Showing posts with label twitter. Show all posts
Showing posts with label twitter. Show all posts

Monday, May 30, 2011

0

சோசியல் மீடியா தமிழில் பகுதி-2 :நம்பகத்தன்மையை அறிந்து புதிய பொருள் வாங்க உதவும் ட்விட்டர்

  • Monday, May 30, 2011
  • தமிழில் Social  Media எனப்படும் சமூக வலைத்தளம் பற்றிய முதல் பாகத்திற்கு ஆதரவளித்த நண்பர்களுக்கும் திரட்டிகளுக்கும் நன்றி ... இந்த  வார பதிவில்  

    நம்பகத்தன்மையை அறிந்து  புதிய பொருள் வாங்க உதவும் ட்விட்டர்.

    ஆமாம் நாம் புதிதாக camera,ipod,mobile போன்றவற்றை வாங்கும் முன் நம்பகத்தன்மையை ஏற்கனவே பயன்படுத்திவரும் பயனாளர்களின் கருத்துக்களை வைத்து அதன் நிறை குறைகளை அலசி உங்களுக்கு தெளிவான முடிவெடுத்து முடிவுகளை அளிக்கும் தளத்தை பற்றி காணலாம் .. இது ஆச்சர்யம் தான் ஆனால் உண்மை ...இதோ 


    உதாரணமாக நாம் புதிதாக iphone வாங்குவதாக வைத்துக்கொள்வோம் அதைப்பற்றி நாம் ட்விட்டரில் ஏதாவது கூறுவோம்    உதாரணமாக
    my new iphone is very nice i love so much...அல்லது
     i bought new iphone  அல்லது 
     bought one bad iphone having worst audio quality என மூன்றுவிதமாக பகிர்ந்துகொள்வோம்
     முதலில் கூறியது மிகவும் நன்றாக உள்ளது  positive opinion .....
    அடுத்து வாங்கினேன் என்று சொல்வது நடுநிலையான கருத்து ..
    இதனை அடுத்து இறுதியாக sound quality மிக மோசமாக உள்ளது
     போன்று  எதிர்மறையான கருத்தாக சொல்லக்கூடும் 
    இதனைவைத்து அதன் தரத்தை கண்டறியலாம் .
    இவ்வாறு மூன்று விதாமாக பிரித்து கணக்கிட பல சோசியல் மீடியா search engine கள் உள்ளன இதில் 
            http://feeltiptop.com தளத்திற்கு சென்று நீங்கள் புதிதாக வாங்க விரும்பும் பொருளை type செய்து மேற்கூறியவாறு தேடி அதன் முழு விவரத்தை பயன்படுத்தியவர்களின் கருத்துக்களை வைத்து நிர்ணயித்து தெளிவாக அதுவே sollividum .புள்ளிவிவரமாக.தெளிவாக கீழ்க்கண்டவாறு படங்களுடன் ...





     இதில் நம்மை போன்றவர்களின் கருத்துக்கள் மூலம் கணக்கிடுவதனால் நம்பகத்தன்மை நிச்சயம் .

    அடுத்த வார சோசியல் மீடியா பதிவில்:

    மனநல மருத்துவத்தில் சோசியல் மீடியா .....
    Read more...

    Sunday, May 22, 2011

    0

    தமிழில் சோசியல் மீடியா - முதல் பாகம் part 1

  • Sunday, May 22, 2011
  •                  social media இது பற்றி படிக்கும் போதெல்லாம் தமிழி இதுபற்றி பெரிதாக தகவல்கள் இல்லை  எனவே , தமிழில் இது பற்றி எழுதவேண்டும் எனபது எனது கனவு அதனை நனவாக்க தற்போது எழுத தொடங்குகிறேன் .

