Sunday, June 24, 2012

5

எனக்கு பிடித்த கவியரசு கண்ணதாசன் அவரது செப்பு மொழிகள்

  • Sunday, June 24, 2012
  •               தமிழுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனக்கு பிடித்த தமிழ் கவிஞர்கள் இருவர். முதலாமவர்   பாரதி    அடுத்து  கவியரசு கண்ணதாசன் . பாரதியார் பாடல்கள் பள்ளியில் முதல் வகுப்பில்  ஓடி விளையாடு பாப்பாவிலிருந்து  அறிமுகம் ஆனால்  கண்ணதாசன் ஆறாம் வகுப்பு அல்லது ஏழாம் வகுப்பிலோ இயேசு காவியம்  படித்தாதாக நினைவு. பாடப்புத்தகம் தவிர வேறு புத்தகங்கள்வாங்கி படிக்கும் பழக்கம் இல்லை பதினொன்றாம் வகுப்பில் தமிழ் கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு வாங்கியதற்கு ஒரு புத்தகம் கொடுத்தார்கள் அதை படித்தபின் கண்ணதாசன் எழுத்துக்கள் ஒரு நல்ல நண்பன்   என்று சொல்லலாம் அந்த புத்தகம் "கண்ணதாசனின் செப்பு மொழிகள் ". ஒவ்வொருமுறை வீட்டிற்கு செல்லும்போதும்  படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் .

                     இந்த புத்தகத்தை படிக்காதவர்களுக்கு அப்படியென்ன புதிதாக  சொல்லி இருக்கப்போகிறார் இதில் என நினைக்கலாம் கதையாகவோ , பாடல் வரிகளாகவோ   இருக்கும் என எண்ணி  நானும்  திறந்தேன் .ஏனெனில் பேச்சுபோட்டி ஆங்கிலகட்டுரை என மேலும் சில போட்டியில் வென்றதற்கு பாரதிதாசனின் அழகின் சிரிப்பு,    பாண்டியன் பரிசு என கொடுத்திருந்தனர் அவற்றை எல்லாம் அந்த வயதில் படிக்கும் பொறுமை கொஞ்சம் கூட இல்லை இருந்தாலும் பரிசாக வாங்கியது  என திறந்து பார்த்து எல்லாமே பாடல் வரிகள் இதற்க்கு அர்த்தம் தெரிந்து புரிந்து கொள்ளவேண்டும் நமக்கு சாத்தியம்  இல்லை  என சலித்து இறுதியாக தான் திறந்தேன் இப்புத்தகத்தை  கண்ணதாசன் என்ன எழுதியிருக்கப்போகிறார் ? 

                    முதலில் விளக்கவுரை அப்போதெல்லாம் இதையெல்லாம் எதற்கு எழுதுகிறார்கள் அவர் எழுதிய புத்தகம் எப்படியும் நன்றாக தான் இருக்கும் இதனை யாருக்காவது சமர்ப்பிக்கிறேன் என சொல்லபோகிறார்கள் என எண்ணம்தான்தோன்றியது  . சரி இதாவது உரை நடையில் இருக்கிறதே  என படித்தேன். அதில் நான் ஏன் பொன் மொழிகள் என இப்புத்தகத்திற்கு பெயர் வைக்காமல் செப்பு மொழிகள் என வைத்தேன் பொன்னில் கலப்படம் உண்டு அதனை உறுதியாக்க உலோகங்களை கலப்பார்கள். ஆனால் செப்போ எவ்வித கலப்போ இல்லாமல் தூயது . இதில் என்னுடைய அனுபவங்களை பகிர்ந்துள்ளேன் என எழுதியிருந்தார் . என்ன எழுதி இருந்தாலும் சரி படித்தே தீரவேண்டும் எனும் ஆர்வம் வந்தது முதல் பக்கம் சென்று படிக்கத்தொடங்கும் பொது இன்னும்  ஆச்சர்யம் பாடல் வரிகள் இல்லாமல் எளிமையாக எல்லோருக்கும் புரியும் வகையில் உரைநடையில் அதுவும் ஓரிரு வரிகளில் திருக்குறள் போல எழுதப்பட்டிருந்தது.

