Showing posts with label சூர்யா. Show all posts
Showing posts with label சூர்யா. Show all posts

Tuesday, July 21, 2009

3

பெண் /ஆண் ரசிகர்கள் ரசிக்கும் உண்மையான நடிகனின் பிடித்த பதினொன்று

  • Tuesday, July 21, 2009
  • பெண் /ஆண் ரசிகர்கள் ரசிக்கும் பிடித்த பதினொன்று அந்த நடிகர் யாருன்னுநீங்களே சொல்லுங்க

    தருதல, இளைய தலைவலின்னு ஓவரா ஸீன் போடாம சூர்யா ன்னு மட்டு பெயர் போடுறது புடிக்கும் .
    காசுகுடுத்து கட் அவுட் , பாலபிசேகம் பண்ணாம இருக்குறது புடிக்கும்

    நாலு படத்துல ஒன்னு ஓடினதும் அடுத்த முதல்வர் , ரசிகர்மன்ற சீரமைப்பு, அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என ஸீன் போட்டு வது என இல்லாமல் இருப்பது .


    (I am back) , நா ஒருதடவ முடிவு பண்ணா பேச்ச நானே கேக்கமாட்டே (அப்பா என்ன ------ நீ முடிவு பண்ற ) இப்படி அர்த்தமே இல்லாத (பஞ்ச்) வசனம் பேசாதது (இது ரெண்டுக்கும் என்ன அர்த்தம்ன்னு யாராச்சு தெரிஞ்ச சொல்லுங்கப்பா.)

    கலர் கலரா டிரஸ் போட்டு ராமராஜன் ரீ-என்ட்ரி ய தடுத்தது . சிம்புவ விட்டு பில்ட் அப் பன்னசொல்றது (இன்னுமாய ஒங்கள நம்புறாங்க ) இந்தமாதிரி வேலைய பண்ணாம இருப்பது .

    பிறந்தநாள் அன்று மட்டும் கம்ப்யூட்டர் தருவது , மரகன்று நட சொல்வது என இல்லாமல் அகரம் (Foundation) ஆரம்பித்து உதவிசெய்வது .




    ஐம்பது படம் நெருங்கியும் கண்துடைப்புக்காக ஒரு லட்சம் மட்டும் நன்கொடை தராமல் , வருமானத்தில் பத்து சதவீதம் சமுதாய நலனுக்கு ஒதுக்கியது .


    எல்லா படங்களிலும் டிரஸ் மட்டும் மாறிக்கொண்டு , தொப்பையை தூக்கி கொண்டும் ஆடாமல் எல்லோரும் ரசிக்கும்படி நடனம் ஆடுவது.


    சினிமாவில் அமைதியான நாடு கேட்டேன் என்று திரையில் பாடிவிட்டு வெளியே சைலன்ஸ் என சவுண்ட் விடுவது , அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறிவிட்டு அப்பொழுது எதோ பேசிவிட்டேன் இப்போது பக்குவம் வந்துவிட்டது என்று கூறாமல் அமைதிகாப்பது .


    டிவி பெட்டியில் இயக்குனருடன் குழந்தைபோல பெட்டி கொடுத்து பிறகு அவரை சைலன்ஸ் என்று மிரட்டாமலும் , இயக்குனர் ஹோட்டலில் மிரட்டினார் என்று சொல்லாமல் இருப்பது .

    எல்லோர் மனதிலும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக இடம்பிடிதுக்கொண்டிருப்பது.




    Read more...

    Wednesday, July 1, 2009

    3

    சினிமா வருமானத்தில் 10% ஏழைகளுக்கு ஒதுக்க சூர்யா முடிவு

  • Wednesday, July 1, 2009

  • அடுத்த படம் முதல் தனது சம்பளத்தில் இருந்து பத்து சதவீதத்தை ஏழை, எளியவர்களுக்காக உதவும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் அளிக்கப் போவதாக நடிகர் சூர்யா கூறினார். குடிசை வாசிகள், ஏழை, எளியவர்கள், ஆதரவற்றோர் உள்ளிட்டோருக்கு அந்த பணத்தை செலவிடப்போவதாக தெரிவித்தார். மாதத்துக்கு ஒரு முறை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் நேரத்தை செலவிடப் போவதாகத் தெரிவித்தார் நடிகர் சூர்யா. இந்தியாவில் உள்ள ஏழை எளியவர்களுக்கு உதவும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் நிதி திரட்டும் நிகழ்வுக்கான அறிமுக நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்கிழமை (ஜூன் 30) நடைபெற்றது. கிவ் இந்தியா அமைப்பு இந்நிகழ்ச்சியை நடத்தியது. "கொடுத்தலில் மகிழ்ச்சி வாரம்' என்ற நிகழ்ச்சி இந்தியா முழுவதும் செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பிரபலங்கள், நிறுவனங்கள், தனி நபர் ஆகியோர் நிதி திரட்டுவர். அப்பல்லோ குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, அப்பல்லோ மருத்துவமனையின் மூலம் ஏழை, எளியவர்களுக்கு உதவும் வண்ணம் உறுப்பு தானம் செய்ய வலியுறுத்தினார். ஓரியன்டல் குசின்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மகாதேவன் "" செப்டம்பர் 30 தேதி பிரதான ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சேர்ந்து உணவுத் திருவிழா நடத்தவுள்ளது. இந்த நிதி தமிழ்நாட்டில் உள்ள 100க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகளுக்கு வழங்கப்படும்'' என்றார். இதன் ஒரு பகுதியாக, கூன்ச் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் நாடு முழுவதும் நல்ல நிலையில் உள்ள பழைய துணிகளை சேகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
    Read more...

    Subscribe