Friday, March 19, 2010

2

குழந்தைகளுக்கான Open source Qimo Operating System

  • Friday, March 19, 2010
  •             குழந்தைகளுக்கான  Operating System தான் Qimo  OS.
    இதுஒரு Ubuntu Linux அடிப்படையில்   உருவாக்கப்பட்ட  இலவச os மூன்று வயதிற்கு மேற்ப்பட்ட குழந்தைகள் பயன்புத்தும் வகையில் எளிய  முறையில்  உருவாக்கப்பட்டது . அவர்களுக்கு தேவையான வற்றை தேர்வு செய்ய icon கள் உள்ளன இதனால் குழந்தைகள் எளிதில்  பயன்படுத்தமுடியும்
    குழந்தைகளுக்கான games  களை இன்ஸ்டால் செய்து விளையாட உகந்தது .


                    இதனை Live Cd இல் இருந்து instaal செய்வதால் தனி os போல செயல்படும் உங்கள் குழந்தைகளின் வயதிர்க்கேற்ப game களை  தேர்வு  செய்து இதில் நிறுவலாம் .
    அவர்களுக்கு சிறுவயதில் இருந்தே இதுபோல  Linux  os இல் பழக்கினால் அவர்கள் open source பற்றி அறிந்துகொள்ள முடியும் .
      
    Qimo Os நிறுவ தேவையான Requirements :
    Qims OS Cd
    256MB RAM 
    6GB  hard drive space போதுமானது.

    இங்கு சென்று Qims Os Download செய்து CD ல் write செய்துகொள்ளுங்கள் .


    அடுத்த பதிவில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட os களை  ஒரே நேரத்தில் இயக்க  உதவும் sun virtual box install செய்தவது பற்றி பார்க்கலாம் ..
    Read more...

    Thursday, March 18, 2010

    1

    இலவச photo editing tool pinta 2.0 அறிமுகம் மற்றும் Download

  • Thursday, March 18, 2010
  • pinta 2.0  Painting tool :


                   முதலில் pinta என்றால் என்ன என்று பார்ப்போம் . pinta என்பது எளிமையான  photo editting software. photoshop போன்றது .இது ஒரு இலவச மென்பொருள் என்பது சிறப்பு இதன் தற்போதைய வெளியீடு கூடுதல் சிறப்பு வசதிகளுடன் வந்துள்ள  pinta 2.0 .

    photoshop க்கு மாற்றாக இதனை பயன்படுத்தலாம் இதிலும் அனைத்து வசதிகளும் உள்ளது . எளிமையாக இருப்பதால் நாமே கற்றுக்கொள்ளலாம் .நமது வலைபக்கத்தில் விரும்பியவாறு படங்களை எடிட் செய்து நிறுவலாம்.


                pinta  விண்டோஸ் ,ubuntu, open suse  , mac os  போன்ற அனைத்திலும் பயன்படும்வகையில் உள்ளது உங்கள் os க்கு ஏற்ப தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம் .
    இதனை  Download செய்ய.


    Pinta2.0 Download  free 


    நிச்சயம் இந்த போட்டோ editing tool pinta 2.௦ உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
    pinta மூலம் edit செய்த படங்கள் கீழே பார்க்கலாம்





    Read more...

    Tuesday, March 16, 2010

    1

    சாதித்த Dhoni சாய்ந்த Ganguly

  • Tuesday, March 16, 2010
  •            சென்னை சூப்பர் கிங்க்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே நடந்த போட்டி கங்குலியா ,தோனியா ? நமக்கு பிடித்த 2  அணிகளும் மோதும்போது இன்னும் பரபரப்புதானே? .  சென்னை அணி முதல்போட்டியில் தோற்று முதல்வேற்றியை நோக்கியும் கொல்கத்தா ஹாட்ரிக் வெற்றியை நோக்கியும் களம் இறங்கின . 

