Showing posts with label sachin. Show all posts
Showing posts with label sachin. Show all posts

Tuesday, June 14, 2011

3

இந்திய கிரிக்கெட் அணி அன்றும் இன்றும் அழகிய கிராமத்து நினைவுகள்

  • Tuesday, June 14, 2011
  • இந்திய கிரிக்கெட் அணி அன்றும் இன்றும் .....

    எனக்கு பிடித்த கிரிக்கெட் பற்றி நிறைய எழுத ஆசை .  அவ்வப்போது இனி எழுதுகிறேன் . கிரிக்கெட் டை தோனிக்கு  முன் டோனி வந்த பிறகு என அன்றும் இன்றும் என பிரிக்கலாம் .

    அன்று:
     அன்று என்றால் கபில் தேவ் ,கவாஸ்கர் விளையாடியது அவர்கள் உலக கோப்பை வாங்கியது பற்றியெல்லாம் ராஜ் டிவி இல் ஸ்ரீகாந்த் வாரம்தோறும் ஞாயிறு  காலை 8:30 மணிக்கு winnig movements of indian cricket என்று வழங்குவார் அப்போது பார்த்தது . 1998 முதல் ஆர்வமாக பார்க்க தொடங்கியதாக நினைவு .

          தேசிய   கொடிக்கு மூவர்ணம் போல இந்திய கிரிக்கெட் அணிக்கு   சச்சின் ,கங்குலி ,டிராவிட்.இவர்களை அடுத்து சில நேரங்களில் ஜடேஜா அவ்வப்போது அசார் என அடித்து பாதி ஆட்டத்தில் வெற்றி பாதி ஆட்டத்தில் தோல்வி என போய்க்கொண்டிருக்கும் பெரும்பாலும் மேலே சொன்ன மூவர் நன்கு அடித்தால் நிச்சயம் வெற்றி ஆஸ்திரேலியா அணியுடன் மட்டும் விளையாடும் போது இன்னும் விறுவிறுப்பு . bowling இல் கும்ப்ளே , ஸ்ரீநாத் , பிரசாத் என்று ஓரளவிற்கு பந்து வீச்சு இருக்கும் .

          எது எப்படி என்றாலும் பார்க்கும் போது விறு விறுப்புக்கு பஞ்சம் இருக்காது  . போட்டிகள் அனைத்தும் தூர்தர்சனில் பெரும்பாலும் கரண்ட் போனால்தான் பார்க்க முடியாது .இப்போது போல் கரண்ட் நிற்காது எனவே கண்டிப்பாக அனைத்து போட்டியையும் பார்க்கலாம் .போட்டி தொடங்கினால் அன்று நண்பர்களுடன் டிவி இருப்பவர்கள் வீட்டில் 
    ஒன்றாக பார்க்க வந்து விடுவோம் .பெரிய துணியை கட்டி சூரிய ஒழி பிரதிபலிக்காத அளவுக்கு கட்டிவிடுவோம் ..இன்று வரை கிரிக்கெட் மட்டும் தனியாக பார்த்தல் அவ்வளவு சுவாரஸ்யமாக இருப்பதில்லை என்ன காரணமோ .?

    சச்சின் ,கங்குலி பெரும்பாலும் அதிரடி துவக்கம் தான் , இப்போது கூட இவர்களுக்கு இணையாக ரசிக்க எந்த அணியிலும் இல்லை ..அடுத்து வரும் டிராவிட் மெதுவாக தொடங்கி பிறகு strike rate 80 க்கு வந்து விடுவார் ..
    சச்சின் அவுட் என்றால் ஏறக்குறைய தோல்வி உறுதி அப்போதெல்லாம் ..
    சச்சின் சச்சின் சச்சின் மட்டும் தான் ..அப்போது கூட கங்குலி , டிராவிட் தங்களுக்கென பெரும்பாலான  ரசிகர்களை கொண்டிருந்தது ஆச்சர்யம் தான் ..

          பெரும்பாலானோருக்கு மூவரையும் பிடிக்கும் ஏறக்குறைய பத்து ஆண்டுகள் இவர்களின் ராஜ்ஜியம் தான் . எத்தனையோ பேர் வந்து போய்கொண்டிருந்தாலும் .மூவரும் சளைக்காமல் தங்கள் அதிரடியை ஆளுக்கொரு போட்டியில் காட்டிவிடுவார்கள். யாரவது இருவர் ஒரே நேரத்தில் அதிரடி காட்டினால் அது ஆஸ்திரேலியா அணியாக இருந்தாலும் அன்று அவர்களுக்கு தோல்விதான் ..

