Tuesday, July 20, 2010

1

ஜிமெயில் ஹாக்கிங் நடக்கும் முறைகள் தடுக்கும் வழிகள் ...

  • Tuesday, July 20, 2010
  • ஜிமெயில் ஹாக்கிங் நடக்கும் முறைகள் தடுக்கும் வழிகள் ...

    இதனை பற்றி பல முறை எழுதியாகிவிட்டது , இன்னும் எழுதிக்கொண்டே போகலாம் ..
    ஒபாமாவின் ட்விட்டர் அக்கௌன்ட் ஹேக் செய்யப்பட்ட செய்தி பலருக்கும் தெரிந்திருக்கும் , அட அது ஒபாமா தானே என்றுஅடுத்து .... ? 
    ஹாக்கிங் நடக்கும் வழிகள்  பற்றி சிலவற்றை தெரிந்துகொள்வோம் ...

    நம்முடன் பழகுபவர்கள் ஹேக் செய்யும் முறைகள்   :
     உங்கள் கணிணியில் keylogger software இன்ஸ்டால் செய்துவிட்டால் போதும் நாம் கணியில் உள்ள keyboard இல் type  செய்வதை அப்படியே குறிப்பிட்ட மெயில் முகவரிக்கு அனுப்பிவிடும் .
    இதனால் தான் வங்கிகள் keyboard  பயன்படுத்தாமல் கையாளும் வகையில் அவர்களது தளத்தில் mouse மூலம்  பயன்படுத்தும் வகையில் இணைத்திருப்பார்கள் ..

    அடுத்து ஜிமெயில் கணக்கில் settings --> Forwarding and POP/IMAP
    இங்கு சென்று மெயில் முகவரி கொடுத்தால் போதும் உங்களுக்கு வரும் மெயில்கள் அனைத்தும் இந்த முகவரிக்கும் சென்றுவிடும்
    .
    மேற்கூறிய இரண்டும் நம் கணிணியில் , ஜிமெயில் open செய்து வைத்து விட்டு சில நிமிடங்கள் இல்லாத போது அங்குள்ள பிற நபர்கள் எளிதில்  செய்து விடமுடியும் பிறகு சில நாட்கள் கழித்து சந்தேகம் வராதவகையில் நம் கணக்கை ஹேக் செய்துவிடமுடியும்
    இவற்றை அடிக்கடி check  செய்துகொள்ளுங்கள் .

    அடுத்து தான் சற்று அதிரவைக்கும் தகவல் 
    நாம் சாட்டிங்கில் இருக்கும் போது நமக்கு photos ,இணையதள முகவரி link அனுப்பி அதன் மூலம் நமது மெயில் கணக்கை தெரிந்து கொள்ளலாம் , இதற்கென சில software களும் இப்போது வந்துவிட்டன , 

    இதனை தடுக்க chatting போன்றவற்றிற்கு தனி mail id வைத்துக்கொள்ளலாம் .
    முக்கியமாக நமக்கு வரும் மைல்களை நமது mobile க்கு எஸ்.எம்.எஸ் வரும்படி செய்து கொள்வது சிறந்தது . 
    கூகிள் நமது மெயில் யாராவது ஹேக் செய்வதை கண்டறியும் வசதி கொண்டது password மாற்றும் எச்சரிக்கை செய்தி அனுப்பும் இதனை எஸ் .எம் .எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம் இன்டர்நெட் இணைப்பு இல்லாத இடங்களில் இருந்தாலும் .

    அடுத்து நமது மெயில் ஐடி வலைபக்கத்தில் கொடுத்து விடுகிறோம் எனவே pasword ஒன்றை தெரிந்துகொண்டால் போதும் எனவே உங்கள் தொடர்புக்கு வேறு முகவரி கொடுத்துவிடுங்கள் அதுபோல உங்கள் தள  மெயில் id    கண்டறி யாதபடி  மாற்றிவிடுங்கள்  நீங்கள் கொடுத்துள்ள contact id வைத்து hack செய்தாலும் ஒன்றும் செய்யமுடியாது ..