    கோப்பையை வெல்லும் அணி எது? என்ற opinion poll ல் சென்னை அடுத்து கொல்கத்தா அணிதான் வாக்குகள் பெற்றுள்ளதை மேலே  காணலாம் , பெரும்பாலானவர்களின் சாய்ஸ் ம்  இவை இரண்டும் தானே ..
    டோஸ் வென்ற சென்னை அணி batting  இல் விஜய் முதல் ஓவரிலேயே மொக்கை போட ஆரம்பித்தார் ,
    ஹைடன் ரைனா இன்றும் ஏமாற்ற பத்ரிநாத் விஜய் ஜோடி டெஸ்ட் போட்டி போல ஆரம்பித்தது , இன்றைய மேட்ச் அவ்வளவுதான் அவ்வளவு மந்தமாக போனது .
        
             விஜய் அவுட் ஆக தோனி வந்ததும் ஸ்கோர் கொஞ்சம் வந்தது , 16  வது ஓவரில் தான் 100  வந்தது இதுதான் ipl3 ல் குறைவான ஸ்கோர் .பந்துவீச்சிற்கு சாதகம் என்பதை அறிந்து அதற்கேற்ப ஆடி கடைசி 4  ஓவரில் தனது விஸ்வரூபம் காட்டி ரன்களை ஜெட் வேகத்திற்கு உயர்த்தினார் .  ஒரே சரவெடி பட்டாசு , சென்னை அணிக்கு டோனி போதும் என்பதுபோல் இருந்தது இன்றைய ஆட்ட நாயகனும் டோனிதான் . , 
              பத்ரி இன்னும் அதிரடி காட்டி இருந்தால் 185 வந்திருக்கும் .பாலாஜி ஓவரிலேயே 50  அடித்து விடுவார்களே என்ற  பயமும் இருந்தது .விஜய் , பத்ரி 20 -20 போட்டிக்கு ஏற்றவாறு அதிரடி காட்டினால்  நன்றாக இருக்கும் .

               கொல்கத்தா முதல் ஓவரிலேயே விக்கெட் இழந்து தடுமாறியது அடுத்து வந்த இரண்டு ஷாஹ்க்கள் அதிரடி காட்டி அவுட் ஆக கங்குலி என்ன செய்வது புரியாமல் அவ்வப்போது ரன் அடித்தார் பாலாஜி இந்து ஏனோ அதிரடி பந்துவீச்சில் 2 விக்கெட் எடுத்து அணியில் தன்னை உறுதிசெய்துகொண்டார் , கோனி ,மோர்கல் என பந்துவீசி கொல்கத்தா அணி தொடர்வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து சுருட்டினர் .

               தோணி தான் சிறந்த கேப்டன் என்பதை மீண்டும் உறுதிசெய்தார் , தோணி அளவிற்கு கங்குலி இடம் நம்பிக்கை இல்லாததே கொல்கத்தா அணி தோல்விக்கு காரணம் . இரண்டு அணிகளுமே விக்கெட் இழந்து போராடியபோது தோணி சிறப்பாக ஆடி ரன் குவித்தார்  சென்னை அணியை விட கொல்கத்தா அணி ரன்கள் விக்கெட் இரண்டிலும் சிறப்பாக இருந்தது .ஆனால் கங்குலி பதட்டத்துடன் விளையாடி ஆட்டம் இழந்தார் .

    இந்திய அணி கேப்டன்களில் சிறப்பானவர் என்ற பெயர் கங்குலிக்கு உண்டு அதனாலேயே பலருக்கும் அவரை பிடிக்கும் ஆனால் தோணி எப்பவுமே பதட்டபடாமல் இருப்பதால் அவரால் இன்னும் சிறப்பாக ஆடி வெற்றி பெறமுடிகிறது அணி எவ்வளவு மோசமான நிலையில் விளையாடினாலும் தன்னால் முடிந்தவரை போராடி வெற்றி பெற முயல்பவர் என மீண்டும் நிருபித்து காட்டினார்  . 
    Mr.cool dhoni..