                           அரசியல் , சமுதாயம், நட்பு , சினிமா , பொருளாதாரம் , சொந்த வாழ்க்கை இல் நடந்த,இழப்பு ,குடிப்பழக்கம் , பெண்கள் என  எதையும் மறைக்காமல்    அவரது அனுபவ மொழிகளை மிக நகைச்சுவையாக நமக்கு உணர்த்தியிருப்பார்  இருப்பார் .   படிக்க படிக்க ஆச்சர்யமும் ஆர்வமும் கண்டிப்பாக தோன்றும் நினைத்தது போலவே அன்று முழுமையாக படித்து விட்டுதான் மூடிவைத்தேன் ..நடிகைகள் மீது  அவருக்கு என்ன கோபமோ ? அதிகமாக அவர்களைப்பற்றி அவர்களைப்பற்றி எழுதியிருப்பார் .

    சில வரிகள் உங்களுக்காக  

    காந்தியைப் போல் எல்லோரும் வாழ்ந்தால் எப்படி இருக்கும்?  கடலை வியாபாரம் நன்றாக நடக்கும்.

    நன்கொடை என்பது என்ன?வாங்குகிறவனை நன்றாக ஆக்குவது. கொடுப்பவனை None  ஆக ஆக்குவது.

    ஒரு பிரபல நடிகையின் தாய் பொதுத் தேர்தலில் ஓட்டுப் போட முடிவதில்லை ஏன்?
    ஓட்டுப் போடும் வயது இன்னும் வரவில்லை.

    கலியுகத்தில் கண்ணன் என்னென்ன நட்க்குமென்று சொன்னபோது மற்றுமொரு கருத்தையும் சொல்லியிருக்கிறான் அதுவென்ன மற்றுமொரு கருத்து?
    நடிகையின் பாட்டி அந்த நடிகைக்கே மகளாக நடிப்பாள்.

    பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலுள்ள பலரை விசாரித்ததில். எப்படி பைத்தியமானார்கள்?சினிமா நடிகைகளை மேக்கப்பில்லாமல் பார்த்ததினால்.

    சிறந்த மேடைப்பேச்சு என்பது  என்ன? பேசுபவருக்கே புரியாமல்பேசுவது  .

    இப்படி நகைச்சுவையாக அவரின் அனுபவங்களை நாம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளை சொல்லி இருப்பார் .

              கல்லூரி முடித்து வேலைக்கு சென்றபின் எங்கள் அலுவலகத்தில் தினமும் ஏதாவது கருத்தை அலுவலக வாயிலில்  உள்ள   போர்டில்  எழுதவேண்டும். பெரும்பாலும் தினசரி காலண்டரில் இருக்கும்  கருத்துக்கள் எழுதுவார்கள். நான்  எழுதியது  பெரும்பாலும் கண்ணதாசனின் இப்புத்தக  வரிகள்தான் , கருத்தை எழுதிவிட்டு கீழே  கண்ணதாசன் என எழுதும்போது ஏதோ என்   பெயரை எழுதுவது போலத் தோன்றும். உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு  வரும்போது இதனை பார்த்து நல்லா   இருக்கே யார் இங்க எழுதியது ?என இரண்டு மூன்று முறை கேட்டது உண்டு .

                இப்போதும் எனக்கு வாரம் தோறும்  சனிக்கிழமை   தினத்தந்தி நாளிதளில்  வரும் அர்த்தமுள்ள இந்து மதம் என  கண்ணதாசன் இன்னும்   பல வாழ்வியல் அர்த்தங்களை சொல்லிக் கொண்டுதானிருக்கிறார்  என்  கண்ணதாசன் .


    அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய அதே கண்ணதாசன் இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் "ஏசுகாவியம் " இயற்றியவர் .

               தம்முடைய நல்ல பக்கங்களை மட்டுமே இவ்வுலகிற்கு காட்டும் மனிதர்கள் மத்தியில்  அவரது  அனைத்து குணங்களையும்  இவ்வுலகிற்கு  அனுபவமாக எடுத்து சொல்லிய கவியரசு உண்மையான வழிகாட்டி .
    Read more...

    Sunday, June 17, 2012

    1

    நான் -விஷால்- நித்யானந்தா & பேப்பர் பாய்

  • Sunday, June 17, 2012


  •   காலை 11 மணிக்கு சார் என்று சத்தம் சண்டே கூட தூங்க விடமாற்றானேன்னு நினைத்துக்கொண்டு  போய் கதவை திறந்தால் பேப்பர் போடும் பையன்.........


    பேப்பர் போடும் பையன் : சார் பேப்பர் பணம்,சார் இந்த மாசம் எல்லா நாளும் சரியா வந்திருக்குமே! சார் நான்தான் போட்டேன்.


    (பேப்பர் மாதத்தில் 2-3 நாட்கள் ஒழுங்காக வரவில்லை என்று இதற்க்கு முன் சொல்லி இருந்தேன்)
    இந்த மாசம் எதுவும் சொல்லமுடியாதே   என்பது போல பார்த்தான்..
    வழக்கம் போல் எவ்வளவு என்று கேட்டு பணத்தை எடுத்து வந்து கொடுக்கும் போது..

    (இந்த மாசம் எதுவும் சொல்லமுடியாதே     என்பது   போல பார்த்தான் )
    நான் : என்னப்பா இந்த மாசம் பேப்பர்ல நியூஸ் ஒன்னும் சரி இல்ல ஒரே போர் ன்னு 

    சொன்னவுடன்...,அந்த பையன்     கடுப்பாகி பார்த்தான்
    நான் :இந்தாப்பா பணம் என்று சொல்லி (ஜெய் எஸ்கேப்).



    ஆபீஸ் முடிந்து எக்மோர் ஸ்டேசனில் ட்ரெயினுக்காக வெயிட் செய்துகொண்டிருந்தபோது உடன் 
    பணிபுரியும் நண்பன் பிஸ்கட் வாங்கி வந்தான் அப்போது ட்ரெயின் வர ஏறிய பின் வந்து எடுத்துக்கோ என்று சொன்னான் . 
    நான் வேறு யோசனையில் இருந்ததால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அடுத்த நாள் ஆபீஸ் 
        வந்து நான் அவனிடம் லஞ்ச் போகலாம் வா என கூப்பிட்டேன் . , நான் பிஸ்கட் குடுத்தா 
    சாப்பிட மாட்ட இப்போ  மட்டும் எதுக்கு கூப்பிடற என்று கோவப்பட்டுக்கொண்டிருந்தான் , .
    .இல்ல மச்சி ட்ரெயின் ல பிஸ்கட் யார் குடுத்தாலும் சாப்பிட கூடாதுன்னு டிவி விளம்பரத்துல 
    போடுறத நீ பாக்கலியா என கேட்க்க  ,அவன் கடுப்பாக... #ஜெய் எஸ்கேப்


    ===============================================
    நித்யானந்தாவை கர்நாடக போலீஸ் கைது செய்ய போகும்போது நித்யானந்தாவின் பதிலைக்கேட்டு 


    கர்நாடக போலீஸ் பயந்து திரும்பி வந்து விடுகின்றனர் அவர் என்ன அப்படி சொல்லி இருப்பார்                      ?...
    ?
    ?
    ஏய் நானும் மதுரைக்காரன்(மதுரை ஆதீனம் ) தாண்டான்னு சொல்லிட்டாரு அதனால கர்நாடக 


    போலீஸ் பயந்து ஓடிட்டாங்க #விஷால் ராக்ஸ்




    லவ் பண்ணுரவனுக்கு போன் பண்ணி பிறந்த நாள் வாழ்த்து சொல்லுறத விட கஷ்டமான காரியம் உலகத்துல ஏதும் இல்ல ஒரே வெயிட்டிங் கால் 

    ===================================================================
    எவன் D உன்ன பெத்தான் பெத்தான் .. #தந்தையர் தின வாழ்த்துக்கள் #இப்படிக்கு இன்று ஒருநாள் மட்டும் சிம்புவின் விழுது
    Read more...

