Sunday, April 25, 2010

0

ஐ.பி.எல் சென்னை அணி இனி தேவையா?

  • Sunday, April 25, 2010
  • அப்பாடா சென்னை கோப்பையை வாங்கிவிட்டது .. ஐ.பி.எல் திருவிழா இன்றுடன் முடிவடைந்தது  சூதாட்டம் , ஊழல் என பல பிரச்சினைகளை சந்தித்தாலும் அதனை பொழுதுபோக்காக மட்டும் கருதும் வரை ரசிக்கலாம் .

    லலித் மோடி மீது பல விமர்சனங்கள் எழுந்தாலும் அவர் சிறந்த ஆளுமை திறன் கொண்டவர் மிகப்பெரிய அளவில்  காரணம் என்பதில் சந்தேகமே இல்லை. மனிதர் தில்லாக ராஜினாமா செய்ய முடியாது முடிந்தால் நீக்கிபாருங்கள் என்று சவால் விடும் தைரியம் என எல்லாமே பாராட்டுக்குரியது.

    எப்படியோ போராடி சென்னை அணி இறுதிபோட்டிக்கு வந்துவிட்டது ஹய்டன் சொதப்பினாலும் ரைனா  விஜய் ,டோனி   பேட் டிங்காலும் போளிங்கேர் , அஸ்வின் , முரளி என அசத்தல் பௌலிங் காப்பாற்றினர் .

    சச்சின் ஆட்டம் அரை இறுதிவரை அசத்தல் அரை இறுதியில் சொதப்பல் . முக்கிய போட்டிகளில் சச்சின் பதற்றம் தவிர்க்கமுடியவில்லை அவரால் ,மும்பை  அணியில் எல்லாமே சிறப்பாக உள்ளது ,

    சென்னை அணி எல்லோரையும் பரபரப்பாகி இறுதி போட்டி வந்துள்ளது டோனி யின் சிறப்பான கேப்டன் பணி இதற்க்கு முக்கிய  காரணம் .  பதற்றம் இல்லாமல் இருப்பதே இதற்க்கு காரணம் , ஆனால் சென்னை அணி இந்த அளவிற்கு போராடி நுழைய காரணம் பாலாஜி , பத்ரி  என அணிக்கு நெருக்கமான வீரர்கள் என இவர்களை போட்டு நான்கைந்து போட்டியை தோல்விபெற காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும் .   விஜய் மட்டும் இதில் தப்பித்தார்.முதலாவது ஐ.பி.எல் இல் நோ பல் போட்டு ராஜஸ்தானுக்கு கோப்பை வாங்கிதந்தவர் பாலாஜி தான் என்பது எல்லோருக்கும் தெரியும் . வென்றாலும் தோற்றாலும் அணி  வருமானம் குறையபோவதில்லை என்பதுதான் காரணம்.

    பத்ரி எப்போதும் டெஸ்ட் போட்டியை போல ஆடி வெறுப்பேற்றினார் என்பதே உண்மை ..


    14 இன்னிங்க்ஸ் ஆடி 342 ரன்கள் அதிகபட்சம்  55* சராசரி 34.20 S/R 117.12 சிக்ஸ் 5












      என சாதனை படைத்தவர் சென்னை ரசிகர்களுக்கு இவர்கள் ஆட்டம் ஏமாற்றமே . தோணி , ரைனா இல்லாவிட்டால் சென்னை அணி நிலை பஞ்சாப் அணியை விட மோசம் என்பதில் சந்தேகமே இல்லை .
    தமிழகத்தில் பாலாஜி , பத்ரி விட்டால் வேறு வீரர்களே இல்லையா ? இப்படியே அணி உரிமையாளருக்கு
    நெருங்கியவர் என ஸ்ரீகாந்த் மகன் வேறு .. ஏதோ அரை இறுதியில் வென்றதால் அவர் தப்பித்தார் .

    மொத்தத்தில் இந்த ஐ.பி.எல் சற்று ஏமாற்றமே திறமையான வீரர்களை தேர்வு செய்யாதது தான் காரணம்
    அப்படி செய்திருந்தால் மும்பை அளவிற்கு சாதித்திருக்கு ம்   சென்னை .

