Monday, August 31, 2009
பெண்கள்- ஆண்கள் மகிழ்விக்க ஆகும் செலவு
முதலில்
ஆண்களை மகிழ்விக்க இது போதும் 25 ரூபாய் செலவில்

ஆனால் பெண்களை மகிழ்விக்க
=============
================
====================
=====================================
2500000000 ரூபாய் செலவு செய்யவேண்டும் ..

நகை - சுவைக்காக மட்டும்
Saturday, August 29, 2009
விஜயகாந்த்-பஞ்ச்-வடிவேலு

1) U can study and get any certificates. But u cannot get ur death சர்டிபிகேட்
<


2) U may have AIRTEL or BSNL connection but when u
sneeze u ll say HUTCH

3 ) U can bcome an engineer if u study in
engineering college. U cannot bcom a president if
u studies in Presidency College

4 ) U can expect a BUS from a BUS stop ... u
cannot expect a FULL from FULL stop


6 ) U can find tea in teacup. But cannot find world
in world cup

7) U can find keys in Keyboard but u cannot find mother in motherboard.
_
பயம் -- சிறுகதை
"டேய் சுந்தர்.. என்னடா இது?!"
"தெரியலியேம்மா..!"
அப்போதுதான் ஊருக்குப் போய் இறங்கியிருந்தேன். பை சூட்கேஸ் எல்லாம்
வைத்துவிட்டுப் பல் தேய்த்து முகம் கழுவி பாட்டி கையால் திவ்யமான டிபன்
சுடச்சுடச் சாப்பிட்டு குளிக்கக் கிளம்பியதும் பாட்டி வந்து ப்ரேக் போட்டார்.
"அதெல்லாமொன்னும் வேண்டாம். சாப்ட்டு குளிச்சா சவுண்டிக்கொத்தன்பா.
குளிக்காம்ப்போய் ஒம் ப்ரெண்டுகளை(BRENDU)ப் பார்த்தா ஒன்னும்
கொலைக்குத்தமாயிறாது"
முழுக்கைச் சட்டையின் கைப் பொத்தான்களைப் போட்டுக் கொண்டு கிளம்ப
யத்தனித்தபோது.. திமுதிமுவென ஏழெட்டுப் போலீஸ்காரர்கள் நுழைய, ஏகக்
கலவரமாகிவிட்டது.
"ஹலோ சார், என்ன இப்படி, என்ன ஆயிற்று...."
என் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருக்க அவர்கள் அங்கே இல்லை. இந்த
வார்த்தைகளை முடிப்பதற்குள் அவர்கள் பூட்ஸ் காலோடு ஸ்வாமி ரூம் வரை போய்
விட்டார்கள்.
"சே.. என்ன எழவுடா இது?!"
பின்தொடர்ந்து போய் தொங்கியதில் வாரண்ட் காட்டினார்கள். தடை
செய்யப்பட்ட வெடிப்பொருட்கள் அல்லது போதைப் பொருட்கள் வைத்திருப்பதான
சந்தேகம் கிட்டத்தட்ட உண்மை என்னும் அடிப்படையில் வழங்கப்பட்ட ஸர்ச்
வாரண்ட்.
"பகவானே! கிருஷ்ணா! குருவாயூரப்பா?!..." பாட்டி குரல்.
"பாட்டி ஒண்ணும் கவலைப்படாதீங்க நாங்கல்லாம் எதுக்கிருக்கோம்"
"அம்மா ஏதாச்சும் பணம் வெச்சிருக்கியா?"
"எங்கிட்ட ஏதுடா? அந்தக் கடங்காரன் வேற எல்லாப் பொட்டியையும் சீல்
வெச்சுட்டான்"
சுவாமி ரூம் அருகே இருந்த சிறு பிறையில் கையை விட்டேன். கையில் ஒரு
ஐந்து ரூபாய் நாணயமும் ஒரு ஒரு ரூபாய் நாணயமும் வேறு சில நாணயங்களும்
சிக்கின. படக்கென்று பையிலிட்டு நைசாக நழுவினேன்.
"சுந்தர் இருடா நானும் வரேன்." அம்மாவும் கிளம்பினாள்.
"சரி வா.."
"அம்மா, நீ பதினைந்து நாளுக்கு முன்னால ஒரு கொலையைப் பார்த்தேன்னு
சொன்னேல்லியா?"
"ஆமாம்."
"இந்தப் பிரச்சினைக்கெல்லாம் அதுதான் காரணம்னு நான் நினைக்கிறேன்."
"எப்படி?"
"பின்ன என்னம்மா? பட்டப் பகல்ல மட்ட மத்தியானத்துல ஒருத்தனை வெட்டிக்
கொன்னுருக்காங்க. காய்கறி வாங்கப் போன நீ ஒளிஞ்சிருந்து அதைப்
பாத்துருக்க. அங்க அந்தநேரத்துல ஆளுங்களும் யாரும் இல்லை."
"அப்பா?! அதை நினைச்சாலே எனக்குக் கொலை நடுங்குது."
"நிச்சயமா ரொம்பப் பெரிய ஆள்தான் இதைச் செய்திருக்கணும்."
"எப்படிடா அவ்வளவு தீர்மானமா சொல்லர"
"பின்ன என்னம்மா, ஒரு பத்திரிகையிலகூட இதைப்பத்தி செய்தி வரல.
ஜனங்களுக்கும் தெரிஞ்சமாதிரி தெரியல. ஒரே மர்மமா இருக்கு."