    Tuesday, June 5, 2012

    2

    உங்கள் username ,password எப்படி திருடப்படுகிறது எப்படி தடுக்கலாம்

  • Tuesday, June 5, 2012

  •    இணையதளம் பல வழிகளில் நம் வேலைகளை எளிமையாக்கினாலும் அதன் இன்னொரு பக்கம் கொஞ்சம் ஆபத்தானது என்பதை மறுக்க முடியாது ,
    இணைய தள பாதுகாப்பு முறைகளை கையாள்வதில் எடுக்கப்பட்ட கருத்துகணிப்பில் நம் நாடு முதல் நாற்ப்பது இடங்களில் கூட வரவில்லை . முதலில் தகவல் எவ்வாறு திருடப்படுகிறது என்பதை தெரிந்தால் அதனை பாதுகாக்கும் வழி மிக சுலபமாகிவிடும் . பல வழிகளில் நம் இணைய தள  கணக்குகள் திருடப்படுகின்றன அவற்றில்   ஒன்றை இந்த பதிவில் பார்ப்போம் .

        ஒரே கணினியை பயன்படுத்துகிறீர்களா நீங்கள் சேமித்து வைக்கும் உங்கள்   username ,password ஆகியவை திருடப்படலாம் , எனவே பாதுகாப்பாக பயன்படுத்துங்கள் .இதற்க்கு மிக சிறந்த வழி உங்கள் கணினியை பகிர்ந்துகொள்கின்றவர்களுக்கு தனிLogin  உருவாக்கி கொடுத்துவிடலாம் . நீங்கள் எப்படி திருடப்பட வாய்ப்புள்ளது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம் .
                 
      நீங்கள் பயன்படுத்தும்  தளங்களின்   username ,password போன்றவற்றை Firefox ,google crome ல் இருந்து கண்டுபிடிக்கலாம் அதுவும் ஒரு சில நொடிகளில் .மறந்துபோகின்றவர்களுக்கு இது நல்ல பயன்தரும் .பயன்படுத்தும் Username மற்றும் Password அனைத்தும்.
    இணையதளத்தில் பெரும்பாலும் IE விட Firefox ,chrome மிக  பாதுகாப்பானது ,வேகமானது .
    நாம் பல்வேறு இணையதளங்களில் உபயோகப்படுத்தும் username ,password ஆகியவை நமது Firefox, Google Chrome ல் சேமித்து வைக்கபட்டுஇருக்கும்    அவற்றை எப்படி கண்டுபிடிக்கலாம் என்று பார்ப்போம் . 
    தடுக்கலாம் 

    1) Mozilla Firefox சென்று 

    2)  Edit  பட்டனை அழுத்தி   > Preferences என்பதை தேர்வுசெய்துகொள்ளுங்கள் .

    3) பிறகு security tab சென்று 

    4)"view saved passwords"  பட்டனை அழுத்தி .

    5) இறுதியாக  "show passwords " பட்டனை தேர்வு செய்து  பார்த்துக்கொள்ளலாம் .

     முதலில் sitename, username  காட்டும்  பிறகு show password button மூலம் password காட்டும் அவ்வளவுதான் நீங்கள் மறந்துபோன  Username,password ரெடி.