    தோணி , ரைனா இருவரும் புனே அல்லது கொச்சி அணிக்கு சென்றுவிடுவது நல்லது அப்போது சென்னை அணி நிர்வாகத்திற்கு வேண்டிய வீரர்களை போட்டால் வெற்றி பெற முடியாது என்பது புரியும் .சென்னை அணிக்கு உற்சாக படுத்த ரசிகர்கள் இருக்கமாட்டார்கள் அப்போதுதான்  திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
    சென்னை அணி நிர்வாகம் ஏன் அவர்களுக்கு வேண்டியவர்களில் ஒருவரை கேப்டன் ஆக நியமிக்கவில்லை ?  எப்படியும் இவர்களை வைத்து டோனி ரைனா வெற்றி பெறவைப்பார்கள்  என்றுதானே ?
    டோனி இந்தமுறை கோப்பையை வாங்கி அடுத்த ஆண்டு  போட்டிக்கு வேறு அணிக்கு  தலைவராக சென்றுவிடுவது சிறந்தது ..
    எத்தனை நாள் தான் தங்கள் ஜாதி ,  இன மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும்  நிலையை  படித்த
    அறிவாளிகள் மாற்றிக்கொள்வார்களோ? பார்க்கலாம்...
    இப்படி  ஒரு சென்னை  அணி நமக்கு தேவையா?..........
    Read more...
    0

    ஐ.பி.எல் கிரிக்கெட் ஏ.ஆர். ரஹ்மான் இசைநிகழ்ச்சி இறுதிபோட்டி நேரடி ஒளிபரப்பு

  • சென்னை அணி வெற்றிபெற  வாழ்த்துங்கள் jaiho.........

    cchoose multiple choice channels..........


    Read more...

    Saturday, April 17, 2010

    3

    கணிணியை பயன்படுத்தும் குழந்தைகளை கண்காணிக்க + தமிழ் கலாச்சாரம் etc..

  • Saturday, April 17, 2010

  • நமது கணிணியை குழந்தைகள் அல்லது பிறரோ பயன்படுத்தும்போது அவர்கள் என்னென்ன தளங்களுக்கு செல்கின்றனர் அவர்களின் username , password உள்ளிட்ட அனைத்தையும் கண்காணிக்கலாம் .
    கணிணியில் உள்ள keyboard ல் அவர்கள் type செய்யும் அனைத்தையும் இந்த software பதிவுசெய்துகொள்ளும் .  இதன்மூலம் அவர்கள் செல்லும் விரும்பத்தகாத தளங்களை கண்டறிந்து அவற்றை தடை செய்யலாம் ,
    இந்த keylogger இன்ஸ்டால் செய்துருப்பதை Desktop, Add/Remove Programs, Control pane போன்றவற்றிலும்  கண்டறியமுடியாது என்பது இதன் சிறப்பாகும்
    ஒன்றிற்கு மேற்பட்ட user களை கண்காணிக்கலாம் .

    செயல்படும் விதம்:
    கணிணியில் நிறுவி start & stop time கொடுத்து விடுங்கள் , கணிணியில் உள்ள keyboard செயல்பாடுகளை கண்காணித்து பதிவுசெய்துகொள்ளும் இதில் நாம் mail Id கொடுத்தால் அந்த முகவரிக்கு யாரும் படிக்கமுடியாத வகையில் Encrypted Format அனுப்பிவிடும் நாம் அதனை பார்த்து முழுவிபரங்கள் மற்றும்  அவர்களுடைய நடவடிக்கைகளை கண்டறியமுடியும் ..
    இதனை தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தவும் .

    தற்போது username , password  கண்டறிய hackkers பயன்படுத்தும் எளியவழி இதுதான் . தற்போது remote installation முறையில் இதனை install செய்துவிட்டால் உங்கள் அனைத்து விபரங்களும் அவர்களுக்கு சென்றுவிடும் . சாட்டிங் போது hackers கவனத்தை திசைதிருப்பி இன்ஸ்டால் செய்துவிடுவார்கள்   இதனை அவ்வளவு எளிதில் கண்டறிய இயலாது என்பதால்     உங்கள் கணிணியில் பிறர் இதனை நிறுவி கண்காணிக்கும் வாய்ப்பு உள்ளது . இது இலவசமாக பலதளங்களில் கிடைப்பது கூடுதல் தகவல் .