"அரசியல்வாதியா இருக்குமோ?"
"அப்படிதான் நான் நினைக்கிறேன்."
அதற்குள் கடைவீதி நெருங்கிவிட்டது.
"சரிம்மா, நீ பாட்டி கூட இரு. வீட்ல எல்லாரையும் பயப்படாம இருக்கச்
சொல்லு. நான் ஒரு ·போன் பண்ணிட்டு வந்துடறேன். சரியா?"
"சரிப்பா.."
நடக்கும் போதே திட்டங்கள் மனதில் பரபரவென உருவாயின.
'நார்க்கோட்டிக்ஸ், வெப்பென் ஹேண்ட்லிங் இரண்டுமே நான் பெயிலபிள்
செக்ஷன்கள். உள்ளேபோனால் பகவானே கண்திறந்தாலொழிய வெளியேவர வேறு
வழியில்லை.பாவிகள் திட்டம் போட்டுத்தான் செய்திருக்கிறார்கள்.'
'என்ன, உன் அம்மா கோர்ட்டுக்கு வந்தால் உள்ளே தள்ளிவிடுவேன் என்று
மிரட்டலாம், அல்லது வெளியே வரவேண்டுமானால் உறுதிமொழி கொடு என்று
கேட்கலாம், மறுத்துப் பேசினால் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யாமல்
உள்ளேயே வைத்துவிடும் வாய்ப்பும் உண்டு.'
'முதலில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவுள்ள நண்பர் யோகேஸ்வரனிடம்
போனில் விவரம் சொல்லவேண்டும். இதை ஒரு க்ரைஸிஸ் சிச்சுவேஷண் போலக்
கொண்டு போனால்தான் வேலைக்காகும்.'
'அப்புறம் உடனடியான அண்ணனுக்கு விளக்கமாக ஈ-மெய்ல் அனுப்பவேண்டும். அவன்
எம்பஸி மூலமாக எப்படியாவது விபரத்தை ஜனாதிபதி வரைக் கொண்டு
செல்வான்.'
'இல்லைன்னா இன்னொன்ணு செய்யலாம். பேசாம நம்ம அட்ரஸ் புக்கிலுள்ள அனைத்து
அட்ரஸ¤க்கும் அனுப்பிவிடுவோம். மெயில் டு ஆல் அடரஸ்ஸஸ் ஆப்ஷண் தான்
இருக்கவே இருக்கிறதே? நண்பர்களோடு சேர்த்து அகத்தியர், மரத்தடி,
பொன்னியின் செல்வன் முதலான குரூப்புகளுக்கும் போகும். ஏதாவது வழி
கிடைக்கும்.'
டெலி·போன் பூத்தை நெருங்கினேன். ரிஸீவரைக் கையிலெடுத்து
வைத்துக்கொண்டு நம்பர்களை வேக வேகமாக டயல் செய்தேன். ரிங்
போய்க்கொண்டேயிருந்தது. திடீரென்று மண்டைக்குள் ஷாக்கடித்தது போல் ஒரு
உணர்வு. மூளைக்குள் அசரீரிபோல் ஒரு குரல்,
'டேய் நீ கண்டது கனவு'
உடனே ரிஸீவரை வைத்த்துவிட்டேன். திடீரென்று, அறிவு வேலை செய்ய
ஆரம்பித்தது.
'முட்டாளே, இது கனவென்றால் வீட்டிலிருந்து இங்கே எதற்காக வந்தாய்?
நீயென்ன தூக்கத்திலா நடந்து வந்தாய்? லூசாடா நீ?'
"என்ன இழவுடா இது?" தலையிலடித்துக்கொண்டேன்.
ரொம்ப ஓங்கி அடித்திருப்பேன் என்று நினைக்கிறேன். நெற்றியில்
எரிச்சலெடுத்தது. விழிப்புத் தட்டிவிட்டது.
'சே! எல்லாம் தூங்கப்போகும்போது டி.வி சீரியல் பார்த்ததால் வந்த வினை.'
---காசிநாதன் ரங்கநாத்
என் எழுத்து... கவிதை
எனது நண்பரின் கவிதை இது. உங்களுக்காக
என் எழுத்து...
கவிதை எழுதுதல் கால விரயம்
என்று உலகம் கூற,
கவிதை எழுதாது வீணான
நாட்களில்,
கல்லாது வீணான காலங்கள்...
எழுதப்படாது வீணான
நாட்குறிப்பு.
மீட்டப்படாத வீணையில்
துயின்று கிடந்த ராகங்கள்...
அலைகிளம்பாது
அடங்கிக் கிடந்த மஹா சமுத்திரங்கள்...
நடைபயிலாது
முடங்கிக் கிடந்த குழந்தைகள்...
அடைமழையோ என்று
இடியோடு பொழியாத மேகங்கள்...
காணாது மறந்துபோன
ஒருகோடி விண்மீன்களின்
கண்சிமிட்டல்கள்...
ஒளிவிழாது இருண்டு கிடந்த
உலகத்தின் பாதி...
சந்திர அப்பங்களைத்
தின்ன மறந்துபோன
பல நூறு இரவுகள்...
மறந்து மரத்துப் போன
எமது மூதாதையர் சரித்திரம்...
ஒப்புக் கொள்ள மறந்து மறுக்கப்பட்ட
எமது உள்ளத்து உள்ளொளி.
அண்ட முகடுகளை உரசிப்பார்க்க
மறந்துபோன உள்ளம்.
என்பதை
ஒப்புக் கொள்ள மறுத்த மனம்.
- காசிகணேசன் ரங்கநாத்
மறக்காமல் அவருக்கு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் ...
பாம்பே சிக்கன் பிரியாணி சமைக்கலாம் வாங்க
முழு செய்தியை சிறு ரகசிய குறியீடு மூலம் அனுப்பி படிக்கவைக்கலாம்