    இதுவரை நடந்த போட்டியில் குறைந்த ரன்கள்109 எடுத்த அணி கொல்கத்தா அணி தான் . விஜய், பத்ரி பாலாஜி சார் இனியாவது முழு திறமை காட்டி இந்தியா அணியில் இடம்பெற   வாழ்த்துக்கள் ... 
              எப்படியோ இறுதி போட்டியில் இவை மீண்டும் மோதினால் இன்னும் மகிழ்ச்சிதான் .. ஆனால் டெல்லி அணியின் அதிரடி இதை மாற்றிவிட வாய்ப்பும் உண்டு. 

    ஷாக் கொடுத்த பெங்களூர் :
     
    இன்றைய முதல் போட்டியில் பஞ்சாப் அணிதான் மிக பாவம் 203 அடித்தும் பெங்களூர் அணியிடம் தோற்றது .ப்ரீத்தி ஜிந்தா 203 வந்ததும் சந்தோசத்தில் ஆட வழக்கம் போல் சோகமானார் இறுதியில் பெங்களூர் அணி தீபிகா  படுகோனே அழகாக உற்சாகமாக பேட்டி கொடுத்து ப்ரீத்தி ஜிந்தாவை வெறுப்பேற்றினார்  ..


    Read more...
    0

    கூகிள் எப்படி இயங்குகிறது பார்க்கலாம் வாங்க ..

  • இணையதளம் என்றாலே கூகிள் என்றாகிவிட்டது , நாம் கூகிள் இல்  தேடும்போது நமக்கு வேண்டிய தகவழலை எப்படி தேடி தருகிறது , அது போல கூகிள் விளம்பரங்கள் எப்படி இயங்குகின்றன என்று பார்ப்போம் .. 
    கூகிள் தேடல் எப்படி நடைபெறுகிறது

     கூகிள் adsense(விளம்பரங்கள் )  எப்படி இயங்குகின்றன

     கூகிள் app எப்படி   இயங்குகிறது

    Read more...

    Monday, March 15, 2010

    0

    IPL 3 சென்னை சூப்பர் கிங்க்ஸ் கோப்பையை வெல்லுமா ?அணிகளின் நிலவரம் ஓர் அலசல் ..

  • Monday, March 15, 2010


  • ஐ.பி.எல்  திருவிழா பல பிரச்சினைகளுக்கிடையே வெற்றிகரமாகதொடங்கி பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது.இன்றைய முதல் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியை வென்றது.
        இரவு 8 மணிக்கு தொடங்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஹைதராபாத் டெக்கான் அணியிடம் தோற்றது கில்க்ரிஸ்ட் அதிரடி ச்ய்மொண்ட்ஸ் ,கிப்ஸ் கூட்டணி ரன்களை மெதுவாக உயர்த்தியது .

        சென்னை அணியில் பந்துவீச்சு மிக மோசம் முரளி மட்டும் நன்றாக வீசினார் ஏகப்பட்ட wide ,தியாகி ஓவரை விலாசிவிட்டனர் கடைசிபந்தை கெம்ப் வீசி ஓவரை முடித்தார் .வாஸ் முதல் மூன்று விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு உதவினார் தோணி , மோர்கல் மட்டும் சிறப்பாக ஆடினார் .


    ஐ.பி.எல் அணிகளில் சிறந்த அணி எந்த அணிக்கு கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளது என்று பார்ப்போம் .