    உதாரணமாக 
    உங்கள் blogger  id : abcdefgh @gmail .com 
    என்றால் அதனை உங்கள் வலைபக்கத்தில் தெரியும்படி வைக்காதீர்கள் 
    contact me என்னும் இடத்தில் zyxwvu @gmail.com.  என்று அமைத்து விடுங்கள் .
    ட்விட்டர், facebook போன்றவற்றிற்கு தனி மெயில் id பயன்படுத்துங்கள் .

    திடீர் என்று நம் மெயில் முகவரிக்கு password change request என்று மெயில் வந்திருந்தால் யாரோ நம் மெயில் முகவரி தெரிந்து , password கண்டறிய முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம் .

















     உங்களுடைய வழக்கமான இமெயில் முகவரியை உங்கள் உற்றவர்களுக்கும் நண்பர்களுக்கு மட்டுமே தரவும். இலவச இமெயில் முகவரிகளைத் தருவதற்கு கூகுள், மைக்ரோசாப்ட் லைவ் மெயில், யாஹூ இருக்கும்போது ஸ்டெப்னி இமெயில் முகவரிகளை நிறைய வைத்துக் கொள்ளலாம்.
    Password :
                நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் அடுத்தவர்கள் எளிதில் கண்டுபிடித்திடும் வகையில் இருக்கக் கூடாது. எண்களும் எழுத்துக்களும் (Alphanumeric )கலந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும். நீளமாக இருந்தால் நல்லதுதான்.  அத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்க  www.passpub.com என்ற தளத்தை பயன்படுத்தலாம் .

     ஒரு பைல் உங்களுக்கு வந்துள்ளதா? அதில் வைரஸ் எதுவும் உள்ளதா என்று சந்தேகம் வருகிறதா? உங்கள் ஆண்ட்டி வைரஸ் கொண்டு சோதிக்க பயமா? உடனே அதனை Virustotal.com என்ற தளத்திற்கு அனுப்பவும். அல்லது அட்டாச்மென்ட் ஆக scan@virustotal.com என்ற இமெயில் முகவரிக்கு ஸ்கேன் என்ற ஒரு வரிச் சொல்லை சப்ஜெக்டில் அமைத்து அனுப்பவும். உடனே 32 வகையான வைரஸ் சோதனை செய்து உங்களுக்கு ரிபோர்ட் கிடைக்கும்.

    மேலும் தெரிந்துகொள்ள click the following:







    1.உங்கள் ஜிமெயில் Hack செய்யப்பட்டுள்ளதா என கண்டுபிடிப்பது 2.பாதுகாப்பாக இணையதளத்தில் உலாவுவது எப்படி 

    3.நண்பர்களது username ,password போன்றவற்றை ஹாக்கிங் செய்யலாம் வாங்க,தடுக்கும் வழிகள்

    4.கணிணியை பயன்படுத்தும் குழந்தைகளை கண்காணிக்க + தமிழ் கலாச்சாரம் 

    இதை எல்லாம் விட Hacking பற்றிய நம் அறிவை வளர்த்துகொள்வது அவசியம் .

    ஹாக்கர்கள் எத்தகைய முறைகளில் hack  செய்கிறார்கள் , எப்படி கண்டறிவது என தெரிந்தால் தான் hacking ஐ தடுக்கமுடியும் .

    "ஹாக்கிங் தடுக்கும் முறை பற்றி எழுதினால் எப்படி நடக்கிறது என்று சொல்லி தான் அதனை தடுக்கும் முறைகள் சொல்லமுடியும்"
     ,
    வரும் முன் காப்பதே சிறந்தது...


    Tech corner:
    www.ibibo.com இந்த இணையதளம் சென்று கணக்கை தொடங்கி உங்கள் மெயில் alerts sms மூலம் மொபைலில் பெற்றுகொள்ளுங்கள் ..முக்கியத்தகவல் கொண்ட மெயில்வந்தால் இணையதள வசதி இல்லாத இடத்தில் இருக்கும்போது நண்பர்களிடம் பார்க்கசொல்லி தெரிந்து கொள்ளலாம் ..
    Question corner :
    வலையுலகில் சுதந்திரமாக எழுதும் உரிமை எல்லா பதிவர்களுக்கும் உள்ளதா?


    thanks:
    tamilish and technical team..



    Read more...

    Subscribe