Tuesday, September 29, 2009
உங்கள் கணினியில் உள்ள Anti-virus சரியாக இயங்குகிறதா என்பதை கணடுபிடிப்பது எப்படி?

நமது கணினியில் நிறுவ Anti-virus Avast, Kasperkey,K7 Total security ,DR.Web என பல இருக்கின்றன , ஆனால் அவை ஒழுங்காக இயங்குகின்றனவா என்பதை எப்படி கண்டறிந்துகொள்ளலாம் . இதனால் எந்த பாதிப்பும் கணினிக்கு வராது நான் சோதனை செய்து பார்த்து தான் இதனை எழுதுகிறேன் .
கீழே உள்ள எழுத்துக்களை அப்படியே copy செய்யவும் .
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
உங்கள் Anti-virus சரியாக இயங்கினால் அதனை உடனே Delete செய்துவிடும் . எனது கணினியில் AVAST Antivirus இருப்பதால் எச்சரிக்கை ஒலி எழுப்பியது. அப்படி இல்லாவிட்டால் உங்கள் Anti-virus நீக்கி விட்டு நன்றாக இயங்கும் வேறு ஒன்றை நிறுவிக்கொள்ளுங்கள்.
தினமும் சராசரியாக 500 புதிய வைரஸ்கள் (Anti-virus நிறுவனத்தினர் தான் பெரும்பாலும்) உருவாக்குகின்றனர்.இணையத்தளத்தின் மூலம் தான் அவை பெரும்பாலும் பரவுகின்றன. எனவே அந்த Anti-வைரஸ் ubdate ஆனால்தான் அவற்றிலிருந்து உங்கள் கணினியை பாதுகாக்கும். Anti-வைரஸ் நிறுவனத்தினர் புதிய வைரஸ் களை ஆராய்ந்து அவற்றிக்கு Anti-virus கண்டறிந்து தமது Database ல் சேர்க்கின்றனர் ,அதனால்தான் Update ஆகி புதிய வைரஸ் களை அழிக்கிறது.
எனவே சிறந்த Anti-virus Update அவசியம் ..
Wednesday, September 16, 2009
இப்படியும் விளம்பரங்கள் தேவைதானா?

ஒவ்வொரு ஸ்டேஷன் முழுவதும் (சென்னை)எங்கு பார்த்தாலும் விளம்பர பேனர் ,போதாததற்கு டிவி வைத்து முழுவதும் விளம்பரம் .ரயில் வரும் நேரம் , தாமத நிலவரம் கூட சிறியதாக எப்போதாவது கீழே சிறிய எழுத்தில் ,
அட பாட்டு கூட வேண்டம் எதாச்சு தெரிஞ்சிக்கிற மாதிரி முக்கியமான இடம் , செய்தி அப்பப்ப போடலாம் அதுவு இவங்களுக்கு தோணாது.
ரயில்வே சுவற்றில் விளம்பரங்களை விட இவர்கள் சங்கத்து விளம்பரம் பொன்னையா அது இது என்று . அந்த இடத்தில் தனியார் விளம்பரம் போட்டால் வருமானமாவது வந்திருக்கும் வேலையை விட விளம்பரம் தான் இவர்களுக்கு முக்கியம் .
.