    சச்சின்-டிராவிட், டிராவிட் - கங்குலி, சச்சின்-கங்குலி கூட்டணியில் பல சதங்களும் அரை சதங்களும் மற்றும் இணைத்து அதிக ரன்கள் என இன்றுவரை யாரும் நெருங்கவில்லை ..

    பெரும்பாலும் இறுதி போட்டி, உலக கோப்பை என தோல்வியை கொடுத்தாலும் ரசிகர்கள் ஆர்வம் குறைய வில்லை .  இன்று உள்ள டோனி அல்லது கில்கிறிஸ்ட்  போல அதிரடி கீப்பர் கிடைக்காதது பெரிய குறை .அப்போது புதிதாக வருபவர்கள் மிக குறைவு பெரும்பாலும் அதே அணிதான் .உலக கோப்பைக்கு விளையாட செல்லும் போது  இதற்கென பாடல்கள் தயார் செய்து டிவி இல் அடிக்கடி போடுவார்கள் .

    brittania world cup:
             1999 இங்கிலாந்தில் உலக கோப்பை போட்டி பிரிட்டானியா நிறுவனத்தினர் தங்களது பிஸ்கட் கவர்களில் ரன்கள் போட்டு நூறு ரன்கள் சேர்த்து கொடுத்தால் ஒரு சிறிய பாக்கெட் நோட் அளவிற்கு புத்தகம் அதில்  சுரண்டல் லட்டோரி போல ஒரு கார்டு இணைத்திருப்பார்கள் அதில் முதல் பரிசு விழுந்தால் இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிக்கு அழைத்து செல்வதாக விளம்பரம் போடுவார்கள் .. பெரும்பாலும் அதில் ஒன்றும் விழாது அவ்வப்போது எதாவது brittania பிஸ்கட் விழும் அவ்வளவுதான் .அப்போதெல்லாம்  favourite பிஸ்கட் brittaania தான் .பக்கத்துக்குவீட்ல இருக்கிற பசங்களிடம் சாப்பிட  சொல்லி அவங்க வீட்ட்ல cover எடுத்து  வைக்க  சொல்லி முழுமையாக brittania salesman போல மாறிபோயிருந்தேன் . பெரிய குரூப் சேர்த்து அந்த 45 நாட்களுக்குள்ள இதுதான் பெரிய வேலை .என்கிட்ட இவ்வளவு ஸ்கோர் இருக்கு ன்னு சொல்றதுதான் பெரிய விஷயம் .
    (மேலே உள்ள படத்தில் இங்கிலாந்து செல்ல விளம்பரம் )

    ஆனால் அந்த புத்தகத்தில் போட்டி நடைபெறும் இடம் , இதற்க்கு முன் நடந்த உலக கோப்பை முக்கிய தகவல்கள் ,வீரர்களின் ரன் கள் விக்கெட் விவரங்கள் என இருக்கும்.நானும் எனது தம்பி  வினோத்தும் கிட்ட தட்ட 20 ,25 புத்தகங்கள் வாங்கி இருந்தோம் அதில் சில பிஸ்கட் அவ்வப்போது பரிசாக கிடைக்கும் ....

    .கடைசிவரைக்கும் இங்கிலாந்து வேண்டா.. பக்கத்துக்கு வீட்ல பார்த்துக்கொண்டிருக்கும் கருப்பு  வெள்ளை டிவி க்கு பதிலா ஒரு கலர் டிவி கிடைக்கும் என்று பார்த்தா இப்படி பிஸ்கட் மட்டும் கொடுத்துட்டாங்க ..அதுக்கப்புறம் நடந்த வேர்ல்ட் கப் ளையும் இதையே விளம்பரப்படுத்தினாங்க அப்போது கொஞ்சம் பெரிய பையனா வளர்துட்டதால பெருசா ஆர்வம் இல்ல ஏதோ 4,5 புக் வாங்கினதா ஞாபகம் அதுவும் அந்த புக் புடிச்சி இருந்ததால . ஏன் தம்பி வினோத் ஆர்வமா ரன் சேர்ப்பான்னு பார்த்தா அவனும் கண்டுக்கல அவனும் வளந்துடானோ ?