    சமூக வலைதளங்கள் :
                  twitter , facebook, orkut, google buzz, picasa,blog,linkedin,youtube ,blog போன்ற நம் கருத்துக்களை எழுத்துக்கள் , புகைப்படங்கள் , video க்கள் வடிவில் பிறருடனோ நண்பர்களுடனோ பகிர்ந்து கொள்ள மேற்கூறிய தளங்கள் உதவுகின்றன .

         தற்போது சுமார் 4500 சோசியல் மீடியா  வலைத்தளங்கள் உள்ளன இவற்றில் ஆபாச தகவல்கள்,செக்ஸ் சம்மந்தமாக சுமார்  3000 தளங்கள் உள்ளதென கண்டறிந்துள்ளனர் என்பது வருத்தமான விஷயம் .
    முக்கியத்துவம் :
                கடந்த ஐந்து ஆண்டுகளில் சோசியல் மீடியா வின் ஆக்கிரமிப்பு இணைய உலகில் முக்கிய இடம் பிடித்துவிட்டது . சோசியல் மீடியா இல்லாத இணையதளத்தை நினைத்து பார்க்ககூட முடியாது .

            ஒரு முக்கிய ஆய்வின் படி facebook பயன்படுத்தமுடியாமல் இருக்கமுடியாது என இணையதளத்தை பயன்படுத்துபவர்கள்  38% பேர் கூறி உள்ளனர் மேலும் 26%  எப்போதும் facebook, gtalk போன்றவற்றில் 24 மணி நேரமும் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

    சோசியல் மீடியா தற்போது பலருக்கும் எளிதில் சாத்தியம் ஆகிவிட்டது தற்போது linkedin போன்ற தளங்கள் வேலைவாய்ப்பில் அதிகம் உதவுகின்றன . 
    picaasa போன்ற தளங்கள் படங்களை பகிர youtube நம்மிடம் உள்ள video க்களை இலவசமாக பகிர உதவுகின்றன facebook,twitter,orkut போன்றவற்றைப்பற்றி சொல்லத்தேவை  இல்லை .

    வியாபார உலகில் சோசியல் மீடியா வின் பங்களிப்பு:
    மேற்கூறியவை எவ்வித வியாபாரம் இன்றி நம்மை போன்றவர்கள் பயன்படுத்துவது, ஆனால் இன்றைய தொழில் நுட்ப உலகில் இவற்றை வைத்து பெரிய வியாபார உலகமே  இயங்கி வருகிறது .

    சோசியல் மீடியா வின் அபார வளர்சியைகண்டு வியாபார உலகில் தொழில் நுட்ப வல்லுனர்கள் தங்களின் வியாபார உத்தியை இவற்றில் எப்படி பயன்படுத்தலாம் என யோசித்து தற்போது அதில் பெரிய வெற்றி  பெற்று இன்னும் பல வழிகளில் மேம்படுத்திவருகின்றனர் .

    சோசியல் மீடியா marketting அபார வளர்ச்சி பெற முக்கிய காரணம்:

    தற்போது இணையதள பயன்பாடு  எல்லோருக்கும் எளிது.மொபைல் வழியே குறைந்த செலவில் கிடைகிறது கூடுதல் சிறப்பு.

    கருத்துக்களை பிறருடன் எளிதில் பகிரும் வசதி.

    சிறந்த பொழுதுபோக்கு போன்ற பல சிறப்புகள் 

    முக்கியமாக நம் கருத்துக்கள் எவ்வித மிகைப்படுத்துதலும்  இல்லாமல் இருப்பது .
             உதாரணமாக நாம் புதிதாக ஒரு camera வாங்கினால் அதனை படத்துடன் அதன் தரத்தை , சிறப்புகளை twitter அல்லது facebook போன்றவற்றில் பகிர்ந்துகொள்வோம் இதனால் நம் நண்பர்கள் ஈர்க்கப்பட்டு அடுத்து அவர்கள் வாங்கும் போது இதனை மனதில் வைத்து வாங்குவர் . 

