Monday, March 15, 2010

0

IPL 3 சென்னை சூப்பர் கிங்க்ஸ் கோப்பையை வெல்லுமா ?அணிகளின் நிலவரம் ஓர் அலசல் ..

  • Monday, March 15, 2010
  • Share


  • ஐ.பி.எல்  திருவிழா பல பிரச்சினைகளுக்கிடையே வெற்றிகரமாகதொடங்கி பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது.இன்றைய முதல் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியை வென்றது.
        இரவு 8 மணிக்கு தொடங்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஹைதராபாத் டெக்கான் அணியிடம் தோற்றது கில்க்ரிஸ்ட் அதிரடி ச்ய்மொண்ட்ஸ் ,கிப்ஸ் கூட்டணி ரன்களை மெதுவாக உயர்த்தியது .

        சென்னை அணியில் பந்துவீச்சு மிக மோசம் முரளி மட்டும் நன்றாக வீசினார் ஏகப்பட்ட wide ,தியாகி ஓவரை விலாசிவிட்டனர் கடைசிபந்தை கெம்ப் வீசி ஓவரை முடித்தார் .வாஸ் முதல் மூன்று விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு உதவினார் தோணி , மோர்கல் மட்டும் சிறப்பாக ஆடினார் .


    ஐ.பி.எல் அணிகளில் சிறந்த அணி எந்த அணிக்கு கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளது என்று பார்ப்போம் .

                வலுவான அணிகள் என்று சொல்லப்படும் ராஜஸ்தான் , டெக்கான் முதல் போட்டியிலேயே தோல்வியடைந்துள்ளன பெரிய எதிர்பார்பிலாத மும்பை , கொல்கத்தா அணிகள் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளன . 
        ராஜஸ்தான்:
             ராஜஸ்தான் அணிக்கு யூசுப் மிகப்பெரிய பலம் ஐ.பி.எல் 3  ஆட்டத்தின் முதல் சத்தத்தை தொட்டவர் அதுவும் 37 பந்துகளில் டெண்டுல்கர்   ஆட்ட இறுதியில் யூசுப் batting ஐ வெகுவாக பாராட்டினார்.இருந்தாலும் இவரை வைத்து எல்லா போட்டிகளையும் வெல்வது என்பது எளிதல்ல.வார்னே,ஸ்மித் இருந்தாலும்தற்போது பலவீனமான அணி.அதெப்படி யூசுப் பதான் ஐ.பி.எல் ல மட்டும் அடியோ அடின்னு அடிக்கிறாரோ தெரியல இந்தியா அணிக்கு இதுல பாதியாவது இனி அடிக்கணும் ..
    பஞ்சாப்:
    யுவராஜ் க்கு பதில் தற்போது சங்கக்கரா கேப்டன் .அணியில் திறமையான வீரர்கள் இருந்தாலும் பெரும்பாலும் அவர்கள் சரியாக விளையாடுவதில்லை அனைவரும் சிறப்பாக விளையாடினால்வாய்ப்பு உண்டு .கைப். ஜெயவர்தேனா அணிக்கு பலவீனம் என்று சொல்லலாம் .
    மும்பை :
    சச்சின் ,ஜெயசூர்யா என்று அதிரடி வீரர்கள் மற்றும் நேற்று நடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய திவாரி  & ராய்டு இருவரும் கூடுதல் பலம் பந்துவீசும் சிறப்பாக உள்ளதால் கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது.
    பெங்களூர் :
    கடந்த ஐ.பி.எல் போட்டியில் சிறப்பாக விளையாடி இறுதி போட்டிவரை வந்த அணி பண்டே , கோஸ்வாமி  என அதிரடி மற்றும் டிராவிட் , காலிஸ் என பட்டிங் வரிசை பந்து வீச்சில் கும்ப்ளே மற்றும் பிரவீன் குமார் இருந்தாலும் சொல்லிக்கொளும் வகையில் சிறப்பாக ஏதும் இல்லை ஏதேனும் magic நடந்தால் வெல்ல வாய்ப்பு. அனைத்து அணிகளைவிட பலவீனமான அணி என்று சொல்லலாம்.
    கொல்கத்தா : 
                கங்குலி மீண்டும் கேப்டன் ஆகி முதல் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டார் ஷாஹ் & mathews  சிறப்பான batting  பந்துவீச்சில் இசா ந்  சர்மா , mathews  ,முரளி கார்த்திக் என பட்டிங்கை இட பந்துவீச்சில் பலம் அதிகம் batting  வலு பெற்றால் வாய்ப்பு உள்ளது .குங்குலி தான் சிறந்த அணி தலைவர் என்று கட்டுவார் என எதிர்பார்க்கலாம் .

