Sunday, January 31, 2010

4

கோவா vs தமிழ்ப்படம் விமர்சனம்

  • Sunday, January 31, 2010
  • Share



  • பெரம்பலூரில் நேற்றும் நேற்று முன்தினமும் பார்த்த கோவா, தமிழ்ப்படம் விமர்சனம்
    தமிழ்ப்படம் :
               ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன்  நண்பர்களுடன் நேற்று ராஜா தியேட்டர் இல்   மதியகாட்சி   தியேட்டர் முன்பு இருபதுபேர்  என்ன இன்று படம் இல்லையா என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது டிக்கெட் கவுண்ட்டர்  சென்று கேட்டல் டிக்கெட் 30,40 என சொன்னதும் அதிர்ச்சி எந்த ஊரிலும் இவ்வளவு விலையில் டிக்கெட் கிடைக்கிறதா ?

       உள்ளே சென்றால் முதல் காட்சி  பஞ்சாயத்து தண்டனையாக சிம்பு படம் பஞ்சாயத்து டிவி இல் 100 முறை பார்ப்பது , பிறகு சென்னைக்கு செல்லும் கதை சிறுவன் அங்கு நடப்பதை தட்டி கேட்டக்க சைக்கிள் பெடல் சுற்றி பெரிய ஹீரோ  ஆகி  உடனே சண்டை போட்டு ஒபென்னிங் சாங்  அப்போது பாடலில்  இந்த பாடலை பாடியவர் உங்கள் சிவா , அவர் போடுமாறு கேட்டுக்கொண்டார் என்று விஜய் யை கலாய்க்கிறார்கள் ,

         பிறகு பறவை முனியம்மா பெரிய வில்லன் கும்பல் தலைவராக காட்டுவது அதற்கு தரும் விளக்கம் மொக்கை தாங்க முடியல ,  அதற்கு கோர்ட் பாராட்டி கோல்டன் க்ளோப்  விருது தருவது இன்னும் மொக்கை ,  ரன் மாதவன் போன்று ஓடி  மச்சம் முகத்தில் வைத்து திரும்பி வரும்போது  அடையாளம் தெரியாமல் போவது நல்ல காமெடி மவுனராகம்  சிவாஜி, கந்தசாமி, ரன், தளபதி, சிட்டிசன், போக்கிரி,சிம்பு, ராமராஜன்,நாயகன்படங்களில் இருந்து முழு படத்தை எடுத்துவிட்டனர் .

     வில்லி பிறந்தநாள் பரிசாக காலேஜ் ஸ்டுடென்ட் ஒருவனை டெம்போவில் கடத்தி  புது பீஸ் உனக்கு தான் என்று கொடுப்பது அருமை .

                     காபி போட்டு  வருவதற்குள் பணக்காரன்  ஆகுவது , முதல்வர் , பிரதமர் சொல்லி வேலைக்கு வராமல் ஒபாமா சொல்லி போலீஸ் வேளையில் மீண்டும் சேர்வது நல்ல காமெடி ,  துப்பாக்கியில் இருந்து புல்லெட் ஹீரோஇன் ஐ  சுட வருவதற்குள் டவுன் பஸ் , ஆட்டோ பிடித்து  வந்து  காப்பாற்றுவது என போகிறது....
      சாக்ஸ் கழட்டி கொல்வது, அப்பூர்வ சகோதரர்கள் காமெடி போன்றவை மொக்கை .படம் முழுவதும் பிற படங்களை ஒட்டவேண்டும் என்று நினைத்து பாடலில் கூட கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் எல்லா படங்களையும் ஓட்டுவதால்   சலிப்புதான் வருகிறது . பாதி சூப்பர் - பாதி மொக்கை .