    அடுத்து Google chrome ல் எப்படி என்று பார்ப்போம்

    1. Google chrome சென்று 

    2.படத்தில் காட்டியவாறு வலது புறப்புறம் மேலே உள்ள ஸ்பானர் போன்று  இருக்கும் பட்டனை அழுத்தி யவுடன்  புதிதாக தோன்றும் விண்டோவில் 

    3.
    Personal stuff  என்பதை தேர்வுசெய்து  அங்கிருக்கும் manage  password   பட்டனை அழுத்தி யவுடன் -> Show saved passwords என்பதை தேர்வு செய்ததும்  நீங்கள் பயன்படுத்தும் தளத்தின் பெயரும் username ஆகியவை காணப்படும்  ,ஆனால் password ....... ஆக இருக்கும் அந்த இடத்தில் உங்கள் கர்சர் pointer  ரை  வைத்தால்  show  என காட்டும் அதனை அழுத்தியதும் உங்கள் password -ம்  கிடைக்கும் ... இனி password  மறந்துவிட்டது என்ற கவலை இல்லை .. பயன்படுத்த நீங்கள்    உங்கள்  username ,password ஆகியவற்றை save செய்திருக்கும்போது மட்டும் பயன்படுத்த முடியும் ..


                இதனை பயன்படுத்தி மற்றவர்கள் உங்கள் கணினியில் இருந்து கண்டுபிடித்து  விடுவார்கள் இதனை  master password அமைப்பது போன்ற  இன்னும் சில வழிகளிலும்  பாதுகாக்கலாம் இவற்றைப்  பற்றி   அடுத்த பதிவில் ...
    எனது ட்விட்டரில்  இருந்து :
    லவ் பண்ணுரவனுக்கு போன் பண்ணி பிறந்த நாள் வாழ்த்து சொல்லுறத விட கஷ்டமான காரியம் உலகத்துல ஏதும் இல்ல ஒரே வெயிட்டிங் கால் #HappyBDay


    மெதுவாக பந்து வீச்சு: ஹர்பஜன்சிங்குக்கு ரூ.10 லட்சம் அபராதம் -- டேய் நான் ஸ்பின் பௌலர் மெதுவாதாண்டா வீசமுடியும் #ஹர்பஜன் மைண்டு வாய்ஸ்

    இதையும் படிங்க 


    ரத்த பூமி எங்க ஊர் நாட்டாமை- பஞ்சாயத்து
    Read more...

    Saturday, June 2, 2012

    0

    software பயன்படுத்தாமல் இலவசமாக நமக்கு பிடித்த ரிங்க்டோன்.

  • Saturday, June 2, 2012

  • இசைக்கு  இன்று இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள் .
     நமக்கு பிடித்த ரிங்க்டோன் நாமே உருவாக்கலாம்.எவ்வித software பயன்படுத்தாமல் .. இந்த எளிய வழிகளை பின்பற்றி online இல் இலவசமாக http://www.makeownringtone.com/ தளம் வழங்குகிறது .
    * Upload, பட்டன் அழுத்தி edit செய்யவேண்டிய Mp3 file தேர்வு செய்துகொள்ளுங்கள் mp3, wma or ogg audio file.
    * முதலில் இவற்றை ஓடவிட்டு உங்களுக்கு தேவையானபகுதியை  குறிப்பிடுங்கள்  .

    * make a ringtone பட்டன் தேர்வு செய்து ok கொடுத்தால் உங்களுக்கு தேவையான ரிங் டோன் தயார் ..
    * இதனை   save செய்துகொள்ளுங்கள்  .

    இனி ஒவ்வொரு தளமாக சென்று நமக்கு பிடித்த பாடலை தேட தேவை இல்லை .இலவசமாக இந்த தளம் சென்று நமக்கு வேண்டிய வடிவில் நாமே பெற்றுக்கொள்ளலாம் .இதற்கென இலவச சாப்ட்வேர் தேடி அலைந்து கணிணினியில் நிறுவாமல் எளிதாக நாமே உருவாக்கலாம் ...


    Read more...

    Subscribe