                வலுவான அணிகள் என்று சொல்லப்படும் ராஜஸ்தான் , டெக்கான் முதல் போட்டியிலேயே தோல்வியடைந்துள்ளன பெரிய எதிர்பார்பிலாத மும்பை , கொல்கத்தா அணிகள் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளன . 
        ராஜஸ்தான்:
             ராஜஸ்தான் அணிக்கு யூசுப் மிகப்பெரிய பலம் ஐ.பி.எல் 3  ஆட்டத்தின் முதல் சத்தத்தை தொட்டவர் அதுவும் 37 பந்துகளில் டெண்டுல்கர்   ஆட்ட இறுதியில் யூசுப் batting ஐ வெகுவாக பாராட்டினார்.இருந்தாலும் இவரை வைத்து எல்லா போட்டிகளையும் வெல்வது என்பது எளிதல்ல.வார்னே,ஸ்மித் இருந்தாலும்தற்போது பலவீனமான அணி.அதெப்படி யூசுப் பதான் ஐ.பி.எல் ல மட்டும் அடியோ அடின்னு அடிக்கிறாரோ தெரியல இந்தியா அணிக்கு இதுல பாதியாவது இனி அடிக்கணும் ..
    பஞ்சாப்:
    யுவராஜ் க்கு பதில் தற்போது சங்கக்கரா கேப்டன் .அணியில் திறமையான வீரர்கள் இருந்தாலும் பெரும்பாலும் அவர்கள் சரியாக விளையாடுவதில்லை அனைவரும் சிறப்பாக விளையாடினால்வாய்ப்பு உண்டு .கைப். ஜெயவர்தேனா அணிக்கு பலவீனம் என்று சொல்லலாம் .
    மும்பை :
    சச்சின் ,ஜெயசூர்யா என்று அதிரடி வீரர்கள் மற்றும் நேற்று நடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய திவாரி  & ராய்டு இருவரும் கூடுதல் பலம் பந்துவீசும் சிறப்பாக உள்ளதால் கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது.
    பெங்களூர் :
    கடந்த ஐ.பி.எல் போட்டியில் சிறப்பாக விளையாடி இறுதி போட்டிவரை வந்த அணி பண்டே , கோஸ்வாமி  என அதிரடி மற்றும் டிராவிட் , காலிஸ் என பட்டிங் வரிசை பந்து வீச்சில் கும்ப்ளே மற்றும் பிரவீன் குமார் இருந்தாலும் சொல்லிக்கொளும் வகையில் சிறப்பாக ஏதும் இல்லை ஏதேனும் magic நடந்தால் வெல்ல வாய்ப்பு. அனைத்து அணிகளைவிட பலவீனமான அணி என்று சொல்லலாம்.
    கொல்கத்தா : 
                கங்குலி மீண்டும் கேப்டன் ஆகி முதல் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டார் ஷாஹ் & mathews  சிறப்பான batting  பந்துவீச்சில் இசா ந்  சர்மா , mathews  ,முரளி கார்த்திக் என பட்டிங்கை இட பந்துவீச்சில் பலம் அதிகம் batting  வலு பெற்றால் வாய்ப்பு உள்ளது .குங்குலி தான் சிறந்த அணி தலைவர் என்று கட்டுவார் என எதிர்பார்க்கலாம் .

    ஹைதராபாத் டெக்கான் :
                  கில்க்ஹ்ரிஸ்ட் அதிரடி ஆட்டம் எவ்வளவு அதிக ரன்களையும் எடுக்கவைக்கும் ஆனால் அடுத்து வரும் கிப்ஸ் ,symonds , ரோஹித் சர்மா கை கொடுத்தால் பலமான அணிகளில் இதுவும் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை ..பந்துவீச்சும் வாஸ் , ஓஜா ,symonds என்று சிறப்பாக உள்ளது .

    டெல்லி :
               புதிய கேப்டன் கெளதம் கம்பீர், சேவாக் , டி வில்லியர்ஸ் , தினேஷ் கார்த்திக்  , டில்ஷான் என்று பலமான பந்துவீச்சு  இந்த அணியிடம் 250 ரன்கள் ஏதாவது ஒரு போட்டியிலாவது எதிர்பார்க்கலாம்  பட்டிங்கில் சிறந்த அணி இதுதான் . பந்துவீச்சுதான் சற்று பலவீனமாக உள்ளது . பந்து வீச்சு கை கொடுத்தால் கண்டிப்பாக கோப்பையை வெல்லும் அணி.