இன்று தாம்பரம்- பீச் வரை எல்லா ஸ்டேஷன் களிலும் ஒரு விளம்பரம் ஒருவர் தான் வாங்கிய கடனின் காரணமாக ஒரு வருடங்களாக வேலைக்கு வராததால் ரயில்வேயில் அவரை வேலையை விட்டு நீக்கி விட்டார்களாம் , அந்த வேலையை மீண்டும் வாங்கித்தந்த இல்லை, இல்லை போராடி வாங்கி தந்த மண்டல தலைவர் படத்தை போட்டு அவருக்கு நன்றி கூறி பெரிய விளம்பர போஸ்டர் , ஆனால் வேலைக்கு வராத காரணம் கடன் தொல்லை , அப்ப நோட்டீஸ் அடிக்க செலவுக்கு என்ன இன்னும் கடன் வாங்கினாரா தெரியவில்லை ?உங்கள் சங்க தலைவர் வாங்கி தந்தால் உங்கள் நிலைய அலுவலகத்தில் உள்ள நோட்டீஸ் போர்டு அல்லது அரை சுவர் முழுவதுமோ ஒட்டி கொள்ளுங்கள் , முடிந்தால் அவர் படத்தை உங்கள் வீட்டில் மாட்டி வணங்குங்கள் அவர் இன்னும் சந்தோஷமடைந்து நல்ல பணிகள் செய்வார்.
ஏதாவது சிறிய நிறுவன துண்டு விளம்பரம் ரயில் பெட்டிகளில் இருந்தால் கிழித்துவிடுகின்றனர், ஒட்டியவன் கிடைத்தால் அவனை பிடித்து அபராதம் போட்டு விடுகின்றனர் இது பாராட்டவேண்டிய செயல் ஆனால் கடந்த இரு நாட்களாக நிலையத்தில் தென்படும் இந்த விளம்பரம் மட்டும் அப்படியே இருக்கிறது அது என்னவென்று பாருங்கள் .
ஏழை மாணவர்களுக்கு ரூபாய் 500 க்கு laptop வழங்க விருக்கும் ராகுல் காந்திக்கு 'கை' கொடுப்போம் இந்திய இளைஞர் காங்கிரசில் சேருவோம் - இளைஞர் காங்கிரசில் இயக்கம் .
இந்த இயக்கம் எங்குள்ளது என்று station master அறிவார் , நடவடிக்கை எடுப்பாரா ? அல்லது போஸ்டர் கிழிப்பாரா? .
எல்லோருக்கு தெரிந்த முக்கிய விஷயம் நமது தென்னக ரயில்வே அதிலும் தமிழ் நாட்டில் T.T.R கடமை உணர்வுக்கு அளவே இருக்காது தினமும் குறைந்தது பத்து பேரை பிடித்து அன்பாக தோள்மேல் கை போட்டு கலரை பிடித்து கூட்டி செல்வார்கள் , பாராட்டவேண்டிய விஷயம் தான் அனால் ரயில்வே இதை இந்தியா முழுவதும் செய்தால் பாராட்டலாம் , பீகாரில் பரிசோதகரை டிக்கெட் கேட்டால் அப்படியே தூக்கி வெளியே வீசி விடுவார்களாம் அப்போது தமிழன் மட்டும் என்ன ------?.

ஒரு பத்து பதினைந்து மாதங்களுக்கு முன்பு வட நாட்டில் இருந்து தமிழகம் வந்த ஒரு கும்பல் டிக்கெட் எடுக்காமல் வந்தபோது அவர்களை பிடித்த நம் சென்னை பரிசோதகர் களிடம் சொன்ன பதில் இதுவரை எந்த மாநிலத்திலும் டிக்கெட் கேட்கவில்லை தமிழ் நாட்டில் மட்டும் தான் கேட்கிறீர்கள் என்று . அவர்களுக்கு சிறப்பு பெட்டி ஒதுக்கி அவர்களின் பயணத்தை தொடரவைத்து மீதி கதை. ஆனால் எப்பவும் நாம் தொங்கிக்கொண்டுதான் செல்கிறோம் கூடுதல் பேட்டியோ, ரயிலோ விடுவது இல்லை . பத்து வருடதிற்கு முன் விட்ட அதே ரயில் வசதிகள் தான் இப்பவும் . அப்புறம் வருமானம் அதிகமாகாதா என்ன?
.