         வழக்கம் போல கடைக்கு சென்று விற்பனையாளரின் கருத்துக்களை வைத்து வாங்காமல்    நம் நண்பரின் கருத்துக்கள் வைத்து  அவர் கிட்டத்தட்ட எவ்வளவு ஆண்டுகாலம் பயன்படுத்தினார் தற்போதைய அதன் நிலவரம் போன்றவற்றை மனதில் வைத்து வாங்குவதால் முழுமையான வியாபார வெற்றி .

    உதாரணம்:
            தற்போது online marketting இல் பெரிய நிறுவனமான www.amazon.com தளத்திற்கு சென்று பாருங்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்துகொள்ளும் வசதி , அந்த பொருளை பற்றிய உங்களின் கருத்துக்கள், அதற்க்கு நீங்கள் ratting போன்ற வசதிகள் உண்டு , இதனை வைத்து வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மையை உருவாக்குகின்றனர்.

                amazon தள marketting manager சோசியல் மீடியா மொத்த வியாபாரத்தில் 70% பங்கு வகிக்கிறது என்று குறிப்பிட்டுளார் .
               
    எதிர்கால உலகில் சோசியல் மீடியா:
           மேற்கூறியதுபோல பொருட்களின் நம்பகத்தன்மை உருவாக்கம் போல தற்போதைய நிகழ்வுகள் பற்றி மக்களின் மன நிலை அறியும் வாய்ப்பு, 
    தனி மனிதனின் மன நிலையை அவன் பகிர்ந்துகொள்ளும் செய்திகளை வைத்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு போன்றவை , 

         நம்மை போன்ற பதிவர்கள் மற்றும் தளத்தை படிக்கும் நண்பர்கள் நல கருத்துக்களை அவர்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு போன்றவற்றில் பயன்பாடு கின்றன.

             SEO எனப்படும் search engine optimaization மூலம் தங்களின் வலைதளத்தை கூகிள்,bing போன்ற தேடு  பொறிகளி l தேடலின் முடிவுகளில் முதன்மை பெற என முக்கியத்துவம் பெறுகின்றன .

           உதாரணமாக நம் பதிவுகளை திரட்டிகளில் மட்டும் இணைக்கிறோம் இதனை மேலும் twitter, facebook,buzz போன்றவற்றில் இணைத்து  அதிக ranking பெற வைத்து நம் தளங்களில் உள்ள விளம்பர வருவாயை பெருக்கலாம்.
    bolgger கள் பெறப்போகும் பயன்கள் ;

            மிக அதிக அளவிலான பார்வையாளர்களை கொண்ட தளம் இனி வரும் காலங்களில் google அல்லாத சில தனியார் நிறுவன விளம்பர வசதிகளை பெற்று வருவாய் பெரும் வசதி உண்டு . தற்போதே சில நிறுவனங்கள் கொடுத்தாலும் அவர்கள் கூறும் விதிகளின்படி மிக மிக அதிக பார்வையாளர் வந்தால் மட்டுமே குறைந்த வருவாய் கிடைக்கும் எனபது குறிப்பிடத்தகது .

    2016 தமிழக   சட்ட மன்ற தேர்தல்:
                    தற்போதைய தேர்தலில் பெரிதாக கட்சிகள் இணையதளத்தை பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை ஆன்னல் வரும் நாட்களில் முக்கியமாக இளைஞர்களின் வாக்குகளை பெற அவசியம் .எதிர்கால சோசியல் மீடியா ஆளுமைக்கு நல்ல உதாரணமாக 2016 சட்டமன்ற தேர்தல் அமையும் முக்கிய கட்சிகள் அனைத்தும் சோசியல் மீடியா மூலம் மக்களிடம் வாக்குகளை பெற நல்ல ஊடகமாக இணையதளம் அமையும் பொது சோசியல் மீடியா அதற்கு பேருதவி புரியும் .
     
