Friday, October 30, 2009

2

Laptop திருடப்பட்டால் அதை எப்படி கண்டறியலாம் முக்கியத்தகவல்களை எப்படி பாதுகாக்கலாம்?

  • Friday, October 30, 2009
  • Share

  •                 லேப்டாப் என்பது நமது தோழன் போல எப்பொழுதும் கூடவே இருக்கும் ஒன்றாகிவிட்டது. US Airpotrt ல் ஒவ்வொரு வாரமும் சுமார் 12,000 Laptop கள் காணாமல் போகின்றனவாம் என்று DELL இணையதளம் வெளியிட்டுள்ளது .இதனால் அதிலுள்ள முக்கிய தகவல்கள் திருடப்படுகின்றன .  காணாமல் போன Laptop ஐ எப்படி கண்டறியலாம் , அதிலுள்ளதகவல்களை எப்படி பாதுகாக்கலாம் என்று பார்ப்போம் .

    இதற்கு LAlarm என்ற இலவச software ஐ Download செய்து உங்கள் Laptop ல் நிறுவிக்கொள்ளுங்கள் XP,Vista போன்றவற்றிற்கு இது சரியான தேர்வு . Windows 7 OS வைத்திருப்பவர்கள் புதிதாக வந்துள்ள Beta version 5.0தேர்வு செய்துகொள்ளுங்கள் .

                   Instal செய்தபின் அதில் உள்ள option தேர்வு செய்து கீழ்க்கண்டவற்றை தேர்வு செய்யுங்கள்
     முதலில்


    படத்தில் கண்டவாறு Alaram option தேர்வு செய்து Unsafe Zone ல் உங்களுக்கு ஏற்றவாறு சில நிமிடங்களுக்கு ஒருமுறை alaram ஏற்படும்படி நிறுவுங்கள் .


     Laptop உங்கள்  I.P இல்லாமல் பிற I.P ல்  அலாரம் அடிக்க 

    இதற்க்கு கீழ்க்கண்ட படத்திலுள்ளபடி உங்கள் I.P ஐ நிறுவுங்கள் திருடிய நபர் வேறு I.P ஐ பயன்படுத்தும்போது அலாரம் எழுப்பும். அலாரத்தை உங்கள் விருப்பம்போல் தேர்வு செய்யும் வசதியும் உண்டு.

    சரி திருடிய நபர் பக்கத்தில் இருந்தால் தானே இந்தமுறை உபயோகப்படும் , வேறு இடத்தில் இருந்தால் எப்படி ?
    Mail & Mobile (Alert)மூலம் தகவல் அனுப்பும் வசதி:
               இந்தமுறைப்படி நமது மெயில் ID , Password போன்றவற்றை பதிவு செய்தால் முதலில் நமது mail ID க்கு Test Mail முதலில் அனுப்புவார்கள் திருடப்பட்டு வேறு IP ல் இயங்கும் போது Alert Message அனுப்பிவிடும் .     இதேபோல் மொபைல் எண்ணை  இங்கு Click செய்து கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி பதிவுசெய்தால் Mobile Alert செய்தி வந்துவிடும்.
     
    மேற்கண்ட இரண்டு முறைப்படியும் Laptop கண்டறியமுடியவில்லை அதில் முக்கிய தகவல்கள் உள்ளன அவற்றை திருடிய நபருக்கு கிடைக்காமல் செய்யவேண்டும் எப்படி என்று பார்ப்போம் .

     (Destroy Data Automatically In Case Of Theft)

                                                     இதற்கும் வசதி உண்டு Recovery தேர்வு செய்து முக்கிய தகவல் உள்ள Foder களை தேர்வு செய்துவிடுங்கள் திருடியவருக்கு கிடைக்காமல் தகவல்கள் தானே அழிந்துவிடும்.




                 மேலும் இதில் Laptop Battery , Disk பாதுகாப்பு வசதியும் உண்டு                              ( Disk and Battery Production) என்பது கூடுதல் சிறப்பு , உங்கள் Laptop Lowbattery நிலைக்கு வரும் முன் Alaram எழுப்பும் , ஏதாவது Disk Failure ஆகும்போதும் alaram எழுப்பும் . சிறப்பான பாதுகாப்பு ஒரு MB க்கு குறைவான அளவே இந்த  சிறப்பான இலவச software எனது Laptop ல் நிறுவிபார்த்துதான் இதனை உங்களுக்கு பரிந்துரைசெய்கிறேன் .



    2 Responses to “Laptop திருடப்பட்டால் அதை எப்படி கண்டறியலாம் முக்கியத்தகவல்களை எப்படி பாதுகாக்கலாம்?”

    புதிய மனிதா said...
    October 30, 2009 at 1:16 AM

    நன்றி கேபிள் அண்ணா உடனடி வருகைக்கு .


    சிட்டுக்குருவி said...
    December 2, 2009 at 10:17 AM

    நல்ல தகவல்


    Subscribe