    கோவா :

               இதற்கும் முதல் காட்சி பஞ்சாயத்து தான் பிரேம்ஜி ,ஜெய் ,வைபவ்  வீட்டை  விட்டு தப்பி சென்றதால்  விஜயகுமார் காசை வெட்டி போட்டு  பிரிக்கிறார்  மூவரையும் இவர்கள் கோயில் அம்மன் கிரீடம் , நகையுடன் தப்பி மதுரை சென்று நண்பன் வெட்டுக்கு செல்ல அப்போது அவன் கோவா இல் ஒரு வெள்ளைகாரியை காதலித்து திருமணம் செய்துகொள்கிறான் இதனால் மூவரும் கோவா சென்று காதலித்து  லண்டன் இல்   செட்டில் ஆகும் முடிவில் சென்று பெண்ணை தேடுகின்றனர் . 

             பிரேம்ஜி படம் முழுக்க அட்டாகாசம் செய்கிறார் ,கண்கள் இரண்டால் பாடலில் ஜெய் யை மிஞ்சிவிடுகிறார் . சிநேகா  சைக்கோ பெண்ணாக முதல் கணவர்  பிரசன்னா இவரின் கொடுமை அடி தாங்காமல் ஓடிவிட வைபவ் அடுத்து கணவராகி உண்மையை தெரிந்து தப்பிவருகிறார்  , இதனை அடுத்து சிம்பு மூன்றாவதாக மாட்டுகிறார் அப்போது மன்மதன் போல் மொக்கில் ரத்தம் வருவது போல் காட்டுவது ரகளை.
    ஆகாஷ், சம்பத் ஹோமோ ஜோடி குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது ....

              இறுதிகாட்சி மறுபடியும் பஞ்சாயத்தில் அப்போது அங்கு வரும் நயன்தாரா  என படம் முழுக்க ஒரே சிரிப்பலை ,படம் முழுக்க வரும் அனைவரும் சிரிக்கவைப்ப்பதால் போரடிக்காமல்செல்கிறது.பாடல்கள் அனைத்தும் அருமை .

              தமிழ் படம் சிவாவை மட்டும் பெரும்பாலும் சுற்றி வருவதால்  அலுப்பு  தட்டிவிடுகிறது பாதி  காட்சிகளை  நாமே யூகிக்க முடிகிறது.  பல லொள்ளு சபா  பார்த்ததால் தமிழ்ப்படம் எப்போமுடியும் என டொன வைக்கிறது ...
      இரண்டு படங்களும் நகைச்சுவையாக செல்கின்றன .நல்ல பொழுதுபோக்கு ...
    ==========================================
    கோவா - முழுமையான பொழுதுபோக்கு , 
    தமிழ்ப்படம் - Overdose , அளவுக்கு மிஞ்சினால் ...
    கோவா முந்துகிறது ...

    4 Responses to “கோவா vs தமிழ்ப்படம் விமர்சனம்”

    Statistics said...
    January 31, 2010 at 8:01 PM

    நீங்கதான் முதல் தடவையா இப்படி சொல்றே.... மற்ற எல்லா பதிவரினதும் பார்வையில் தமிழ் படம் முந்துகிறது .... bad taste...


    ராஜன் said...
    January 31, 2010 at 8:30 PM

    tamilpadam is super. your taste is different. everybody enjoying tamilpadam. full length comedy.never seen before.chennai all theatres house full.


    Suresh said...
    January 31, 2010 at 8:57 PM

    Boss Firstday first show leave pottutu famiy oda goa parthutu sema kadupu boss theatre fulla orae sound famiy oda poi ellamrum padama ithu nu sollitunga except few scenes padam is sema mokkai not as laughing as his before films.

    Evening Friday tamilpadam parthu sema siripu theatre full a as u said in climax its little long but sema siripu kodutha kasuku mela sirika vachanga

    unga taste is totally different , all my friends office collegues relatives ellam tamil padam romba pidichi irunthathu


    ramalingam said...
    February 1, 2010 at 12:57 AM

    everybody is saying tamil padam is good.


    Subscribe