Thursday, May 31, 2012

0

ரத்த பூமி எங்க ஊர் நாட்டாமை- பஞ்சாயத்து

  • Thursday, May 31, 2012
  •                   படையப்பா , நாட்டாமை போன்ற படங்களை பார்க்கும் போது பஞ்சாயத்து & தீர்ப்பு  சொல்லும்   காட்சிகள் விறுவிறுப்பாகவும்  மிக சுவாரஸ்யமாகவும் இருக்கும் எப்படியாவது தவறு செய்தவர்களை கண்டுபிடித்து தண்டித்துவிடுவார்கள் என்ற எண்ணம் தோன்றும் , முதன்முதலில் பஞ்சாயத்து காட்சியை கலாய்த்தவர்  நம்ம கௌண்டமணிதான் ராம்கியுடன் சேர்ந்து "ஆகா என்ன பொருத்தம்" படத்தில். இந்த   படம்   கடந்த  மாதம் ஊருக்கு சென்றபோது கே. டிவி இல் பார்த்தேன்  நீண்ட நாட்களுக்கு பிறகு அதே அளவு சிரிப்பு எனது நட்பு வட்டாரத்தில் எல்லோருக்கும்  பிடித்த  படம் என்று     சொல்லலாம்,  அதன்பிறகு எல்லோரும் பஞ்சாயத்து காட்சிகளை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர் கௌண்டமணிக்கு அடுத்து விவேக் காதல் சடுகுடுவில் கலக்கி  இருப்பார்   ..  

                  இதை எல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் எங்கள்  ஊரில் நடந்த ஒரு கலகலப்பான  பஞ்சாயத்து பற்றி இந்த பதிவில் பகிரப்போகிறேன் ,ஊரில் திருட்டு,சண்டை ,  நிலத்தகராறு எது நடந்தாலும் பஞ்சாயத்துதான் காவல் நிலையம்  எல்லாம்  கடைசியாகத்தான் போவார்கள்    .அப்போது ஒன்பதாவது அல்லது பத்தாவது படித்து   கொண்டிருந்ததாக நினைவு      எங்கள் ஊரில் ஐந்தாம்  வகுப்புவரை  மட்டும்   இரண்டு பள்ளிகள் உள்ளன .(இரண்டையும் சேர்த்து  எட்டாம் வகுப்பு வரை வைத்திருந்தாள் இந்த பிரச்சினை வந்திருக்காது )
                          
                 ஐந்தாம் வகுப்பிற்கு மேல் 3 கிலோமீட்டர் அருகில் உள்ள செட்டிக்குளம்  எனும் ஊரில் தான் படிக்க செல்லவேண்டும் பஸ்சிலோ அல்லது  சைக்கிளிலோ  சென்று வருவோம்   அன்று ஸ்கூல்   முடிந்து வீட்டுக்கு    வந்த நண்பன் சதீசுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தேன் , சிறிது   நேரத்தில் தெருவில் ஒரே சத்தம் என்ன வென்று போய் பார்த்தால்  எங்கள் ஊரை சேர்ந்த இரண்டு பெண்களை ஸ்கூலில்  இருந்து வரும்போது அந்த ஊர் பையன்கள் 3 பேர் கிண்டல் செய்து கொண்டிருந்ததை  எங்கள் ஊர் ஆட்கள் சில  பேர் பார்த்து அந்த பையன்களை  இழுத்து வந்து ஊரின் நடுவில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்து  அங்கிருந்த பஞ்சாயத்து தலைவர்கள்  ஆளுக்கு ஆள் அந்த பசங்களை அறைந்து  கொண்டிருந்தனர், பெண்கள் நீங்க எல்லாம் படிக்கிற பசங்களா  என அர்ச்சனை செய்யத்தொடங்கினர் . 
                        சற்று நேரத்தில் மீதம் வர வேண்டிய  பஞ்சாயத்து தலைகளும் வந்து சேர ஆகா என்ன பொருத்தம் போல எல்லாரும் அமைதியா இருங்க என்ன பிரச்சினைன்னு கேட்க ஆரம்பிக்க .. இப்போதுதான் களைகட்ட ஆரம்பித்தது   அங்கிருந்த இன்னொரு தல நம்ம ஊரு பொண்ணுங்கள இந்த பசங்க ராகிங் பண்ணிடாங்க அதான் புடிச்சி கட்டி வெச்சிருக்கோம் என சொல்ல ,அங்கிருந்த நான்கைந்து தலைகளும் கோபமாகி  யார் என விசாரித்து" காந்தி பொறந்த மண்ணுல ஏன்டா இப்புடி பொம்பள புள்ளைங்கள ரேகிங்  பண்ணுறீங்க? ",என பஞ்ச் டயலாக் சொல்ல பக்கத்திலிருந்த நாங்கள் மச்சி    காந்தி குஜராத்ல பொறந்தாரு இவங்க என்னனா நாம் ஊர் சொல்லுறாங்க என சொல்லி  எங்களுக்கு வந்த சிரிப்பை அடக்கி கொண்டு வேடிக்கை பார்க்க தொடங்கினோம். இப்பொது  கூட நண்பர்களுடன் பேசும்போது  "காந்தி பொறந்த மண்ணுல ஏன்டா இப்புடி? " என ஜாலி யாக சொல்லி சிரிப்போம்  அந்த அளவுக்கு மறக்கமுடியாத  ஒன்று , 
        
