க முடிய வில்லை ...
      
    இப்போது இன்னும் கொஞ்சம் இந்திய அணியின் வெற்றி அளவு அதிகமானது பந்து வீச்சில் பெரிய அளவிற்கு புதிய வீரர்கள் சாதிக்க வில்லை அகார்கர் ஆரம்பம் நன்றாக இருந்தது விரைவாக 50 wicket எடுத்தார் அதற்கப்புறம் பெரிதாக சாதிக்கவில்லை அடுத்து nehra வந்தார் அவரும் அகார்கர் போல தான் ...
    இப்படியே 1996,1999,2003 ,ஏன் 2007 வரை இந்தியாவின்  உலக கோப்பை கனவு வந்து வந்து போய்க்கொண்டிருந்தது ...
       
    live stream india vs west indies ....good quality video
    2004 இறுதி அப்போதுதான் இந்தியாவிற்கு சரியான விக்கெட் keeper batsman கிடைத்தார் அவரது தோற்றத்தை அப்போது பார்த்தல் எல்லோரும் கேலி செய்வார்கள் அப்போது யாருக்கும் தெரியாது அவர்தான் வருங்கால இந்திய அணியின் கேப்டன் என்று பல உலக கோப்பைகளை வெல்ல  வந்தவர் என்று ..அவர் தான் நம்ம தல டோனி ...
    அடுத்த பதிவில் இந்திய கிரிக்கெட் அணி இன்று பற்றி காணலாம் ....

    3 Responses to “இந்திய கிரிக்கெட் அணி அன்றும் இன்றும் அழகிய கிராமத்து நினைவுகள்”

    K.s.s.Rajh said...
    June 14, 2011 at 8:16 AM

    சச்சின்-டிராவிட், டிராவிட் - கங்குலி, சச்சின்-கங்குலி கூட்டணியில் பல சதங்களும் அரை சதங்களும் மற்றும் இணைத்து அதிக ரன்கள் என இன்றுவரை யாரும் நெருங்கவில்லை// ..

    மிகவும் அருமையான பதிவு./கங்குலி என்றுமே இந்திய கிரிக்கெட்டில் மறக்கப்படமுடியாதவர்.இந்திய அணியின் வளர்ச்சியில் கங்குலியின் பங்கு மிகப்பெரியது.பலதிறமையான வீரர்களை சரியான தருனத்தில் இனம் கண்டவர் கங்குலி.சேவாக்கை ஆரம்பத்துடுப்பாட்டவீரராக்கியவரும் கங்குலிதான்.கங்குலியின் தலைமையில் இந்திய அணியில் சேவாக்.யுவராஜ்சிங்,டோனி,ஹர்பஜன்சிங் போன்ற பல திறமையான வீரர்கள் உருவாகினார்கள்.இப்போதய இந்திய அணியின் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவர் கங்குலி என்றால் மிகையாகாது.


    ஸ்ரீ.கிருஷ்ணா said...
    June 14, 2011 at 9:40 PM

    Kss.Rajh @ ;கருத்துக்கு நன்றி நண்பா...


    Akash said...
    June 15, 2011 at 12:17 AM

    தொடர்ந்து எழுதுங்கள் அடுத்த பகுதியையும் ஆவலுடன் எதிர்பார்கிறேன்


    Subscribe