    சென்னை:
                  shane bond ஐ 3 .5  கோடி க்கு வாங்கி சென்னை அணியின் பந்துவீச்சை வலுப்படுத்தயுள்ளனர். ஜஸ்டின் கெம்ப் அதிரடி ஆட்டம் கண்டிப்பாக கை கொடுக்கும் மேலும் டோனி ,ஹய்டன், ரைனா ஆகியோரின் அதிரடிக்கும் பஞ்சம் இருக்காது .
      
       இந்திய அணிக்கு சிறப்பான வெற்றி தேடித்தந்த தோனிக்கு ஐ.பி.எல்லில்  இன்னும் கோப்பையை வெல்ல வாய்ப்பு கிட்டவில்லை .இப்போது சிறந்த அணியாக உள்ளதால்  கோப்பையை வெல்ல வாய்ப்பு இந்த முறை அதிகம்.  mr. cool Dhoni இதனை செய்வார் என்று நம்புவோம் ..
      
              ஹய்டன் ஏதோ வித்தியாசமான பேட் வெச்சி அடிச்சி நொறுக்க போறாரா பார்க்கலாம் அப்டி என்ன அடிக்கிறார்னு . சென்னை அணி இந்த முறை கோப்பையை வெல்ல வாழ்த்துக்கள் ...

    இன்னும் சில வீரர்கள் எல்லா அணிக்கு வந்துசேரவில்லை இன்னும் அவர்கள் வந்தால் ஆட்டம் சூடுபிடிக்கும் 
                ஏப்ரல் 25  வரை பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது .   அன்று தெரிந்துவிடும் யார் ஐ.பி.எல் 3 சாம்பியன் யார் என்று .ஐ.பி.எல் பொறுத்தவரை திறமையைவிட அதிர்ஷ்டம் மிக முக்கியம் எனவே யாராலும் சரியாக கணித்து சொல்லிவிட முடியாது என்பது நிச்சயம்.

             உங்கள் பார்வையில் கோப்பையை வெல்லும் அணி எது என்று வாக்களித்து விட்டு செல்லுங்கள் அப்படியே உங்களின் கருத்துக்களையும் சொல்லுங்கள்  கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல தகவலாக   இருக்கும் .
     + : டெல்லி ,சென்னை, கொல்கத்தா  ,மும்பை.
    -  :  பஞ்சாப் ,பெங்களூர் ,ராஜஸ்தான். 
    + - :ஹைதராபாத் டெக்கான் (50-50 )

    சென்னை  சூப்பர் கிங்க்ஸ் கோப்பையை வென்றுவர மீண்டும் வாழ்த்துக்கள் ....

    அனைத்து போட்டிகளையும் நேரடி ஒளிபரப்பில் காண
    Read more...

    Saturday, March 13, 2010

    3

    பாடல் கேட்டுக்கொண்டு தூங்கும்போது கம்ப்யூட்டரை automatic shutdown செய்வது எப்படி ?

  • Saturday, March 13, 2010
  •           

    ShutDown our computer Automatically...

           இரவிலோ அல்லது தூங்கும்போதோ பாடல்களை கேட்டுக்கொண்டோ அல்லது சினிமா போன்றவற்றை பார்ப்பது பெரும்பாலானவர்களது வழக்கம் டிவி யில் sleeper Time செட் செய்து தூங்கிவிடுவோம் ஆனால் கம்ப்யூட்டர் இல் இந்தவசதி இல்லை எனவே நாம் பாடல்களோ படங்களோ தூங்கும் நேரங்களில் பார்த்தல் அவை இரவு முழுவதும் off ஆகாமல் இயங்கிக்கொண்டே இருக்கும் .

