Saturday, February 13, 2010
0
விஷாலுக்கு வெற்றிப்படம் தீராத விளையாட்டுப்பிள்ளை good Entertainer......
ஏன் இந்த படத்திற்கு Times of india ஒரு star மட்டும் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.?
....
விஷால்+சந்தானம் +யுவன்= கலக்கும் தீராத விளையாட்டு பிள்ளை
விஷால் எதிலும் best வேண்டும் என்று நினைப்பவர் பேனா வாங்கினாலும் மூன்றை தேர்வு செய்து அதில் சிறந்ததை வாங்குபவர் , திருமணம் செய்வதற்கு மூன்று பெண்களை காதலித்து அதில் best ஆக இருப்பவரை திருமணம் செய்ய நினைக்கிறார் .
சந்தானம் , மயில்சாமி ,சத்யன் இவரது நண்பர்கள்.முதல் பாதி முழுவதும் இவர்களின் காமெடி சிரித்துக்கொண்டே இருக்கலாம் , அதிலும் சந்தானம் அடிக்கும் லூட்டி சூப்பர் . விஷாலை கூட ஓட்டுகிறார்.
சந்தானம் , மயில்சாமி ,சத்யன் இவரது நண்பர்கள்.முதல் பாதி முழுவதும் இவர்களின் காமெடி சிரித்துக்கொண்டே இருக்கலாம் , அதிலும் சந்தானம் அடிக்கும் லூட்டி சூப்பர் . விஷாலை கூட ஓட்டுகிறார்.
ஒருபெண் பணக்காரி அவளிடம் ஆட்டோ டிரைவர் என்று சொல்லியும் , இன்னொருபென்னுக்கு ஆண் என்றாலே பிடிக்காது அவளிடம் பொண்ணுங்கன்னாலே புடிக்காது என்று சொல்லியும் மூன்றாவது பெண்ணுக்கு ஒருவனை காதலித்து அவனையே கல்யாணம் செய்யும் ஆசை இப்படி மூவரையும் காதலிக்கவைக்கிறார் விஷால் முதல் பாதி விறுவிறுப்பு,விஷால் செய்யும் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது .
பணக்கார பொண்ணுக்கு உண்மை தெரிந்ததும் விஷாலிடம் எப்படி நீ மீதமுள்ள இரு பெண்களில் ஒருவரை திருமணம் செய்கிறாய் என்று சவால் விடுகிறார் . விஷால்இவர் கொடுக்கும் இடைஞ்சல்களை எப்படி இதனை சமாளிக்கிறார் என்பது விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார்கள் கடைசி 15 நிமிடங்களை தவிர .
விஷால் காமெடி , காதல் , டான்ஸ், சண்டை என எல்லாவற்றிலும் பின்னி எடுக்கிறார் .இடையிடையே பாடல்கள் வந்தாலும் யுவன் சங்கர் ராஜா அருமையாக இசை ரசிக்க வைக்கிறது.ஒளிப்பதிவு அருமை. .வித்தியாசமான ,புதுமையான காட்சிகள் என படம் செல்வதால் படம் எல்லோரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது .பெண்களின் காதலுக்கு எதிராக விஷால் வசனம் பேசி கைதட்டல் வாங்குகிறார் .
பிரகாஷ் ராஜ் ஹீரோஇன் அண்ணன் + தாதாவாக சில காட்சிகள் வந்தாலும் அவர் சிரிக்கவைக்கிறார், மௌலி விசாலின் அப்பாவாக வந்து அவரும் சிரிக்கவைக்கிறார் . இறுதிகாட்சியில் சிநேகா இலவச இணைப்பாக வருகிறார்.விஷால் இனி இதுபோல தனக்கு ஏற்ற கதைகளை தேர்வு செய்வார் என நம்பலாம்.இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் வந்துள்ள படம்.
விஷாலுக்கு வெற்றிப்படம் தீராத விளையாட்டுப்பிள்ளை good Entertainer......
ஏன் இந்த படத்திற்கு Times of india ஒரு star மட்டும் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.?
....
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “விஷால்+சந்தானம் +யுவன்= கலக்கும் தீராத விளையாட்டு பிள்ளை”
Post a Comment