                         அடுத்து படிக்கிற வயசுல ஏன்டா இப்படி பண்ணுறீங்க என பஞ்சாயத்து தலைகளின்  அட்டகாசம் தொடர்ந்தது...எப்படா   தீர்ப்பு சொல்லுவாங்க என நினைத்துக்கொண்டு பார்த்துகொண்டிருந்தோம், சில நிமிடச்ங்களுக்கு பிறகு தீர்ப்பில் அவர்களுக்கு தண்டனை கொடுக்க தீர்மானித்து , என்ன தண்டனை சின்ன பசங்கள் என்ன பண்ணலாம் என்று யோசித்து இறுதியாக ஒருவரை கூப்பிட்டு போய் ஒரு ஆறு செங்கல் கொண்டுவரச்சொன்னார்கள் , தலைவர்  என்னமோ  பண்ணப்போகிறார்   என அனைவரின் முகத்திலும் ஆச்சர்யம் பாவம் அந்த பசங்கள் பயத்துடன் ஏற்கனவே நல்ல அடி வேறு விழுந்ததால் பரிதாபத்துடன்  பார்த்துக்கொண்டிருந்தனர் .. செங்கல் வந்ததும் அந்த பசங்களை அவிழ்த்து விட சொல்லி அவர்களை வந்து இந்த செங்கல் மேல் கால்  மணி  நேரம் முட்டிகால் போடுங்கள் என சொல்லி அந்த பசங்களை முட்டிக்கால் போட வைத்தனர். 

               இதில் முக்கியமான விசயம் என்ன வென்றால் அந்த பசங்களின் குடும்பப்பின்னணி       பெரிதாக இல்லை என்று  தெரிந்தபின்தான்  அந்த பஞ்சாயத்து தலைகள்  தீர்ப்பு சொன்னார்கள் ... இதுபோல பல முறை பஞ்சாயத்துதீர்ப்புகள்  நடந்திருந்தாலும் ,இது மறக்கமுடியாத ஒன்றுஎல்லாமே பெரும்பாலும் தப்பு செய்தவரின்  பின்னணிக்கு  ஏற்றவாறு  தீர்ப்பு சொல்லும்  கட்டபஞ்சாயத்து   ...  ஆனால் இப்போதெலாம் ஏனோ நோ பஞ்சாயத்து நோ தீர்ப்பு ...

    ஊரைவிட்டு வந்துவிட்டோம் என்பதாலா?.. என்ன நாங்க எல்லாம்   ..........................

    Read more...