    ஆனா அந்த வருஷம் எங்க பக்கத்து வீட்டு பையன் நிறைய  வாங்கி அவனுக்கும் பிஸ்கட் தான்  கிடைத்தது  ...சரி மறுபடியும் கிரிக்கெட் டுக்கு வருவோம் . 

           2000 வரைக்கும் பெருசா டீம் ல அதே ஆளுங்கதான் புதுசா யாராச்சும் வந்த௫ஹாலும் கொஞ்ச நாள்ல முகத்துல கிரீம் ல பூசி மோசமா ஆடி காண போடுவாங்க அபை குருவில்லா , சோதி, நிகில் சோப்ர ,சபா கரீம்,நம்ம ஊர் பதானி இப்டி பல பேர் பதானி , தினேஷ் மோங்கியா அப்பப்ப வந்து போவாங்க ....

       நயன் மோங்கியா இவர்தான் பெரும்பாலான போட்டிகளில் விக்கெட் கீப்பர் இவர் batting ஹர்பஜன் கூட நன்றாக விளையாடுவார் என சொல்லலாம் எப்போதாவது அரை சதம் அடிப்பார் ..அசார் ஜடேஜா style players இவர்களின் அனைத்து shot களும் பார்க்க அருமையாக இருக்கும் ...இன்னும் கொஞ்சம் நன்றாக ஆடி இருக்கலாம் என்று இப்போதும் கூட தோன்றும் ..இவர்களின் பில்டிங் அருமை யாக இருக்கும் ...

    சேவாக் ,யுவராஜ்,கைப்:
    2000 ல இருந்து  சேவாக் வந்த புதுசுல அதிரடிய ஆடி 50 மேல அடிச்சார் உடனே காயத்துல வீட்டுக்கு போயிடு அப்புறம் கொஞ்சநாள் கழிச்சி டீம் ல செட் ஆகிட்டார். யுவராஜ் , கைப் ன்னு இன்னும் ரெண்டு பேர் கைப் கைல எச்சி துப்பி என்னென்னமோ பண்ணுவாரு இவங்க ரெண்டு பெரும் பீல்டிங் நல்லா பண்ணிட்டு முக்கியமான மேட்ச் ல வின் பண்ணி குடுத்தாங்க .. அசார் ,ஜடேஜா இடாத புடிசிகிடாங்க இவங்க ரெண்டு பேறும்..ஜடேஜா இடாத யுவராஜ் சிங்கும் அசர் இடத்தை கைப் புடிச்சாலும் அசார் அளவுக்கு கைப்  புடிக்கல ...

        அஜாருக்கு பிறகு சச்சின் கேப்டன் ஆனால் பல போட்டிகளில் தோல்வி தல batting சரியாய் பண்ண முடியல.எனவே கங்குலி அடுத்து கேப்டன் ஆனார் .. மீண்டும் வெற்றி கிடைக்க தொடங்கினாலும் உலக கோப்பை கனவு நனவாக வில்லை அடுத்து டிராவிட் கேப்டன் இவராலும் பெரிதாக சாதிக்க முடிய வில்லை ...
      
    இப்போது இன்னும் கொஞ்சம் இந்திய அணியின் வெற்றி அளவு அதிகமானது பந்து வீச்சில் பெரிய அளவிற்கு புதிய வீரர்கள் சாதிக்க வில்லை அகார்கர் ஆரம்பம் நன்றாக இருந்தது விரைவாக 50 wicket எடுத்தார் அதற்கப்புறம் பெரிதாக சாதிக்கவில்லை அடுத்து nehra வந்தார் அவரும் அகார்கர் போல தான் ...
    இப்படியே 1996,1999,2003 ,ஏன் 2007 வரை இந்தியாவின்  உலக கோப்பை கனவு வந்து வந்து போய்க்கொண்டிருந்தது ...
       
    live stream india vs west indies ....good quality video
    2004 இறுதி அப்போதுதான் இந்தியாவிற்கு சரியான விக்கெட் keeper batsman கிடைத்தார் அவரது தோற்றத்தை அப்போது பார்த்தல் எல்லோரும் கேலி செய்வார்கள் அப்போது யாருக்கும் தெரியாது அவர்தான் வருங்கால இந்திய அணியின் கேப்டன் என்று பல உலக கோப்பைகளை வெல்ல  வந்தவர் என்று ..அவர் தான் நம்ம தல டோனி ...
    அடுத்த பதிவில் இந்திய கிரிக்கெட் அணி இன்று பற்றி காணலாம் ....
    Read more...

