Sunday, July 12, 2009

1

நம்மூர் ஆட்டோ டிரைவர்-சிங்கப்பூர் டாக்சி டிரைவர்

  • Sunday, July 12, 2009
  • Share
  • நம்மூர் ஆட்டோ டிரைவர்களின் மனப்பான்மை பற்றியும், சிங்கப்பூர் டாக்சி டிரைவர்கள் ...


    "முந்தா நாள் மதுரை போயிருந்தேன் தம்பி... ரயில்வே ஸ்டேஷனில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் ஒரு ஆட்டோ டிரைவரிடம், "எல்லீஸ் நகர் போகணும்...' என்றேன். ஐம்பது ரூபாய் கேட்டார்... "அதிகம்...' என்று சொல்லி, அடுத்த ஆட்டோ நோக்கிச் சென்றேன்...


    "அவ்வளவு தான்... அடுத்த ஆட்டோ டிரைவரை எச்சரிக்கும் முகமாக இவர், "ஐயா, எல்லீஸ் நகர் போகணுமாம்... ஐம்பது ரூபாய் அதிகம் என்கிறார்...' என்றார். அதன் பின் எந்த ஆட்டோ டிரைவர் வருவார்...


    "ஒரு முறை சிங்கப்பூர் சென்று இருந்தேன். "டாக்சி' என்ற மஞ்சள் விளக்கு, காரின் கூரையில் எரிந்து கொண்டிருந்தால் சவாரி ஏற்ற தயார் என்று அதற்குப் பொருள். அப்படி வந்த டாக்சி ஒன்றை நிறுத்தும் பொருட்டு கை நீட்டினேன். நான் கை நீட்டிய பிறகு, "டாக்சி' என்ற மஞ்சள் விளக்கை, "ஆப்' செய்து, நிற்காமல் சென்றார் டாக்சி டிரைவர்...


    "போனால் போகட்டும் என்ற நினைப்பில், சட்டை பையில் இருந்து பேனாவும், பேப்பரும் எடுத்து ஏதோ குறிப்பெழுதினேன். இதை டாக்சியின், "ரியர் வியூ' கண்ணாடியில் டிரைவர் கவனித்து விட்டார் போலும்... டாக்சி நம்பரை நான் எழுதிக் கொள்வதாக நினைத்து விட்டார்...


    "அடுத்த ஐந்தாவது வினாடி, "யு டர்ன்' அடித்து வண்டியை என் அருகே நிறுத்தி ஏறிக் கொள்ளச் சொன்னார். "சார்... நான் விளக்கை, "ஆப்' செய்ய நினைத்த நேரத்தில் நீங்கள் கை காட்டி விட்டீர்கள்... மதிய சாப்பாட்டிற்காக அவசரமாக சென்று கொண்டிருந்தேன். தயவு செய்து போலீசில் புகார் கூறி விடாதீர்கள்...' எனக் கெஞ்சி கேட்டுக் கொண்டார்.


    "இது போன்ற குற்றங்கள் நிரூபணமானால், ஜெயில் தண்டனை - அபராதம் மட்டுமல்ல... அவர் வாழ்நாளில், அவரது சொந்த கார், பைக் எதையுமே அந்த டிரைவர் ஓட்ட முடியாதபடி சட்டம் உள்ளது சிங்கப்பூரில்; அதனால், நடு, நடுங்குகின்றனர்!


    "சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு டாக்சியில் சென்று இறங்கி இருக்கிறார் அமெரிக்கர் ஒருவர். கட்டணத் தொகை போக, ஒரு டாலரோ, இரண்டு டாலரோ பாக்கி தராமல் சென்று விட்டார் டிரைவர்.


    "ஊருக்கு சென்ற அமெரிக்கர், சிங்கப்பூர் டூரிசம் டிபார்ட்மென்டுக்கு டாக்சி நம்பருடன் ஒரு புகார் எழுதிப் போட்டு இருக்கிறார். உடனே, அவரையும், அவர் குடும்பத்தினரையும் சிங்கப்பூர் அரசு விருந்தினராக வர அழைப்பு விடுத்தது.


    "அவரது குடும்பம் முழுமைக்கும் விமானத்தில் முதல் வகுப்பு டிக்கெட், நட்சத்திர ஓட்டலில் தங்கல், சிங்கப்பூரில் செலவு செய்ய தலைக்கு ஒரு நாளைக்கு அமெரிக்க டாலர் 400... ஒரே ஒரு கண்டிஷன்... டிரைவரை அடையாளம் காட்ட வேண்டும்.


    "அழைப்பை ஏற்ற அமெரிக்கர், தம் குடும்பத்துடன் மீண்டும் சிங்கப்பூர் வந்து, டாக்சி டிரைவரை அடையாளம் காட்டினார். ஓய்ந்தது, டிரைவர் வாழ்க்கை. ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை; ஒரு லட்ச ரூபாய் அபராதம்; டிரைவிங் லைசென்ஸ் பிடுங்கப்பட்டது; ஆயுளுக்கும் அவர் சிங்கப்பூரில் கார் ஓட்ட முடியாது!' என்று முடித்தார்!


    "கேட்க நன்றாக இருக்கிறது... ஆனால், இதே முறையை இங்கே அமல் செய்ய முடியாது! காரணம், இங்கே ஓடும் ஆட்டோக்களில் பாதி போலீஸ்காரர்களின் பினாமி; மீதி அரசியல்வாதிகளுடையது! ---- தினமலர்

    1 Responses to “நம்மூர் ஆட்டோ டிரைவர்-சிங்கப்பூர் டாக்சி டிரைவர்”

    Revolt said...
    October 7, 2009 at 2:14 PM

    Hi I am from Singapore. Same story happened to another american tourist. he went to food stall and ordered 6 prawn pieces. Food stall staff gave him bill for 250 dollars. (actual cost should be 40 to 50 dollars). That tourist paid that amount and sent the complaint letter to Singapore tourism board. Govt put 20,000 dollars fine and closed that shop another six months. That is singapore. mmmm...... vera enna eludha mudiyum.. idhuve namma chennai-a irundha? vidunga sollave srichal varudhu...


    Subscribe