கணினி மொழியில் இதற்க்கு cryptography என்று பெயர்.இதன் மூலம் தகவல் படித்து புரிந்துகொள்ளாத வகையில் எழுத்துக்கள் மாற்றப்பட்டு (இதற்க்கு கீ என்று பெயர் ) உரியவர்களுக்கு அனுப்பப்படும் , அவர் இந்த தகவலை உரிய கீ உபயோகித்து படிக்க கூடிய வகையில் மாற்றிக்கொள்வார் .
ஜுலிஎஸ் சீசர் போரின் போது இத்தகைய முறையை பயன்படுத்தி தகவல் பரிமற்றிக்கொண்டார்.
இது போன்றுதான் ஆனால் இங்கு சிறிய குறிப்பை வைத்து முழு செய்தியையும் படிக்கலாம் .
முதலில் https://privnote.com இந்த இணைய தளத்திற்கு வாருங்கள் .

Write your note below என்ற இடத்தில் நீங்கள் அனுப்பவேண்டிய தகவலை டைப் செய்யுங்கள் பிறகு கீழே இருக்கும் create note பட்டனை அழுத்துங்கள் .
https://privnote.com/n/kvpmgrjltzwbvwhk/#dngmxhmtlrpnpyiv இப்படி ஒரு சங்கேத/ரகசிய குறியீடு போல கிடைக்கும் .
உங்கள் நண்பருக்கோ அல்லது அலுவலகத்திற்கோ அனுப்பும் போது இணைய தள முகவரியை விட்டுவிட்டு n/kvpmgrjltzwbvwhk/#dngmxhmtlrpnpyiv இந்த ரகசிய குறியீடை அனுப்பலாம் .
கிடைத்த இந்த ரகசிய குறியீடை அவர் மீண்டும் இந்த இணைய தளத்திற்கு வந்து browser இல் காப்பி செய்து முழுமையான தகவலை பெற்றுக்கொள்வார்.
இதில் உள்ள கூடுதல் சிறப்பு என்னவென்றால் செய்தியை அவர் படித்ததும் நம் மெயிலுக்கு அவர் படித்துவிட்டார் என்ற தகவல் கிடைக்கும் வசதியும் உண்டு .
மேலும் தகவல் படித்தவுடன் அதுவாகவே அழித்துவிடும் , மீண்டும் படிக்க நாம் அந்த ரகசிய குறியீட்டை வைத்திருக்கவேண்டும் .
நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .
பிறர் நம் மெயிலை பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது.
Friday, August 28, 2009
உங்கள் ஜிமெயில் மெயில் பிறர் பயன்படுத்துகிறார்களா?CSS நிறுவனத்தில் JAVA opening இல்
நாம் சில நேரங்களில் நண்பர்கள் வீடுகளிலோ அல்லது browsing center களிலோ மெயில் செக் செய்யநேரிடும் போது sign out செய்ய மறந்து விடுவோம் .
மெயில் முக்கிய தகவல்கள் கொண்டிருக்கும் போது நமக்கு யாராவது இத்தனை உபயோக படுத்துகிறார்களா ,பாதுகாப்பாக உள்ளதா என தெரிந்து கொள்ளவேண்டும் .
இதோ தெரிந்துகொள்ளும் வழி :
உங்கள் கூகிள் மெயில் ஓபன் செய்து inbox கீழே இருக்கும் இந்த details பட்டனை அழுத்துங்கள்


உங்கள் ஜிமெயில் கடைசியாக பயன்படுத்திய ஐந்து உபயோக விபரங்களைகாட்டும் கீழ்க்கண்டவாறு காட்டும் .

இதில் நேரம் , தேதி ,ஐ,பி முகவரி நீங்கள் தற்போது பயன்படுத்தும் ஐ.பி முகவரி ஆகியவற்றை காட்டும், இதன் மூலம் நாம் எளிதாக வேறு யாரவது பயன்படுத்துகிறார்களா என தெரிந்து கொள்ளலாம் .
வேறு யாராவது பயன்படுத்தி முக்கிய தகவல் திருடப்பட்டு இருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவோ வசதியாக இருக்கும்.
JAVA opening in CSS Chennai:
பவர் பாயிண்ட் பைல் ஐ வீடியோவாக மாற்ற
அதுபற்றி இப்போது
முதலில் பவர் பாயிண்ட் பைல் உங்கள் கணினியிலோ அல்லது வெப் சைட் டிலோ எங்கு உள்ளது என தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் .
பிறகு http://www.authorstream.com என்ற இணையதள முகவரிக்கு செல்லுங்கள் . ஒரு கணக்கை தொடங்குங்கள்