    Saturday, February 27, 2010

    1

    சாதனை மனிதன் சச்சின் கடந்துவந்த சோதனைகள்

  • Saturday, February 27, 2010

  • சச்சினை பொதுவாக நமக்கு சாதனை வீரராக மட்டுமே தெரியும் ஆனால் அவர் இந்த நிலையை அடைய கடந்துவந்த சோதனைகள் பல அவற்றை பற்றி பார்ப்போம் .

    சச்சினின் டெஸ்ட் சதங்கள்
     சச்சின் எடுத்த   47 சதங்களில் 10 முறை மட்டுமே இந்தியா தோல்வியடைந்துள்ளது. 18 முறை சமநிலையும் 19 முறை வெற்றி.
    சச்சின் கடந்துவந்த சோதனைகள்  :
    •  முதல் டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி அவருக்கு ஏமாற்றம் அளிக்ககூடியதாகவே இருந்தது . முதல் இன்னிங்க்சில் 15 ரன்கள் அப்போது வக்கார் வீசிய  பந்து சச்சினின் தாடையைப் பதம் பார்த்தது; இரத்தக் கறைபடிந்த சட்டையுடன்  தொடர்ந்து ஆடிகிரிக்கெட் மீது தனக்கிருந்த ஆர்வத்தை அப்போதே  நிரூபித்தார் .

    • முதல் ஒரு நாள் போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார் .

    • சென்னை,M.A.சிதம்பரம் மைதானத்தில்    ஜனவரி 31, 1999, பாகிஸ்தானிற்கு எதிரான முதல் சதம்,136 ரன்கள் ஆனால் இந்தியா தோல்வி அடைந்தது.

    • முதுகுவலியுடன் சச்சின் எடுத்த  சதம் . சென்னை ரசிகர்கள் இந்தியாவின் தோல்விக்குப் பின்னரும் பாகிஸ்தான் அணிக்கு எழுந்து நின்று கைதட்டினர்.

    • மார்ச் 29, 2004, முல்தான், பாகிஸ்தானிற்கு எதிராக 194* ரன்கள் இருந்தபோது  கேப்டன் ராகுல் டிராவிட் டிக்ளர் செய்துகொள்வதாக அறிவித்தார்  இதனால்  சச்சின்  இரட்டை சதம் எடுக்காமல் போனது. ஏன் அப்படி டிராவிட் செய்தார் என்று இதுவரை தெரியவில்லை.

    • இந்தியா அணிக்கு கேப்டனாக இருந்தபோது  இந்தியா தொடர்ந்து தோல்விகளையே தழுவியது . சிறந்த கேப்டனாக இருக்கமுடியாமல் போனது எல்லோருக்கும் இன்றுவரை வருத்தம்தான்.

    • 2001 ல்  நடுவர் மைக் டென்னஸ் போர்ட் எலிசபெத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக  சச்சினுக்கு  ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட தடை விதித்தார்.ஆனால் தொலைக்காட்சியில் சச்சின் பந்தை துடைப்பதாக மட்டுமே தெரியவந்தது.ICC தலையிட்டு தடையை நீக்கியது.இந்தியாமுழுவதிலும் இருந்து நடுவருக்கு எதிராக கண்டனம் வந்தது.
    •  
    • 23 முறை சச்சின் 90-99 இடையே ஆட்டம் இழந்து  சதங்களை  தவறவிட்டிருக்கிறார்.

