Wednesday, April 18, 2012
7
Wednesday, April 18, 2012
பிரகதீஷ்:"அடப்பாவி பெயில் போட்டுடாருன்னு bomb வச்சதே அவன்தான் அவன போய் ...எத்தன டோனி வந்தாலும் இந்திய மக்களை திருத்தவே முடியாது ...god blees you ..."
Read more...
பார்த்திபன் & அரவிந்த்ஷா இணைந்து கலாய்க்கும் எங்க ஊருக்கு எப்போ மழை வரும் ?
இடம் :Mavilangai Trouble creators TV studio .
உறுப்பினர்கள் : TC விராத் கோலி- அரவிந்த் , TC யுவராஜ்- பார்த்திபன் சிறப்பு தோற்றம் நம்ம TC சேவாக்- பிரகதீஷ் ..
இரண்டு வருடங்களுக்கு(2010) முன்பு.. (இதுக்கெல்லாம் falsh back கா அவ்வ்வ்வ் )
சேலம் கிங்க்ஸ் காலேஜ் எக்ஸாம் ஹால் .......
சேலம் கிங்க்ஸ் காலேஜ் எக்ஸாம் ஹால் .......
ஹால் சூப்பர் வைசெர் பார்த்திபன்: டியர் ஸ்டுடென்ட் எல்லாரும் கொஸ்டின் பேப்பர் ஆன்செர் சீட் வாங்கிக்கோங்க ..
அரவிந்த்ஷா பக்கத்துல இருக்கிற பிரகதீஸ் கிட்ட அவரோட கொஸ்டின் பேப்பர் ஆன்செர் சீட் கொடுக்கிறதை பார்த்துவிட்டு பக்கத்தில் வந்து
( left ல இருந்து முதலாவதா இருக்காரே அதாங்க பவர் ஸ்டார் மாதிரி ஸ்டைலா லுக் விடறார் அவர்தான் பார்த்திபன் )
( left ல இருந்து முதலாவதா இருக்காரே அதாங்க பவர் ஸ்டார் மாதிரி ஸ்டைலா லுக் விடறார் அவர்தான் பார்த்திபன் )
பார்த்திபன்: தம்பி என்ன பண்ணுற உன்னோட கொஸ்டின் பேப்பர் ஆன்செர் சீட்ட எதுக்கு அவன்கிட்ட பாஸ் பண்ற..?
அரவிந்த்ஷா:சார் எங்க அப்பா எப்புடியாவது இந்த பேப்பரை பாஸ் பண்ண சொன்னாரு..இல்லன வீட்டுக்கு வராதன்னு சொல்லிடாரு .
பார்த்திபன்: ஏன்டா ஏன் காலேலையே கடுப்பேத்துற?
அரவிந்த்ஷா:சார் இன்னைக்கி எக்ஸாம் காலேல வெச்சிடாங்க சார் நான் என்ன பண்றது ..
( ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாதிரி இருக்குற கட்டம் போட்ட சட்டை தான் நம்ம அரவிந்த்ஷா )
( ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாதிரி இருக்குற கட்டம் போட்ட சட்டை தான் நம்ம அரவிந்த்ஷா )
பார்த்திபன்: ஒழுங்கா மொக்க போடாம எக்ஸாம் எழுது
அரவிந்த்ஷா:சார் எந்த கேள்விக்கும் பதில் தெரியல ?இதுல இருக்குற 15 மார்க் கேள்விக்காச்சும் பதில் சொல்லுங்க சார் ?
பார்த்திபன்: இதுக்கு பதில் நாக்க புடுங்கிட்டு சாகலாம்
அரவிந்த்ஷா:அப்டியா சார் இந்த கேள்விக்கு இதான் பதிலா? அப்டியே அடுத்த கேள்விக்கும் பதில் சொல்லுங்க சார் ?
பார்த்திபன்: வாட்ச்மேன் இவன வெளிய அனுப்புங்க ..
அரவிந்த்ஷா: சார் இது ஜூவாலஜி எக்ஸாம் வாட்ச்மேன்னு எல்லாம் ஆன்செர் வராது தப்பு தப்ப சொல்லாதீங்க சார் .
பார்த்திபன்: (அவ்வவ் ..இவன் நாம திட்டுரதக்கூட ஆன்செரா எழுதுறானே .)
