Tuesday, May 31, 2011

3

என் ரஜினியும் நானும்

 • Tuesday, May 31, 2011
 • Share

 • தூர்தர்சன் மட்டும் அதுவும் ஊர் பஞ்சாயத்து டிவி இல்  வெள்ளிகிழமைகளில் மட்டும் வரும் ஒலியும் ஒளியும் அப்போது அவர்கள் ஒளிபரப்பும் பாடல்களின் படங்களின் பெயரை தினமலரில் போட்டிருப்பார்கள் அதில் கண்டிப்பாக இரண்டு ரஜினி படங்கள் இருக்கும் .அப்போது போடும் பாட்டுக்கெல்லாம் படங்களின் பெயரை போட்டிருப்பார்கள் அதனை படித்து தெரிந்து விட்டுதான்  டிவி பார்க்கவே செல்வேன் . விசில் சத்தம் டான்ஸ் என களைகட்டும் .இவ்வாறாக ரஜினி அறிமுகம் .

   வீட்டில் வருடத்திற்கு மூன்று நான்கு படங்கள் கூட்டி செல்வார்கள் . ஆனால் முதலில் முதல் நாள் அன்று ரஜினி படம் பார்த்தது அதுவும் வேலைக்கு சென்று பார்த்த முதல் படம் சிவாஜி .முதல் நாள் இரவுக்காட்சி பார்த்த வாய்ப்பு சிவாஜி படம் வெளியானபோது . பழனியில் பணிபுரிந்தபோது சிவாஜி ரிலீஸ் இதற்க்கு முன் ரஜினி படங்கள் முதல் நாள் பார்க்கும் ஆர்வம் இருந்தாலும் அதற்க்கான சூழல் இல்லை .

  கிராமங்களில் ரஜினியை அடுத்து விஜயகாந்திற்கு தான் இரண்டாம் இடம் கமல் எல்லாம் அப்புறம்தான் 90 களில் ..
          பள்ளியில் படிக்கும்போது வீட்டு கதவில்  ரஜினி போட்டோக்கள்  சினிமா எக்ஸ்பிரஸ் அல்லது  தினசரிகளில் வரும் இவற்றை வெட்டி ஓட்டுவேன்  பாண்டியன் எஜமான் என முத்து வரை தொடர்ந்தது இப்போதுதான் கதவு ரஜினி போட்டோ இல்லாமல் இருக்கிறது .

  எங்கள் பள்ளி ஆசிரியை எனது அம்மாவின் தோழி அடிக்கடி வீடிற்கு வருவார் அப்போதெல்லாம் பயம் இருக்கும் இந்த படங்களை எல்லாம் பார்த்துவிட்டு திட்டுவார்களோ என்று ,ஆனால்  நான் பள்ளியில் முதல் மார்க் வாங்கியதால் எதுவும் சொன்னதில்லை ..
  முதல் நாள் பார்த்த அனுபவம்:
  வேலைக்கு வந்து அதுவும் அரசாங்க வேலை கிடைத்து பார்க்கபோகும் முதல் படம் எங்கள் அலுவலகத்தில் அன்று வேலை அதிகம் மற்றவர்கள் வர தயக்கம் சண்முகம் மட்டும் போகணும் என்று சொல்ல . மற்றவர்களிடம் அவசர வேலை இருந்தால் call பண்ணுங்கள் வந்துவிடுகிறோம் என்று சொல்ல , அவர்கள் வந்து கதை சொல்லணும்  என்று டீலிங் போட சரி என்று சொல்லி சென்றோம் அங்கு reservation  ஏதும் இல்லை . இரவு மணி 8 pm காட்சிக்கு செல்ல முடிவெடுத்து6.30 pm மணிக்கே சென்று பார்த்தல் கவுன்ட்டர் முழுவதும் கூட்டம்  போலீஸ் வேறு லத்தியுடன்,..

