Wednesday, July 1, 2009
3
சினிமா வருமானத்தில் 10% ஏழைகளுக்கு ஒதுக்க சூர்யா முடிவு
அடுத்த படம் முதல் தனது சம்பளத்தில் இருந்து பத்து சதவீதத்தை ஏழை, எளியவர்களுக்காக உதவும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் அளிக்கப் போவதாக நடிகர் சூர்யா கூறினார். குடிசை வாசிகள், ஏழை, எளியவர்கள், ஆதரவற்றோர் உள்ளிட்டோருக்கு அந்த பணத்தை செலவிடப்போவதாக தெரிவித்தார். மாதத்துக்கு ஒரு முறை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் நேரத்தை செலவிடப் போவதாகத் தெரிவித்தார் நடிகர் சூர்யா. இந்தியாவில் உள்ள ஏழை எளியவர்களுக்கு உதவும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் நிதி திரட்டும் நிகழ்வுக்கான அறிமுக நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்கிழமை (ஜூன் 30) நடைபெற்றது. கிவ் இந்தியா அமைப்பு இந்நிகழ்ச்சியை நடத்தியது. "கொடுத்தலில் மகிழ்ச்சி வாரம்' என்ற நிகழ்ச்சி இந்தியா முழுவதும் செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பிரபலங்கள், நிறுவனங்கள், தனி நபர் ஆகியோர் நிதி திரட்டுவர். அப்பல்லோ குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, அப்பல்லோ மருத்துவமனையின் மூலம் ஏழை, எளியவர்களுக்கு உதவும் வண்ணம் உறுப்பு தானம் செய்ய வலியுறுத்தினார். ஓரியன்டல் குசின்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மகாதேவன் "" செப்டம்பர் 30 தேதி பிரதான ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சேர்ந்து உணவுத் திருவிழா நடத்தவுள்ளது. இந்த நிதி தமிழ்நாட்டில் உள்ள 100க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகளுக்கு வழங்கப்படும்'' என்றார். இதன் ஒரு பகுதியாக, கூன்ச் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் நாடு முழுவதும் நல்ல நிலையில் உள்ள பழைய துணிகளை சேகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
3 Responses to “சினிமா வருமானத்தில் 10% ஏழைகளுக்கு ஒதுக்க சூர்யா முடிவு”
July 1, 2009 at 7:49 PM
good.
July 1, 2009 at 8:02 PM
good work by suria
July 1, 2009 at 8:18 PM
Great!! This kinda of news should get lot of press so it influences lot other people as well.
Post a Comment