பிறகு அங்கு உள்ள upload powerpoint பட்டன் அழுத்தி உங்கள் பவர் பாயிண்ட் desktop, web எங்கு உள்ளதோ அதை தேர்வுசெய்து upload செய்யுங்கள்
அதற்க்கு தலைப்பு கொடுத்து upload now கொடுங்கள் வீடியோ ரெடி.
அதற்கான code copy செய்து ப்லோக் ல் வீடியோ வாக போடலாம் .
நான் மாற்றிய web 2.0 ppt video பாருங்கள்.
இதை உங்கள் ஐ பாட் டுக்கு மாற்றிக்கொள்ளலாம் . அதுபோல் இந்த தளத்தில் வீடியோ வை பவர் பாயிண்ட் ஆக மற்றும் வசதியும் உள்ளது .
Thursday, August 27, 2009
இந்த ஆகஸ்ட் மாத சிறப்பு,ஹைக்கூ , ஜீ,கே ,ஜோக்
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தான்
5 நாட்கள் சனி
5 நாட்கள் ஞாயிறு
5 நாட்கள் திங்கள்
ஒரே மாதத்தில் வருகின்றன . இது ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் என்பது கூடுதல் தகவல் .
தகவல் 2:
உலகில் நீளமான சரக்கு ரயில் எது தெரியுமா ?
ஆஸ்திரேலியாவின் cargo உஏந் இதில் 8 engine ,682 carriages மொத்த நீளம் 7.35 கிலோமீட்டர்...
ஹைக்கூ :
நாங்கள் நாடு தெருவில் நிற்கிறோம்
நீங்கள் உங்கள்
உறவுகளோடு உறவாட
இப்படிக்கு
ஏர்செல் , ஏர்டெல் , வோடபோன் டவர்ஸ் ...
ஜோக் :
மகன்: அப்பா என்ன பக்கத்து வீட்டு பொண்ணுதான் நல்ல படிக்குன்னு சொல்லுவியே இப்ப பாத்தியா அவ 470 நான் 480 மார்க் ...
அப்பா: அட சனியனே அவ பத்தாவது படிக்கிறா , நீ +2 படிக்கிற ...
ஆலோசனை :
உங்களுக்கு அதிகமாக ராங் கால் வருகிறதா ?
அதை தடுக்க இதோ வழி.
;
;
;
ஹலோ டோன் ஆக விஜய் பாட்டு வையுங்கள்
அப்புறம் உங்களுக்கு மிஸ்டூ கால் கூட வராது.....
ஏன் கால் கூட வராமல் போகலாம் .
கவுண்டமணி ---விஜய் ,


கவுண்டமணி: ச்சா, ச்சா போன் எடுத்த நச்சு நச்சுன்றானுங்க ஏதோ வில்லு படமாம் அத விஜய் ரசிகர்களாலையே பார்க்க முடியலயமா என்ன பாக்க சொல்றானுங்க..
அட இது பரவாயில்ல , சோசியல் மேட்டர் பண்ணிக்கலாம் ...
ஆனா விஜய் படத்துல என்னை நடிக்க சொல்லுரானுங்கப்பா ....
நா என்ன அவன மாதிரி கோமாளியா இல்ல கொரங்கு வாயனா ?
ஒரே குஷ்டமப்பா ! சீ கஷ்டமப்பா
விஜய்: அண்ணா ... போன் வொயெர் பிஞ்சி ஒரு வாரம் ஆகுது னா..
கவுண்டமணி: டேய்ய் டப்பா தலையா இது செல்போன் டா ,, உன்னையெல்லாம் யாருடா ஹீரோவா போட்டது...