ஜனதா சாப்பாடு , பத்து ரூபாய்க்கு ஏழு பூரி எல்லாம் இரண்டு நாளைக்கு மட்டும் தான் . இப்ப எங்க இருக்கன்னு தெரியல அப்படி விளம்பரம் கூட பாக்கமுடியல .குடிநீர் வசதிகூட இல்லை. அப்புறம் என் platform டிக்கெட் மட்டும் கேட்கிறார்கள் தெரியல? தண்டவாளங்களில் ஏதேனும் குறை இருக்கிறதா என்று சுத்தியலை தூக்கி கொண்டு பல மயில் வெயிலின் செல்லும் ஊழியர்கள் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள் .எதோ கொஞ்சம் ரயில்வே ரன்றாக இருக்கிறது என்றால் மக்களுக்காக சேவை செய்யும் ஒரு சில ரயில்வே பணியாளர்களால் தான் .ஊட்டி போன்ற பாரம்பரிய ரயில் சேவையை நமக்கு சிறப்பாக வழங்குபவர்களும் இவர்கள் தான் .

ரயில் நிலையங்களில் அதிரவைக்கும் விளம்பரங்கள்
Thursday, August 6, 2009
சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர் தந்த சங்கடம்

எனது பெயர் ஜெய் ,,.
இரண்டு வாரங்களுக்கு முன்பு எனது நண்பர் அறைக்கு சென்று இருந்தேன் . என் நண்பன் கிருஷ்ணா எனக்கு சில வேலை இருக்கிறது முடித்துவிட்டு வருகிறேன் இன்னும் சிறிது நேரத்தில் நண்பர்கள் வந்துவிடுவார்கள் அவர்களிடம் பேசிக்கொண்டு இரு என்று சொல்லி சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் அவரது நண்பர் எழுமலை வந்தார்.
சிறிது நேரம் கழித்து ,எழுமலை உடற்பயிற்சி செய்ய புல்அப்ஸ் வாங்க சரவணா ஸ்டோர்ஸ் என்னை கூப்பிட்டார் . நானும் அவருடன் சென்றேன் . புல் அப்ஸ் மற்றும் சில பொருட்களை வாங்கி கூடையில் போட்டு பணம் செலுத்தும் இடம் அருகே சென்றேன் அப்போது என் நண்பர் எனக்கு தெரியாமல் ஐந்நூறு ரூபாய் பணத்தை கூடையில் போட்டுவிட்டு வேறு பொருட்கள் வாங்க சென்று விட்டார் .
அப்போது கூடையில் பணத்தை பார்த்த பில் போடுபவர் உங்களுடையதா என கேட்டார் அப்போது நான் தெரியவில்லை என் நண்பர் பணத்தை போட்டிருக்கலாம் எனவே அவரிடம் கேட்டு விட்டு வருகிறேன் என்று சொல்லி அவரை அழைத்து வந்தேன் , அவர் கூடையில் இருந்தது என் பணம்தான் என கூறினார் .
அப்போதுதான் ஆரம்பித்தது அவர்களின் வில்லத்தனம் . பணம் செலுத்தும் இடத்திலிருந்த ஒருவன் என் நண்பரிடம் எவ்வளவு பணம் வைத்தீர்கள் என்று கேட்டான் ஐந்நூறு என்றார் அவர். இல்லை இரண்டு ஐந்நூறு இருந்தது என்றான் . என் நண்பர் பர்சை பார்த்துவிட்டு இல்லை ஒன்றுதான் என்றார் , அப்போது ஏன் பர்சை பார்க்காமல் சொல்லவேண்டியதுதானே என்றான். நானும் கூடையில் ஒரு ஐந்நூறு தானே இருந்தது என்றேன் அதை அவர்கள் காதில் வாங்கவே இல்லை.(அவர்களுக்கு இப்படி அலையவிட்டால் பணம் வேண்டாம் என்று சொல்லி சென்றுவிடுவார்கள் நாம் பங்கிட்டுக்கொள்ளலாம் என்பது திட்டம்)
உடனே அவன் அங்கிருந்த சூபெர்வைசெரிடம் என் நண்பர் ஐந்நூறு வைத்து விட்டு ஆயிரம் என சொல்லி பிறகு ஐந்நூறு என கூறுகிறார் என சொல்லி பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டான்.நான் அவரிடம் சார் அங்கு என் அருகில் இருப்பவர்கள் பணத்தை வைத்திருந்தால் இந்நேரம் வந்து கேட்டு வந்திருப்பார்கள் , நாங்கள் வேண்டுமானால் இன்னும் கொஞ்சநேரம் இங்கேயே காத்திருக்கிறோம் யாரவது கேட்டால் கொடுத்து விடுங்கள் என்றேன்.