    Sunday, May 27, 2012

    1

    பர பர விறு விறு TC சம்மர் கப் கிரிக்கெட் அப்டேட்ஸ்

  • Sunday, May 27, 2012
  •  Trouble creators cricket club mavilangai- summer cup- updates 

     போட்டி 1:மே 12,13 இல் நடந்து முடிந்த Trouble creators cricket club mavilangai- summer cup இல் main sponsor ராமகிருஷ்ணன் தலைமையில் அரவிந்த்,நான் +8 பேர்கள்  பில்லா அணியினரும்  . இன்னொரு main sponsor பெண்களூரு பார்த்திபன் தலைமையில் பிரபாகர் ,வினோத் , பிரகதீஷ் ,கௌதமன் என  துப்பாக்கி அணி யினரும்  விளையாடினோம் சனிக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் எங்கள் பில்லா அணி டாஸ் வென்று பந்து வீசத்தொடங்கினோம் .எப்பவும் டோஸ் எப்படா  ஜெயிப்போம் பேட் பண்ணலாம் ன்னு இருக்கும் இந்த டைம் வின்  பண்ணனும்னு பந்து வீசத்தொடங்கினோம் ,ஆரம்பத்தில் விறுவிறு வென உயர்ந்த ஸ்கோர் பிறகு குறைந்து இறுதியில் 
    15 ஓவர்களின் முடிவில்  துப்பாக்கி அணியினர் 94 ரன்கள் அடித்தனர் .அடுத்து பேட் செய்த எங்கள் அணி மெதுவாக 14 ஓவர்களில் 83 ரன்கள் 7 விக்கெட்டுக்கு எடுத்தோம்  கடைசி ஓவரில் 11  ரன்கள்  தேவைப்பட்டது அவ்வளவுதான் என்று நினைத்தபோது  .... திக் திக் கடைசி ஓவரில் இருந்தது இரண்டாவது & ஐந்தாவது பந்தில் four   அடித்து கடைசி பந்தில் ஒரு ரன் அடித்து எங்கள் அணி வெற்றிபெற்றது ....   

    போட்டி 2:  அடுத்த போட்டி ஞாயிறு காலை தொடங்கியது அந்த போட்டியில் துப்பாக்கி அணியினர் டாஸ் வென்று எங்களுக்கு பந்து வீசத்தொடங்கினர்  பார்த்திபனின் சிறப்பான பந்து வீச்சை  சமாளித்து ஒரு வழியாக 76 ரன்கள் சேர்த்தோம்  இந்த குறைவான ரன்களை வைத்து முடிந்த வரை போராடலாம் என்று எண்ணி பந்து வீச்சை துவக்கினோம் ஆனால் விக்கெட் தான் விழவே இல்லை பிரகதீஷ் ரைனா போல செம்ம அடி அடித்துக்கொண்டிருந்தார் இந்த ஆட்டமும் பரபரப்பின் உச்சத்தை அடைந்தது இறுதி ஓவர் 4 விக்கெட் இருந்தது அடிக்க வேண்டியதோ 3 ரன்கள்  இன்னும் மச்சி பிரகதீஷ் அவுட் ஆகவில்லை .... இந்த முறை முதல் நான்கு   பந்துகளில் சொதப்பலான பீல்டிங்கால் 3  ரன்கள்   கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் கிடைத்தன 5 வது பந்தில் விக்கெட் விழ இன்னும் பரபரப்பானது கடைசி பால் ரன் அவுட் ஆனது இந்த ஓவர்ரை வீசியது சத்தியாம நம்புங்க நான் தான் (ஒரு விளம்பரம் ) ஒரு வழியாக வெற்றி பெறவேண்டிய போட்டி டிரா ஆனது ..lol 