    எனவே உங்கள் கணிணியில் keylogger software நிறுவப்பட்டுள்ளதா ? என்பதை தெரிந்துகொள்வது அவசியம் ....
    அடுத்த பதிவில் kelogger உங்கள் கணிணியில் நிறுவப்பட்டுள்ளதா? என்பத கண்டறியும் முறை பற்றி தெரிந்துகொள்ளலாம் ....

     culture:
    இப்போது சில spyware கள் இலவசமாக இணையதளங்களில் இலவசமாக கிடைக்கின்றன அவற்றை சாட்டிங் போது இணைய தல முகவரியுடன் இணைத்து அவர்களை click செய்யவைதால் போதும் பிறகு அவர்கள் கணிணி control முழுவதும் நம்கையில் இங்கிருந்தே அவர்களின் monitor நமக்கு தெரியும் அப்புறம் என்ன அதில் புகுந்து விளையாடலாம் கடந்த வாரம் chating வந்த கேரள பையனின் கணினிக்கு spyware அனுப்பி அவனது கணிணியை restart , reboot என கதறவிட்ட என் கல்லூரி நண்பனிடம் எப்படி என்று தெரிந்ததும் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

    இதுபோன்ற சில தொழில்நுட்ப தகவல்கள் hacker களுக்கு என்று ஒதுக்கிவிடாமல் அவசியம் தெரிந்துகொள்ளுங்கள் அப்போதுதான்    நம்  கணினியையாவது காத்துக்கொள்ள முடியும் .


    இதனை hacking Tips என நினைத்து ஒபாமாவுக்கு தகவல் கொடுக்காமல் உங்கள் நண்பர்களுடன் தொழில்நுட்ப தகவல்கள் என பகிர்ந்துகொள்ளுங்கள் .

    இன்னும் எத்தனை நாள் தான் குழந்தைகளுக்கான Qimo  os , free photo editing tool pinta download போன்ற  1995 ம் ஆண்டில் எழுதவேண்டிய வற்றை  தொழில்நுட்ப தகவல்களாக 2010 ல் எழுதும் நிலை என்று தெரியவில்லை ......
    பிற மொழி தளங்களை பாருங்கள் அவர்கள் நம்மைவிட 5 ஆண்டுகள் முன்னோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர் . இன்னும் keylogger &--------என்றாலே(எழுதினாலே) ஏதோ விலங்கை போல பார்ப்பதால்

    "தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்க இவற்றை எல்லாம் தெரிந்துகொள்ளாமல்இருப்பதே சிறந்தது" ..
    Read more...

    Monday, April 12, 2010

    0

    முகமது பின்துக்ளக் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த மீன்

  • Monday, April 12, 2010
  • துக்ளக் தலைநகரை டெல்லி இலிருந்து தேவகிரிக்கு மாற்ற காரணமான கொடூர கதை

    கதை கேளு .. கதை கேளு ...  தொடர் பதிவுக்கு அழைத்த நிஜாம் அவர்களுக்கு நன்றி .
    வீட்டில் உள்ளவர்களிடம் கதை கேட்டதை விட தினமலருடன் இணைப்பாக வரும் சிறுவர்மலர் தான் எனக்கு பெரும்பாலான கதைகளை அறிந்துகொள்ள உதவியது .  அதில் படித்த முகமது பின் துக் லக் கதையை சொல்லி இருக்கிறேன் ..

    முகமது பின் துக்ளக் தலைநகரை டெல்லியில் இருந்து தொவ்லாபாத் என்று பெயரிடப்பட்ட தேவகிரி டெல்லிக்கு தெற்க்கே எழுநூறு மைல் இன்றைய கருநாடகத்தில் கோதாவரி நதிக்கு தெற்கில் உள்ளது. இங்கு மாற்றினான் . லட்சக்கணக்கில் டெல்லி மக்கள் உயிரை பிடித்துக்கொண்டு வர நாற்பது நாட்கள் ஆனது .

    தன் தவறை விரைவில் உணர்ந்துகொண்ட துக்ளக் தன் தவறை உணர்ந்து டெல்லிக்கே தலைநகரை மாற்றினான் . டெல்லி திரும்பும் வழியில் ஏராளமான மக்கள் உயிரை விட்டனர் . டெல்லியும் ஆங்காங்கே பாழடைந்து போக அதையும் புதுப்பிக்க வேண்டியதாயிற்று.


    தலைநகரை மாற்ற என்ன காரணம் என்பது ஒரு கொடூரமான தமாஸ்
    அதை இப்போது பார்ப்போம் :

    ஹைதரபாத் கவர்னராக இருந்து வந்த முகமது பின் துக்ளக்கின் அத்தை மகன் பகாவுதீன் இவரை எதித்து கிளர்ச்சி செய்தான் . இதை அடக்க முகமது பின் துக்ளக்கின் ஒரு படையை அனுப்பினான் பின் அவனை பிடித்து முகமது பின் துக்ளக்கின் முன் நிறுத்தினர்.