  சண்முகத்தை லைன் ல் நிற்கவைத்து நான் சற்று தள்ளி வேறு எங்காவது முயற்சிக்க அவனோ கிட்டத்தட்ட 1 .30 மணிநேரம் நெரிசலில் நான் சற்று நேரம் நிற்கவா என்று கேட்டும் பரவா  இல்லை என்று நின்று டிக்கெட் வாங்கினான் .டிக்கெட் விலை 50  ருபாய் தான் . அப்போது ஒரே பெட்டி யை வைத்து சினி வள்ளுவர் , ரமேஷ் என ஓடி ஓடி ஒட்டிகொண்டிருந்தார்கள் , 
   உள்ளே சென்றால் வழக்கம் போல் விசில்  டான்ஸ் என விண்ணை பிளந்தது . 

            படத்தை விட ரசிகர்கள்  ஆரவாரம் இன்னும் அருமை .பல வசனங்கள் புரியவில்லை இருந்தாலும் அதிசயித்து பார்த்தோம்.நண்பர்கள் அவசர வேலை இருந்தால் கால் பண்ணுங்கள் என்று சொல்லி இருந்ததால் அடிக்கடி மொபைல் பார்த்து கொஞ்சம் டென்சன் ஆனால் கடைசிவரை எந்த அழைப்பும் வரவில்லை . பத்து நாட்கள் கழித்து அதே சினி வள்ளுவரில் நானும் சண்முகமும் இரண்டாவது முறை பார்த்தோம்..  இது ரஜினி படங்களுக்கு மட்டுமே வரும் ஆர்வம் ..

  தற்போது எந்திரன் ரோகினி யில் பார்த்தாலும் முதல் வேலைக்கு சென்று முதலில் பார்த்த சிவாஜி இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது ..நானும் அடிக்கடி நினைப்பதற்கு ரஜினியை பற்றி யாரும் என்னிடம் இவர் அப்படி இப்படி இவர் படம்தான் பார்க்கவேண்டும் என்றதில்லை , திரையில் மட்டுமே பார்த்து பிடித்தது மட்டுமே ஒரே காரணம் .
  சில விஷயங்கள் நம்மையும் மீறி நம்மை ஆக்கிரமிப்பது உண்டு அதுபோலதான் எனது ரஜினி.

  இந்த உலகில் யாரவது ஒருவரை கேளுங்கள் எனது ரஜினியைபோல்  காசு வாங்குறேன் நடிக்கிறேன் ஏன்?  இவ்வளவு பாசம் .. என்று சொல்லும் தைரியம் இருக்கிறதா. ஏன் நான் கூட  என்னை கேட்டால் ஏன் அலுவலகத்தில் காசு கொடுக்கிறார்கள் அதனால் வேலை செய்கிறேன் என்று சொல்லும் பக்குவம் கிடையாது.திறமை அறிவு என்று சொல்லத்தோன்றும் ..
  (எனக்கு பிடித்த ரஜினி புகைப்படங்கள் மேலே உள்ள 3 ம் )
  என் ரஜினி நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுக்கவில்லை என்பது எனக்கும் ஏன் ரஜினிக்கும் தெரியும் , காந்தியை மட்டும் தான் நேசிக்க வேண்டுமா ஒரு சாதாரண மனிதனை கூட நேசிக்கலாம் இது எனது விருப்பம் .அதனால் எனக்கு பிடித்த ரஜினியை நேசிக்கிறேன் ...

  எனது ரஜினி விரைவில் நலம் பெற்று வந்து கண்டிப்பாக ராணா ,கானா ரெண்டிலும் நடிப்பார் ....டயாலிசிஸ் மற்றும் எந்தொரு  நோயும் அவரிடம் தோற்று ஓடிவிடும் .

  இறுதியாக ..இன்னும் காத்திருப்பவர் எத்தனை பேரோ உன்னிடம் தோற்ப்பதற்கு ...  

  3 Responses to “என் ரஜினியும் நானும்”

  Robin said...
  May 31, 2011 at 5:50 AM

  correcata sonninga............


  A.P.Sathy said...
  May 31, 2011 at 8:01 PM

  Super...


  கோவை நேரம் said...
  May 31, 2011 at 8:40 PM

  தலைவா ....


  Subscribe