Monday, May 31, 2010

5

உங்கள் ஜிமெயில் Hack செய்யப்பட்டுள்ளதா என கண்டுபிடிப்பது எப்படி ?

  • Monday, May 31, 2010
  •  

    நமக்கு  தெரியாமல் யாரவது ஜிமெயில் hack செய்து அவரும் பயன்படுத்திக்கொண்டிருந்தால் கண்டுபிடிக்க  வழிகள் :
    Step 1:
    முதலில் inbox கீழே  உள்ள Last Account Activity பகுதிக்கு சென்று கீழே உள்ள படத்தில் உள்ளவாறு Details என்பதனை Click செய்யுங்கள்.
    Step 2 :
    யாரெல்லாம் உங்கள் ஜிமெயில் பயன்படுத்தினார்கள் எதிலிருந்து , மொபைல் ,ப்ரௌசெர்,IMAP எனவும் , IP Address, Date /time  போன்ற   முழுவிபரங்களும் காட்டும்

    Step 3: சந்தேகத்திற்குரிய IP Address இருந்தால் Domain Tool இங்கு சென்று  
    சரிபார்த்துக்கொள்ளுங்கள்

    step 4:
               google நமது மெயில் activities களை கண்காணித்து சந்தேகத்திற்குரிய வற்றை சிகப்பு நிறத்தில் காட்டும் .இதை வைத்து கண்டறியலாம் .
    step 5:
     அடுத்து Sign out all other sessions என்ற button click செய்து பிற IP இல் ஜிமெயில் பயன்படுத்தி signout செய்யாமலிருந்தால் இங்கிருந்து செய்யலாம் .மொபைல் போன்றவை தொலைத்துவிட்டால் இந்தமுறையில் பிறர் பயன்படுத்தாமல் தடுக்கலாம் .



    step 6:
    உண்மையிலேயே ஜிமெயில் Hack செய்யப்பட்டிருந்தால் என்ன செய்யவேண்டும்:?
    முதலில் உங்களது password , செக்யூரிட்டி questions போன்றவற்றை மாற்றுங்கள்  
    google tips      இங்கு நல்ல tips இங்கு கொடுத்துள்ளார்கள் .

    security questions உங்கள் password  க்கு தொடர்புடையதாக இருக்கும் வகையில் அமைத்துக்கொள்ளுங்கள் , குறிப்பாக நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் இருக்கட்டும் .

    sugession :
           Let me lie, Let me die on the snow-covered bosom, I would eat of thy flesh as a delicate fruit, I am drunk of its smell, and the scent of thy tresses, Is a flame that devours . 

    இதன் தமிழ் அர்த்தம் சரியா என்று சொல்லுங்கள்:

    வழக்கமான வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் இருந்து மாறுபட்டு பூத்துக்குலுங்கும் மலர்களைப் போன்ற உன் மனதின் மணத்தைப் பருகி, மெல்லிய கனிகளை சுவைத்து ,உன் பனி படர்ந்தது போலுள்ள வெண்ணிற மார்பில் எனக்கு சாக இடம்கொடு காதலியே.
    Read more...

    Friday, May 28, 2010

    1

    சிங்கம் - அட்டகாசம்

  • Friday, May 28, 2010
  • நீண்ட நாட்களுக்கு பிறகு முதல் நாள் முதல் காட்சி சென்று பார்த்த படம் .சூர்யா ,ஹரி , விவேக் ,பிரகாஷ்ராஜ் அனுஷ்கா என எதிர்பார்த்து சங்கம் தியேட்டர் ல்  பர்ர்த்த படம் . ஆரம்பம்  முதலே ஹரி யின் விறுவிறுப்பு , சூர்யா வின் கம்பீரம் என அசத்தல் . வழக்கமான தாதா கதையில் வித்தியாசமாக விறுவிறுப்பாக இருக்கிறது .
    சப் இன்ஸ்பெக்டர்  சூர்யாவை அவரது சொந்த ஊரில் மோதமுடியாமல் , பழிவாங்க சென்னைக்கு இன்ஸ்பெக்டர் ஆக்கி , அவரை பழிவாங்க  நினைத்து தனது ஆள் ,பணம் தாதா என எல்லாவற்றையும் இழந்து சூர்யாவால் கொல்லப்படுகிறார் பிரகாஷ் ராஜ் என்பதை கொஞ்சம்கூட போர் அடிக்காமல் விறுவிறுவென ஓவ்வொரு நொடியும் செல்லும் கதை .

