Saturday, August 28, 2010

1

சிறந்த பதிவராகவும் தனது வலைப்பக்கம் தான் சிறந்தது என்று காட்டிக்கொள்ள என்ன செய்யலாம் ?

  • Saturday, August 28, 2010
  • Share
  • சிறந்த பதிவராகவும்  தனது வலைப்பக்கம் தான் சிறந்தது என்று காட்டிக்கொள்ள என்ன செய்யலாம் ?


    சன் செய்திகள் சிறப்பு பார்வை யில் சண்முகம் அவர்கள் போல் படிக்கவும்
                         நாம் எவ்வளவுதான் எழுதினாலும் பிரபலமாக வில்லை என்று நமக்கு தோன்றும் . சில  நேரங்களில் நமக்கு Hits கிடைக்காமல் போவிடும் இதற்க்கு என்னவழி , நாம் எப்படி எழுதினாலும் நம்மை பலரும் வந்து பாராட்டவேண்டும் என்ற மன வியாதி வந்துவிடும் . இதற்க்குஎன்ன வழி நாம் என்ன செய்ய வேண்டும் இப்போது பார்க்கலாம் .

                  முதலில் காசு கொடுத்து Cable அண்ணா போன்ற பிரபல தளத்தில் முன்பக்கத்தில் கொடுக்கலாம் இதற்க்கு நல்ல பலன் உண்டு . மறுபடியும் திரும்பி வருவார்களா என்பது உறுதியாக கூறமுடியாது .

    எவ்வளவு நாள் தான் காசு கொடுத்து தளத்திற்கு விளம்பரம் தரமுடியும் அடுத்து Top  10 , Super 10 போன்று மாதம் தோறும் வெளியிட்டு கொஞ்சம் Hits வாங்கலாம் முடிந்தால் தினந்தோறும் அதையே செய்யலாம் . சிறந்தவழி.

                    சிறப்பாக எழுதி தமிலிஷ் , தமிழ்மணம் போன்றவற்றில் இணைப்பு கொடுத்தவர்களுக்கு நிகராக விளம்பர படுத்திய தனது தளத்தை Alexa Rank படி வெளியிட்டிருக்கிறேன் விடுபட்டிருந்தால் சொல்லுங்கள் என்று காட்டிக்கொள்ளலாம்.

             போட்டி போன்றவற்றில் நடத்துபவர் அவரது குடும்பத்தினர் கூட கலந்துகொள்ள கூடாது என்பது போன்றவற்றை மீறி விளம்பரத்தில் கிடைத்த Hits மூலமும் , Top 10 போன்ற முடிவுகள் வெளியிடும் அன்று கிடைக்கும்  Hits   மூலம் கிடைக்கும் Hits ஸை தனது தொழில் நுட்ப பதிவுக்கு கிடைத்ததுபோல் காட்டிக்கொள்ளலாம் . Alexa Rank எப்படியெல்லாம் அதிகரிக்கலாம் என்று அவர்களுக்கு தெரியுமா என்ன?

         யாராவது புதியவர்கள் விருது வாங்கியிருந்தால் அதிகம் பேர் படிக்க செல்கிறார் என்று தெரிந்தால் அவரது கடந்த மாத பதிவுக்கு Comment ல் போய்   " இப்படி ஒரு மோசமான பதிவு   இதுவரை பார்த்ததில்லை என்று முடிந்தால் உலக பதிவுகளில் முதல் முறையாக என்று சேர்த்துக்கொள்ளலாம் .

             தனது   Top 10 வரிசைக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தால் நீங்கள் உங்கள் வலைபக்கத்தில் பிறவற்றையும் எழுதுகிறீர்கள்  ,  என்றோ HAcking தளம் என்றோ சொல்லிவிடலாம் .  இதற்க்கு Hacking க்கு என்ன Spelling என்று கூட தெரிந்திருக்க வேண்டியது இல்லை .

                      அடுத்து பெண்களை கேவலபடுத்தும் வகையில் எழுதலாம் உதாரணமாக நண்பனின் மனைவியைஎப்படி  ... என்று எழுதுங்கள் என்று  ஆலோசனை கொடுக்கலாம் .  நம் நண்பர் படித்தால் என்ன நினைப்பார் என்பது பற்றி கூட என்ன தேவை இல்லை .

                           பிரபல பதிவர் அவரின் பதிவை பாராட்டி இருந்தால் அவரை கூட உங்களுக்கு என்ன ஆயிற்றுஇதைபோய் பாராட்டி இருக்கிறீர்களே  என்று கேட்கலாம்  .அவர் முப்பது நாட்களுக்கு முன் போட்ட Comment அதுவும் பிறரது பதிவில் வந்து கேட்கவாபோகிறார்.

               அடுத்தவர் தளத்தில் எழுதினால் போதுமா நமது தளத்தில் எழுத வேண்டாமா  சரி நம் வீட்டுக்காரியை நினைத்து வேலைக்காரியை கேவலமாக போடலாம் அப்போதுதான் சோறு கிடைக்கும் , வேலைக்காரி என்றாலே பிடிக்காதவர் போல் மனைவியிடம் காட்டிக்கொள்ளலாம் .  உதாரணமாக அவள் அடுத்த வீட்டு சங்கதியை சொல்லுவாள் என்று போட்டாலே போதும் .

