Tuesday, August 31, 2010
வெள்ளைக்காரர்கள் vs குதுப்மினார் & இயக்குனர் செல்வராகவன்
twitter இல் படித்தவை :
ட்விட்டரில் அன்றாட நிகழ்வுகள் கருத்துக்களை எளிமையாக பகிர்ந்து கொள்ளும் ஒரே real hero , living legent இயக்குனர் செல்வராகவன் அவர்கள் மட்டுமே என்பது ட்விட்டர் பயன்படுத்துபவர்களுக்கு தெரியும் , நேற்று நம் living legent க்கு அப்படி என்ன மன வருத்தமோ ..மிக வருத்தமுடன் ட்விட்டி இருந்தார் .
வாழ்க்கையை ஆர்வமிகுந்ததாக மற்ற யோசனை கூறுங்கள்,நான் என்னுள் வெறுமையாக எண்ணுகிறேன் என்று ...
Can some one please teach me how to find interest in life?? These days I feel so empty inside ..
செல்வா சார் அடுத்த படம் சீக்கிரம் கொடுங்க எல்லாம் சரியாகிவிடும் ...
அவரின் மனவருத்தம் விரைவில் நீங்க பிரார்த்திப்போம் ...
Saturday, August 15, 2009
இந்தியன் ஒவ்வொருவரும் இன்று பார்க்க வேண்டிய வீடியோ
ஆங்கிலேயரை வெறுத்த இந்திய அதிசயம்
இந்திய சுதந்திர தின பதிவு : காந்தி, நேரு,கட்டபொம்மன் ,பாரதி போன்றவர்கள் போராட்டம் பற்றி நமக்கு தெரியும் . இந்திய அதிசயம் ஆங்கிலேயரை எதிர்த்த சுவாரஸ்ய கதை இது.Sunday, July 26, 2009
இன்று கார்கில் நினைவு தினம் (26.07.2009)

கார்கில் போரின் வேறு பெயர் என்ன தெரியுமா?
ஆபரேஷன் விஜய்
இன்று
(26.07.2009) கார்கில் நினைவு தினம் நம் நாட்டுக்காக போராடிய வீரர்களை நினைவு கூறும் தினம் இது . தன் உயிரையும் பொருட் படுத்தாது நாட்டுக்காக உயிர் நீத்த அவர்கள் கூட நமக்கு தெய்வங்கள் தான்.
நமது இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான்
(1999) ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதம் கார்கில் கிராமத்தில் நடத்திய போர் . இறுதியாக நம் ஜவான்களின் தாக்குதலில் நிலை குலைந்து பாகிஸ்தான் மண்ணை கவ்வி ஓடியது .
மே 1999இல் பாகிஸ்தானி இராணுவமும் காஷ்மீரி போராளிகளும் பாகிஸ்தானிலிருந்து கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்தியாவில் நுழைந்தனர். இந்திய வான்படை போராளிகள் மீது தாக்குதல் செய்ததால் அவர்கள் திரும்பி கட்டுப்பாடுக் கோடுக்கு திரும்பினர்.
இந்தியாவிற்கு வெட் பிரகாஷ் மாலிக் , பாகிஸ்தானுக்கு பர்வேஷ் முசரப்பும் கமாண்டர்.இது உலகத்தில் நேரடியாக நடத்தப்பட்ட இரண்டாவது அணு ஆயுத போர் இதுதான் .
இந்திய தரப்பில் முப்பதாயிரம் வீரர்களும் பாகிஸ்தான் தரப்பில் ஐந்தாயிரம் வீரர்களும் கலந்து கொண்டனர் இதிய வீரர்கள் இதில்ஐநூறு பேர் உயிர் துறந்தனர் பாகிஸ்தான் தரப்பில் நான்காயிரம் பேர் பலியாயினர் .இந்திய நவீன ரக ஆயுதங்களை பயன்படுத்தியது. மேலே உள்ள படம் நவீன ரக
கார்கில் போர் என்றால் நமது மேஜர் சரவணன் இன்னும்நினைவுக்கு வருவார் .