(இவருதான் பிரகதீஷ் என்ன லுக்கு இன்னும் ஊருக்கு போன வேலைக்கி வர ஒரு வாரம் ஆகும் அப்புடி ஊர்ல என்ன பண்ணறார்னு யாருக்கும் தெரியல )
பிரகதீஷ்:சார் அடிசனல் சீட் வேணும்
பிரகதீஷ்:சார் அடிசனல் சீட் வேணும்
பார்த்திபன்: இவன பார்த்து ..
அரவிந்த்ஷா:ஒக்கே சார் பிரகதீஷ பாத்து
எழுதிக்கிறேன் நன்றி சார்
எழுதிக்கிறேன் நன்றி சார்
பார்த்திபன்: டேய் இவன பார்த்து திருந்துன்னு சொல்ல வந்தேன் .
அரவிந்த்ஷா:(கடுப்பாயிடாறு சின்னதா பிட்ட போடுவோம் ) சார் உங்களமாதிரி professor ஆகணுனா என்ன சார் பண்ணனும்
பார்த்திபன்: (இவன் எல்லாம் professor ஆனா வெளங்கிடும் )
அரவிந்த்ஷா:என்ன சார் சொன்னீங்க கேக்கல?
அரவிந்த்ஷா:என்ன சார் சொன்னீங்க கேக்கல?
பார்த்திபன்: தம்பி அதுக்கு நீ மேல படிக்கணும் .
அரவிந்த்ஷா:சார் மே ல காலேஜ் லீவ் சார் நான் ஏனுன்ன ஜூன் ஜூலை ல போய் படிக்கிறேன் சார்
பார்த்திபன்: இரு நான்தான் உன்னோட பேப்பர திருத்தப்போறேன் பெயில் போட்டாதான் அடங்குவ ..
அரவிந்த்ஷா:இன்னைக்கு நமக்கு நாக்குல சனின்னு சொன்னது சரியாய் போச்சி ..
பிரகதீஷ்: மச்சி இன்னைக்கி புதன் கிழமை டா .
அரவிந்த்ஷா: நீ பிட்டு வெச்சி எழுதினத அவரால கண்டு புடிக்க முடியலன்னு என்ன கலாய்கிரியா ஓடிடு .நான் அவர பழிவாங்காம விடமாட்டேன் ..
பிரகதீஷ்:ஆமா இவரு நீலாம்பரி ஆண்ட்டி படையப்பா- வ பழி வாங்க போறாரு ?
அரவிந்த்ஷா:கடுப்பாகி பார்க்க பிரகதீஷ் எஸ்கேப் ...அந்த எக்ஸாம்ல பிரகதீஷ் கோல்ட் மெடல் வாங்கினது தனி கதை அப்பறம் பாக்கலாம் ,,
அரவிந்த்ஷா:இன்னைக்கு நமக்கு நாக்குல சனின்னு சொன்னது சரியாய் போச்சி ..
பிரகதீஷ்: மச்சி இன்னைக்கி புதன் கிழமை டா .
அரவிந்த்ஷா: நீ பிட்டு வெச்சி எழுதினத அவரால கண்டு புடிக்க முடியலன்னு என்ன கலாய்கிரியா ஓடிடு .நான் அவர பழிவாங்காம விடமாட்டேன் ..
பிரகதீஷ்:ஆமா இவரு நீலாம்பரி ஆண்ட்டி படையப்பா- வ பழி வாங்க போறாரு ?
அரவிந்த்ஷா:கடுப்பாகி பார்க்க பிரகதீஷ் எஸ்கேப் ...அந்த எக்ஸாம்ல பிரகதீஷ் கோல்ட் மெடல் வாங்கினது தனி கதை அப்பறம் பாக்கலாம் ,,
சரி பிளாஷ் பேக் போதும்
இன்று (2012)
அரவிந்த்ஷா: வணக்கம் நேயர்களே உங்கள் TC டிவி யின் சிறப்பு நிகழ்ச்சி எங்க ஊருக்கு எப்போ மழை வரும் வானிலை நிபுணர் பார்த்திபனுடன் அதிரடி பேட்டி
(அப்போது பிரகதீஷ் அங்கிருக்கும் டிவிய தூக்கி கொண்டு கிளம்ப )
அரவிந்த்ஷா:ஹலோ சார் ஏன் டிவி ய தூக்கிட்டு போறீங்க ..
நீங்க தானே சார் சொன்னீங்க உங்கள் TC டிவின்னு அத எங்க வீட்டுக்கு எடுத்துபோக போறேன் ..
அரவிந்த்ஷா:இங்கயும் வந்து கடுப்பேத்தாதீங்க சார். உங்கள போலீஸ்ல புடிச்சி குடுத்துடுவேன் ?
பிரகதீஷ்:அவ்வ கடுப்பாகுரானே அரவிந்த்.
அப்போது பார்த்திபன் வருகிறார் ..
அரவிந்த்ஷா:வாங்க சார் வணக்கம் உக்காருங்க
இவர எங்கயோ பார்த்திருக்கோமே.. அவ்வவ் நம்ம காலேஜ் professor
நம்மள பெயில் போட்டுட்டு இவரு வானிலை நிபுணர் ஆகிட்டாரா ..இன்னைக்கி விடக்கூடாது ..
அரவிந்த்ஷா:நீங்க வந்ததுல எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி .முதல் கேள்வி சார் நீங்க என்ன படிச்சிருக்கீங்க ?
பார்த்திபன்: குமுதம் விகடன் சார் இல்லதம்பி கார் ல வரும்போது அத படிச்சிட்டு வந்தேன் .
அரவிந்த்ஷா:ஏன் சத்தியம் நீதி, நேர்மை எல்லாம் படிக்கலையா ,டிகிரி என்ன படிச்சிங்கன்னு கேட்டேன் சார் ?
பார்த்திபன்: சாரி தம்பி என்னோட டிகிரி உங்களுக்கு தரமுடியாது நீங்க கேக்காதீங்க ப்ளீஸ் .
அரவிந்த்ஷா:சார் நீங்க ஒரே தமாசா பேசுறீங்க அடுத்தவாரம் சுட்டி டிவி ல இப்படி பேசிக்கலாம் இப்ப சொல்லுங்க சார் .
பார்த்திபன்: (இவன் இன்னும் அடங்கலையே ) தம்பி நான் BE EEE முடிச்சிட்டு இப்போ MBA படிச்சிட்டு இருக்கேன்
அரவிந்த்ஷா:சார் கரண்டே இல்லாத ஊருல எதுக்கு EEE படிக்கிறீங்க ?
பார்த்திபன்: தம்பி நான் அதை அப்பவே படிச்சி முடிச்சிட்டேன் .
அரவிந்த்ஷா:அதனாலதான் இன்னும் கரண்ட் வர்றதே இல்லன்னு ஒத்துக்குறீங்க ?
பார்த்திபன்: (அவ்வவ் நம்மள மடக்குரானே ).
அரவிந்த்ஷா:அது என்ன உங்க ஜிமெயில் status ல i am here for you dear ன்னு?
பார்த்திபன்: தம்பி ஒரு பிட்டு போட்டுவைக்கலாமேன்னு..
அரவிந்த்ஷா:என்ன பிட்டா ?
பார்த்திபன்:இல்ல தம்பி நல்லா இருக்கேன்னு போட்ருக்கேன் . தம்பி அது என்னோட பர்சனல்.
அரவிந்த்ஷா:என்னது உங்க பர்ஸ காணாமா ?
பார்த்திபன்: இவனுக்கு தமிழும் வராது இங்கிலீசும் வராது .!
அரவிந்த்ஷா:சார் நீங்க மழை வரும்ம்ன்னு சொன்ன அன்னைக்கு மழை வராது ,வராதுன்னு சொன்னா மழை கொட்டுது !
பார்த்திபன்: ( இவன் நம்ம வேலைக்கே ஆப்பு வெச்சிடுவான் போல ) தம்பி அது அமெரிக்கா டிவி நமக்கும் அவங்களுக்கும் கிட்டத்தட்ட 12 மணி நேரம் வித்தியாசம் அதான் இவ்வளவு பிரச்சினை
அரவிந்த்ஷா: சன் டிவி. ஜெயா டிவி எல்லாம் அமெரிக்கா சேனலா?
பார்த்திபன்:தம்பி இந்த டிவி எல்லாம் அமெரிக்கால கூட தெரியும்
அரவிந்த்ஷா: சோ வாட் ?
பார்த்திபன்: அது வந்து தம்பி .....
அரவிந்த்ஷா:அப்போ உங்களுக்கு நாட்டு மக்கள் மேல அக்கறை இல்ல
போன வாரம் நில நடுக்கம் வந்துச்சே அத ஏன் முன்னாடியே சொல்லல ?
பார்த்திபன்:நான் முன்னாடியே சொல்லிட்டா நில நடுக்கம் வராம போய்டுமா ?அவ்வவ் ..
அரவிந்த்ஷா:பாருங்கள் மக்களே இப்படி ஒரு பொறுப்பிலாத அதிகாரி இருந்தால் நாடு எப்படி வல்லரசு ஆகும் ?
பார்த்திபன்: வல்லரசா தம்பி அது நம்ம தலைவர் விஜயகாந்த் படம் அது வந்து பத்து வருஷம் ஆய்டுச்சி நீங்க இன்னும் பாக்கலையா அதுல "அருப்பு கோட்டை அக்கா பொண்ணு "பாட்டு எனக்கு ரொம்ப புடிக்கும் ...
அரவிந்த்ஷா:சார் இப்படி பொறுப்பே இல்லாம பதில் சொன்னா எப்படி சார் ?
பார்த்திபன்: சரி தம்பி எனக்கு ஹன்சிகா மொத்வாணினா ரொம்ப புடிக்கும் எனக்கு வேலாயுதம் படத்துல இருந்து "சில்ளக்ஸ் " பாட்டு போடுங்க ,முடிஞ்சா விஜய் மூஞ்சிய கர்ர்பிக்ஸ்ல மறைச்சிட்டு போடுங்க ..
அரவிந்த்ஷா:சார் அது வேற ப்ரோக்ராம் இதுல பாட்டு எல்லாம் போட மாட்டோம் ப்ளீஸ் சார் ...ப்ரோக்ராம் போயிட்டு இருக்கு நீங்க பெங்களூர்ல இருந்து வந்துருக்கீங்க ..
பிரகதீஷ்:(என்ன பெங்களூரா அப்போ நாம கேட்டுட வேண்டியதுதான் )
பிரகதீஷ்:(என்ன பெங்களூரா அப்போ நாம கேட்டுட வேண்டியதுதான் )
பார்த்திபன்: யோவ் நீ பொறுப்பா கேளுயா ?
பிரகதீஷ்:எச்சுச்மீ .
அரவிந்த்ஷா:என்ன வேணும்?
பிரகதீஷ்:நான் சார் கிட்ட ஒரு கேள்வி கேக்கணும் ?
பார்த்திபன்: ம்ம் அவர கேக்க விடுங்க (பாக்க நல்ல பையனா இருக்கான் ஒரு வேளை இன்னைக்கு ஏவின அக்னி ஏவுகணை மழை பெய்தால் என்ன ஆகும்ன்னு கேப்பானோ ? இப்படி ஒருத்தன பேட்டி எடுக்க போடாம இவன போய் போட்டுருக்கா ங்களே ..)
பிரகதீஷ்: நீங்க உங்க profile picture ல ஹிட்லர் படம் போட்டுருந்தீங்க இப்ப ஏன் யுவராஜ் க்கு மாறுனீங்க ?
பார்த்திபன்: (இத எல்லாமா கேப்பானுங்க?) ..
பிரகதீஷ்:யுவராஜும் ஒரு (6 *சிக்ஸ் ) hit லர் தானே ...?
பார்த்திபன்: (ச்ச என்னாமா யோசிக்கிறான் ..இவன எப்படியாச்சும் நம்ம அசிஸ்டன்டா வெச்சிக்கணும் ..) சூப்பர் தம்பி உங்களுக்கு என்ன வேணும் கேளுங்க .?
பிரகதீஷ்: நீங்க உங்க profile picture ல ஹிட்லர் படம் போட்டுருந்தீங்க இப்ப ஏன் யுவராஜ் க்கு மாறுனீங்க ?
பார்த்திபன்: (இத எல்லாமா கேப்பானுங்க?) ..
பிரகதீஷ்:யுவராஜும் ஒரு (6 *சிக்ஸ் ) hit லர் தானே ...?
பார்த்திபன்: (ச்ச என்னாமா யோசிக்கிறான் ..இவன எப்படியாச்சும் நம்ம அசிஸ்டன்டா வெச்சிக்கணும் ..) சூப்பர் தம்பி உங்களுக்கு என்ன வேணும் கேளுங்க .?
பிரகதீஷ்: சார் உங்களுக்கு எப்போ கல்யாணம் ஏப்ரல் 1 ம் தேதி உங்களுக்கு நிச்சயதார்த்தம் ன்னு சொல்லி இருந்தீங்களே எப்போ கல்யாணம் ?
பார்த்திபன்: தம்பி அதுசும்மா உங்கள பூல் பண்ண சொன்னது chemistry படிச்ச பொண்ண தேடிட்டு இருக்காங்க கிடைச்சதும் கல்யாணம் தான்.
பிரகதீஷ்: உங்களுக்கு chemistry ல அவ்வளோ ஆர்வமா ?
பார்த்திபன்: கல்யாணத்துக்கு அப்புறம் யாரும் எங்களுக்குள்ள chemistry இல்லன்னு சொல்லிடக்கூடாதுஇல்ல ..
பார்த்திபன்: தம்பி அதுசும்மா உங்கள பூல் பண்ண சொன்னது chemistry படிச்ச பொண்ண தேடிட்டு இருக்காங்க கிடைச்சதும் கல்யாணம் தான்.
பிரகதீஷ்: உங்களுக்கு chemistry ல அவ்வளோ ஆர்வமா ?
பார்த்திபன்: கல்யாணத்துக்கு அப்புறம் யாரும் எங்களுக்குள்ள chemistry இல்லன்னு சொல்லிடக்கூடாதுஇல்ல ..
பிரகதீஷ்:(அவ்வவ் மொக்க போடுறாரே நம்மகிட்டையே )சார் இன்னொரு கேள்வி சுவாமி நித்தியானந்தா எப்படி இருக்கார் சார் ?
பார்த்திபன்: அவ்வ்வ்வ் இவன் அரவிந்த்ஷாவ விட டெர்ரரா இருக்கானே அத போய் அவர் கிட்ட கேளு என்கிட்ட ஏன் கேக்குற?
பிரகதீஷ்::நீங்களும் பெங்களூரு அவரும் பெண்களூரு.....
பார்த்திபன்: என்ன தத்துவம் அடேய் ..அடுத்து என்ன கேப்பன்னு தெரியும் அவங்களும் அங்க இருக்காங்களான்னு கேப்ப அடேய் அடேய் %$#%^&(@!%%^&^*
அரவிந்த்ஷா::சார் பப்ளிக் பப்ளிக் நோ பேடு வோர்ட்ஸ் ..
பார்த்திபன்: யோவ் அக்குவாபினா எங்கயா ?
அரவிந்த்ஷா: சார் எனக்கு அக்கா இல்ல ஒரே தம்பி தான் ,
பார்த்திபன்: டே ய் அந்த தண்ணிய எடுடா $#$#%^^&%$%
அரவிந்த்ஷா: சாரி சார் இனி கலாய்க்கமாட்டேன்
பார்த்திபன்: ம்ம் சரி .
அரவிந்த்ஷா:சரி சார் எங்க ஊருக்கு எப்ப மழை வரும் சார் ?
பார்த்திபன்: (இவன் ஏன்னா ஊருக்கு பஸ் எப்ப வரும்ன்னு கேக்குறமாதிரி கேக்குறான் )தம்பி இப்போ ஏப்ரல் மாசம் அக்டோபர் நவம்பர் வந்தா மழை வரும் தம்பி ஆமா நீங்க எந்த ஊரு ?
அரவிந்த்ஷா:சார் நான் பெரம்பலூர் பக்கத்துல..
பார்த்திபன்:யோவ் பக்கத்துல ஏன் கொஞ்சம் தள்ளியே உக்காந்துக்கோ ?
அரவிந்த்ஷா:சார் ......
பார்த்திபன்:சரி எந்த ஊரு ?
அரவிந்த்ஷா:பெரம்பலூர் மாவட்டம் மாவிலங்கை கிராமம் சார் .
பார்த்திபன்:அட தம்பி நம்ம ஊர்க்கார புள்ள ..!
பிரகதீஷ்:சார் அது புள்ள இல்ல பையன் .
பார்த்திபன்:அவ்வ்வ் தம்பி நீங்க எந்த ஊர்?
பிரகதீஷ்:சார் நானும் அதே ஊருதான்
பார்த்திபன்:நல்லதா போச்சி ..
பிரகதீஷ்:என்னது நல்ல பாம்பு போச்சா ஐயோ ...
பார்த்திபன்:: தம்பிக்கு மறுபடியும் குறும்பு , தம்பி நான் கூட அந்த ஊருதான்.
அரவிந்த்ஷா:(அந்த ஊருல பொறந்து இப்படி இருக்கீங்களே பிட்டு கூட அடிக்க விடாம ...)
பார்த்திபன்:தம்பி பச்சை என்கிற காத்து எங்க வீட்டு பக்கத்துல எடுத்த படம் எங்க வீட்ட கூட காட்டுவாங்க..
அரவிந்த்ஷா:(என்னமோ நமிதாவ காட்டுன மாதிரி சொல்லுறாரு)
பிரகதீஷ்:அதான் அந்த படம் ஊத்திகிச்சா....அவ்வ்வ்வ்
ஆடியன்ஸ் : தம்பிகளா யாரோ bomb வேச்சிட்டானுன்கலாம் ஓடுங்க ..ஓடுங்க ..
பார்த்திபன் அரவிந்த்ஷா வை பார்த்து முறைக்க சார் நான் ஏதும் பண்ணல..
பார்த்திபன்:யோவ் நான் அதை சொல்லல நாம வா போய் அதை கண்டு புடிச்சி மக்களை காப்பாத்தலாம்
அரவிந்த்ஷா:சார்..
பார்த்திபன்:என்ன தம்பி பயமா இருக்கா ?
அரவிந்த்ஷா:இல்ல சார் ஒரு கண்டிசன் ..
பார்த்திபன்:என்ன?
அரவிந்த்ஷா:எங்க ஊருக்கு எப்போ மழை வரும் ...?
**********************************************
**********************************************
அரவிந்த்ஷா வின் ஊர் பாசத்தை கண்டு மழை வந்து விடுகிறது bomb மழையில் நனைந்து விடுகிறது. மக்கள் எல்லாம் சேர்ந்து அரவிந்த்ஷா வாழ்க வாழ்க என்று மழையில் அவரை தூக்கி ஆடுகிறார்கள் ..
பிரகதீஷ்:"அடப்பாவி பெயில் போட்டுடாருன்னு bomb வச்சதே அவன்தான் அவன போய் ...எத்தன டோனி வந்தாலும் இந்திய மக்களை திருத்தவே முடியாது ...god blees you ..."
குறிப்பு : இதை படிச்சிட்டு ஊர்ல கிரிக்கெட் விளையாடும்போது புல் டாஸ் பால் போடறது ,ரன் அவுட் பண்றேன்னு பந்தால அடிக்கிறது ,FB ல குரூப்பா சேர்ந்து தல டோனிய கலாய்க்கிறது அப்புறம் என்னோட இந்த சைட்ட hack பண்ண ட்ரை பண்றது இதுகெல்லாம் நான் பயப்படமாட்டேன் .
Thursday, April 12, 2012
1
Thursday, April 12, 2012
Read more...
இந்திய கிரிக்கெட் அணி அன்றும் இன்றும் .....
எனக்கு பிடித்த கிரிக்கெட் பற்றி நிறைய எழுத ஆசை . அவ்வப்போது இனி எழுதுகிறேன் . கிரிக்கெட் டை தோனிக்கு முன் டோனி வந்த பிறகு என அன்றும் இன்றும் என பிரிக்கலாம் .
அன்று:
அன்று என்றால் கபில் தேவ் ,கவாஸ்கர் விளையாடியது அவர்கள் உலக கோப்பை வாங்கியது பற்றியெல்லாம் ராஜ் டிவி இல் ஸ்ரீகாந்த் வாரம்தோறும் ஞாயிறு காலை 8:30 மணிக்கு winnig movements of indian cricket என்று வழங்குவார் அப்போது பார்த்தது . 1998 முதல் ஆர்வமாக பார்க்க தொடங்கியதாக நினைவு .
தேசிய கொடிக்கு மூவர்ணம் போல இந்திய கிரிக்கெட் அணிக்கு சச்சின் ,கங்குலி ,டிராவிட்.இவர்களை அடுத்து சில நேரங்களில் ஜடேஜா அவ்வப்போது அசார் என அடித்து பாதி ஆட்டத்தில் வெற்றி பாதி ஆட்டத்தில் தோல்வி என போய்க்கொண்டிருக்கும் பெரும்பாலும் மேலே சொன்ன மூவர் நன்கு அடித்தால் நிச்சயம் வெற்றி ஆஸ்திரேலியா அணியுடன் மட்டும் விளையாடும் போது இன்னும் விறுவிறுப்பு . பௌலிங் இல் கும்ப்ளே , ஸ்ரீநாத் , பிரசாத் என்று ஓரளவிற்கு பந்து வீச்சு இருக்கும் .
எது எப்படி என்றாலும் பார்க்கும் போது விறு விறுப்புக்கு பஞ்சம் இருக்காது . போட்டிகள் அனைத்தும் தூர்தர்சனில் பெரும்பாலும் கரண்ட் போனால்தான் பார்க்க முடியாது .இப்போது போல் கரண்ட் நிற்காது எனவே கண்டிப்பாக அனைத்து போட்டியையும் பார்க்கலாம் .போட்டி தொடங்கினால் அன்று நண்பர்களுடன் டிவி இருப்பவர்கள் வீட்டில்
ஒன்றாக பார்க்க வந்து விடுவோம் .பெரிய துணியை கட்டி சூரிய ஒழி பிரதிபலிக்காத அளவுக்கு கட்டிவிடுவோம் ..இன்று வரை கிரிக்கெட் மட்டும் தனியாக பார்த்தல் அவ்வளவு சுவாரஸ்யமாக இருப்பதில்லை என்ன காரணமோ .?
சச்சின் ,கங்குலி பெரும்பாலும் அதிரடி துவக்கம் தான் , இப்போது கூட இவர்களுக்கு இணையாக ரசிக்க எந்த அணியிலும் இல்லை ..அடுத்து வரும் டிராவிட் மெதுவாக தொடங்கி பிறகு strike rate 80 க்கு வந்து விடுவார் ..
சச்சின் அவுட் என்றால் ஏறக்குறைய தோல்வி உறுதி அப்போதெல்லாம் ..
சச்சின் சச்சின் சச்சின் மட்டும் தான் ..அப்போது கூட கங்குலி , டிராவிட் தங்களுக்கென பெரும்பாலான ரசிகர்களை கொண்டிருந்தது ஆச்சர்யம் தான் ..
பெரும்பாலானோருக்கு மூவரையும் பிடிக்கும் ஏறக்குறைய பத்து ஆண்டுகள் இவர்களின் ராஜ்ஜியம் தான் . எத்தனையோ பேர் வந்து போய்கொண்டிருந்தாலும் .மூவரும் சளைக்காமல் தங்கள் அதிரடியை ஆளுக்கொரு போட்டியில் காட்டிவிடுவார்கள். யாரவது இருவர் ஒரே நேரத்தில் அதிரடி காட்டினால் அது ஆஸ்திரேலியா அணியாக இருந்தாலும் அன்று அவர்களுக்கு தோல்விதான் ..
சச்சின்-டிராவிட், டிராவிட் - கங்குலி, சச்சின்-கங்குலி கூட்டணியில் பல சதங்களும் அரை சதங்களும் மற்றும் இணைத்து அதிக ரன்கள் என இன்றுவரை யாரும் நெருங்கவில்லை ..
பெரும்பாலும் இறுதி போட்டி, உலக கோப்பை என தோல்வியை கொடுத்தாலும் ரசிகர்கள் ஆர்வம் குறைய வில்லை . இன்று உள்ள டோனி அல்லது கில்கிறிஸ்ட் போல அதிரடி கீப்பர் கிடைக்காதது பெரிய குறை .அப்போது புதிதாக வருபவர்கள் மிக குறைவு பெரும்பாலும் அதே அணிதான் .உலக கோப்பைக்கு விளையாட செல்லும் போது இதற்கென பாடல்கள் தயார் செய்து டிவி இல் அடிக்கடி போடுவார்கள் .
2000 வரைக்கும் பெருசா டீம் ல அதே ஆளுங்கதான் புதுசா யாராச்சும் வந்த௫ஹாலும் கொஞ்ச நாள்ல முகத்துல கிரீம் ல பூசி மோசமா ஆடி காண போடுவாங்க அபை குருவில்லா , சோதி, நிகில் சோப்ர ,சபா கரீம்,நம்ம ஊர் பதானி இப்டி பல பேர் பதானி , தினேஷ் மோங்கியா அப்பப்ப வந்து போவாங்க ....
நயன் மோங்கியா இவர்தான் பெரும்பாலான போட்டிகளில் விக்கெட் கீப்பர் இவர் batting ஹர்பஜன் கூட நன்றாக விளையாடுவார் என சொல்லலாம் எப்போதாவது அரை சதம் அடிப்பார் ..அசார் ஜடேஜா style players இவர்களின் அனைத்து shot களும் பார்க்க அருமையாக இருக்கும் ...இன்னும் கொஞ்சம் நன்றாக ஆடி இருக்கலாம் என்று இப்போதும் கூட தோன்றும் ..இவர்களின் பில்டிங் அருமை யாக இருக்கும் ...
சேவாக் ,யுவராஜ்,கைப்:
2000 ல இருந்து சேவாக் வந்த புதுசுல அதிரடிய ஆடி 50 மேல அடிச்சார் உடனே காயத்துல வீட்டுக்கு போயிடு அப்புறம் கொஞ்சநாள் கழிச்சி டீம் ல செட் ஆகிட்டார். யுவராஜ் , கைப் ன்னு இன்னும் ரெண்டு பேர் கைப் கைல எச்சி துப்பி என்னென்னமோ பண்ணுவாரு இவங்க ரெண்டு பெரும் பீல்டிங் நல்லா பண்ணிட்டு முக்கியமான மேட்ச் ல வின் பண்ணி குடுத்தாங்க .. அசார் ,ஜடேஜா இடத்தை த புடிசிகிடாங்க இவங்க ரெண்டு பேறும்..ஜடேஜா இடாத யுவராஜ் சிங்கும் அசார் இடத்தை கைப் புடிச்சாலும் அசார் அளவுக்கு கைப் ஏனோ பிடிக்கவில்லை ...
அஜாருக்கு பிறகு சச்சின் கேப்டன் ஆனால் பல போட்டிகளில் தோல்வி தல batting சரியாய் பண்ண முடியல.எனவே கங்குலி அடுத்து கேப்டன் ஆனார் .. மீண்டும் வெற்றி கிடைக்க தொடங்கினாலும் உலக கோப்பை கனவு நனவாக வில்லை அடுத்து டிராவிட் கேப்டன் இவராலும் பெரிதாக சாதிக்க முடிய வில்லை ...
இப்போது இன்னும் கொஞ்சம் இந்திய அணியின் வெற்றி அளவு அதிகமானது பந்து வீச்சில் பெரிய அளவிற்கு புதிய வீரர்கள் சாதிக்க வில்லை அகார்கர் ஆரம்பம் நன்றாக இருந்தது விரைவாக 50 wicket எடுத்தார் அதற்கப்புறம் பெரிதாக சாதிக்கவில்லை அடுத்து nehra வந்தார் அவரும் அகார்கர் போல தான் ...
இப்படியே 1996,1999,2003 ,ஏன் 2007 வரை இந்தியாவின் உலக கோப்பை கனவு வந்து வந்து போய்க்கொண்டிருந்தது ...
2004 இறுதி அப்போதுதான் இந்தியாவிற்கு சரியான விக்கெட் keeper batsman கிடைத்தார் அவரது தோற்றத்தை அப்போது பார்த்தல் எல்லோரும் கேலி செய்வார்கள் அப்போது யாருக்கும் தெரியாது அவர்தான் வருங்கால இந்திய அணியின் கேப்டன் என்று பல உலக கோப்பைகளை வெல்ல வந்தவர் என்று ..அவர் தான் நம்ம தல டோனி ...
அடுத்த பதிவில் இந்திய கிரிக்கெட் அணி இன்று பற்றி காணலாம் ....
Subscribe to:
Posts (Atom)