             இனி வாரம் தோறும் சோசியல் மீடியா வின் பயன்பாடு வளர்ச்சி பற்றி பகிந்துகொள்வோம்.எனக்கு தெரிந்தவற்றை பகிர்கிறேன் உங்களது கருத்துக்களையும் பகிர்ந்து பதிவு சிறக்க உதவுங்கள் . .பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி தமிழில் சோசியல் மீடியா பதிவுக்கு உதவுங்கள் .  

            இன்னும் நீங்கள் வியக்கும் பயன்கள் சோசியல் மீடியா மூலம் பெறமுடியும் அவற்றை அடுத்த பதிவில் காணலாம் .
    Read more...

    Wednesday, May 18, 2011

    1

    உங்கள் வலைபக்கத்தில் கிரிக்கெட் போட்டி முக்கிய நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவது எப்படி ?

  • Wednesday, May 18, 2011
  • (How to Brodcast Live Match in our Site/Blog)
    உலகம் சுருங்கிவிட்டது இதற்க்கு உலகம் முழுவதையும் சில மணிகளில் சென்றடையலாம் எனபது மட்டுமல்ல , நாம் இருக்குமிடத்திலிருந்தே முக்கிய நபர்களுடன் நேரில் இருப்பதுபோல் பேசி பார்த்து மகிழலாம்,அதுவும் இலவசமாக  , அதுபோல முக்கிய நிகழ்வுகளை  வீட்டில் இருந்தே கண்டுகளிக்கலாம் அது பற்றிய பதிவு கிரிக்கெட் மற்றும் நமது நண்பர்கள் உறவினர்கள் கலந்துகொள்ளும்    முக்கிய நிகழ்ச்சிகளை Online ல் நேரடிஇலவசமாக  ஒளிபரப்பு செய்யலாம்

    கிரிக்கெட் மேட்ச் நடக்கும் போது மற்றும் வீட்டிலோ  அலுவலகத்திலோ நடக்கும் முக்கிய விழாக்கள் பிறந்தநாள் விழா போன்றவற்றை இலவசமாக Online    Live Telecast ல் நமது தளத்தில் ஒளிபரப்பி அனைவரும் பார்க்கவும் /விழாவில் கலந்து கொள்ள  முடியாதவர்களும் பார்க்கும் வாய்ப்பு ஏற்ப்படுத்தலாம் ,ustream இணையதளம் இதனை நமக்கு இலவசமாக வழங்குகிறது.

    முதலில் கிரிக்கெட் மேட்ச் blog ல் ஒளிபரப்ப உங்கள் தொலைக்காட்சி வீடியோ ,ஆடியோ output ஐ USB cable  ல் இணைக்கவேண்டும்  , முக்கிய  விழாக்களுக்கு 
     ஒரு நல்ல  தரமான digital camera , USB connector ,mike இவற்றை கணிணியில் இணைத்து பிறகு http://www.ustream.tv சென்று register செய்து
    பிறகு Broadcast Now  தேர்வுசெய்து
    நீங்கள் ஒளிபரப்பவிரும்பும் நிகழ்ச்சியின் பெயரை தேர்வு செய்யுங்கள்  Cricket Live ,Songs என்று உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து பிறகு
    அங்கு உங்கள் விருப்பம் போல் settings அமைத்து
    offline ல் இருக்கும் போது நீங்கள் ஏற்கனவே பதிவு செய்த வீடியோ ஒளிபரப்பும் படி செய்துவிடுங்கள் பிறகு USB  இணைத்து ஒளிபரப்பை தொடங்குங்கள், கிரிக்கெட் ரசிகர்கள் உங்கள் ப்லோக் தேடி வருவார்கள் ...  முக்கிய நிகழ்ச்சிக்கு வராதவர்கள் உங்கள்  வலைபக்கத்தில் கண்டு ரசிப்பார்கள் ,
    நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு முன்னோ ,பின்னோ ஒளிபரப்பு இல்லாத போது ,நீங்கள் ஏற்கனவே பத்தி செய்த வீடியோ ஒளிபரப்பும் வசதியும் உண்டு.

    settings தேர்வு செய்யும் போது நல்ல தரமான வீடியோ வழங்க கொடுத்துள்ள option தேர்வு செய்துகொள்ளவேண்டியது அவசியம் , இதற்க்கு சில software அவர்களே வழங்குகிறார்கள் .. 