அதற்கு அந்த சூபெர்வைசர் கீழ் தளத்திற்கு அழைத்து சென்று இந்த பணத்தை அருகில் உள்ள காவல் நிலையத்திடம் ஒப்படைக்க போகிறேன் அங்கு வந்து வாங்கி கொள்ளுங்கள் என்றார். எனது நண்பர் சரி வா இங்கிருந்து போகலாம் ஐந்நூறு ரூபாயோடு போகட்டும் விட்டு விடலாம் எதற்கு போலீஸ் ,ஸ்டேஷன் என்று என்னிடம் கூறினார்.
நண்பரின் இந்த பேச்சு எனக்கு கோபத்தை வரவழைத்தது. நீங்கள் அமைதியாக இருங்கள் நான் பணத்தை வாங்கி தருகிறேன் என்றேன் . என் நண்பரின் பார்வை என்னை அவர் நம்பவில்லை என்று புரிந்தது. அவரிடம் உங்கள் மேனேஜர் எங்கு இருக்கிறார் அவரிடம் கூட்டி செல்லுங்கள் நான் அவரிடம் பேசி கொள்கிறேன் என்றேன் அதையும் மறுத்து விட்டனர்.
சரி வாருங்கள் காவல் நிலையம் போகலாம் நான் அங்கேயே வாங்கிகொள்கிறேன் என்றேன் . அதிசியடைந்த அவர் சரி சிறிது நேரம் வெயிட் பண்ணுங்க சிறிது நேரம் பார்த்து விட்டு தருகிறேன் என்று சொல்லி விட்டு , சுமார் பத்து நிமிடம் கழித்து அவர் முகவரியை வாங்கி கொண்டு பணத்தை கொடுத்தார்.
அப்போது தான் அவரிடம் நான் காவல் துறையில் காவலராக பணிபுரிபவன் நீங்கள் என்னதான் செய்கிறீர்கள் என்று பார்க்கத்தான் இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தேன் ,இல்லாவிட்டால் அப்போதே என்னை பற்றி சொல்லி இருப்பேன் ஒரு காவலரான எனக்கே இந்த நிலை என்றால் பொது மக்களின் நிலை என்ன ஆகி இருக்கும் என்றேன் . நண்பர் எழுமலைக்கும் அப்போது தான் நான் போலீஸ் என்பது தெரிந்தது .
என் நண்பர் எதோ நினைப்பில் பணத்தை என்னிடம் கொடுக்காமல் கூடையில் போட்டுவிட்டார் , அதற்கு அவரை அமரவைத்து விட்டு அங்குள்ள ஒலி பெருக்கியில் யாராவது பணத்தை தவற விட்டிருந்தால் இங்கு வந்து விபரங்களை சொல்லி பெற்றுக்கொள்ளவும் என அறிவித்திருக்கலாம் .இதனால் பொய்யாக பணத்தை என் நண்பர் கேட்டிருந்தால் அவர் அந்த இடத்தை விட்டு ஓடி இருப்பார் என்றேன் . அதற்கு அவர் சொன்ன பதில் அதிர்ச்சியைத்தான் தந்தது .
அவன் சொன்னான்: நீங்க போலீஸ் ன்னு சொல்றீங்க , இப்பல்லாம் வக்கீல்களே திருடுறாங்க .