ஜோக் 2:
நர்ஸ்: என்ன டாக்டர் பேசண்ட் செத்துட்டாரு..
டாக்டர்: தற்கொலை விஷம் சாப்பிட்டு இருந்தா கூட காப்பாத்தி இருக்கலா,, ஆனா
பையன் விஜய் படம் முழுசா பாத்திருக்கா ...
நர்ஸ்: அட பாவமே அப்ப அஜீத் படம் பாத்தா .. அங்கேயே செதிருப்பா...
Wednesday, August 26, 2009
த்ரில்லிங் அனிமல்ஸ்
நாயை விரட்டும் சுறா
குழந்தையும் பாம்பும்
Monday, August 24, 2009
யு-ட்யூப் தளத்தில் உள்ள தெரியாத வசதிகள்
1. வீடியோ பார்மட் மாற்ற:
யு–ட்யூப் வீடியோக்களை flv, .3gp, ,mp3, ,AVI போன்ற பார்மட்டுகளுக்கிடையே மாற்றிப் பதிந்து கொள்ள Anjo.to என்னும் ஆன்லைன் வசதி இலவசமாகக் கிடைக்கிறது. குறிப்பிட்ட வீடியோ கிளிப்பினை இயக்கிப் பார்த்து அதன் தள முகவரியைக் குறிப்பிட்டால், இந்த தளம் நமக்கு அதனை நாம் கேட்கும் பார்மட்டில் மாற்றி அமைத்து நம் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கும். இந்த வசதி பெற செல்ல வேண்டிய தள முகவரி: en.anjo.to
2. வேகமாக டவுண்லோட் நடைபெற:
வீடியோ காட்சிகளை டவுண்லோட் செய்து பார்க்க அந்த தளம் சீரான வேகத்தில் நம் கம்ப்யூட்டரை அடைய வேண்டும். இல்லையேல் சிறிது சிறிதாக இடைவெளி விட்டுத்தான் அவை நமக்குக் கிடைக்கும். இந்த டவுண்லோட் செய்திடும் பணியை வேகமாக மேற்கொள்ள நமக்குக் கிடைப்பதுதான் SpeedBit Video Accelerator என்ற புரோகிராம் ஆகும். இது Download Accelerator போலவே செயல் படுகிறது. இது ஒன்றுக்கு மேற்பட்ட சேனல்களைத் திறந்து வீடியோ காட்சியினைக் கைப்பற்றி வேகமாக அதனை கம்ப்யூட்டருக்கு இறக்குகிறது. இதனைப் பெற செல்ல வேண்டிய தள முகவரி: http://www.videoaccelerator.com/
3. பயர்பாக்ஸில் வேகத்தைத் துரிதப்படுத்த:
மீடியா பைரேட் (Media Pirate) என்னும் நிறுவனம் வீடியோ டவுண்லோடர் (Downloader) என்னும் பயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப்பு ஒன்றை உருவாக்கித் தந்துள்ளது. இது பிளாஷ் பிளேயர் போன்றவற்றில் எம்பெட் ஆகியுள்ள வீடியோ காட்சிகளை மிக வேகமாக நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து கொள்ள உதவுகிறது. இந்த புரோகிராம் கிடைக்கும் முகவரி http://www.mediaconverter.org/
4. யு–ட்யூப்பினை எடிட் செய்திட:
ஆன்லைனில் யு ட்யூப் ரீ மிக்சர் (youtuberemixer) என்று ஒரு வசதி கிடைக்கிறது. இதன் மூலம் யு–ட்யூப் பயன்படுத்துபவர்கள் அதனை அதன் தளத்தில் வைத்தே எடிட் செய்யலாம்; மாற்றி அமைக்கலாம் மற்றும் மெருகூட்டலாம். இது அடோப் பிரிமியர் எக்ஸ்பிரஸ் டெக்னாலஜி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த தொழில் நுட்பத்தின் மூலம் கிராபிக்ஸ் காட்சிகளை ஒரு பிரேமில் நுழைக்க முடிகிறது. அத்துடன் டெக்ஸ்ட் மற்றும் ஆடியோ பைல்களையும் இணைக்கலாம். இது குறித்த முழு தகவல் களையும் அறிய http://www.sizlopedia.com/2007/06/17/youtuberemixertheonlineyoutubevideoeditor/ என்ற முகவரியில் உள்ள தகவல்களைப் பெறவும்.
5. யு–ட்யூப் வீடியோவை கம்ப்யூட்டரில் இயக்க:
ஆன் லைனில் FLV Player என்ற ஒரு புரோகிராம் கிடைக்கிறது. இதன் மூலம் யு–ட்யூப் தளத்திலிருந்து டவுண்லோட் செய்த வீடியோக் களைக் காணலாம்.இந்த புரோகிராம் தரும் எளிய கண்ட்ரோல்கள் மூலம் யு–ட்யூப் வீடியோக்களை இயக்கி அவற்றின் முன்னும் பின்னும் செல்லலாம். இந்த புரோகிராமினைப் பெற http://www.download.com/30002139_410505954.html என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
6. பயர்பாக்ஸிற்கான யு–ட்யூப் பிளேயர்:
