Thursday, May 12, 2011
0
குழந்தைகளின் மொபைல் மற்றும் கணினியில் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க
தற்போது மொபைல் பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் .அதிலும் பள்ளி மாணவர்களிடம் மொபைல் இருப்பது பெற்றோர்களுக்கு பல நேரங்களில் கவலை .ஒருவர் பயன்படுத்தும் மொபைல் வைத்து அவரின் நடவடிக்கைகளை ஏறத்தாழ கணித்துவிடலாம் பள்ளி, கல்லூரிக்கு செல்வதா ? அல்லது நண்பர்களுடன் திரையரங்கு செல்லுவது போன்றவற்றை நண்பர்களுடன் அமைதியாக ஒரு சிறிய எஸ்,எம்,எஸ் மூலம் முடிவெடுத்துவிடுகின்றனர்..
இனி அந்த கவலை இல்லை . உங்கள் குழந்தை மொபைல் இல் அனுப்பும் text message,email போன்றவற்றை கண்காணிக்க தற்போது முடியும் . இதனை வேறொரு மொபைல் மூலம் (உங்கள் மொபைல் )கண்காணிக்கமுடியும் எனபது கூடுதல் அம்சம் .
இனி இது எப்படி என்று பார்ப்போம் :
தற்போது இந்த வசதி blockberry,android மொபைல் களில் மட்டும் சாத்தியம் விரைவில் எல்ல மொபைல் களிலும் வந்துவிடும் .
முதலில் உங்கள் மொபைலில் http://www.webwatchernow.com/ என்ற தளத்தின் மொபைல் தளத்திற்கு சென்று software இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள் சில நிமிடங்களில் முடிந்துவிடும் .பிறகு அதில் உங்களுக்கு ஏற்றவகையில் எந்த மொபைல் இல் உங்கள் குழந்தை அனுப்பும் செய்திகள் ஈமெயில் போன்றவை வருமாறு அமைக்கலாம் அல்லது நீங்களே இந்த தளத்திற்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் .
மேலும் இதில் உள்ள சிறப்பு வசதிகள்:
இதனை கணினியில் நிறுவி அலுவலக பணியாளரின் நடவடிக்கைகளை கண்காணிக்கலாம்.
லேப்டாப் recovery செய்ய உதவுகிறது.இதனால் data loss தடுக்கப்படுகிறது .
ஈமெயில் recording.
செல்லும் தளங்களை கண்காணிக்கலாம் .
screen shot எடுக்கும் வசதி என பல்வேறு வசதிகள் உள்ளன .
இதனை கணினி மொபைல் என இரண்டிலும் நிறுவலாம் .
உங்கள் குழந்தைகள் உங்களுடைய கண்காணிப்பில் இருப்பார்கள் அவர்களுக்கு வரும் பிரச்சினைகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவிட மிக்க வசதியாக இருக்கும் ..பெற்றோர்களுக்கு மிகவும் உதவும் பயனுள்ள software இது என்பதில் சந்தேகமே இல்லை .
அடுத்த பதிவில்:
ட்விட்டர்,facebook போன்றவற்றில் நாம் கூறும் கருத்துக்களை வைத்து நடக்கும் social media marketting மூலம் எப்படி பணம் சம்பாதிக்கிறார்கள் எனபது பற்றி காணலாம் .
NiceLines: Forgive quickly ,Believe slowly,love truly,laugh loudly & never avoid anything makes you smile;-)
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “குழந்தைகளின் மொபைல் மற்றும் கணினியில் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க”
Post a Comment