    • 1999 உலகக் கோப்பைப் நடுவே தந்தை இறந்ததால் இறுதி மரியாதை செய்ய  ஜிம்பாப்வே க்கு எதிரான   போட்டியில் கலந்துகொள்ளாமல்  இந்தியா சென்றார் ,அவரது தாயார் சொன்னதற்கிணங்கி   அடுத்த போட்டியான  கென்யாவிற்கு எதிரான ஆட்டத்தில்  141* எடுத்தார் இதனை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாகக்  கண்ணீர் மல்ககூறி அனைவரையும் கண்கலங்கவைத்தார் ...
    • சில  வாரங்களுக்குமுன் மும்பை இதியர்கள் அனைவருக்கும் சொந்தம் என்று சொல்லி சிவாசேனா  தாக்ரேவால் கடுமையாக விமர்சிக்கபட்டார் இதனால் இந்தியாமுழுவதும் சிவ சேனாவிற்கு   எதிராக கண்டனம் தெரிவிக்க பிரச்சினை ஓய்ந்தது.
    ஒருநாள் போட்டிகளில் அணி தோல்வி  அடைந்தாலும் ஆட்ட நாயகன் விருதை அதிகமுறை பெற்ற சாதனை & சோதனை அடைந்த ஒரே வீரர் நாம் சச்சின் தான்........

    April 24, 1973 பிறந்த அவரின் பிறந்த நாளை உலக கிரிக்கெட் தினமாக கொண்டாடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்...
    இதையும் படிங்க ..

    சச்சின் சதம் அடித்தால் இந்திய அணி தோற்றுவிடுமா?


      Read more...

      Thursday, February 25, 2010

      0

      sachin's unbeatable 200* Highlight video , photos

    • Thursday, February 25, 2010
    • sachin's unbeatable 200* Highlight video


      Click the button which part you want to see..






      . -


      Uploaded by . -


      Uploaded by . -
      Read more...

      Friday, November 6, 2009

      2

      சச்சின் சதம் அடித்தால் இந்திய அணி தோற்றுவிடுமா?

    • Friday, November 6, 2009

    • நீண்ட நாட்களுக்கு பின் ஒரு விறுவிறுப்பான மேட்ச் ,  ஒவ்வொரு பந்துகள் வீசும் போதும் என்ன நடக்கும் என்று எல்லோருக்கும் ஒரு திரில் அனுபவம் அதுவும் இந்திய பேட்டிங் போது இன்னும் அதிகம் பாண்டிங் அன் கோ வின் 350 ரன்கள்  இந்திய அவ்வளவுதான் என்று தெளிவாக சொல்லியிருந்தன .

                    போட்டிக்கு முன் பாண்டிங் கிட்டத்தட்ட புதியவீரர்கள் இருப்பாதால் தோற்றுவிடுவோம் என்று சொல்லி இருந்தார் ,  தோணி வேறு இந்திய பேட் ஸ் மேன் களுக்கு ஒழுங்காக விளையாடுவதில்லை என்று மிரட்டல் விடுத்திருந்தார் . பலரும் சச்சின் மேல் வெறுப்புடன் சரி என்னதான் நடக்கிறது என்று பர்ர்க்கதொடங்கினால் வழக்கம் போல் சேவாக் அதிரடியை துவக்கி வழக்கம்போல்   30 + வந்ததும் நடையைகட்டினார் .கம்பீர் , யுவராஜ் ,தோணி வந்தவுடன் சென்றுவிட்டனர் சச்சின் மட்டும் தான் மீது அவ்வப்போது வரும் விமர்சனங்களுக்கு பேட்டிங் மூலம் சொல்லும்முடிவுடன் 50 ரன்கள் 47 பந்துகளில் 3/126, சச்சின் இருக்கும்வரை பார்க்கலாம் என்ற முடிவுடன் ரெய்னா வந்ததும் இன்னும் விறுவிறுப்பு
            
             சச்சின் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ்  எப்படியும் சதம் போட்டுவிடுவார் என்ற நம்பிக்கைய நிறைவேற்றினார் , அசோகா டீ சில்வா எப்படியும் இன்று பழி வாங்கமாட்டார் என்ற நம்பிக்கை இருந்தது.  நண்பன் அப்போது சொன்னான் சச்சின் சதம் போட்டால் இந்திய ஜெயிக்காது மச்சி என்று. நீயுமா டா இத நம்புற இன்னிக்கு ஸ்கோர் அதிகம் இருந்தாலும் ஜெயிக்கும் மச்சி பாருடா என்று சொல்லிவிட்டு பார்த்தோம்.
                அப்படியே அதிரடியாக 150 ரன்களை அடித்தபோது எல்லோருக்கும் இந்தியா வெற்றியைவிட சச்சின் 200 அடித்தால் போதும் என்ற எண்ணம் , ரெய்னா சிக்ஸ் மற்றும் 4 அடித்து 50 ரன் அடித்து இந்தியா வெற்றி என கிட்டத்தட்ட  முடிவு செய்தார் பாண்டிங் முகம் தான் எதோ இன்னும் ரிலீஸ் செய்யாமல் வைத்திருக்கும் சன் picture படத்தை பார்த்தவர் போல இருந்தார் .