     அருகில் உள்ள Object Code  copy செய்து  ப்லோக் ல் போட்டுகொண்டால் நமது ப்ளோகில் அவர்கள் கண்டுரசிப்பார்கள் ....நமது வலைபக்கத்தில் live programme ரெடி ...
    வெளி நாடுகளில் கால்பந்து , டென்னிஸ் போன்ற முக்கிய விளையாட்டுகள் இப்படித்தான் வலைபக்கத்தில் ஒளிபரப்புகின்றனர் ,
    இலவச வீடியோ ஒளிபரப்பு வழங்க இன்னும் சில தளங்கள் ..
    http://www.casttv.com
    http://www.telecast-fiber.com/


      நமது நாட்டில் இன்னும் இது போன்று அதிகம்  வளர ஆரம்பிக்கவில்லை இணைய தளத்தை பொறுத்தவரை நம்மவர்கள் சுமாராக மூன்று ஆண்டுகள் பின்னோக்கியிருப்பதாக இங்கிலாந்து பல்கலைகழக ஆய்வு தெரிவிக்கிறது ,  ..
    பாகிஸ்தானுக்கும் ஏறத்தாள இதே நிலைதான்  ஆனால் வைரஸ் ,ஹாக்கிங்  போன்றவற்றில் நம்மை முந்திவிட்டனர் ....என்பது கூடுதல் தகவல்.  .



    அடுத்த பதிவில்:
          தமிழில் social media எனப்படும் சமூக  வலை தளங்கள்(Twitter,Facebook,Linledin etc..) பற்றிய தகவல்கள் பெரிதாக இல்லை ,தற்போது இணையத்தில் இவைகளை வைத்தே பெரிய அளவில் வியாபாரம் நடக்கிறது ,இதனைப்பற்றி விரிவாக முழுமையாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பிகிறேன் ,எனவே இனி வாரம் ஒருநாள் social netwok தளங்கள் பற்றி எழுதலாம் என முடிவுசெய்துள்ளேன்  


                நண்பர்கள் மற்றும் திரட்டிகளின் ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .
    Read more...

    Wednesday, May 11, 2011

    0

    எச்சரிக்கை இணையத்தில் உலாவும் போது நம்முடைய தகவல்கள் திருடப்படலாம் அதனை தடுக்கும் முறைகள்

  • Wednesday, May 11, 2011
  •                   இணையத்தில் நாம் உலாவும் போது நம்முடைய தகவல்கள் நமக்கு தெரியாமல் சேகரிக்கப்படுகின்றன .நாம் எந்தெந்த தளங்களுக்கு செல்கிறோம்  நாம் தேடும் தகவல்கள் என்னென்ன ? போன்றவை கண்டறியப்படுகிறது .இதனால் நம்முடைய privacy பாதிக்கப்படுகிறது .

    இது எப்படி நடக்கிறது எப்படி தடுக்கலாம் என்று பார்க்கலாம்  
       
     நமக்கு பிடித்த தகவல் இருந்தால் அந்த  தளத்தில் உள்ள facebook like button அல்லது ட்விட்டர் அல்லது buzz போன்றவற்றின் மூலம் share அல்லது like button மூலம் நண்பர்களுடன் பகிர்கின்றோம் .
    இவாறு பகிரும் போது நாம் பயன்படுத்தும் browser இல் உள்ள cookies  வழியே  social media tool (face book button) உதவியுடன்  facebook,google போன்றவை நம்முடைய இணையதள பயன்பாட்டை trace செய்கின்றன .