    இந்த குறையை தீர்க்கும் software தான் Goodnight Timer .

                      இந்த software ஐ instaal செய்ததும் படத்தில்  காட்டியவாறு உங்கள் கம்ப்யூட்டர் shutdown செய்யும் நேரத்தை இதில் தேர்வுசெய்துவிடுங்கள் அவ்வளவுதான். உதாரனத்திற்க்கு 20 நிமிடங்கள் என்றால் 20 நிமிடம் கழித்து உங்கள் கம்ப்யூட்டர் shutdown ஆகிவிடும் .

                      இதில் இன்னும் கூடுதல் வசதியாக  நேரம் ஆக ஆக sound அளவை குறைக்கும் வசதியும் உள்ளது படத்தில் காட்டியவாறு sound சிறிது சிறிதாக குறைந்துகொண்டேவரும் உங்களுக்கேற்றவகையில் குறைத்து வைக்கும் வசதி உள்ளது.

    அடுத்தமுறை உங்கள் கம்ப்யூட்டர் on ஆகும்போது sound பழைய நிலைக்கேவந்துவிடும்.

               முக்கிய software ,அல்லது வீடியோ ,சினிமா படங்களை download போட்டுவிட்டு  தூங்குபவர்களுக்கு இது முக்கியமாக பயன்படும் download ஆக எடுத்துகொள்ளும் நேரத்தை கண்டறிந்து அதற்கேற்ப இந்த software  இல்  நேரத்தை set செய்துவிட்டு நிம்மதியாக தூங்கலாம் .... மிகவும் தேவையான software .
    Read more...
    0

    ஐ.பி.எல் தொடக்கவிழா ,முதல்போட்டி ,யு டி யூப் ஒளிபரப்பு மற்றும்லலித் மோடி ..

  • ஐ .பி .எல்  திருவிழா(12th march) இன்று கோலாகலாமாக தொடங்கியது மாவோயிஸ்டுகள் மற்றும்  வார்னே  மிரட்டலை பொருட்படுத்தாது  வெளிநாட்டு வீரர்கள் இல்லாவிட்டாலும் போட்டி நடைபெறும் என சொல்லி   தீபிகா படுகோன் ஆட்டம் , வான வேடிக்கை பிரபல வீரர்கள் கேரி சோபெர்ஸ் , லாரா என விழாவிற்கு என்னென்ன வகையில் சிறப்பாக தொடங்க முடியுமோ அந்த அளவிற்கு அனைத்தையும் செய்து ரசிகர்களை ஐ.பி.எல் பக்கம் திருப்பினார் லலித் மோடி .

    முதல் ஆட்டத்தில் டெக்கான் அணியும் கொல்கத்தா அணியும் மோதின கொல்கத்தா அணிக்கு  ஆரம்பத்திலேயே அதிர்ச்சி டெக்கான் அணிக்கு எதிராக 57 பந்துகளில் 91 எடுத்ததுதான் கங்குலியின் அதிகபட்ச ரன் ஆனால் கங்குலி ,திவாரி   இருவரை டக் அவுட் செய்தார் வாஸ்  . 5 .1 ஓவரில்  4-31
     என்ற நிலையில் இலங்கை  வீரர் ஆங்கிலோ மத்யுஸ் மற்றும் இங்கிலாந்து அணியின்  ஷாஹ்
    இருவரும் அபாரமாக 
    ஆடி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 161 எடுக்க உதவினர் .இந்த ஷாஹ் பாகிஸ்தானில் 
    பிறந்து இங்கிலாந்து அணியில் தற்போது ஆடிவருகிறார்.