    ஹைதராபாத் டெக்கான் :
                  கில்க்ஹ்ரிஸ்ட் அதிரடி ஆட்டம் எவ்வளவு அதிக ரன்களையும் எடுக்கவைக்கும் ஆனால் அடுத்து வரும் கிப்ஸ் ,symonds , ரோஹித் சர்மா கை கொடுத்தால் பலமான அணிகளில் இதுவும் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை ..பந்துவீச்சும் வாஸ் , ஓஜா ,symonds என்று சிறப்பாக உள்ளது .

    டெல்லி :
               புதிய கேப்டன் கெளதம் கம்பீர், சேவாக் , டி வில்லியர்ஸ் , தினேஷ் கார்த்திக்  , டில்ஷான் என்று பலமான பந்துவீச்சு  இந்த அணியிடம் 250 ரன்கள் ஏதாவது ஒரு போட்டியிலாவது எதிர்பார்க்கலாம்  பட்டிங்கில் சிறந்த அணி இதுதான் . பந்துவீச்சுதான் சற்று பலவீனமாக உள்ளது . பந்து வீச்சு கை கொடுத்தால் கண்டிப்பாக கோப்பையை வெல்லும் அணி.

    சென்னை:
                  shane bond ஐ 3 .5  கோடி க்கு வாங்கி சென்னை அணியின் பந்துவீச்சை வலுப்படுத்தயுள்ளனர். ஜஸ்டின் கெம்ப் அதிரடி ஆட்டம் கண்டிப்பாக கை கொடுக்கும் மேலும் டோனி ,ஹய்டன், ரைனா ஆகியோரின் அதிரடிக்கும் பஞ்சம் இருக்காது .
      
       இந்திய அணிக்கு சிறப்பான வெற்றி தேடித்தந்த தோனிக்கு ஐ.பி.எல்லில்  இன்னும் கோப்பையை வெல்ல வாய்ப்பு கிட்டவில்லை .இப்போது சிறந்த அணியாக உள்ளதால்  கோப்பையை வெல்ல வாய்ப்பு இந்த முறை அதிகம்.  mr. cool Dhoni இதனை செய்வார் என்று நம்புவோம் ..
      
              ஹய்டன் ஏதோ வித்தியாசமான பேட் வெச்சி அடிச்சி நொறுக்க போறாரா பார்க்கலாம் அப்டி என்ன அடிக்கிறார்னு . சென்னை அணி இந்த முறை கோப்பையை வெல்ல வாழ்த்துக்கள் ...

    இன்னும் சில வீரர்கள் எல்லா அணிக்கு வந்துசேரவில்லை இன்னும் அவர்கள் வந்தால் ஆட்டம் சூடுபிடிக்கும் 
                ஏப்ரல் 25  வரை பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது .   அன்று தெரிந்துவிடும் யார் ஐ.பி.எல் 3 சாம்பியன் யார் என்று .ஐ.பி.எல் பொறுத்தவரை திறமையைவிட அதிர்ஷ்டம் மிக முக்கியம் எனவே யாராலும் சரியாக கணித்து சொல்லிவிட முடியாது என்பது நிச்சயம்.

             உங்கள் பார்வையில் கோப்பையை வெல்லும் அணி எது என்று வாக்களித்து விட்டு செல்லுங்கள் அப்படியே உங்களின் கருத்துக்களையும் சொல்லுங்கள்  கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல தகவலாக   இருக்கும் .
     + : டெல்லி ,சென்னை, கொல்கத்தா  ,மும்பை.
    -  :  பஞ்சாப் ,பெங்களூர் ,ராஜஸ்தான். 
    + - :ஹைதராபாத் டெக்கான் (50-50 )

    சென்னை  சூப்பர் கிங்க்ஸ் கோப்பையை வென்றுவர மீண்டும் வாழ்த்துக்கள் ....

    அனைத்து போட்டிகளையும் நேரடி ஒளிபரப்பில் காண

    0 Responses to “IPL 3 சென்னை சூப்பர் கிங்க்ஸ் கோப்பையை வெல்லுமா ?அணிகளின் நிலவரம் ஓர் அலசல் ..”

    Subscribe