Sunday, May 22, 2011

0

தமிழில் சோசியல் மீடியா - முதல் பாகம் part 1

  • Sunday, May 22, 2011
  • Share
  •                  social media இது பற்றி படிக்கும் போதெல்லாம் தமிழி இதுபற்றி பெரிதாக தகவல்கள் இல்லை  எனவே , தமிழில் இது பற்றி எழுதவேண்டும் எனபது எனது கனவு அதனை நனவாக்க தற்போது எழுத தொடங்குகிறேன் .

    சமூக வலைதளங்கள் :
                  twitter , facebook, orkut, google buzz, picasa,blog,linkedin,youtube ,blog போன்ற நம் கருத்துக்களை எழுத்துக்கள் , புகைப்படங்கள் , video க்கள் வடிவில் பிறருடனோ நண்பர்களுடனோ பகிர்ந்து கொள்ள மேற்கூறிய தளங்கள் உதவுகின்றன .

         தற்போது சுமார் 4500 சோசியல் மீடியா  வலைத்தளங்கள் உள்ளன இவற்றில் ஆபாச தகவல்கள்,செக்ஸ் சம்மந்தமாக சுமார்  3000 தளங்கள் உள்ளதென கண்டறிந்துள்ளனர் என்பது வருத்தமான விஷயம் .
    முக்கியத்துவம் :
                கடந்த ஐந்து ஆண்டுகளில் சோசியல் மீடியா வின் ஆக்கிரமிப்பு இணைய உலகில் முக்கிய இடம் பிடித்துவிட்டது . சோசியல் மீடியா இல்லாத இணையதளத்தை நினைத்து பார்க்ககூட முடியாது .

            ஒரு முக்கிய ஆய்வின் படி facebook பயன்படுத்தமுடியாமல் இருக்கமுடியாது என இணையதளத்தை பயன்படுத்துபவர்கள்  38% பேர் கூறி உள்ளனர் மேலும் 26%  எப்போதும் facebook, gtalk போன்றவற்றில் 24 மணி நேரமும் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

    சோசியல் மீடியா தற்போது பலருக்கும் எளிதில் சாத்தியம் ஆகிவிட்டது தற்போது linkedin போன்ற தளங்கள் வேலைவாய்ப்பில் அதிகம் உதவுகின்றன . 
    picaasa போன்ற தளங்கள் படங்களை பகிர youtube நம்மிடம் உள்ள video க்களை இலவசமாக பகிர உதவுகின்றன facebook,twitter,orkut போன்றவற்றைப்பற்றி சொல்லத்தேவை  இல்லை .

    வியாபார உலகில் சோசியல் மீடியா வின் பங்களிப்பு:
    மேற்கூறியவை எவ்வித வியாபாரம் இன்றி நம்மை போன்றவர்கள் பயன்படுத்துவது, ஆனால் இன்றைய தொழில் நுட்ப உலகில் இவற்றை வைத்து பெரிய வியாபார உலகமே  இயங்கி வருகிறது .

    சோசியல் மீடியா வின் அபார வளர்சியைகண்டு வியாபார உலகில் தொழில் நுட்ப வல்லுனர்கள் தங்களின் வியாபார உத்தியை இவற்றில் எப்படி பயன்படுத்தலாம் என யோசித்து தற்போது அதில் பெரிய வெற்றி  பெற்று இன்னும் பல வழிகளில் மேம்படுத்திவருகின்றனர் .

    சோசியல் மீடியா marketting அபார வளர்ச்சி பெற முக்கிய காரணம்:

    தற்போது இணையதள பயன்பாடு  எல்லோருக்கும் எளிது.மொபைல் வழியே குறைந்த செலவில் கிடைகிறது கூடுதல் சிறப்பு.

    கருத்துக்களை பிறருடன் எளிதில் பகிரும் வசதி.

    சிறந்த பொழுதுபோக்கு போன்ற பல சிறப்புகள் 

    முக்கியமாக நம் கருத்துக்கள் எவ்வித மிகைப்படுத்துதலும்  இல்லாமல் இருப்பது .
             உதாரணமாக நாம் புதிதாக ஒரு camera வாங்கினால் அதனை படத்துடன் அதன் தரத்தை , சிறப்புகளை twitter அல்லது facebook போன்றவற்றில் பகிர்ந்துகொள்வோம் இதனால் நம் நண்பர்கள் ஈர்க்கப்பட்டு அடுத்து அவர்கள் வாங்கும் போது இதனை மனதில் வைத்து வாங்குவர் . 