       அப்படி சொல்பவரை ஏன் வேலைக்கு வைக்கிறாய் என்று யார் நம்மை கேட்ப்பார்கள்  என்று நினைக்க  வேண்டியதில்லை .  நமக்கு தான் நாம் உண்டு நம் வேலை உண்டு இருக்கிறோம் அவர்கள்தான் இதக்காகவே சம்பளம் வாங்குகிறார் வேலையே செய்வதில்லையே .


                 உங்களுக்கு கொடுத்த Link ஐ  நீக்கி விட்டேன் என்று நாமே போய் பினூட்டம் இடலாம் காரணம்  கூட ஒன்றும்பெரிதாக  தேவை இல்லை .அப்போதுதான்  ஐயோ இனி நம் பதிவை யார் படிப்பார்கள் என்று அவரை  கெஞ்சும் நிலை க்கு கொண்டுவரலாம் .அப்போது ராஜபக்சே போல மனதில் சிரிதுக்கொள்ளலாம் .

                    முடிந்தால் World Tamil techblog organization என்று ஆரம்பித்து Copy rights உரிமை வாங்கி  தன்னிடம் அனுமதிபெற்றுத்தான் வலைப்பூ தொடங்க வேண்டும் என்று சொல்லலாம் .

    ஏனென்றால் நம்மை விட யார் புத்திசாலி நமக்கு தான்குறை சொல்லும் விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாதே .தான் இல்லாவிட்டால் பதிவுலகமே மொடங்கிடும் என்று நினைத்துக்கொள்ளலாம் .

    எனக்கு இதனை Followers , Subscribbers ,Hits எட்டே வருடங்களில் என்று வலைபக்கத்தின் ஆரம்பத்திலேயே போட்டுக்கொள்ளலாம் , பார்ப்பவர்கள் அடுத்து  உள்ள  Visit Counter , Follower ல் இந்த விபரம் இருக்கிறதே இங்கு எதற்கு என்று கேட்கபோகிரார்களா என்ன?

    முக்கியமாக இலவசம் ,சுதந்திரம் மென்பொருள் என்று ஒரே அர்த்தத்தில் பெயர் வைத்து மக்களை குழப்பலாம் .
     ஏன் இப்படி செய்தாய் என்று நண்பர்கள் கேட்டால் நான் தான் அவனுக்கு ப்லோக் என்றால் என்ன ? எப்படி பதிவிடுவது சாப்பாடு கூட போட்டேன் நான் விமர்சிப்பதில் என்ன தவறுஅப்போதுதான் மேலும் நன்றாக எழுதுவான்  என்று  சொல்லி சமாளிக்கலாம்.

    ஐடி கொடுத்து பின்னூட்ட்டம் இட்டாலும் நாம் பார்த்து படித்துவிட்டுதான் அதனை வலைப்பூவில் காட்டவேண்டும், யாராவது நம்மைபோல இருப்பார்களோ என்ற நல்ல எண்ணம் தான் வேறு என்ன? .

    இதில்  உங்களுக்கு பிடித்த கருத்து எது என்று இடது பக்கத்தில் இருக்கும் Opinion Poll option ல் பதிவுசெய்து பிரபல பதிவராக துடிக்கும் நண்பருக்கு உதவுங்களேன். இனி அவர் வாழ்க்கை உங்கள் கையில் .......
     குறிப்பு : நானும் எனது நண்பன் எழுமலையும்  ப்லோக் தொடங்கியபோது  அவர் போட்டிருந்த புதிய முன்னணி  ப்லோக் என்பதை சண்டைபோட்டு சில நாட்களில் நீக்கினேன் என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் . என்னை பொறுத்தவரை இந்த ப்லோக்   இன்னும் சில வருடங்கள் கழித்து பார்த்தாலும் ஏன்டா இப்படி எழுதினோம் என்று தோன கூடாது என்பதுதான் . கடந்த வாரம் கூட சக புதிய பதிவர் வருத்தத்துடன் அவருக்கு யாரோ இட்ட Comment ல் சொந்தமாக எழுதுங்கள் என்று அவரது பதிவை பற்றி  சொல்லியிருந்தாதாக வருத்தப்பட்டார் .

              இப்படி ஒரு சிலரது    செயலால் புதியவர்கள் வளர்வது எவ்வளவு கஷ்டம் பாருங்கள் .  நங்கள் உங்களுக்கு போட்டி அல்ல , நாங்கள் உங்களை வழிகாட்டியாகத்தான்  நினைக்கிறோம் என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள்.

    1 Responses to “சிறந்த பதிவராகவும் தனது வலைப்பக்கம் தான் சிறந்தது என்று காட்டிக்கொள்ள என்ன செய்யலாம் ?”

    NIZAMUDEEN said...
    November 3, 2009 at 11:29 AM

    நகைச்சுவையாக இருக்கிறது ஸ்ரீ.கிருஷ்ணா!


    Subscribe