இந்த போரினால் பாகிஸ்தானின் பொருளாதாரம் மிக மோசமான நிலையை
அடைந்தது.இந்த போர் முடிந்து அதே ஆண்டு அக்டோபரில் மாதத்தில் பாகிஸ்தான் இராணுவத் தலைவர் முஸாரப் புரட்சி செய்து பிரதமர் நவாஸ் ஸெரிப் ஆட்சியிலிருந்து அகற்றினார்.
கார்கில் வீடியோ தொகுப்பு :
ஜெய் ஹிந்த்
Saturday, July 25, 2009
இந்திய வல்லரசும் சுவிஸ் வங்கி கருப்பு பணமும்
காங்கிரஸ் அரசு வந்து நமது நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சுவிஸ் அரசு பண விவரங்களை தர மறுக்கிறது , மேற்கொண்டு இந்திய அரசு அவர்களிடம் பேசி வருகிறது என்கிறார். கருப்பு பண முதலைகள் மக்களவை உறுப்பினர்களை விலை பேசி இத்தகைய நடவடிக்கையை தடுத்துவிட வாய்ப்பு உண்டு . பெரும்பாலான அரசியல் வாதிகள் கணக்கு வைத்திருப்பதால் நடவடிக்கை சாத்தியமே இல்லை .
இப்போது உள்ள பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இதிய மீள இது தான் ஒரே வழி .இந்த பணம் கிடைத்தால் நம் அனைத்து கடனையும் அடைத்து ,சுமார் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் கொடுக்க முடியுமாம் . இதனால் அனைவரும் தொழில் தொடங்கலாம் , விவசாய கிணறுகள் தோண்டி விவசாயத்தையும் வலுப்படுத்தலாம் , எல்லோருக்கும் கல்வி அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யமுடியும் .
குறிப்பாக ஏழைகளே இல்லாத நாடக நமது பாரதம் மாறும் அப்துல் கலாம் அய்யா அவர்களின் வல்லரசு கனவு ஓரிரு ஆண்டுகளில் நிறைவேறிவிடும் .இன்னும் நல்ல பல திட்டங்களை மக்களுக்காக அரசு செயல்படுத்த முடியும் .
பல நல்ல திட்டங்கள் மூலமாக காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் தரும் ராகுல் காந்தி இதற்கு நல்ல நடவடிக்கை எடுத்தால் , அடுத்து அவர் ஆட்சிக்கு வர மக்களின் பேராதரவு கிடைக்கும் . குடிசை மக்களிடம் நேரில் சென்று அவர்களின் கையால் சாப்பிட்டு அவர்கள் மனதில் இடம் பிடிக்கும் ராகுல் காந்தி அவர்களின் மனதில்நிரந்தர இடம் பிடிக்கவும் , இந்தியவரலாற்றில் அழியா புகழ் பெற, சுவிஸ் வங்கி இந்திய கருப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டுவந்து ராஜீவ் காந்திக்கு பிறகு நேரு குடும்ப பெயரை நிலை நிறுத்தலாம் .
எம்.பி க்களையே விலைக்கு வாங்கி இத்தனை தடுக்க கருப்பு பண முதலைகள் மக்களவையில் இத்தகைய மசோதா நிறைவேறாமல் தடுப்பார்கள் என்பதில் சந்தேகமேஇல்லை . எனவே உடனடியாக குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று அவசர மசோதா நிறைவேற்றவேண்டும் . இதுதான் எல்லா இந்தியர்களின் இப்போதைய ஒரே விருப்பம் .கிரிக்கெட் போட்டியை தூர்தர்சனில் ஒளிபரப்ப காட்டிய ஆர்வத்தை இதில் காட்டலாமே .
காங்கிரஸ் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சி இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துவரும் ராகுல் காந்தியால் மட்டுமே இது முடியும் .
இந்தியா வல்லரசாக மாற சுவிஸ் வங்கியில் இருக்கும் நமது கருப்பு பணத்தை மீட்பதுதான் ஒரே வழி