                       ரெய்னா அவுட் ஆனதும் இன்னும் 51 ரன்கள் 43 பந்துகளில் சச்சின் இருக்க பயமேன் இப்போது அதிரடி என்றாலே ஹர்பஜன்  பந்து, ரோட்டில் வருபவர் , கேமரா மேன் என எல்லோரையும் அடிக்கும் ஒரே மனிதர் இந்த மாட்சிலும் எல்லோராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர் இவர்தான் ஹர்பஜன் ரன் எடுக்காமலே சென்றுவிட்டார் அதை அடுத்து அனைவரையும் அதிர்ச்சி அடையவைதார் சச்சின் 175 ரன்களில் அவுட் . அதன்பிறகு  பர்வீன்குமார் ரன் அவுட் ஆகும் வரை ஒரே எரிச்சல் தான் எப்படி இருந்த இந்திய அணி இப்படி ஆய்டுச்சே என்று , இடையில் பிரவீன் குமார் அடித்த ஒரு சிக்ஸ் கடைசியாக இந்தியா வெற்றி பெரும் என்ற கடைசி ஆவலை தூண்டியது  . அதற்கும் முடிவுகட்டியது ஆஸ்திரேலியா .

      சச்சின் மட்டுமே முழு நம்பிக்கையுடன் ஆரம்பம் முதல் அவுட் ஆகும் வரை இருந்தார் இன்னும் அவரே  அந்த 3 ரன்கள் அடித்திருந்தால் நண்பன் கூறியதுபோல் நினைக்கும் பலருக்கும் முடிவுகட்டியிருப்பார் என்ன செய்ய? முடியவில்லை .பாண்டிங் 4 ரன் 3 ரன்கள் வித்தியாசத்தில் எப்படியோ ஜெயித்துவிடுகிறார்.

      சச்சின் மீது வரும் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி  இவ்வாறு பலமுறை வைத்துவிட்டார் ஆனால் அணி வெற்றி என்பது 100% தனி நபர் மீது எப்போதும் இருக்கமுடியாது அப்படி இருந்தால்  அதனையும் அவர் செய்திருப்பார். இரண்டு போட்டிகளிலும் அவரை விமர்சித்தவர்கள் இப்போது அவரின் சிறப்பான ஆட்டத்திற்கு என்ன அவருக்கு கிரீடம் கொடுத்துவிடுவார்களா?  அவர் ஒரு சில போட்டிகளில்  விளையடமுடியாவிட்டாலும் அடுத்த போட்டிகளில்சிறப்பாக ஆடுகிறார் . இடையிடையே சச்சினுக்கு அவுட் கொடுத்து நான் அம்பயர் ஆக இருக்கிறேன் என்று புகழ் தேடிக்கொள்ளும் அசோகா டீ சில்வா போன்றவர்களையும் சமாளிக்கவேண்டும்.
                
                   இந்தியா முதல் மூன்று இடங்களில் இப்போது தள்ளடிக்கொண்டிருக்க  சச்சின் பெரும்பங்கு என்று எல்லோருக்கும் தெரியும் . சச்சின் இன்றுவரை ஒருநாள் போட்டியில் 45 சதம் அடித்துவிட்டார் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்திசெய்யும் வாய்ப்பு இருந்தால் இப்போது 435 சதம் அடித்திருப்பார்.

