Saturday, July 25, 2009

3

இந்திய வல்லரசும் சுவிஸ் வங்கி கருப்பு பணமும்

  • Saturday, July 25, 2009
  • Share
  • சுவிஸ் வங்கியில் இருக்கும் நமது கருப்பு பண முதலைகளின் பணங்களை இந்தியாவிற்கு கொண்டுவர இது வரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட வில்லை .அத்வானி தனது தேர்தல் அறிக்கையில் பா. ஜா. ஆட்சிக்கு வந்தால் அந்த பணம் இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் என்றார் . அதன் பிறகு தேர்தல் முடிவுகள் அதற்கு முடிவுகட்டி விட்டது .


    காங்கிரஸ் அரசு வந்து நமது நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சுவிஸ் அரசு பண விவரங்களை தர மறுக்கிறது , மேற்கொண்டு இந்திய அரசு அவர்களிடம் பேசி வருகிறது என்கிறார். கருப்பு பண முதலைகள் மக்களவை உறுப்பினர்களை விலை பேசி இத்தகைய நடவடிக்கையை தடுத்துவிட வாய்ப்பு உண்டு . பெரும்பாலான அரசியல் வாதிகள் கணக்கு வைத்திருப்பதால் நடவடிக்கை சாத்தியமே இல்லை .

    இப்போது உள்ள பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இதிய மீள இது தான் ஒரே வழி .இந்த பணம் கிடைத்தால் நம் அனைத்து கடனையும் அடைத்து ,சுமார் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் கொடுக்க முடியுமாம் . இதனால் அனைவரும் தொழில் தொடங்கலாம் , விவசாய கிணறுகள் தோண்டி விவசாயத்தையும் வலுப்படுத்தலாம் , எல்லோருக்கும் கல்வி அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யமுடியும் .

    குறிப்பாக ஏழைகளே இல்லாத நாடக நமது பாரதம் மாறும் அப்துல் கலாம் அய்யா அவர்களின் வல்லரசு கனவு ஓரிரு ஆண்டுகளில் நிறைவேறிவிடும் .இன்னும் நல்ல பல திட்டங்களை மக்களுக்காக அரசு செயல்படுத்த முடியும் .


    பல நல்ல திட்டங்கள் மூலமாக காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் தரும் ராகுல் காந்தி இதற்கு நல்ல நடவடிக்கை எடுத்தால் , அடுத்து அவர் ஆட்சிக்கு வர மக்களின் பேராதரவு கிடைக்கும் . குடிசை மக்களிடம் நேரில் சென்று அவர்களின் கையால் சாப்பிட்டு அவர்கள் மனதில் இடம் பிடிக்கும் ராகுல் காந்தி அவர்களின் மனதில்நிரந்தர இடம் பிடிக்கவும் , இந்தியவரலாற்றில் அழியா புகழ் பெற, சுவிஸ் வங்கி இந்திய கருப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டுவந்து ராஜீவ் காந்திக்கு பிறகு நேரு குடும்ப பெயரை நிலை நிறுத்தலாம் .


    எம்.பி க்களையே விலைக்கு வாங்கி இத்தனை தடுக்க கருப்பு பண முதலைகள் மக்களவையில் இத்தகைய மசோதா நிறைவேறாமல் தடுப்பார்கள் என்பதில் சந்தேகமேஇல்லை . எனவே உடனடியாக குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று அவசர மசோதா நிறைவேற்றவேண்டும் . இதுதான் எல்லா இந்தியர்களின் இப்போதைய ஒரே விருப்பம் .கிரிக்கெட் போட்டியை தூர்தர்சனில் ஒளிபரப்ப காட்டிய ஆர்வத்தை இதில் காட்டலாமே .


    காங்கிரஸ் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சி இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துவரும் ராகுல் காந்தியால் மட்டுமே இது முடியும் .


    இந்தியா வல்லரசாக மாற சுவிஸ் வங்கியில் இருக்கும் நமது கருப்பு பணத்தை மீட்பதுதான் ஒரே வழி

    3 Responses to “இந்திய வல்லரசும் சுவிஸ் வங்கி கருப்பு பணமும்”

    சம்பத் said...
    July 25, 2009 at 3:30 AM

    நல்ல சிந்தனை நண்பா...


    புதிய மனிதா.. said...
    July 25, 2009 at 3:41 AM

    மிக்க நன்றி சம்பத்


    Muyalubavar said...
    January 30, 2011 at 9:14 AM

    ஏதோ தேட சென்று எனக்கு, உங்கள் வளைதளத்தை தவறுதலாக வந்து விட்டேன். இருந்தும் நீங்கள் போட்ட செய்தியைப் பார்த்தப்பிறகு பதில் கொடுக்காமல் வெளியே வரப் பிடிக்கவில்லை. பதிவேற்றி பல காலமானாலும், பதில் சொல்ல இதுவும் தருணமாகவே கருதி, ஒரு சில கட்டுரைகளின் லிங்குகளை இதனுடன் இடுகிறேன். இதுப்போன்று அப்பாவிகளாகப் பேசியதன் பயன் பல லட்சம் கோடிகள் கொள்ளைப் போவதும், 2 லட்சம் விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளில் வறுமையின் பிடியில் தள்ளி இறந்துள்ளனர். ராகுல் காந்திக்கு சுவிஸில் மட்டும் ரூ.40 ஆயிரம் கோடிகள் இருக்கிறது. நாம் அறிந்து 40 என்றால், அறியாமல் எவ்வளவு?!! இன்னும் அவர்கள் குடும்பத்தில் மற்றவர்கள் எவ்வளவு வைத்துள்ளார்களோ?!! இந்த பணம் அத்தனையும் நாட்டின் நலனை காட்டிக் கொடுத்தால் வந்தவை.
    இதனால் மற்ற கட்சிகள் என்ன யோகியமா என்று கேட்கலாம்... கட்டாயமாக இல்லை. எல்லா பாரளுமன்ற கட்சிகளும் இப்படித்தான். இந்த பன்றித்தொழுவத்தில் இருக்கும் பன்றிகள் எதுவும் சேற்றில் இறங்கவில்லை என்று அடுத்து கூறினால், பாவம் நீங்கள் சேற்றில் உள்ளீர்கள் என்றுதானே அர்த்தம்...
    தேவை ஒரு விடுதலைப் போராட்டம்.. இந்த ஆளும் தரகு முதலாளித்துவ கும்பல்களிலிடமிருந்து, இந்த அரசியல்வாதிகளிடமிருந்து மற்றும் அமெரிக்காவிடம் அடிமைப்படுத்தலிலிருந்து....

    http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=343139&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=

    http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=India&artid=363147&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF...%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF...!


    Subscribe