Thursday, May 31, 2012

0

ரத்த பூமி எங்க ஊர் நாட்டாமை- பஞ்சாயத்து

  • Thursday, May 31, 2012
  • Share
  •                   படையப்பா , நாட்டாமை போன்ற படங்களை பார்க்கும் போது பஞ்சாயத்து & தீர்ப்பு  சொல்லும்   காட்சிகள் விறுவிறுப்பாகவும்  மிக சுவாரஸ்யமாகவும் இருக்கும் எப்படியாவது தவறு செய்தவர்களை கண்டுபிடித்து தண்டித்துவிடுவார்கள் என்ற எண்ணம் தோன்றும் , முதன்முதலில் பஞ்சாயத்து காட்சியை கலாய்த்தவர்  நம்ம கௌண்டமணிதான் ராம்கியுடன் சேர்ந்து "ஆகா என்ன பொருத்தம்" படத்தில். இந்த   படம்   கடந்த  மாதம் ஊருக்கு சென்றபோது கே. டிவி இல் பார்த்தேன்  நீண்ட நாட்களுக்கு பிறகு அதே அளவு சிரிப்பு எனது நட்பு வட்டாரத்தில் எல்லோருக்கும்  பிடித்த  படம் என்று     சொல்லலாம்,  அதன்பிறகு எல்லோரும் பஞ்சாயத்து காட்சிகளை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர் கௌண்டமணிக்கு அடுத்து விவேக் காதல் சடுகுடுவில் கலக்கி  இருப்பார்   ..  

                  இதை எல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் எங்கள்  ஊரில் நடந்த ஒரு கலகலப்பான  பஞ்சாயத்து பற்றி இந்த பதிவில் பகிரப்போகிறேன் ,ஊரில் திருட்டு,சண்டை ,  நிலத்தகராறு எது நடந்தாலும் பஞ்சாயத்துதான் காவல் நிலையம்  எல்லாம்  கடைசியாகத்தான் போவார்கள்    .அப்போது ஒன்பதாவது அல்லது பத்தாவது படித்து   கொண்டிருந்ததாக நினைவு      எங்கள் ஊரில் ஐந்தாம்  வகுப்புவரை  மட்டும்   இரண்டு பள்ளிகள் உள்ளன .(இரண்டையும் சேர்த்து  எட்டாம் வகுப்பு வரை வைத்திருந்தாள் இந்த பிரச்சினை வந்திருக்காது )
                          
                 ஐந்தாம் வகுப்பிற்கு மேல் 3 கிலோமீட்டர் அருகில் உள்ள செட்டிக்குளம்  எனும் ஊரில் தான் படிக்க செல்லவேண்டும் பஸ்சிலோ அல்லது  சைக்கிளிலோ  சென்று வருவோம்   அன்று ஸ்கூல்   முடிந்து வீட்டுக்கு    வந்த நண்பன் சதீசுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தேன் , சிறிது   நேரத்தில் தெருவில் ஒரே சத்தம் என்ன வென்று போய் பார்த்தால்  எங்கள் ஊரை சேர்ந்த இரண்டு பெண்களை ஸ்கூலில்  இருந்து வரும்போது அந்த ஊர் பையன்கள் 3 பேர் கிண்டல் செய்து கொண்டிருந்ததை  எங்கள் ஊர் ஆட்கள் சில  பேர் பார்த்து அந்த பையன்களை  இழுத்து வந்து ஊரின் நடுவில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்து  அங்கிருந்த பஞ்சாயத்து தலைவர்கள்  ஆளுக்கு ஆள் அந்த பசங்களை அறைந்து  கொண்டிருந்தனர், பெண்கள் நீங்க எல்லாம் படிக்கிற பசங்களா  என அர்ச்சனை செய்யத்தொடங்கினர் . 
                        சற்று நேரத்தில் மீதம் வர வேண்டிய  பஞ்சாயத்து தலைகளும் வந்து சேர ஆகா என்ன பொருத்தம் போல எல்லாரும் அமைதியா இருங்க என்ன பிரச்சினைன்னு கேட்க ஆரம்பிக்க .. இப்போதுதான் களைகட்ட ஆரம்பித்தது   அங்கிருந்த இன்னொரு தல நம்ம ஊரு பொண்ணுங்கள இந்த பசங்க ராகிங் பண்ணிடாங்க அதான் புடிச்சி கட்டி வெச்சிருக்கோம் என சொல்ல ,அங்கிருந்த நான்கைந்து தலைகளும் கோபமாகி  யார் என விசாரித்து" காந்தி பொறந்த மண்ணுல ஏன்டா இப்புடி பொம்பள புள்ளைங்கள ரேகிங்  பண்ணுறீங்க? ",என பஞ்ச் டயலாக் சொல்ல பக்கத்திலிருந்த நாங்கள் மச்சி    காந்தி குஜராத்ல பொறந்தாரு இவங்க என்னனா நாம் ஊர் சொல்லுறாங்க என சொல்லி  எங்களுக்கு வந்த சிரிப்பை அடக்கி கொண்டு வேடிக்கை பார்க்க தொடங்கினோம். இப்பொது  கூட நண்பர்களுடன் பேசும்போது  "காந்தி பொறந்த மண்ணுல ஏன்டா இப்புடி? " என ஜாலி யாக சொல்லி சிரிப்போம்  அந்த அளவுக்கு மறக்கமுடியாத  ஒன்று , 
        