நான் அவனிடம் என்ன கேட்டேன் அவன் என்ன பதில் சொன்னான் பாருங்கள் .
உங்களுக்கு இதிலிருந்து நான் உங்களுக்கு சொல்வது:
வெளி இடங்களில் பணத்தை கவனமாக கையாள வேண்டும் இதனால் இதுபோன்ற இன்னல்களை தவிர்க்கலாம். குறிப்பாக உங்களில்டம் எவ்வளவு பணம் உள்ளது என சோதித்துக்கொள்ளுங்கள் .

காவல் நிலையம் , போலீஸ் என்றால் தவறு செய்யாதவர்கள் கண்டிப்பாக பயப்பட தேவை இல்லை. சரி வாருங்கள் போகலாம் என சொல்லுங்கள். அங்கும் நம்மை போன்றவர்கள் தான் இருக்கிறார்கள் .ஒரு சிலர் தவறுக்கு எல்லோரையும் குறை கூறாதீர்கள் . (காவல்துறை&சரவணா ஸ்டோர்ஸ் இரண்டிலும் ) இப்பொழுதெல்லாம் காவல்துறையில் பெரும்பான்மையாக கல்லூரி படித்தவர்கள் தான் பணிபுரிகின்றனர். அவர்கள் பெர்ரும்பாலும் அப்துல்கலாம் போன்றவர்களை பின்பற்றுபவர்கள். இன்னும் சில வருடங்களில் எல்லோரும் உணரும் அளவுக்கு காவல்துறை கண்டிப்பாக மாறும் சந்தேகமேஇல்லை.
நண்பருக்கு இப்படி சோதனை வந்தால் அவர் குழப்பத்தால் இப்படி விட்டு விட்டு போகலாம் என்பார் பயத்தில் , கூட இருக்கும் நண்பர்கள் அவரை கவலைபடாதிருக்க சொல்லிவிட்டு நீங்கள் அவருக்காக வாதிடுங்கள்.
வாடிக்கையாளர்களை தெய்வம் தெரியாத இது போன்ற திருட்டைவிட கேவலமான வேலைகளில் ஈடுபட்டு தனது முதலாளிக்கும் , பணிபுரியும் இடத்துக்கும் உண்மையாக இல்லாத ஜென்மங்கள் அடுத்து வரும் வாடிக்கையாளர்களிடம் ஒழுங்காக நடந்து கொள்வார்கள்.
என் நண்பரை போல பரவாயில்லை விட்டு விடலாம் என்று வந்தால் அவர்கள் இன்னும் வாடிக்கையாளர்களை மோசமாக நடந்து கொள்வார்கள்.
நீங்கள் மேலே படித்தது எனது காவல் துறை நண்பர் ஜெய் , என் வேண்டுகோளுக்கிணங்க எழுதிய விழிப்புணர்வு பதிவு உங்களுக்காக .
அவரின் பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல் இட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவியுங்கள் நண்பர்களே.
Sunday, July 12, 2009
நம்மூர் ஆட்டோ டிரைவர்-சிங்கப்பூர் டாக்சி டிரைவர்
"முந்தா நாள் மதுரை போயிருந்தேன் தம்பி... ரயில்வே ஸ்டேஷனில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் ஒரு ஆட்டோ டிரைவரிடம், "எல்லீஸ் நகர் போகணும்...' என்றேன். ஐம்பது ரூபாய் கேட்டார்... "அதிகம்...' என்று சொல்லி, அடுத்த ஆட்டோ நோக்கிச் சென்றேன்...
"அவ்வளவு தான்... அடுத்த ஆட்டோ டிரைவரை எச்சரிக்கும் முகமாக இவர், "ஐயா, எல்லீஸ் நகர் போகணுமாம்... ஐம்பது ரூபாய் அதிகம் என்கிறார்...' என்றார். அதன் பின் எந்த ஆட்டோ டிரைவர் வருவார்...