    விவேக் காமெடி அசத்தல் சில இடங்களில் மட்டும் இழுக்கிறது , பிரகாஷ் ராஜ் வழக்கமான தாதா , சூர்யாவின் ஊரில் அவரிடம் மோதும்  போது ஊர் மக்கள் அனைவரும் வந்து மிரட்டி காரை உடைப்பது தியேட்டர் ரை  அதிரவைக்கும் காட்சி படையப்பா ஊஞ்சல் காட்சி போல் ,  பாடல் தான் சுமார் ராகம் மற்றபடி எல்லாமே அசத்தல் .

    தூத்துக்குடி ,தாமிரபரணி என உயர்த்தி சொல்லி  ,சென்னை ,கூவம் என சென்னையை இறக்கியிருப்பது கொஞ்சம் தவிர்த்திருக்கலாம் .

    அனுஷ்கா படம் முழுக்க வந்து அசத்துகிறார் ,இனி போலீஸ் கதை என்றால் சூர்யா தான் என சொல்லும் அளவுக்கு துரைசிங்கமாக வருகிறார் . சன் piture கொடுத்திருக்கும் சும்மர் வேட்டை இந்த சிங்கம்.

    தியேட்டர் முழுவதும் சிரிப்பும் கைதட்டல் தான் ,  சென்னையில் இப்படி என்றால்  பிற சிறிய ஊர்களில் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கலாம் .தூத்துக்குடி , திருநெல்வேலி மற்றும் எங்கள் கோயமுத்தூர் அதிரும் என்பதில் சந்தேகமே இல்லை ...

    விஜய் ரசிகர்களுக்கு பிடிக்காதவன் இந்த சிங்கம் . மாஸ் ஹீரோ என்ற  பெயரை சூர்யாவுக்கு வாங்கிதந்திருக்கிறது . ரஜினிக்கு அடுத்த மாஸ் சூர்யா தான் என்று சொல்லலாம் . சூர்யாவுக்கு 100% கொடுத்திருக்கும் 25 வது படம் சிங்கம், 


    2:30 மணிநேரம்  குடும்பத்துடன் சென்று பார்க்ககூடிய  பரபரப்பான விறுவிறுப்பான mass family entertainer மசாலா படம். சிரித்துகொண்டே விறுவிறுப்பாக செல்கிறது இந்த சிங்கம் . 100% entertainment.

    indru
    Read more...

    Tuesday, May 11, 2010

    0

    india vs srilanka t20 cricket live

  • Tuesday, May 11, 2010
  • Read more...

    Saturday, May 1, 2010

    0
    அப்பாடா சென்னை கோப்பையை வாங்கிவிட்டது .. ஐ.பி.எல் திருவிழா இன்றுடன் முடிவடைந்தது  சூதாட்டம் , ஊழல் என பல பிரச்சினைகளை சந்தித்தாலும் அதனை பொழுதுபோக்காக மட்டும் கருதும் வரை ரசிக்கலாம் .

    லலித் மோடி மீது பல விமர்சனங்கள் எழுந்தாலும் அவர் சிறந்த ஆளுமை திறன் கொண்டவர் மிகப்பெரிய அளவில்  காரணம் என்பதில் சந்தேகமே இல்லை. மனிதர் தில்லாக ராஜினாமா செய்ய முடியாது முடிந்தால் நீக்கிபாருங்கள் என்று சவால் விடும் தைரியம் என எல்லாமே பாராட்டுக்குரியது.

    எப்படியோ போராடி சென்னை அணி இறுதிபோட்டிக்கு வந்துவிட்டது ஹய்டன் சொதப்பினாலும் ரைனா  விஜய் ,டோனி   பேட் டிங்காலும் போளிங்கேர் , அஸ்வின் , முரளி என அசத்தல் பௌலிங் காப்பாற்றினர் .

