Monday, August 15, 2011
1
எட்டயபுரத்து பாரதி & ஆங்கிலேயரை வெறுத்த இந்திய அதிசயம்: சுதந்திர தின பதிவு
எட்டயபுரத்து பாரதி:
மனப்பாட பகுதிக்காக படித்தாலும் மறக்கமுடியாத வரிகள்.

இந்தியன் என்பதில் பெருமைகொள்வோம் ...........அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்...
ஊழல் கருப்புப்பணம் என பல தடைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் தகர்த்து வலிமையான இந்தியா உண்டாகும் விரைவில் என்பதில் ஆச்சர்யம் இல்லை ...
மகாகவி சுப்பிரமணிய பாரதி இந்த பெயரையோ அவரது பாடல்களையோ படிக்கும் போது விடுதலை உணர்வு தானாக வந்துவிடும் அவ்வளவு வலிமையான எழுத்துக்கள் , பெயர் கொண்டவர் .
எத்தனை பேர் சுதந்திர திற்காக பாடுபட்டிருந்தாலும் கவிதைகள் , பாடல்களின் மூலம் சுதந்திர உணர்வை வளர்த்த பாரதி பள்ளி நாட்களில் இருந்து மிகவும் பிடித்த தலைவர்.
பத்தாம் வகுப்பில் படித்த அவரது பாஞ்சாலி சபதம் வரிகளில்
தேவி திரௌபதி சொல்வாள்-‘ஓம், தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்; பாவி துச்சாதனன் செந்நீர்,-அந்தப் பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம், மேவி இரண்டுங் கலந்து-குழல் மீதினிற் பூசி நறுநெய் குளித்தே சீவிக் குழல்முடிப் பேன் யான்;-இது செய்யு முன்னே முடியே’னென் றுரைத்தாள். |
முன்பு இருந்த அரசு வேலையில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர,குடியரசு தின நண்பர்களுடன் அணிவகுப்பில் கலந்துகொண்டு அதற்காக இரண்டு வாரங்களுக்கு முன் பிருந்தே பயிற்சி என விறுவிறுப்பாக மகிழ்ச்சியாகவும் இருக்கும் .
தப்பாக செய்பவருக்கு parade griound இல் திட்டு,punishment வாங்கி அன்று முழுவதும் நண்பர்கள் அதை சொல்லி கிண்டல் செய்துகொண்டு எனசெல்லும் .இப்போது ஸ்வீட்டோடு முடிந்துவிடுகிறது சுதந்திரதினம்.

ஆங்கிலேயரை வெறுத்த இந்திய அதிசயம்: காந்தி, நேரு,கட்டபொம்மன் ,பாரதி போன்றவர்கள் போராட்டம் பற்றி நமக்கு தெரியும் . இந்திய அதிசயம் ஆங்கிலேயரை எதிர்த்த சுவாரஸ்ய கதை இது.
குதுப்மினார் குத்புதின்ஐபெக்கால் முதல் மாடி வரை தான் கட்டப்பட்டது . அதை வானுயர வெற்றிகரமாக கட்டி முடித்தவர் சுல்தான் இல்தூமிஷ் .உயரம் -(242) அடி மொத்தம் உச்சிக்கு செல்ல (319) படிகள் . முஸ்லீம் மக்கள்தொழுகைக்கும் பயன்பட்டது .பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சற்று மோசமான நிலையில் இருந்த குதுப்மினாரைசீரமைக்க முடிவு செய்யப்பட்டது அதற்க்காக ராபர்ட் ஸ்மித் என்ற கட்டட கலைவல்லுனரை அரசு அழைத்து வந்தது , வந்தவர் ரிப்பேர் மட்டுமல்லாதுஅதிகபிரசங்கி தனமாக குதுப்மினருக்கு ஒரு ஆங்கில மேற்கூரை வைத்தால்மேலும் நன்றாக இருக்கும் என்று மரத்தால் ஒரு சிறு கோபுரம் அமைத்து உச்சியில் பொருத்தினார் .
இயற்கை அதை அனுமதிக்கவில்லை ! பெரும் இடி விழுந்துகோணலாகிபோனது கலை உணர்வு மிகுந்த பிரிடிஷ் அதிகாரிகள் தலையில்அடித்துக்கொண்டு (1948) ல் இறக்கிவைத்தனர் .இன்றளவும் பரிதாபமாக சுணங்கி நிற்கும் அதை காணலாம் ..இது என்ன அபத்தம் என்று குதுப்மினார் அந்த வெள்ளைக்கார குல்லாயை ஒதுக்கி தள்ளிவிட்டதாம்.வெள்ளைக்காரர்கள் தன் மீது சுமத்திய பாரத்தை விரட்டிய முதல் இந்தியன்குதுப்மினார் என்பதில் நமக்கும் பெருமைதான்.குதுப்மினார்
இந்தியன் என்பதில் பெருமைகொள்வோம் ...........அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்...
Subscribe to:
Post Comments (Atom)
1 Responses to “எட்டயபுரத்து பாரதி & ஆங்கிலேயரை வெறுத்த இந்திய அதிசயம்: சுதந்திர தின பதிவு”
August 16, 2013 at 12:24 PM
அருமை... பத்தாம் வகுப்பு மனப்பாட பகுதி சிறப்பு...
குதுப்மினார் கதை எனக்கு புதிது...
வாழ்த்துக்கள் நண்பா ...
Post a Comment