    அடுத்து ஆடிய டெக்கான் அதிரடியாக ஆடி தோல்வியடைந்தது கில்க்ரிஸ்ட் மட்டும் 
    அதிகபட்சமாக 34 பந்துகளில்  54 ரன்கள் எடுத்தார் .கில்க்ரிஸ்ட் ஆடியதை பார்க்கும்போது 15 ஓவர்களில் வெற்றிபெறும் நிலையில்இருந்தது. அடுத்து  வந்த கிப்ஸ், சைமெண்ட்ஸ் ,ராகேஷ் சர்மா   அடுத்தடுத்து 
    ஆட்டம் இழக்க 11 ரன்கள்  வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
    முதல்  ஆட்டம் பரபரப்பு இல்லாமல் தொடங்கினாலும் இறுதியில் பரபரப்பை உண்டாக்கியது
    .நாளை மும்பை - ராஜஸ்தான் அணிகளும் பஞ்சாப் - டெல்லி அணிகளும் மோது கின்றன இரண்டு 
    போட்டிகளும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .

    கங்குலி ரன்யேதும் எடுக்காவிட்டாலும்  சிறப்பாக bowler களை   மாற்றி பந்துவீசசெய்து வெற்றி
    பெறவைத்தார் . இல்லாவிட்டால் ஷாருக் அப்துல் ரசாக்கிற்கு போன் போட்டுஅடுத்த போட்டிக்கு  
    வரசொல்லியிருப்பார்  .


    புதிய ஐ.பி.எல் கேப்டன் களாக பொறுப்பேற்றுள்ள சங்கக்கரா & கம்பீர் நாளை என்ன செய்வார்கள்
    என்று தெரிந்துவிடும்.ஐ .பி .எல் you Tube  ல் ஒளிபரப்பினாலும் ஐந்து நிமிடம் தாமதமாக இருப்பதால்
    அவ்வளவாக ரசிக்க முடியவில்லை இணையதளத்தில் ஒளிபரப்பாகும் வீடியோ க்களில் விளபரங்களை
    போட்டு போட்டியை ரசிக்கவிடுவதில்லை கூகிள் விளம்பரம்போதாது என்று Clicksor 
    விளம்பரங்கள் . ஒன்றிக்கு மேற்பட்ட சேனல்கள் இருந்தாலும் விளம்பரங்களை போட  
    அவற்றை அடிக்கடிநிறுத்திவிடுகின்றனர் .

    முடிந்தவரை சிறந்த சேனல் வீடியோ க்களை இந்த வலை பக்கத்தில் தரமுயற்சிக்கிறேன் .. 
    ரஜாக் ,அப்ரிடி, தன்வீர் ஆகியோர் இல்லாதது எல்லோருக்கும் சற்று ஏமாற்றமே ..ஞாயிற்று கிழமைதான்
    சென்னை சூப்பர் கிங்க்ஸ் முதல் போட்டி தொடங்குகிறது டெக்கான் அணிக்கு எதிராக . சென்னை அணியில்  
    ஜஸ்டின் கெம்ப் கூடுதல் பலம் என்பது நிச்சயம் ..

    Read more...

    Thursday, March 4, 2010

    2

    ஹாக்கி இந்தியாவின் உலககோப்பை கனவை தகர்த்த ஸ்பெயின்

  • Thursday, March 4, 2010

    • உலக கோப்பை ஹாக்கி யில்  இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை (4-1), வென்றது. ஆனால் ஆஸ்திரேலியாவுடன் (2-5) மோசமாக தோல்வியடைந்ததை தொடர்ந்து .  இன்று 4th March ஆவலுடன்  ய்திர்பார்க்கபட்டால்  லீக் போட்டியில் இந்திய அணி, இன்று ஸ்பெயினுடன் மோதியது அரையிறுதியில் நுழைய இந்தப்போட்டியில் வேன்றாகவேண்டிய அவசியம் இந்திய அணிக்கு .