    Jr .Trouble Creators cup :
    இதற்கிடையே ஜூனியர் போட்டி தொடங்கியது இந்தபோட்டி செம்ம விறுவிறுப்பு கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்கவேண்டும் என்ற அளவிற்கு போனது முதல் முறையாக எங்களுக்கு சிறுவயதில் கிடைக்காத வாய்ப்பை அவர்களுக்கு வழங்கினோம் அவர்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி ...இனி ஒவ்வொரு வருடமும் அவர்களுக்கு நடத்த வேண்டும் என்று ..
         இன்னும் ஒரு போட்டி மீதம் இருக்க  அதனையும் விளையாட தொடங்கி டாஸ்   வின்  பண்ணியதும் இந்தமுறை பேட்  செய்ய தொடங்கினோம், அப்போதே  மழைத்தூறல் வர ஆரம்பித்தது பத்து நிமிடங்களில் இன்னும் வேகமாக  வர ஆட்டம் நிறுத்தப்பட்டது 
    (இன்னும் நிறைய  விறு விறு அப்டேட்ஸ் இருந்தாலும்  சுருக்கமாக முடிக்கிறேன் )
    இடி & மழை :
    இறுதியாக பரிசளிப்பு அதற்குள் என்ன பரிசு என்று கேட்டுக்கொண்டிருந்தனர் , இந்த முறை சிறிய பரிசு அடுத்தமுறை இன்னும் உயர்ந்த விலையில் கொடுக்கிறோம் சங்கம் கடனில் போய்க்கொண்டிருக்கிறது என்று சொல்லும்போது பெரிய இடி சுமார் 20 அடி தூரத்தில் பளிச்சென்று விழுந்தது சீக்கிரம் இங்கிருந்து செல்ல வேண்டும் என  இரண்டு கேப்டன் களிடம் இரண்டு மெயின் ச்போன்சொர் கள் பரிசு வழங்கி பின் எங்கள் அணிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது .. அதிரடியாக தொடங்கிய போட்டி இறுதியில் இடி மழையுடன் சிறப்பாக முடிந்தது ..... மொத்தத்தில் குறுகிய காலத்தில் திட்டமிட்டு  சிறப்பாக முடிந்தது .

    முதன்  முறையாக இம்முறை சிறப்பாக விளையாடுபவர்களுக்கு 4 cap  வழங்கப்பட்டது ...

    Max  ரன்கள் orange cap  :  TC ரைனா - பிரகதீஷ் 
    Max  விக்கெட்  purple  cap  :  TC  யுவராஜ்- பார்த்திபன் 
    Max catch red cap  :Tc  முரளி விஜய் - வினீத் 
    Max  six yellow cap  :   ஜெயக்குமார் கிருஷ்ணா     அட நாந்தாங்க மறுபடியும் நம்புங்க ...
    ரன் விக்கெட் கேட்ச் என cap   துப்பாக்கி டீம் வாங்கி இருந்தாலும் ஜெயிச்சது எங்கள் டீம் தான் ... 
    ஆடாம ஜெயிச்சோமடா   .....
    எனது ட்விட்டரிலிருந்து :@jaikumarkrishna 

    1. இந்த மினி பஸ் டிரைவர் கண்டக்டர் இளையராஜா பாட்ட இவனுங்க பாட்டு மாதிரி போட்டு பிகர்களை உ ஷார் பண்ணிடுறானுங்க

    2.மெதுவாக பந்து வீச்சு: ஹர்பஜன்சிங்குக்கு ரூ.10 லட்சம் அபராதம் -- டேய் நான் ஸ்பின் பௌலர் மெதுவாதாண்டா வீசமுடியும் #ஹர்பஜன் மைண்டு வாய்ஸ்

    3.நோபால் வீச ரூ.10 லட்சம் -அப்புடின்னா நம்ம TC சம்மர்கப்ல நான் போட்ட 10 நோ பாலுக்கு 1கோடி கிடைசிருக்கும்  # மச்சி பிரகதீஷ் மைண்டு வாய்ஸ்.

    4.ஜோசிய கிளிகளை எத்தன டோனி வந்தாலும் திருத்தவே முடியாது #சென்னைக்கு விசில் போடு

    5.ஒருத்தன் டா-ன்னு சொன்னாலே கோவமா திட்டுவோம் ஆனால் இந்த கங்குலிய Dada ன்னு ரெண்டு டா(da) போட்டுகூப்புடுறாங்க இவருக்கு ஏன் கோவமே வரல

    Read more...

    Subscribe