    முகமது பின் துக்ளக்கின் கோபத்தை பற்றி சொல்லவேண்டுமா அவனை சாட்டையால் விறகாகும் வரை அடித்து பகாவுதீன் தோல் உரிக்கப்பட்டு உடலை துண்டாக்கி வானை எண்ணையில் போட்டு வறுத்து அவனது மனைவி , குழந்தைகள் பலவந்தமாக உண்ண வைத்தான் .

    தோலை உரித்து வைக்கோல் வைத்து தைத்து கோட்டை உச்சியில் தொங்கவிடப்பட்டது .

    கலவரம் செய்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்று இப்படி செய்தான் .
    எங்கோ வடக்கில் இருந்து இந்தியாவை ஆள முடியாது மத்திய இந்தியாவில் இருந்தால்
    இத்தகைய கலவரங்களை தடுக்க முடயும் ,எனவே தன் தலை நகரை தேவகிரிக்கு மாற்ற முடிவுசெய்தான்.

    அமைச்சர்களும் தங்களது தலையை காத்துக்கொள்ள எதுவும் மறுப்பு சொல்லவில்லை.

    தலைநகரை மாற்றுவதன் மூலம் இந்தியாவை ஆண்டுவிட முடியாது ,
    ராஜ தந்திரமும் நிர்வாக திறமையும் வேண்டும் என்பது ஏனோ முகமது பின் துக் லக் கிற்கு தெரியாமல் போனது.


    முகாலய மன்னர்களில் சிறப்பானவர் முகமது பின் துக்ளக் அவர் இந்தியாவில் பெரும் பகுதியை ஆண்டவர் . அத்தோடு அல்லாமல் சீனாவின் செல்வவளத்தை பெற்று நாட்டை பெரிய சக்தியாக மாற்ற நினைத்து சீனா வை கைப்பற்ற லட்சம் குதிரை படை வீரர்களை அனுப்பினார் .


    அவரது அமைச்சர்கள் இமயமலையை தாண்டி சென்று சீனாவை வெல்வது கடினம் என்று சொல்லயும் படைகளை அனுப்பினார் . இமயமலையயை தாண்டி சீனாவை அடைவதற்குள் கடும் குளிர் , பயண களைப்பாலும் சோர்ந்து சீனாவை அடைந்தனர் . அங்கு இவர்களுக்காக பிரம்மாண்டமாக காத்து கிடந்த சீன படைகளிடம் தோற்று போய்விட்டனர் .

    திரும்பி வரும்போது ஹிமாச்சல படைகள் இவர்களது உணவுகளை அபகரித்துவிட்டன குற்றுயிரும் குலைஉயிருமாக முகமது பின் துக்ளக் முன் வந்து வீழ்ந்தனர் .

    தோல்வியை தங்கிக்கொள்ளமுடியாமல் முகமது பின் துக்ளக் அத்தனை பேர் தலைகளையும் சீவ சொல்லிவிட்டான் .


    இதன் பிறகு சிந்து மாகணத்தில் தனக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை அடக்க படைகளோடு கிளம்பினான் போகும் வழியில் ஓய்வெடுக்கும் போது ஸ்பெஷல் மசாலாவுடன் சமைத்த மீனை சாப்பிட்டன் . அந்த மீன் கெட்டுபோய் இர்ருந்ததோ அல்லது விஷம் கலந்து இருந்ததோ திடீரென முகமது பின் துக்ளக் நோய் வாய் பட்டு காய்ச்சலில் உடல் தூக்கிபோட உடல் சுருண்டு (20-03-1351) ல் காலமானான் ..

    கல்வியறிவு மிகுந்த , கொடூரமான ,கலைத்திறம்மிக்க , கிறுக்கு தனம் பிடித்த முகமது பின் துக்ளக் வாழ்க்கைக்கு ஆண்டவன் விருந்தோடு சேர்த்து அனுப்பிய ஒரு மீன் முற்றுப்புள்ளி வைத்தது.

    அவன் இறுதியில் வாழ்க்கையை மீன் தான் முடித்தது .
    பிடித்த அனைவரும் தொடரலாம் ......
    Read more...

    Subscribe