      ஆட்டம் துவங்கியதிலிருந்தே இவ்விரு அணிகளும் விறுவிறுப்பாக விளையாடின , ஆனால் இந்தியா அணி ஸ்பெயின் அணிக்கு ஈடுகொடுக்கமுடியவில்லை , குறிப்பாக இந்தியா அணிக்கு பெனால்டி வாய்ப்பை பெற முடியவில்லை ஆனால்  அதனை ஸ்பெயின் சரியாக செய்தது .
       
    • முதல் பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.இறுதியில் ஸ்பெயின் அணி 5 கோல் அடித்தது. இந்தியா 2 கோல் அடித்தது. இதன்படி ஸ்பெயின் அணி 5-2 என்ற கோல் விகிதத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
    • இந்தியத்தரப்பில் சந்தீப்   சிங் , chandi ஆகியோர் தலா ஒரு கோல் போட்டனர். 
    • ஆஸ்திரேலியா , ஜெர்மன் அணிகளை ஒப்பிடும்போது இந்தியா அணியில் சிறப்பாக விளையாடுபவர்கள் 6  வீரர்கள் மட்டுமே என்று சொல்லலாம் . இதுதான் தோல்விக்கு முக்கிய காரணம் .
    இன்று நடைபெற்ற பிற ஆட்டங்களின் விபரம் :
    அசத்திய ஆஸ்திரேலியா :
     ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்க இடையே நடைபெற்ற  முதல் ஆட்டத்தில் 12-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது. ஆஸ்திரேலியா  முதல் பாதியில் 4-0 என  முன்னிலைபெற்றது , இரண்டாவது பாதியில் மேலும் 8 கோல்களை போட்டு, 12-0 என தென்னாப்ரிக்காவை சுருட்டியது.


    மற்றொரு போட்டியில் இங்கிலாந்து பாகிஸ்தானை 5-2 என்ற கோல்கணக்கில் வென்றது.


    இதனால் இந்தியாவின் உலககோப்பை கனவு கிட்டத்தட்ட தகர்ந்துவிட்டது எனலாம் .
    Read more...

    Tuesday, March 2, 2010

    2

    ஆஸ்திரேலியாவிடம் சுருண்ட இந்தியா

  • Tuesday, March 2, 2010
  • நேற்று முன்தினம் நடந்த முதல் லீக் போட்டியில் இந்திய அணி,  பாகிஸ்தானை 4-1 என்ற கணக்கில், வீழ்த்திய உற்சாகத்தில் இன்று தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஸ்திரேலியாவை சந்தித்தது.



                    டில்லியில் நடக்கும் உலககோப்பை ஹாக்கி போட்டியின் 3வது போட்டியில் இந்தியா ஆஸ்‌திரேலியா அணிகள் இன்று 2nd march இரவு 8 :30 மணிக்கு  மோதின. பாகிஸ்தானை எளிதில் வென்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தடுமாறியது ஆஸ்திரேலியா வீரர்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாமல் ஆடியது ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியாவின் கை ஓங்கி இருந்தது  .இறுதிவரை ஆட்டம் oneside game ஆகவே இருந்தது .
    ஆட்டமுடிவில்  ஆஸ்திரேலியா 5-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்தது.

                மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் ஸ்பெயினை வென்றது .1972 ம் ஆண்டு முதல் இதுவரை இந்தியா அணி தொடர்ந்து  இரண்டு முறை வென்றது இல்லை என்பது வருந்தக்கூடிய செய்தி ..முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பாராட்டும் பரிசும் கிடைத்தும் இன்று தோற்றது ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் இருந்தது .

    இன்று  நடந்த  போட்டிகளின்  முடிவுகள்  விபரம் :

    6-4 என்ற கோல் கணக்கில்  இங்கிலாந்து தென்ஆப்ரிக்காவையும்  

    பாகிஸ்தான்  2 - 1 ல்  ஸ்பெயினையும் 

     5 -2 ல்  ஆஸ்திரேலியா இந்தியாவையும் வீழ்த்தின .
    Read more...

    Subscribe