Monday, April 12, 2010

0

முகமது பின்துக்ளக் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த மீன்

  • Monday, April 12, 2010
  • Share
  • துக்ளக் தலைநகரை டெல்லி இலிருந்து தேவகிரிக்கு மாற்ற காரணமான கொடூர கதை

    கதை கேளு .. கதை கேளு ...  தொடர் பதிவுக்கு அழைத்த நிஜாம் அவர்களுக்கு நன்றி .
    வீட்டில் உள்ளவர்களிடம் கதை கேட்டதை விட தினமலருடன் இணைப்பாக வரும் சிறுவர்மலர் தான் எனக்கு பெரும்பாலான கதைகளை அறிந்துகொள்ள உதவியது .  அதில் படித்த முகமது பின் துக் லக் கதையை சொல்லி இருக்கிறேன் ..

    முகமது பின் துக்ளக் தலைநகரை டெல்லியில் இருந்து தொவ்லாபாத் என்று பெயரிடப்பட்ட தேவகிரி டெல்லிக்கு தெற்க்கே எழுநூறு மைல் இன்றைய கருநாடகத்தில் கோதாவரி நதிக்கு தெற்கில் உள்ளது. இங்கு மாற்றினான் . லட்சக்கணக்கில் டெல்லி மக்கள் உயிரை பிடித்துக்கொண்டு வர நாற்பது நாட்கள் ஆனது .

    தன் தவறை விரைவில் உணர்ந்துகொண்ட துக்ளக் தன் தவறை உணர்ந்து டெல்லிக்கே தலைநகரை மாற்றினான் . டெல்லி திரும்பும் வழியில் ஏராளமான மக்கள் உயிரை விட்டனர் . டெல்லியும் ஆங்காங்கே பாழடைந்து போக அதையும் புதுப்பிக்க வேண்டியதாயிற்று.


    தலைநகரை மாற்ற என்ன காரணம் என்பது ஒரு கொடூரமான தமாஸ்
    அதை இப்போது பார்ப்போம் :

    ஹைதரபாத் கவர்னராக இருந்து வந்த முகமது பின் துக்ளக்கின் அத்தை மகன் பகாவுதீன் இவரை எதித்து கிளர்ச்சி செய்தான் . இதை அடக்க முகமது பின் துக்ளக்கின் ஒரு படையை அனுப்பினான் பின் அவனை பிடித்து முகமது பின் துக்ளக்கின் முன் நிறுத்தினர்.



    முகமது பின் துக்ளக்கின் கோபத்தை பற்றி சொல்லவேண்டுமா அவனை சாட்டையால் விறகாகும் வரை அடித்து பகாவுதீன் தோல் உரிக்கப்பட்டு உடலை துண்டாக்கி வானை எண்ணையில் போட்டு வறுத்து அவனது மனைவி , குழந்தைகள் பலவந்தமாக உண்ண வைத்தான் .

    தோலை உரித்து வைக்கோல் வைத்து தைத்து கோட்டை உச்சியில் தொங்கவிடப்பட்டது .

    கலவரம் செய்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்று இப்படி செய்தான் .
    எங்கோ வடக்கில் இருந்து இந்தியாவை ஆள முடியாது மத்திய இந்தியாவில் இருந்தால்
    இத்தகைய கலவரங்களை தடுக்க முடயும் ,எனவே தன் தலை நகரை தேவகிரிக்கு மாற்ற முடிவுசெய்தான்.

    அமைச்சர்களும் தங்களது தலையை காத்துக்கொள்ள எதுவும் மறுப்பு சொல்லவில்லை.

    தலைநகரை மாற்றுவதன் மூலம் இந்தியாவை ஆண்டுவிட முடியாது ,
    ராஜ தந்திரமும் நிர்வாக திறமையும் வேண்டும் என்பது ஏனோ முகமது பின் துக் லக் கிற்கு தெரியாமல் போனது.


    முகாலய மன்னர்களில் சிறப்பானவர் முகமது பின் துக்ளக் அவர் இந்தியாவில் பெரும் பகுதியை ஆண்டவர் . அத்தோடு அல்லாமல் சீனாவின் செல்வவளத்தை பெற்று நாட்டை பெரிய சக்தியாக மாற்ற நினைத்து சீனா வை கைப்பற்ற லட்சம் குதிரை படை வீரர்களை அனுப்பினார் .


    அவரது அமைச்சர்கள் இமயமலையை தாண்டி சென்று சீனாவை வெல்வது கடினம் என்று சொல்லயும் படைகளை அனுப்பினார் . இமயமலையயை தாண்டி சீனாவை அடைவதற்குள் கடும் குளிர் , பயண களைப்பாலும் சோர்ந்து சீனாவை அடைந்தனர் . அங்கு இவர்களுக்காக பிரம்மாண்டமாக காத்து கிடந்த சீன படைகளிடம் தோற்று போய்விட்டனர் .

    திரும்பி வரும்போது ஹிமாச்சல படைகள் இவர்களது உணவுகளை அபகரித்துவிட்டன குற்றுயிரும் குலைஉயிருமாக முகமது பின் துக்ளக் முன் வந்து வீழ்ந்தனர் .

    தோல்வியை தங்கிக்கொள்ளமுடியாமல் முகமது பின் துக்ளக் அத்தனை பேர் தலைகளையும் சீவ சொல்லிவிட்டான் .


    இதன் பிறகு சிந்து மாகணத்தில் தனக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை அடக்க படைகளோடு கிளம்பினான் போகும் வழியில் ஓய்வெடுக்கும் போது ஸ்பெஷல் மசாலாவுடன் சமைத்த மீனை சாப்பிட்டன் . அந்த மீன் கெட்டுபோய் இர்ருந்ததோ அல்லது விஷம் கலந்து இருந்ததோ திடீரென முகமது பின் துக்ளக் நோய் வாய் பட்டு காய்ச்சலில் உடல் தூக்கிபோட உடல் சுருண்டு (20-03-1351) ல் காலமானான் ..

    கல்வியறிவு மிகுந்த , கொடூரமான ,கலைத்திறம்மிக்க , கிறுக்கு தனம் பிடித்த முகமது பின் துக்ளக் வாழ்க்கைக்கு ஆண்டவன் விருந்தோடு சேர்த்து அனுப்பிய ஒரு மீன் முற்றுப்புள்ளி வைத்தது.

    அவன் இறுதியில் வாழ்க்கையை மீன் தான் முடித்தது .
    பிடித்த அனைவரும் தொடரலாம் ......

    0 Responses to “முகமது பின்துக்ளக் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த மீன்”

    Subscribe