Wednesday, December 2, 2009

0

நெப்போலியன் அவர்களின் பிறந்தநாளும் பெரம்பலூர் தொகுதியும்

  • Wednesday, December 2, 2009
  • Share


  •               தற்போது    ஆறு லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை ,    1977 முதல் 1996 வரை அ.தி .மு.க கோட்டையாக வே இருந்தது  பெரம்பலூர் தொகுதி இதற்க்கு காரணம் எம்.ஜி.ஆர் என்று சொல்லி தெரியவேண்டியது இல்லை . . அதன்பிறகு ஆ.ராசா அவர்கள் வந்ததும் மூன்றுமுறை வெற்றி பெற்று தி.மு.க வசம் ஆனது.இன்றும் கூட M.G.Rருக்கு ஓட்டு போடுகிறேன் என்று சொல்லும் கிராமங்களே உண்டு .




            தற்போது பொதுதொகுதி ஆனதால் அவர் நீலகிரி சென்றுவிட்டார் (அப்பா இப்பதான் கொஞ்சம் நிம்மதி ) 12 ஆண்டுகளில் ஆ.ராசா தொகுதிக்கு வழக்கம்போல் அரசு மருத்துவ கல்லூரி வரும் என்று சொல்லி இன்றுவரை அரியலூர் செல்லும் வழியில் ஒரு போர்டு மட்டும் மாட்டி சென்றுவிட்டார்  ,இனி நீலகிரிக்கு மருத்துவக்கலூரி வரும் என்று சொல்லுவார் விரைவில் ...அவர்செய்த சிறப்பான பணி  காவேரி குடிநீர் வழங்கியது  என்கிரமத்தில் கூட கிடைகிறது.


           எப்படியும் கல்லூரி  இங்கு அமைத்திருந்தாலும் பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவகல்வி சாமானியர்களுக்கு கிடைக்கப்போவதில்லை பெயருக்காவது எங்கள் மாவட்டத்தில் இருக்கிறது என்று சொல்லலாம்என்றால் அதுவும் இல்லை  என்றாகிவிட்டது .சரி எல்லோருக்கும் பயன்படும் அரசு கலை அறிவியல் கல்லூரி அதுவும் அதே கதைதான் . இதில் பொறியியல் கல்லூரி யும் அடக்கம் . எனக்கு தெரிந்து கலை கல்லூரி கூட இல்லாத கொடுமை இங்குதான் .


    ரயில் வசதியே இல்லாத ஒரே மாவட்டம் என்ற பெருமையும் பெரம்பலூர் மாவட்டதிற்க்கே. சேலம் -ஆத்தூர்-பெரம்பலூர் இடையே தொடங்க இன்னும் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர் .

    பேருந்துகளில்இன்றும் சென்னையில் ஏறினால் திருச்சி டிக்கெட் எடுத்தால் தான் பயணம் செய்யமுடியும் பெரும்பாலும் .ஆனால் எல்லா தேர்தலிலும் மத்திய அமைச்சர் உருவாக்குவது  மட்டும் எங்களால் சாத்தியம் .இதெல்லாம் இரண்டாம் விருப்பம் தான் .


    முதன்மை தேவையான நிரந்தர  வருமானம்


          வறட்சி மிக்க மாவட்டங்களில் பெரம்பலூர் மாவட்டமும் ஒன்று .  விவசாயமும் வருடத்தில் ஆறு மாதம் நீடிப்பதே அதிகம் . வருடத்தில் பாதிநாட்கள் தான் மக்களுக்கு வேலை அப்போதுகூட தினமும் நூறு ருபாய் கிடைப்பதே கஷ்டம் .இங்கு தொழிற்சாலை என்றால் என்னவென்று கேட்கும் நிலைதான் . இங்கு பிறந்து வளர்ந்த ராசா அவர்களுக்கு நான்கு இது தெரிந்தும் செய்யாதது ஏனோ? M.R.F company அமையவிருக்கிறது என்று சொல்லி வழக்கம்போல் வெற்றி பெற்று டெல்லி சென்று அவரும் வழக்கமான அரசியல்வாதி யாக மாறி அவ்வபோது தொகுதி அலுவலகத்தில் மக்களிடம் இருந்து குறைகளை கேட்டு சென்றுவிட்டார் .
     
                  இன்று கூட ஐம்பது ரூபாய்க்கு வேலை கிடைக்காமல் இருக்கும் நிலைதான் , பெரும்பாலான கிராமங்களில் பசு தரும் பால் தான் இன்றுவரை  வருமானம் எனது குடும்பம் உட்பட.  தொழில் தொடங்க வங்கிகள் அவ்வளவு எளிதாக கடன் வழங்குவதில்லை அவ்வாறு கொடுத்தாலும் தொழில்சிறப்பாக நடத்தி வெற்றி பெறுவது எத்தனை பேர் ?
     ஏதேனும் பெரிய நிறுவனங்கள் அங்கு தொடங்கினால் கடுமையாக உழைக்கும் மக்கள் இங்கு உண்டு என்பதில் சந்தேகமே இல்லை .மேலும் தொழிற்சாலை கழிவு ஆற்றில் கலக்கிறது , சுற்றுபுறசூழல் பாதிக்கிறது என்ற பிரச்சினைகளும் வாய்ப்பு இல்லை .



                எங்கள் ஊரில் பிறக்காவிட்டாலும்  பக்கத்துக்கு மாவட்டத்தில் பிறந்து பல இன்னல்களுக்கிடையே வளர்ந்து  எங்கள் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு வரும் மாண்புமிகு.நெப்போலியன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்களுக்காக பணியாற்ற ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் வழங்கவேண்டும் என்று வேண்டி .



     இந்த இனிய நாளில்
    ஒருமுறை வென்றால் தொடர்ந்து வெற்றியை கொடுக்கும் எங்கள் மாவட்ட மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நீண்டநாள் தேவையான தொழிற்சாலைகள்  அமைய ஆவன செய்யுங்கள் என ஒவ்வொரு தேர்தலிலும் மத்திய  அமைச்சர்களை உருவாக்கி தன்னையும் வளரவைப்பீர்கள் என்று பலவருடங்களாக கட்சி பாகுபாடின்றி ஆவலுடன் எதிர்பார்க்கும் பெரம்பலூர் தொகுதி   .....

    மேலும் தகவல்களுக்கு  
      விரைவில் :கணிணியை புதிதாக வாங்கிய போது இருந்த வேகத்தில் இயங்கவைப்பது எப்படி ?

    0 Responses to “நெப்போலியன் அவர்களின் பிறந்தநாளும் பெரம்பலூர் தொகுதியும்”

    Subscribe