"ஒரு முறை சிங்கப்பூர் சென்று இருந்தேன். "டாக்சி' என்ற மஞ்சள் விளக்கு, காரின் கூரையில் எரிந்து கொண்டிருந்தால் சவாரி ஏற்ற தயார் என்று அதற்குப் பொருள். அப்படி வந்த டாக்சி ஒன்றை நிறுத்தும் பொருட்டு கை நீட்டினேன். நான் கை நீட்டிய பிறகு, "டாக்சி' என்ற மஞ்சள் விளக்கை, "ஆப்' செய்து, நிற்காமல் சென்றார் டாக்சி டிரைவர்...
"போனால் போகட்டும் என்ற நினைப்பில், சட்டை பையில் இருந்து பேனாவும், பேப்பரும் எடுத்து ஏதோ குறிப்பெழுதினேன். இதை டாக்சியின், "ரியர் வியூ' கண்ணாடியில் டிரைவர் கவனித்து விட்டார் போலும்... டாக்சி நம்பரை நான் எழுதிக் கொள்வதாக நினைத்து விட்டார்...
"அடுத்த ஐந்தாவது வினாடி, "யு டர்ன்' அடித்து வண்டியை என் அருகே நிறுத்தி ஏறிக் கொள்ளச் சொன்னார். "சார்... நான் விளக்கை, "ஆப்' செய்ய நினைத்த நேரத்தில் நீங்கள் கை காட்டி விட்டீர்கள்... மதிய சாப்பாட்டிற்காக அவசரமாக சென்று கொண்டிருந்தேன். தயவு செய்து போலீசில் புகார் கூறி விடாதீர்கள்...' எனக் கெஞ்சி கேட்டுக் கொண்டார்.
"இது போன்ற குற்றங்கள் நிரூபணமானால், ஜெயில் தண்டனை - அபராதம் மட்டுமல்ல... அவர் வாழ்நாளில், அவரது சொந்த கார், பைக் எதையுமே அந்த டிரைவர் ஓட்ட முடியாதபடி சட்டம் உள்ளது சிங்கப்பூரில்; அதனால், நடு, நடுங்குகின்றனர்!
"சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு டாக்சியில் சென்று இறங்கி இருக்கிறார் அமெரிக்கர் ஒருவர். கட்டணத் தொகை போக, ஒரு டாலரோ, இரண்டு டாலரோ பாக்கி தராமல் சென்று விட்டார் டிரைவர்.
"ஊருக்கு சென்ற அமெரிக்கர், சிங்கப்பூர் டூரிசம் டிபார்ட்மென்டுக்கு டாக்சி நம்பருடன் ஒரு புகார் எழுதிப் போட்டு இருக்கிறார். உடனே, அவரையும், அவர் குடும்பத்தினரையும் சிங்கப்பூர் அரசு விருந்தினராக வர அழைப்பு விடுத்தது.
"அவரது குடும்பம் முழுமைக்கும் விமானத்தில் முதல் வகுப்பு டிக்கெட், நட்சத்திர ஓட்டலில் தங்கல், சிங்கப்பூரில் செலவு செய்ய தலைக்கு ஒரு நாளைக்கு அமெரிக்க டாலர் 400... ஒரே ஒரு கண்டிஷன்... டிரைவரை அடையாளம் காட்ட வேண்டும்.
"அழைப்பை ஏற்ற அமெரிக்கர், தம் குடும்பத்துடன் மீண்டும் சிங்கப்பூர் வந்து, டாக்சி டிரைவரை அடையாளம் காட்டினார். ஓய்ந்தது, டிரைவர் வாழ்க்கை. ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை; ஒரு லட்ச ரூபாய் அபராதம்; டிரைவிங் லைசென்ஸ் பிடுங்கப்பட்டது; ஆயுளுக்கும் அவர் சிங்கப்பூரில் கார் ஓட்ட முடியாது!' என்று முடித்தார்!