யு–பிளேயர் (YouPlayer) என்ற பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஓர் ஆட்–ஆன் தொகுப்பு இணையத்தில் கிடைக்கிறது. இது பயர்பாக்ஸ் வெப் பிரவுசரில் யு–ட்யூப் வீடியோ பிளேயரை இணைக்கிறது. இதில் உங்களுக்குப் பிடித்தமான யு–ட்யூப் வீடியோக்களைக் காணலாம். இதனை ஒரு புக் மார்க்கர் ஆகவும் பயன்படுத்தலாம். இதில் யு–ட்யூப் லிங்க்குகளை இழுத்து வந்து இதில் விட்டுவிட்டால் தேவைப்படும்போது பார்த்துக் கொள்ளலாம். இது குறித்த முழுமையான தகவல்களை https://addons.mozilla.org/enUS/firefox/addon/5709 என்ற முகவரி யில் உள்ள தளத்தில் பெறலாம்.
7. டெஸ்க்டாப்பில் ஒரு டவுண்லோடர்:
ஆர்பிட் டவுண்லோடர் (Orbit Downloader) என்ற பெயரில் இலவச டெஸ்க்டாப் புரோகிராம் ஒன்று இணையதளத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் பலவகையான தளங்களிலிருந்து வீடியோ பைல்களை டவுண்லோட் செய்திட முடியும். டவுண்லோட் செய்திடும் வழி மிகவும் எளிமையானது. இந்த புரோகிராமினை இயக்கிய பின்னர், குறிப்பிட்ட வீடியோ மீது மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லவும். அங்கு �Get It�ல என்ற ஒரு பட்டன் கிடைக்கும். அதில் கிளிக் செய்தால் குறிப்பிட்ட வீடியோ பைலாக இறக்கப்படும். http://www.orbitdownloader.com/ என்ற முகவரிக்குச் சென்றால் மேலும் தகவல்களும், இந்த புரோகிராமும் கிடைக்கும்.
8. வீடீயோ பைலை அப்லோட் செய்திட:
மற்றவர்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என நாம் விரும்பும் வீடியோ காட்சிகளை அப்லோட் செய்திட யு–ட்யூப் தளம் வழி தருகிறது. யு–ட்யூப் அப்லோடர் (YouTube Uploader) என ஒரு புரோகிராம் அந்த தளம் செல்லாமலேயே வீடியோக்களை அப்லோட் செய்திட நமக்கு உதவுகிறது. http://www.softplatz.com/Soft/AudioMultimedia/VideoTools/FreeYouTubeUploader.html என்ற முகவரியில் இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்திடலாம்.
9. யு–ட்யூப் வீடியோவின் பார்மட் மாற்ற:
யு–ட்யூப் தளத்தில் கிடைக்கும் வீடியோக்களை அனைத்து சாதனங்களிலும் பிளே செய்து பார்க்க முடியாது. எந்த சாதனத்தில் இயக்கிப் பார்க்க வேண்டுமோ அதற்கான பார்மட்டிற்கு அதனைக் கொண்டு செல்ல வேண்டும். இந்த பார்மட் மாற்றும் வசதியினை கன்வெர்ட் ட்யூப் (Convert Tube) என்னும் புரோகிராம் தருகிறது. ஆன்லைனிலேயே பார்மட்டை மாற்றி,பெர்சனல் கம்ப்யூட்டர், ஐ–பாட், பி.எஸ்.பி., ஐ–போன், மொபைல் போன் இவற்றிற்குக்க் கொண்டு சென்று இயக்கிப் பார்க்கலாம். http://converttube.com/ என்ற தளத்திற்குச் சென்று இந்த புரோகிராமினை இலவசமாகப் பெறவும். இதில் ஒரு ருசியான தகவல் என்னவெனில், இந்த தளத்தை வாங்க உங்களுக்கு விருப்பம் என்றால் 2000 டாலருக்கு மேல் குறிப்பிடும் தொகையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.
10. ஐ–பாட் மற்றும் ஐ–போனுக்கு மாற்ற:
யு–ட்யூப் வீடியோக்களை ஐ–பாட் மற்றும் ஐ–போனில் பார்த்து ரசிக்க அவற்றை அதற்கேற்ற வகையில் மாற்ற வேண்டும். http://www.dvdvideosoft.com/freedvdvideosoftware.htm என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கும் சாப்ட்வேர் தொகுப்பு இந்த வேலையை மேற்கொள்கிறது. மேலே குறிப்பிட்ட தளங்களில் தரப்பட்டுள்ள சாதனங்களை இறக்கி, உங்களுக்குப் பிடித்த யு–ட்யூப் வீடியோக்களைப் பார்த்து ரசிக்கவும்.
நன்றி : தினமலர்
Saturday, August 22, 2009
வேட்டைக்காரன் பரபரப்பான கதை லீக்