      இவ்வாறு trace செய்தவத்தால் அவர்களுக்கு என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு இதோ பதில் ...
               நாம் google இல் நமக்கு தேவையான தகவல்களை தேடும் போது நம்முடைய தேடலுக்கு ஏற்றவாறு google விளம்பரங்களை கொடுத்து அதன் வருவாயை அதிகரித்துக்கொள்ளும் 

     .மேலும் உதாரணத்திற்கு saidapet2009.blogspot என்பதனை google இல் முதலில் தேடும் பொது saidapet ,saidapet pincode, saidai duraisamy என காட்டும் பிறகு நான்கைந்து முறை saidapet2009blogspot என தேடி browser இல் உள்ள cookies களை அழித்துவிட்டாலும் நமது தேடல் தகவல்களை வைத்து முதலிலேயே saidapet2009.blogspot  என நாளடைவில் காட்டத்தொடங்கும் .
    மேற்க்கண்டவற்றால் பெரிய பாதிப்புகள் இல்லை ஆனால் சில தளங்கள்  ( 3rd party websites ) தங்கள் தளம் மற்றும் பொருட்களை விளம்பரப்படுத்த pop-up விளம்பரங்கள் மூலம் browser cookies வழியே தகவல்களை track script வழியே சேகரித்துவிடுகின்றனர்.

    இவ்வாறு track script போன்றவற்றை   உங்கள் browser தடை செய்யும் வகையில் பயன்படுத்தவேண்டும் முக்கியமாக facebook தளத்தில் இருந்து பிற தளங்களுக்கு சென்று மீண்டும் facebook தளத்திற்கு செல்லும்போது இந்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன .இதனை தடுக்க உங்கள் browser இல் உள்ள facebook cookies களை delete செய்தபின் பிற தளங்களுக்கு செல்லவேண்டும் .
                
         இதனால் பிற தளங்களில் உள்ள track script மீண்டும் facebook செல்லும் போது அந்த தள like button உங்களுக்கு தெரியாமலே like என்று நீங்கள் கொடுத்ததை போல மாற்றிவிடும் வகையில் தயார் செய்திருப்பார்கள் . இன்னும் வைரஸ் ,fishing என பல பிரச்சினைகள் வந்துசேரும் .

             எனவே மறக்காமல் facebook cookies களை delete செய்து பிற தளங்களுக்கு செல்லுங்கள். இன்னும் அதிகமாக பாதுகாப்பாக இருக்க உங்கள் IP யை மாற்றிக்கொள்ளுங்கள் அடிக்கடி . இதற்கென பல வழிகள் உள்ளன . பல இலவச software கள் உள்ளன . அவற்றை அடுத்தடுத்து பார்க்கலாம் .முக்கியமாக facebook, twitter போன்றவற்றில் உங்கள் கைப்பேசி ஏன் இருந்தால் அதனை முதலில் நீக்கிவிடுங்கள் .mail id போதுமானது .

    browser கள் இணையதள பயன்பாட்டிற்கு உதவினாலும் இது போன்ற சில வேலைகளுக்கும் தவறாக  பயன்படுத்தப்படுகின்றன.எனவே நாம் தான் பாதுகாப்பான முறையில் பயன்படுத்தவேண்டும். 


    இணையதளம் எந்த அளவிற்கு நம் வேலைகளை எளிதாக்கிவிட்டதோ அந்த அளவுக்கு பாதுகாப்பையும் கேள்விக்குறி ஆக்கிவிடும் நாம் பாதுகாப்பாக செயல்படாவிட்டால் .

    அடுத்த பதிவில்::
                             ட்விட்டர் , facebook போன்றவற்றின் மூலம் பணம் பண்ணுவது எப்படி என்று பார்க்கலாம் .(social media marketting).

    Nice Lines: Out of all the lies you have told i love you was my favourite one.
    Read more...

    Subscribe