    சச்சின் ஆட்டம் அரை இறுதிவரை அசத்தல் அரை இறுதியில் சொதப்பல் . முக்கிய போட்டிகளில் சச்சின் பதற்றம் தவிர்க்கமுடியவில்லை அவரால் ,மும்பை  அணியில் எல்லாமே சிறப்பாக உள்ளது ,

    சென்னை அணி எல்லோரையும் பரபரப்பாகி இறுதி போட்டி வந்துள்ளது டோனி யின் சிறப்பான கேப்டன் பணி இதற்க்கு முக்கிய  காரணம் .  பதற்றம் இல்லாமல் இருப்பதே இதற்க்கு காரணம் , ஆனால் சென்னை அணி இந்த அளவிற்கு போராடி நுழைய காரணம் பாலாஜி , பத்ரி  என அணிக்கு நெருக்கமான வீரர்கள் என இவர்களை போட்டு நான்கைந்து போட்டியை தோல்விபெற காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும் .   விஜய் மட்டும் இதில் தப்பித்தார்.முதலாவது ஐ.பி.எல் இல் நோ பல் போட்டு ராஜஸ்தானுக்கு கோப்பை வாங்கிதந்தவர் பாலாஜி தான் என்பது எல்லோருக்கும் தெரியும் . வென்றாலும் தோற்றாலும் அணி  வருமானம் குறையபோவதில்லை என்பதுதான் காரணம்.

    பத்ரி எப்போதும் டெஸ்ட் போட்டியை போல ஆடி வெறுப்பேற்றினார் என்பதே உண்மை ..


    14 இன்னிங்க்ஸ் ஆடி 342 ரன்கள் அதிகபட்சம்  55* சராசரி 34.20 S/R 117.12 சிக்ஸ் 5















      என சாதனை படைத்தவர் சென்னை ரசிகர்களுக்கு இவர்கள் ஆட்டம் ஏமாற்றமே . தோணி , ரைனா இல்லாவிட்டால் சென்னை அணி நிலை பஞ்சாப் அணியை விட மோசம் என்பதில் சந்தேகமே இல்லை .
    தமிழகத்தில் பாலாஜி , பத்ரி விட்டால் வேறு வீரர்களே இல்லையா ? இப்படியே அணி உரிமையாளருக்கு
    நெருங்கியவர் என ஸ்ரீகாந்த் மகன் வேறு .. ஏதோ அரை இறுதியில் வென்றதால் அவர் தப்பித்தார் .

    மொத்தத்தில் இந்த ஐ.பி.எல் சற்று ஏமாற்றமே திறமையான வீரர்களை தேர்வு செய்யாதது தான் காரணம்
    அப்படி செய்திருந்தால் மும்பை அளவிற்கு சாதித்திருக்கு ம்   சென்னை .

    தோணி , ரைனா இருவரும் புனே அல்லது கொச்சி அணிக்கு சென்றுவிடுவது நல்லது அப்போது சென்னை அணி நிர்வாகத்திற்கு வேண்டிய வீரர்களை போட்டால் வெற்றி பெற முடியாது என்பது புரியும் .சென்னை அணிக்கு உற்சாக படுத்த ரசிகர்கள் இருக்கமாட்டார்கள் அப்போதுதான்  திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
    சென்னை அணி நிர்வாகம் ஏன் அவர்களுக்கு வேண்டியவர்களில் ஒருவரை கேப்டன் ஆக நியமிக்கவில்லை ?  எப்படியும் இவர்களை வைத்து டோனி ரைனா வெற்றி பெறவைப்பார்கள்  என்றுதானே ?
    டோனி இந்தமுறை கோப்பையை வாங்கி அடுத்த ஆண்டு  போட்டிக்கு வேறு அணிக்கு  தலைவராக சென்றுவிடுவது சிறந்தது ..
    எத்தனை நாள் தான் தங்கள் ஜாதி ,  இன மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும்  நிலையை  படித்த
    அறிவாளிகள் மாற்றிக்கொள்வார்களோ? பார்க்கலாம்...
    இப்படி  ஒரு சென்னை  அணி நமக்கு தேவையா?..........
    Read more...

    Subscribe