                         அடுத்து படிக்கிற வயசுல ஏன்டா இப்படி பண்ணுறீங்க என பஞ்சாயத்து தலைகளின்  அட்டகாசம் தொடர்ந்தது...எப்படா   தீர்ப்பு சொல்லுவாங்க என நினைத்துக்கொண்டு பார்த்துகொண்டிருந்தோம், சில நிமிடச்ங்களுக்கு பிறகு தீர்ப்பில் அவர்களுக்கு தண்டனை கொடுக்க தீர்மானித்து , என்ன தண்டனை சின்ன பசங்கள் என்ன பண்ணலாம் என்று யோசித்து இறுதியாக ஒருவரை கூப்பிட்டு போய் ஒரு ஆறு செங்கல் கொண்டுவரச்சொன்னார்கள் , தலைவர்  என்னமோ  பண்ணப்போகிறார்   என அனைவரின் முகத்திலும் ஆச்சர்யம் பாவம் அந்த பசங்கள் பயத்துடன் ஏற்கனவே நல்ல அடி வேறு விழுந்ததால் பரிதாபத்துடன்  பார்த்துக்கொண்டிருந்தனர் .. செங்கல் வந்ததும் அந்த பசங்களை அவிழ்த்து விட சொல்லி அவர்களை வந்து இந்த செங்கல் மேல் கால்  மணி  நேரம் முட்டிகால் போடுங்கள் என சொல்லி அந்த பசங்களை முட்டிக்கால் போட வைத்தனர். 

               இதில் முக்கியமான விசயம் என்ன வென்றால் அந்த பசங்களின் குடும்பப்பின்னணி       பெரிதாக இல்லை என்று  தெரிந்தபின்தான்  அந்த பஞ்சாயத்து தலைகள்  தீர்ப்பு சொன்னார்கள் ... இதுபோல பல முறை பஞ்சாயத்துதீர்ப்புகள்  நடந்திருந்தாலும் ,இது மறக்கமுடியாத ஒன்றுஎல்லாமே பெரும்பாலும் தப்பு செய்தவரின்  பின்னணிக்கு  ஏற்றவாறு  தீர்ப்பு சொல்லும்  கட்டபஞ்சாயத்து   ...  ஆனால் இப்போதெலாம் ஏனோ நோ பஞ்சாயத்து நோ தீர்ப்பு ...

    ஊரைவிட்டு வந்துவிட்டோம் என்பதாலா?.. என்ன நாங்க எல்லாம்   ..........................

    0 Responses to “ரத்த பூமி எங்க ஊர் நாட்டாமை- பஞ்சாயத்து”

    Subscribe