Showing posts with label hockey. Show all posts
Showing posts with label hockey. Show all posts

Tuesday, March 2, 2010

2

ஆஸ்திரேலியாவிடம் சுருண்ட இந்தியா

  • Tuesday, March 2, 2010
  • நேற்று முன்தினம் நடந்த முதல் லீக் போட்டியில் இந்திய அணி,  பாகிஸ்தானை 4-1 என்ற கணக்கில், வீழ்த்திய உற்சாகத்தில் இன்று தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஸ்திரேலியாவை சந்தித்தது.



                    டில்லியில் நடக்கும் உலககோப்பை ஹாக்கி போட்டியின் 3வது போட்டியில் இந்தியா ஆஸ்‌திரேலியா அணிகள் இன்று 2nd march இரவு 8 :30 மணிக்கு  மோதின. பாகிஸ்தானை எளிதில் வென்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தடுமாறியது ஆஸ்திரேலியா வீரர்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாமல் ஆடியது ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியாவின் கை ஓங்கி இருந்தது  .இறுதிவரை ஆட்டம் oneside game ஆகவே இருந்தது .
    ஆட்டமுடிவில்  ஆஸ்திரேலியா 5-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்தது.

                மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் ஸ்பெயினை வென்றது .1972 ம் ஆண்டு முதல் இதுவரை இந்தியா அணி தொடர்ந்து  இரண்டு முறை வென்றது இல்லை என்பது வருந்தக்கூடிய செய்தி ..முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பாராட்டும் பரிசும் கிடைத்தும் இன்று தோற்றது ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் இருந்தது .

    இன்று  நடந்த  போட்டிகளின்  முடிவுகள்  விபரம் :

    6-4 என்ற கோல் கணக்கில்  இங்கிலாந்து தென்ஆப்ரிக்காவையும்  

    பாகிஸ்தான்  2 - 1 ல்  ஸ்பெயினையும் 

     5 -2 ல்  ஆஸ்திரேலியா இந்தியாவையும் வீழ்த்தின .
    Read more...

    Sunday, February 28, 2010

    3

    உலக கோப்பை ஹாக்கி இந்திய அணி, பாகிஸ்தானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது

  • Sunday, February 28, 2010
  • Hockey World Cup 2010: India beat Pakistan 4-1

    உலக கோப்பை ஹாக்கி தொடரில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய . பரபரப்பான இப்போட்டியில் இந்திய அணி, தொடரை வெற்றியுடன் துவக்கயுள்ளது   .
    டில்லியில் 12வது உலக கோப்பை ஹாக்கி தொடர் இன்றுதுவங்கியது  . இதில் "பி' பிரிவில் நடந்த  லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது .
    முதல் பாதியில் இந்தியா அணி கிடைத்த மூன்று பெனால்டி வாய்ப்பில்  2 கோல் அடித்து முன்னிலை வகித்தது .
    கோல் விபரம்:
    சந்தீப்  (35, 57 வது நிமிடத்திலும் ), ஷிவேந்திர  சிங்க்  (27 mint)  பிரப்ஜோத்  சிங்க்  (37mint) இந்தியா அணியிலும் , பாகிஸ்தான் அணி சார்பில் சொஹைல்   அப்பாஸ் (59mint) கோல் அடித்தனர்..


    ஆட்டம் முடியும் வரை இந்தியா அணியே ஆதிக்கம் செலுத்தியது , இறுதியாக ஒரு கோல் போட்டது பாகிஸ்தான் .சந்தீப் சிங்   ஆட்டம் மிக அருமையாக இருந்தது , அவர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    . இதற்க்கு முன்  அர்ஜென்டினாவில் நடந்த "சாம்பியன்ஸ் சாலஞ்ச்' தொடரின் அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் 3-6 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இதற்கு,  பலிதீர்த்துக்கொண்டது.
     இணையதளத்தில் அவ்வப்போது ஸ்கோர் நிலவரம் தெரிந்துகொள்ள வலைத்தளங்கள் இல்லை என்பது வருத்ததிற்குரிய செய்தி .

    இன்று நடந்த பிற ஆட்டங்களில் சுவீடன்-சவுத் ஆப்ரிக்கா வையும் , . ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன .
    புள்ளி விபரப்படி இந்தியா முதலிடத்திலும் பாகிஸ்தான் ஆறாவது இடத்திலும் உள்ளது .
    Read more...

    Subscribe