விஜய் குடும்பத்தில் உள்ள அனைவரும் திடீரென்று மர்மமான முறையில் ஒரே நாளில் இறந்துவிடுகின்றனர்.
வெளி நாட்டில் படித்துக்கொண்டிருக்கும் விஜய் இதை கேள்விப்பட்டு அவரது காதலி அனுஷ்கா மற்றும் நண்பர்களிடம் இதற்க்கு காரணமானவர்களை அழித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி இந்தியா வருகிறார்.
அப்போது தன் குடும்பத்தார் பன்றி காய்ச்சல் நோயால் இறந்ததை அறிந்து கோபத்துடன் உலகத்தில் உள்ள அனைத்து பன்றிகளையும் வேட்டையாட புறப்படுகிறார்.
இடையிடையே அனுஷ்கா வுடன் ஆடி பாடுகிறார்.

கிளைமாக்ஸ் :
அவருக்கு இன்னும் ஒரு மணி நேரத்தில் வெளிநாட்டிற்கு செல்லவேண்டிய விமானம் புறப்பட்டுவிடும் . சுமார் ஒரு லட்சம் பன்றிகள் முன்பு விஜய் மேடையில் தோன்றுகிறார் இப்படி பரபரப்பான விறுவிறுப்பில் பஞ்ச் டயலாக் பேசி அனைத்து பன்றிகளையும் கொன்று விமானத்தை பிடிக்கிறார் இளைய தலைவலி.
இப்படித்தான் எனக்கு எஸ்.எம்.எஸ் ல அனுப்புனாங்க சென்னை முழுவதும் இதுதான் ஹாட் ...(நகைச்சுவைக்காக மட்டும்)
ஐடியா மணி கேட்ட கேள்வி : பன்றிக்காயச்சலுக்கு ஏன் பன்றிகளை கொல்கிறார்?
இன்னும் படம் ரிலீஸ் ஆகும் போது எப்படி எல்லாம் எஸ்.எ.எஸ் வருமோ தெரியவில்லை
தமிழ் சினிமா ஹீரோக்களின் பஞ்ச் மெசேஜ்
|
|
<
|
<
|
|
எது ரொம்ப உங்களுக்கு புடிச்சதுன்னு சொல்லுங்க.
கவிதை இளமைக்காலம், இயற்கை
இதுவொரு இனிய காலம்
இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும்
பட்டாம் பூச்சி போன்று
படபடத்து திரியும் காலம்
பட்டென்று பாசமும்
சட்டென்று காதலும்
நச்சென்று கோபமும்
கூடியே வரும் காலம்
துடி துடிப்புடனே உற்சாகத்துடன்
துள்ளித் திரியும் -ஒரு
இனிமையான காலமது.
இயற்கை
கண்மூடித்தூங்கும் போது அன்னையாகிறாய்
கவிதைகள் எழுதும் போது காதலியாகிறாய்
தவறுகள் தொடுக்கும் போது ஆசனாகின்றாய்
உன்னுள் எத்தனை குழந்தைகள்?
அருவிகளாய்ச் சுமக்கின்றாய்
பசுமையைச் சுமக்கின்றாய்
வனவிலங்குகளைச் சுமக்கின்றாய்
நீயும் ஒரு சுமைதாங்கி !
எத்தனை விஞ்ஞானம் வளர்ந்தாலும்
காலத்தால் அழியாதது கவிசுவடுகள்
இன்றோ காவியச் சுடுகாடுகள்
அத்தனைக்கும் யார் காரணம் ? நான் (மனிதன்)
உன்னை அளிக்கும் நோக்கத்தில் என்னை
அழித்துக் கொள்கின்றேன். ஆருயிரே
அன்பெனும் கேள்வியை நடத்தி பசுமை என்னும்
வரம் தருவாயாக? அல்லது சாபம் தருவாயா?
நாங்கள் விரும்புவது சுந்தரவனக்காடுகள்
சுடுகாடுகள் அல்ல.
நிலவில்லாமல் இரவில் ஒளி இல்லை
நீ ! இல்லாமல் மனித வாழ்வில் ஒளி இல்லை
உன்னுள் அமைதியாய் இருக்கும்போது
ஆடும் மயிலாய் அமைதியாய் மெருகூட்டுகிறாய்
அளிக்கும்போது எரிமலையாய்
விரிசலாய் படமெடுக்கிறாய்
மனிதன் வளர்ந்தது உன்னுள்
மானுடம் வளர்ந்தது உன்னுள்
நாகரிகம் வளர்ந்தது உன்னுள்
ஒவ்வொரு அணுவிலும் உள்ள உன்னை
என் அன்னையாகக் கருதுவதில் தவறில்லை
கறிமேடாய் ஆகின்ற உன்னை காவியச் சுவடுகளாக
மாற்ற இதோ வருகிறது
இன்னொரு மானுடம்.
Friday, August 21, 2009
காதல் உங்களுக்கு வந்துவிட்டதா என்பதை தெரிந்து கொள்ளும் வழிகள் பத்து

காதல் உங்களுக்கு வந்துவிட்டதா என்பதை தெரிந்து கொள்ளும் வழிகள் பத்து

Tuesday, August 18, 2009
கமலுக்கு எப்படி தெரியும்?

கமலுக்கு எப்படி தெரியும்? வைரஸ் தாக்குதல் (பன்றி காய்ச்சல் )பற்றி கமல் ஓராண்டு முன்பே நமக்கு சொல்லிவிட்டார் . தசாவதாரம் மூலம் , அதுமட்டும் அல்லாமல் பல நிகழ்வுகளை நமக்கு சொல்லி இருக்கிறார் இத படித்து பாருங்கள் அப்போது புரியும் . கமலின் தொலைநோக்கு பார்வை.
(1978)- சிவப்பு ரோஜாக்கள் (1979) சைக்கோ ராமன் கைது.

(1988)- சத்யா (1989) இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் .

(1992)- தேவர்மகன் (1993) ஜாதி சண்டைகள் தென் இந்தியாவில்

(1994)-மகாநதி (1996) பல பைனான்ஸ் கம்பெனிகள் மூடப்பட்டன.

(2000)ஹே ராம் (2002) குஜராத்தில் இந்து -முஸ்லீம் பிரச்சனை .

(2003)அன்பே சிவம் (2004) முதல் சுனாமி உலகில் .

(2006)வேட்டையாடு விளையாடு நொய்டா தொடர் கொலைகள்

(2008)தசாவதாரம் வைரஸ் பாதிப்பு (2009) பன்றி காய்ச்சல் வைரஸ் .