         வழக்கம் போல கடைக்கு சென்று விற்பனையாளரின் கருத்துக்களை வைத்து வாங்காமல்    நம் நண்பரின் கருத்துக்கள் வைத்து  அவர் கிட்டத்தட்ட எவ்வளவு ஆண்டுகாலம் பயன்படுத்தினார் தற்போதைய அதன் நிலவரம் போன்றவற்றை மனதில் வைத்து வாங்குவதால் முழுமையான வியாபார வெற்றி .

    உதாரணம்:
            தற்போது online marketting இல் பெரிய நிறுவனமான www.amazon.com தளத்திற்கு சென்று பாருங்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்துகொள்ளும் வசதி , அந்த பொருளை பற்றிய உங்களின் கருத்துக்கள், அதற்க்கு நீங்கள் ratting போன்ற வசதிகள் உண்டு , இதனை வைத்து வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மையை உருவாக்குகின்றனர்.

                amazon தள marketting manager சோசியல் மீடியா மொத்த வியாபாரத்தில் 70% பங்கு வகிக்கிறது என்று குறிப்பிட்டுளார் .
               
    எதிர்கால உலகில் சோசியல் மீடியா:
           மேற்கூறியதுபோல பொருட்களின் நம்பகத்தன்மை உருவாக்கம் போல தற்போதைய நிகழ்வுகள் பற்றி மக்களின் மன நிலை அறியும் வாய்ப்பு, 
    தனி மனிதனின் மன நிலையை அவன் பகிர்ந்துகொள்ளும் செய்திகளை வைத்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு போன்றவை , 

         நம்மை போன்ற பதிவர்கள் மற்றும் தளத்தை படிக்கும் நண்பர்கள் நல கருத்துக்களை அவர்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு போன்றவற்றில் பயன்பாடு கின்றன.

             SEO எனப்படும் search engine optimaization மூலம் தங்களின் வலைதளத்தை கூகிள்,bing போன்ற தேடு  பொறிகளி l தேடலின் முடிவுகளில் முதன்மை பெற என முக்கியத்துவம் பெறுகின்றன .

           உதாரணமாக நம் பதிவுகளை திரட்டிகளில் மட்டும் இணைக்கிறோம் இதனை மேலும் twitter, facebook,buzz போன்றவற்றில் இணைத்து  அதிக ranking பெற வைத்து நம் தளங்களில் உள்ள விளம்பர வருவாயை பெருக்கலாம்.
    bolgger கள் பெறப்போகும் பயன்கள் ;

            மிக அதிக அளவிலான பார்வையாளர்களை கொண்ட தளம் இனி வரும் காலங்களில் google அல்லாத சில தனியார் நிறுவன விளம்பர வசதிகளை பெற்று வருவாய் பெரும் வசதி உண்டு . தற்போதே சில நிறுவனங்கள் கொடுத்தாலும் அவர்கள் கூறும் விதிகளின்படி மிக மிக அதிக பார்வையாளர் வந்தால் மட்டுமே குறைந்த வருவாய் கிடைக்கும் எனபது குறிப்பிடத்தகது .

    2016 தமிழக   சட்ட மன்ற தேர்தல்:
                    தற்போதைய தேர்தலில் பெரிதாக கட்சிகள் இணையதளத்தை பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை ஆன்னல் வரும் நாட்களில் முக்கியமாக இளைஞர்களின் வாக்குகளை பெற அவசியம் .எதிர்கால சோசியல் மீடியா ஆளுமைக்கு நல்ல உதாரணமாக 2016 சட்டமன்ற தேர்தல் அமையும் முக்கிய கட்சிகள் அனைத்தும் சோசியல் மீடியா மூலம் மக்களிடம் வாக்குகளை பெற நல்ல ஊடகமாக இணையதளம் அமையும் பொது சோசியல் மீடியா அதற்கு பேருதவி புரியும் .
     
             இனி வாரம் தோறும் சோசியல் மீடியா வின் பயன்பாடு வளர்ச்சி பற்றி பகிந்துகொள்வோம்.எனக்கு தெரிந்தவற்றை பகிர்கிறேன் உங்களது கருத்துக்களையும் பகிர்ந்து பதிவு சிறக்க உதவுங்கள் . .பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி தமிழில் சோசியல் மீடியா பதிவுக்கு உதவுங்கள் .  

            இன்னும் நீங்கள் வியக்கும் பயன்கள் சோசியல் மீடியா மூலம் பெறமுடியும் அவற்றை அடுத்த பதிவில் காணலாம் .

    0 Responses to “தமிழில் சோசியல் மீடியா - முதல் பாகம் part 1”

    Subscribe