      சரி சச்சின் சதம் அடித்தும் இந்தியாதான்  தோற்றுவிட்டதே, இன்றைய போட்டியில் சச்சின் contribution இல்லாவிட்டால் எப்படியும் இந்தியா 200 ரன்கள்தான் எடுத்திருக்கும் அப்போது இன்னும் நிலைமை மிக மோசம் தான் . சச்சின் இவ்வாறு இந்தியா தோற்கும் போதெல்லாம் சதம் அடித்து போராடி இந்திய அணி தோல்வி என்று சொல்ல வைத்திருக்கிறார் .  மேன் ஆப் தி மேட்ச் வாங்கும் போதெல்லாம் வருத்தத்துடன் தான் வாங்கியிருக்கிறார் இந்த நிலை மற்ற அணி வீஈரர்களுக்கு அதிகம் வந்தது இல்லை .இன்றைய .போட்டியி கூட 135 ரன்கள் அடித்திருந்தால் அவருக்கு கிடைத்திருக்காது . மார்ஷ் வாங்கியிருப்பார் என்பதுதான் உண்மை.
            எப்படியோ இன்று தான் இன்னும் திறமையானவந்தான் என்பதை விமர்சகர்களுக்கும் உணர்த்திவிட்டார்.
      இன்னும் பத்து வருடங்கள் ஆனாலும் சச்சின் இந்தியா அணிக்கு தூணாக தான் இருப்பார், வேண்டம்  என்று அவர் உணர்ந்தால் அவரே விலகிவிடுவார் 20-20 போல , பிறகுதான் சச்சின் இன்னும் விளையாண்டிருக்கலாமே என்று அப்போதும் நினைக்கவைப்பார் என்பது நிச்சயம் . சச்சின் இலாத இந்தியா அணி எப்போது கனவில் கூட இருக்கமுடியாது . பிறருடன் ஒப்பிட்டு பார்க்க முடியாத ஒரே வீரர் சச்சின் மட்டும் தான் . தனிப்பட்ட வாழ்விலும் சிறந்தவர் .அவருடன் ,அவருக்கு பின் வந்த பல வீரர்கள் அனைத்து அணிகளிலும் இன்று இல்லை.

           என்னதான் புதிது புதிதாக அதிரடி வீரர்கள் வந்தாலும் அனுபவம் தான் இறுதிவரை வரை சிக்கலான நேரத்தில் வெற்றியை கொடுக்கும் அதுதான் சச்சின் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த உண்மை. வெற்றி,போராடி தோல்வி அடைந்த அணி என்ற பெயரை தான் சச்சின் நமக்கு கொடுத்துள்ளார்  .

         April 24, 1973  பிறந்த அவரின் பிறந்த நாளை கிரிக்கெட் தினமாக கொண்டாடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம் .


      Read more...

      Friday, July 10, 2009

      1

      தெண்டுல்கர் சாதனைக்கு ஆபத்து

    • Friday, July 10, 2009
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகிலேயே அதிக சதம் அடித்த வீரர் தெண்டுல்கர். அவர் இதுவரை 42 சதம் அடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ரிக்கி பாண்டிங் 37 சதத்துடன் இருந்தார். நேற்று நடந்த ஆஷஸ் கோப்பை டெஸ்ட் போட்டியில் ரிக்கி பாண்டிங் சதம் அடித்துள்ளார். இது அவருடைய 38-வது சதமாகும். தெண்டுல்கருக்கும் பாண்டிங்குக்கும் இடையே இன்னும் 4 சதங்களே இடைவெளி இருக்கிறது.
      இப்போது நடைபெறும் ஆஷஸ் கோப்பை ஆட்டத்தில் இன்னும் 4 போட்டிகள் உள்ளன. இதிலே கூட பாண்டிங் மேலும் 4 சதங்களை அடித்து தெண்டுல்கரை சமன் செய்ய வாய்ப்பு உள்ளது.
      வரும் சில மாதங்களில் இந்திய அணி டெஸ்ட் போட்டி எதிலும் விளையாட வில்லை. எனவே தெண்டுல்கர் சதம் அடிக்கும் வாய்ப்பும் இல்லை. அடுத்து இந்திய அணி பங்கேற்கும் டெஸ்ட் போட்டிகளில் தெண்டுல்கர் உடனடியாக சதம் அடித்தால் மட்டுமே தனது சாதனையை தக்க வைக்க முடியும்.
      ஆடிக்கொண்டிருக்கும் வீரர்களில் தெண்டுல்கருக்கு போட்டியாக பாண்டிங்கை தவிர வேறு யாரும் இல்லை. எனவே பாண்டிங்கால் மட்டும் தான் தெண்டுல்கருக்கு ஆபத்து உள்ளது.
      Read more...

      Subscribe