கமலுக்கு இவைகள் எல்லாம் நடக்கபோகும் என்பது எப்படி தெரிந்திருக்கிறது பாருங்கள்.
ஆனால் ஐடியா மணி இதற்க்கு கமல் படங்கள் பார்த்து விட்டு தான் இவைகள் நடந்தன என்கிறார்.(கோயமுத்தூர் குசும்பு இவருக்கு அதிகம் பாருங்க)
இவர் இருந்தால் எங்கள் ரூமில் மாட்டியிருக்கும் படங்கள் கூட இவரது பேச்சை ரசிக்கும் என்பது உண்மை)
Sunday, August 16, 2009
Saturday, August 15, 2009
எமனையே கலாய்த்த விஜய்

எமனையே கலாய்த்த விஜய் நகைச்சுவை எஸ்.எம்.எஸ்
எமன்: உன் கடைசி ஆசை என்ன கேள் தருகிறேன்?
விஜய்: நான் நடித்த வில்லு படம் நீங்கள் பார்க்க வேண்டும்.
எமன் : நான் உன்னை கொல்ல வந்தால் நீ என்னை கொல்ல பார்கிறாயா!
விஜய்:??????
(நகைச்சுவைக்காக மட்டும்)
நமக்கான சிந்தனை: தினமும் ஐந்து முறை சோப்பு போட்டு கைகளை சுத்தம் செய்வோம். பன்றி காய்ச்சலை தவிர்ப்போம்.
இந்தியன் ஒவ்வொருவரும் இன்று பார்க்க வேண்டிய வீடியோ
ஆங்கிலேயரை வெறுத்த இந்திய அதிசயம்

Friday, August 14, 2009
பொக்கிஷம் விமர்சனம்

பொக்கிஷம் :
மகன் தனது இன்றைய காதலையும் , அவனது தந்தையின் காதலையும் அழகாக சொல்லி இருக்கும் படம் . ஒரு நிமிடம் வெயிட்டிங் கால் வந்தாலும் ஏவ கூட பேசிட்டு இருந்த என கேட்கும் இன்றைய காதலிக்கும் , காதலன் பிரிவினால் வாழ்வையே இழக்கும் அன்றைய காதலையும் வெளிச்சம் போடு காட்டும் உன்னத காவியம்.
லெனின் கப்பல் பணி அதிகாரி (சேரன் ) முஸ்லீம் பெண் பத்மப்ரியா கல்லூரி மாணவி (1970)ல் நடக்கும் கதை . அப்பா விஜயகுமார் சிகிச்சைக்காக மருத்துவமனை க்கு வருகிறார் அவரை பார்க்க வரும் சேரன் மற்றும் அங்கு அம்மாவின் சிகிச்சைக்கு வரும் பத்மப்ரியா இருவரும் இலக்கியங்களை பற்றி பேசி நட்பை வளர்கின்றனர். வேலைக்காக கொல்கத்தா செல்லும்போது பத்மப்ரியா உறவினர் வீட்டுக்கு சென்று விடுகிறார் . அவரிடம் சொல்லாமல்
வருத்தத்துடன் செல்லும் சேரனுக்கு அப்பா விஜயகுமார் அந்த பெண் தன்னை நன்றாக பார்த்துக்கொண்டார் நன்றி சொல்லி கடிதம் போடும்படி முகவரி அனுப்புகிறார் .
கடிதம் மூலம் காதல் செய்கின்றனர் ,பிறகு அப்பாவுடன் பெண் கேட்க செல்கிறார் சேரன் , சரி பெண்ணை தருகிறேன் என்று சொல்லி அனுப்பி , ஊரை காலிசெய்து சென்று விடுகிறார் பத்மப்ரியா அப்பா .அவர்களை தேடி அலைந்து கிடைக்காததால் அப்பாவுக்காக வேறு பெண்ணை திருமணம் செயகிறார்சேரன் .
சேரன் மகன் சொத்து பத்திரத்தை தேடும் போது சேரனின் கடிதம் ,டைரி படித்து
பத்மப்ரியாவை தேடும் போது எழுதிய கடிதங்களை எப்படி தன் அப்பா நினைவாக பத்மப்ரியாவை கண்டு பிடித்து சேர்க்கிறார் என்பது மீதி கதை .அவர் பத்மப்ரியாவை சந்தித்து தான் சேரன் மகன் அப்பா இறந்து விட்டார் என்று சொல்லும் போதும் , பத்மப்ரியா ஊரை கலி செய்து வந்தபின் என்ன நடந்தது என்பதை அறியும் போது எல்லோர் மனமும் கனக்கிறது.
அருமையான காதல் கதை சில இடங்களில் மட்டும் மெதுவாக செல்கிறது , சேரனின் முகம் தான் வயதான தோற்றம் அளிக்கிறது நடிப்பு அருமை ,பத்மப்ரியா அழகான முஸ்லீம் பெண்ணாக , அருமையான நடிப்பு இறுதிகாட்சியில் வரும் வயதான தோற்றம் மிக அருமை. ஒளிப்பதிவு ,பின்னணி இசை பாராட்டும் படி உள்ளது.
(1970) ல் நடக்கும் அனைத்து காட்சி அமைப்புகளும் அருமை .
காதல் நினவு சின்னம் இந்த பொக்கிஷம் .
குத்துபாட்டு ,ஹீரோ பறந்து வருவது , பஞ்ச் பேசுவது இல்லாமல் மனதை வருடும் படம் சேரனின் கொடியை உயரே பறக்கவிட்ட படம் .
காதலின் அழுத்தத்தை இதைவிட சொல்ல முடியாது. தமிழை தவிர பிற மொழிகளில் இப்படி ஒரு படம் வந்திருந்தால் உலகமே கொண்டாடியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை .

