Wednesday, April 18, 2012

7

பார்த்திபன் & அரவிந்த்ஷா இணைந்து கலாய்க்கும் எங்க ஊருக்கு எப்போ மழை வரும் ?

 • Wednesday, April 18, 2012
 • Share


 • இடம் :Mavilangai  Trouble  creators  TV   studio .
  உறுப்பினர்கள் : TC விராத் கோலி-  அரவிந்த் , TC யுவராஜ்-  பார்த்திபன்  சிறப்பு தோற்றம் நம்ம TC சேவாக்- பிரகதீஷ் ..

  இரண்டு வருடங்களுக்கு(2010)  முன்பு.. (இதுக்கெல்லாம் falsh  back  கா அவ்வ்வ்வ்  )
  சேலம் கிங்க்ஸ் காலேஜ் எக்ஸாம் ஹால் .......

  ஹால் சூப்பர் வைசெர் பார்த்திபன்: டியர் ஸ்டுடென்ட் எல்லாரும் கொஸ்டின் பேப்பர் ஆன்செர் சீட் வாங்கிக்கோங்க  ..

  அரவிந்த்ஷா பக்கத்துல இருக்கிற பிரகதீஸ் கிட்ட   அவரோட கொஸ்டின் பேப்பர் ஆன்செர் சீட் கொடுக்கிறதை பார்த்துவிட்டு பக்கத்தில் வந்து  
         (   left  ல இருந்து முதலாவதா இருக்காரே அதாங்க பவர் ஸ்டார் மாதிரி ஸ்டைலா லுக் விடறார் அவர்தான் பார்த்திபன் )
   பார்த்திபன்: தம்பி என்ன பண்ணுற உன்னோட  கொஸ்டின் பேப்பர் ஆன்செர் சீட்ட  எதுக்கு அவன்கிட்ட பாஸ் பண்ற..?
  அரவிந்த்ஷா:சார் எங்க அப்பா எப்புடியாவது இந்த பேப்பரை பாஸ் பண்ண சொன்னாரு..இல்லன வீட்டுக்கு வராதன்னு சொல்லிடாரு .
   
    பார்த்திபன்: ஏன்டா ஏன் காலேலையே  கடுப்பேத்துற?
  அரவிந்த்ஷா:சார் இன்னைக்கி எக்ஸாம் காலேல வெச்சிடாங்க சார் நான் என்ன பண்றது ..
  ( ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாதிரி இருக்குற கட்டம் போட்ட சட்டை தான் நம்ம அரவிந்த்ஷா )
    பார்த்திபன்:  ஒழுங்கா மொக்க போடாம எக்ஸாம் எழுது 
  அரவிந்த்ஷா:சார் எந்த கேள்விக்கும் பதில் தெரியல  ?இதுல இருக்குற 15  மார்க் கேள்விக்காச்சும்    பதில் சொல்லுங்க சார் ?
   பார்த்திபன்: இதுக்கு பதில் நாக்க புடுங்கிட்டு சாகலாம் 
  அரவிந்த்ஷா:அப்டியா சார் இந்த கேள்விக்கு இதான் பதிலா? அப்டியே அடுத்த கேள்விக்கும் பதில் சொல்லுங்க சார் ?
     பார்த்திபன்: வாட்ச்மேன் இவன வெளிய அனுப்புங்க ..
  அரவிந்த்ஷா: சார் இது ஜூவாலஜி எக்ஸாம் வாட்ச்மேன்னு எல்லாம் ஆன்செர்  வராது  தப்பு தப்ப சொல்லாதீங்க சார் .

    பார்த்திபன்: (அவ்வவ் ..இவன் நாம திட்டுரதக்கூட ஆன்செரா எழுதுறானே .)
   (இவருதான் பிரகதீஷ் என்ன லுக்கு இன்னும் ஊருக்கு போன வேலைக்கி வர ஒரு வாரம் ஆகும் அப்புடி ஊர்ல என்ன பண்ணறார்னு யாருக்கும் தெரியல )


  பிரகதீஷ்:சார் அடிசனல் சீட் வேணும்
    பார்த்திபன்: இவன பார்த்து ..
  அரவிந்த்ஷா:ஒக்கே சார் பிரகதீஷ  பாத்து 
  எழுதிக்கிறேன் நன்றி சார்  
   பார்த்திபன்: டேய் இவன பார்த்து திருந்துன்னு சொல்ல  வந்தேன் .
  அரவிந்த்ஷா:(கடுப்பாயிடாறு சின்னதா பிட்ட போடுவோம் ) சார் உங்களமாதிரி professor  ஆகணுனா  என்ன சார் பண்ணனும்

   பார்த்திபன்: (இவன் எல்லாம் professor  ஆனா வெளங்கிடும் ) 


  அரவிந்த்ஷா:என்ன சார் சொன்னீங்க கேக்கல?

    பார்த்திபன்: தம்பி அதுக்கு நீ மேல படிக்கணும் .
  அரவிந்த்ஷா:சார் மே ல காலேஜ் லீவ் சார் நான் ஏனுன்ன ஜூன் ஜூலை ல போய் படிக்கிறேன் சார் 
    பார்த்திபன்: இரு நான்தான் உன்னோட பேப்பர திருத்தப்போறேன் பெயில் போட்டாதான் அடங்குவ ..  
     
  அரவிந்த்ஷா:இன்னைக்கு நமக்கு நாக்குல சனின்னு சொன்னது சரியாய் போச்சி ..


  பிரகதீஷ்: மச்சி இன்னைக்கி புதன் கிழமை டா .


  அரவிந்த்ஷா: நீ பிட்டு வெச்சி எழுதினத அவரால கண்டு புடிக்க முடியலன்னு என்ன கலாய்கிரியா  ஓடிடு .நான் அவர பழிவாங்காம விடமாட்டேன் ..


  பிரகதீஷ்:ஆமா இவரு நீலாம்பரி ஆண்ட்டி படையப்பா- வ பழி  வாங்க போறாரு ?


  அரவிந்த்ஷா:கடுப்பாகி பார்க்க பிரகதீஷ் எஸ்கேப் ...அந்த எக்ஸாம்ல பிரகதீஷ் கோல்ட் மெடல் வாங்கினது தனி கதை   அப்பறம் பாக்கலாம் ,,  
  சரி பிளாஷ் பேக்  போதும்  
  இன்று  (2012)
  அரவிந்த்ஷா: வணக்கம் நேயர்களே உங்கள் TC டிவி யின் சிறப்பு நிகழ்ச்சி எங்க ஊருக்கு எப்போ மழை வரும் வானிலை நிபுணர் பார்த்திபனுடன் அதிரடி பேட்டி

  (அப்போது பிரகதீஷ் அங்கிருக்கும் டிவிய  தூக்கி கொண்டு கிளம்ப )
  அரவிந்த்ஷா:ஹலோ சார் ஏன் டிவி ய தூக்கிட்டு போறீங்க ..
  நீங்க தானே சார் சொன்னீங்க உங்கள் TC டிவின்னு அத எங்க வீட்டுக்கு எடுத்துபோக போறேன் ..

  அரவிந்த்ஷா:இங்கயும் வந்து கடுப்பேத்தாதீங்க  சார். உங்கள போலீஸ்ல புடிச்சி குடுத்துடுவேன் ? 
  பிரகதீஷ்:அவ்வ கடுப்பாகுரானே   அரவிந்த்.
  அப்போது பார்த்திபன் வருகிறார் ..
  அரவிந்த்ஷா:வாங்க சார் வணக்கம் உக்காருங்க 
  இவர எங்கயோ பார்த்திருக்கோமே.. அவ்வவ் நம்ம காலேஜ் professor
  நம்மள பெயில் போட்டுட்டு இவரு வானிலை நிபுணர் ஆகிட்டாரா ..இன்னைக்கி விடக்கூடாது  ..

  அரவிந்த்ஷா:நீங்க வந்ததுல எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி .முதல் கேள்வி சார் நீங்க என்ன படிச்சிருக்கீங்க ?
    பார்த்திபன்: குமுதம் விகடன் சார் இல்லதம்பி  கார் ல வரும்போது அத படிச்சிட்டு வந்தேன் .


  அரவிந்த்ஷா:ஏன் சத்தியம் நீதி, நேர்மை எல்லாம்   படிக்கலையா ,டிகிரி என்ன படிச்சிங்கன்னு கேட்டேன் சார் ?
   பார்த்திபன்: சாரி தம்பி என்னோட டிகிரி உங்களுக்கு தரமுடியாது நீங்க கேக்காதீங்க ப்ளீஸ் .

  அரவிந்த்ஷா:சார் நீங்க ஒரே தமாசா பேசுறீங்க அடுத்தவாரம் சுட்டி டிவி ல இப்படி பேசிக்கலாம் இப்ப சொல்லுங்க சார் .
   பார்த்திபன்: (இவன் இன்னும் அடங்கலையே ) தம்பி நான் BE  EEE  முடிச்சிட்டு இப்போ MBA  படிச்சிட்டு இருக்கேன்
    
  அரவிந்த்ஷா:சார் கரண்டே  இல்லாத ஊருல எதுக்கு EEE  படிக்கிறீங்க ?
   பார்த்திபன்: தம்பி நான்  அதை அப்பவே  படிச்சி முடிச்சிட்டேன் .
  அரவிந்த்ஷா:அதனாலதான் இன்னும் கரண்ட்  வர்றதே  இல்லன்னு ஒத்துக்குறீங்க  ?
   
   பார்த்திபன்: (அவ்வவ் நம்மள மடக்குரானே ).
  அரவிந்த்ஷா:அது என்ன உங்க ஜிமெயில் status ல i  am  here  for  you  dear  ன்னு?
    பார்த்திபன்: தம்பி ஒரு பிட்டு போட்டுவைக்கலாமேன்னு..
  அரவிந்த்ஷா:என்ன பிட்டா ?
   பார்த்திபன்:இல்ல தம்பி நல்லா இருக்கேன்னு போட்ருக்கேன் . தம்பி அது என்னோட   பர்சனல்.
  அரவிந்த்ஷா:என்னது உங்க பர்ஸ காணாமா ?
    பார்த்திபன்: இவனுக்கு தமிழும் வராது இங்கிலீசும் வராது .!
  அரவிந்த்ஷா:சார் நீங்க  மழை வரும்ம்ன்னு சொன்ன அன்னைக்கு மழை வராது ,வராதுன்னு சொன்னா மழை கொட்டுது  !
   
   பார்த்திபன்: ( இவன் நம்ம வேலைக்கே ஆப்பு வெச்சிடுவான்  போல  )   தம்பி அது அமெரிக்கா டிவி நமக்கும் அவங்களுக்கும்  கிட்டத்தட்ட 12  மணி நேரம் வித்தியாசம் அதான் இவ்வளவு பிரச்சினை 

  அரவிந்த்ஷா: சன் டிவி. ஜெயா  டிவி எல்லாம் அமெரிக்கா சேனலா? 

   பார்த்திபன்:தம்பி இந்த டிவி எல்லாம் அமெரிக்கால  கூட தெரியும் 
   அரவிந்த்ஷா: சோ வாட் ?
    பார்த்திபன்: அது வந்து தம்பி .....
  அரவிந்த்ஷா:அப்போ உங்களுக்கு நாட்டு மக்கள் மேல அக்கறை இல்ல 
  போன வாரம் நில நடுக்கம் வந்துச்சே அத ஏன் முன்னாடியே சொல்லல ?
   பார்த்திபன்:நான் முன்னாடியே  சொல்லிட்டா நில நடுக்கம் வராம போய்டுமா ?அவ்வவ் ..
  அரவிந்த்ஷா:பாருங்கள் மக்களே  இப்படி ஒரு பொறுப்பிலாத அதிகாரி இருந்தால் நாடு எப்படி வல்லரசு ஆகும் ?
    பார்த்திபன்: வல்லரசா தம்பி அது நம்ம தலைவர் விஜயகாந்த் படம் அது வந்து பத்து வருஷம் ஆய்டுச்சி நீங்க இன்னும் பாக்கலையா அதுல  "அருப்பு கோட்டை அக்கா பொண்ணு "பாட்டு எனக்கு ரொம்ப புடிக்கும் ...
  அரவிந்த்ஷா:சார் இப்படி பொறுப்பே இல்லாம பதில் சொன்னா எப்படி சார் ?
  பார்த்திபன்: சரி தம்பி எனக்கு ஹன்சிகா  மொத்வாணினா ரொம்ப புடிக்கும் எனக்கு வேலாயுதம் படத்துல இருந்து "சில்ளக்ஸ் " பாட்டு போடுங்க ,முடிஞ்சா விஜய் மூஞ்சிய  கர்ர்பிக்ஸ்ல மறைச்சிட்டு போடுங்க ..

  அரவிந்த்ஷா:சார் அது வேற ப்ரோக்ராம் இதுல பாட்டு எல்லாம் போட  மாட்டோம் ப்ளீஸ் சார் ...ப்ரோக்ராம் போயிட்டு இருக்கு நீங்க பெங்களூர்ல  இருந்து வந்துருக்கீங்க ..


  பிரகதீஷ்:(என்ன பெங்களூரா  அப்போ நாம கேட்டுட வேண்டியதுதான் )
    பார்த்திபன்: யோவ் நீ பொறுப்பா கேளுயா ?
   
  பிரகதீஷ்:எச்சுச்மீ .
   
  அரவிந்த்ஷா:என்ன வேணும்?
  பிரகதீஷ்:நான் சார் கிட்ட ஒரு கேள்வி கேக்கணும் ?
    பார்த்திபன்: ம்ம் அவர கேக்க விடுங்க (பாக்க நல்ல பையனா  இருக்கான் ஒரு வேளை இன்னைக்கு ஏவின அக்னி ஏவுகணை மழை பெய்தால் என்ன ஆகும்ன்னு கேப்பானோ ? இப்படி ஒருத்தன பேட்டி எடுக்க போடாம இவன போய் போட்டுருக்கா ங்களே ..)


  பிரகதீஷ்: நீங்க உங்க profile  picture ல ஹிட்லர்  படம் போட்டுருந்தீங்க  இப்ப ஏன் யுவராஜ் க்கு மாறுனீங்க ?


   பார்த்திபன்: (இத எல்லாமா கேப்பானுங்க?) ..


  பிரகதீஷ்:யுவராஜும் ஒரு (6  *சிக்ஸ் ) hit லர் தானே ...?


   பார்த்திபன்:  (ச்ச என்னாமா யோசிக்கிறான் ..இவன எப்படியாச்சும் நம்ம அசிஸ்டன்டா வெச்சிக்கணும் ..) சூப்பர் தம்பி உங்களுக்கு என்ன வேணும் கேளுங்க .?


  பிரகதீஷ்: சார் உங்களுக்கு எப்போ கல்யாணம் ஏப்ரல் 1  ம்  தேதி உங்களுக்கு நிச்சயதார்த்தம் ன்னு சொல்லி  இருந்தீங்களே எப்போ கல்யாணம் ?


   பார்த்திபன்: தம்பி அதுசும்மா உங்கள பூல் பண்ண சொன்னது  chemistry  படிச்ச பொண்ண தேடிட்டு இருக்காங்க கிடைச்சதும் கல்யாணம் தான்.


   பிரகதீஷ்: உங்களுக்கு chemistry  ல அவ்வளோ ஆர்வமா ?


   பார்த்திபன்: கல்யாணத்துக்கு அப்புறம் யாரும் எங்களுக்குள்ள chemistry  இல்லன்னு சொல்லிடக்கூடாதுஇல்ல ..

  பிரகதீஷ்:(அவ்வவ்  மொக்க போடுறாரே நம்மகிட்டையே )சார் இன்னொரு கேள்வி சுவாமி நித்தியானந்தா  எப்படி இருக்கார் சார் ?
    பார்த்திபன்: அவ்வ்வ்வ் இவன் அரவிந்த்ஷாவ விட டெர்ரரா இருக்கானே அத போய் அவர் கிட்ட கேளு என்கிட்ட ஏன் கேக்குற? 
  பிரகதீஷ்::நீங்களும் பெங்களூரு அவரும் பெண்களூரு.....
    பார்த்திபன்: என்ன தத்துவம் அடேய் ..அடுத்து என்ன கேப்பன்னு தெரியும் அவங்களும் அங்க இருக்காங்களான்னு கேப்ப அடேய்  அடேய்  %$#%^&(@!%%^&^*

  அரவிந்த்ஷா::சார் பப்ளிக் பப்ளிக் நோ பேடு  வோர்ட்ஸ் ..
   பார்த்திபன்:  யோவ்  அக்குவாபினா எங்கயா  ?
  அரவிந்த்ஷா: சார் எனக்கு அக்கா இல்ல ஒரே தம்பி தான் ,
    பார்த்திபன்: டே ய் அந்த தண்ணிய எடுடா $#$#%^^&%$%
  அரவிந்த்ஷா: சாரி சார் இனி கலாய்க்கமாட்டேன் 
    பார்த்திபன்: ம்ம் சரி  .
  அரவிந்த்ஷா:சரி சார் எங்க ஊருக்கு எப்ப மழை வரும் சார் ?
    பார்த்திபன்: (இவன் ஏன்னா ஊருக்கு பஸ் எப்ப வரும்ன்னு கேக்குறமாதிரி கேக்குறான் )தம்பி இப்போ ஏப்ரல் மாசம் அக்டோபர் நவம்பர் வந்தா மழை வரும் தம்பி ஆமா நீங்க எந்த ஊரு ?
  அரவிந்த்ஷா:சார் நான் பெரம்பலூர் பக்கத்துல.. 
  பார்த்திபன்:யோவ் பக்கத்துல ஏன் கொஞ்சம் தள்ளியே உக்காந்துக்கோ ?
  அரவிந்த்ஷா:சார் ......
   
  பார்த்திபன்:சரி எந்த ஊரு ?
  அரவிந்த்ஷா:பெரம்பலூர் மாவட்டம் மாவிலங்கை கிராமம் சார் .
   
  பார்த்திபன்:அட தம்பி நம்ம ஊர்க்கார புள்ள ..!
  பிரகதீஷ்:சார் அது புள்ள இல்ல பையன் .
  பார்த்திபன்:அவ்வ்வ் தம்பி நீங்க எந்த ஊர்?
   பிரகதீஷ்:சார் நானும் அதே ஊருதான் 
   பார்த்திபன்:நல்லதா போச்சி ..
  பிரகதீஷ்:என்னது நல்ல பாம்பு போச்சா ஐயோ ...
   பார்த்திபன்:: தம்பிக்கு மறுபடியும் குறும்பு , தம்பி நான் கூட அந்த ஊருதான்.
  அரவிந்த்ஷா:(அந்த ஊருல பொறந்து  இப்படி இருக்கீங்களே பிட்டு கூட அடிக்க விடாம ...)
  பார்த்திபன்:தம்பி பச்சை என்கிற காத்து எங்க வீட்டு பக்கத்துல எடுத்த படம் எங்க வீட்ட  கூட காட்டுவாங்க.. 
  அரவிந்த்ஷா:(என்னமோ நமிதாவ காட்டுன மாதிரி சொல்லுறாரு) 
  பிரகதீஷ்:அதான் அந்த படம் ஊத்திகிச்சா....அவ்வ்வ்வ் 
  ஆடியன்ஸ் : தம்பிகளா  யாரோ bomb   வேச்சிட்டானுன்கலாம்   ஓடுங்க ..ஓடுங்க ..
  பார்த்திபன் அரவிந்த்ஷா வை பார்த்து முறைக்க  சார் நான்  ஏதும் பண்ணல..
  பார்த்திபன்:யோவ் நான்  அதை சொல்லல நாம வா போய் அதை கண்டு புடிச்சி மக்களை காப்பாத்தலாம் 
  அரவிந்த்ஷா:சார்..
   பார்த்திபன்:என்ன தம்பி  பயமா இருக்கா ?
  அரவிந்த்ஷா:இல்ல சார் ஒரு கண்டிசன் ..
  பார்த்திபன்:என்ன?
  அரவிந்த்ஷா:எங்க ஊருக்கு எப்போ மழை வரும் ...?
  **********************************************
  அரவிந்த்ஷா வின் ஊர் பாசத்தை கண்டு மழை வந்து விடுகிறது  bomb  மழையில் நனைந்து  விடுகிறது. மக்கள் எல்லாம் சேர்ந்து அரவிந்த்ஷா வாழ்க வாழ்க என்று மழையில் அவரை தூக்கி ஆடுகிறார்கள் ..


  பிரகதீஷ்:"அடப்பாவி பெயில் போட்டுடாருன்னு bomb  வச்சதே அவன்தான் அவன போய் ...எத்தன டோனி வந்தாலும் இந்திய மக்களை திருத்தவே முடியாது ...god  blees  you ..."
  அடுத்த பதிவில் நம்ம தல தோனிக்கு  விசில் போடுங்க TC சேவாக்- பிரகதீஷ் கலக்கல் பேட்டி ...
  குறிப்பு : இதை படிச்சிட்டு ஊர்ல கிரிக்கெட் விளையாடும்போது புல் டாஸ் பால்  போடறது ,ரன் அவுட் பண்றேன்னு பந்தால அடிக்கிறது ,FB  ல குரூப்பா   சேர்ந்து  தல டோனிய கலாய்க்கிறது  அப்புறம் என்னோட இந்த சைட்ட hack  பண்ண  ட்ரை பண்றது இதுகெல்லாம் நான் பயப்படமாட்டேன் .  7 Responses to “பார்த்திபன் & அரவிந்த்ஷா இணைந்து கலாய்க்கும் எங்க ஊருக்கு எப்போ மழை வரும் ?”

  Vinoth said...
  April 18, 2012 at 1:53 PM

  Hello oruthana fulla observe panni kalaikuran. But ithula yaru comedy piece innue therile kabali


  Parthi said...
  April 18, 2012 at 2:01 PM

  moonu peathayum comedy piece aakitiye ya


  Parthi said...
  April 18, 2012 at 2:04 PM

  intha kathayum pachai engira kaathu mathiye irunthuchu


  Parthi said...
  April 18, 2012 at 2:12 PM

  mookku podappa iruntha ipdi than yosikka thonumam, next time pakum bothu korachudalam


  ஸ்ரீ.கிருஷ்ணா said...
  April 18, 2012 at 2:30 PM

  @Vinoth: அவங்க மூணு பேருமே அறிவாளிகள் ..# Legents


  ஸ்ரீ.கிருஷ்ணா said...
  April 18, 2012 at 2:32 PM

  @parthi://mookku podappa iruntha ipdi than yosikka thonumam, next time pakum bothu korachudalam
  அப்டியா நீங்க ஏன் அடுத்து டாக்டருக்கு படிக்க கூடாது ?


  Aravindh said...
  April 21, 2012 at 7:49 PM

  enaku oru doubt malai varathukum nan bit aduchathukum enna sammantham?


  Subscribe